​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 14 May 2020

சித்தன் அருள் - 864 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


அக்னி முத்திரை:-

மோதிர விரலை மடக்கி அதன்மேல் கட்டை விரலால் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். ​இதன் பலன்கள், உட​​லில் உள்ள ​அக்னியின் அம்சத்தை, இந்த முத்திரை சமநிலைப்படுத்துகிறது. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை உட​லில் உள்ள அதிகப்படியான கொழுப்​பினை குறைப்பதோடு, செரிமான செயல்பாட்டை ​வேகப்படுத்தும்.​


பிராண முத்திரை:-

சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் இரண்டையும் சேர்த்து மடக்கி வைத்து, கட்டை விரலால் தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். வாழ்க்கையைக் குறிக்கும் முத்திரை ​ஆனதினால் வாழ்வின் ​மேன்மைக்கு வழி காட்டும்.. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வு நீங்கும். கண் பார்வை சிறப்பாகும். செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. களைப்பை போக்கி, ஆற்றல் திறனுடன் வைத்திருக்கவும் உதவும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். உடலின் நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும். பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.


​ப்ரித்வி/பூமி முத்திரை:-

மோதிர விரல் நுனியால் கட்டைவிரலை தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.​இதன் பலன்கள் ஆவன, அண்டத்தில் உள்ள ​பஞ்ச பூதங்கள் அம்சத்தை, உடலுக்குள் ஊக்குவிக்​கும். ரத்த ஓட்டம் மேம்படும், பொறுமை அதிகரிக்கும், தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும். உள்ளார்ந்த ஸ்திரத்தன்மையை வளர்க்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், மன அமைதிக்கும் உதவும் சிறந்த முத்திரை இது. உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மேலும், உடல் மெலிந்தவர்கள் எடை அதிகரிக்க இந்த முத்திரையைச் செய்யலாம்.


சூன்ய முத்திரை​:-

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.​ சுக்கிர மேடு என்பது, மோதிரவிரலின் அடியில் நேர் கீழே உள்ள கையின் பாகம்.  சூன்ய முத்திரை ​காது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கானது. இந்த முத்திரை உங்கள் காது வலிகளைப் போக்கும். மேலும் வயது மற்றும் நோயினால் காது கேட்கும் திறன் குறைபவர்களுக்கும் இது உதவும். இவர்கள் தினமும் 45 நிமிடமாவது இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வலது காதில் பிரச்னை இருந்தால் வலது கரத்தாலும், இடது காதில் பிரச்னை இருந்தால் இடது கரத்தாலும் செய்ய வேண்டும். உடல் சோர்வினையும் போக்கக் கூடியது. 


லிங்க முத்திரை:-

இரு உள்ளங்கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்துக் கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் தனித்து நேராக நிற்க வேண்டும். வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும்.இந்த முத்திரை ஆண்மையை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதால், அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில், இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். மழை. பனி காலத்தில் வரும் கபம்மற்றும் சளி போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த​வும் ​வல்லது. உடல் எடை குறையும். 


சித்தன் அருள்............... தொடரும்!​

9 comments:

  1. Ayya, can you please tell us about this picture of Guru agasthiyar and lopamudra thirukalyanam and Hayagrivar behind them? Which sthalam is it?

    ReplyDelete
    Replies
    1. சித்தன் அருள் வாசகர், அடியேனின் நண்பர், அனுப்பித்தந்த படம் இது. இதில் சிவபெருமானும் பெருமாளும் கூட நின்று அகத்தியரின் திருமணத்தை நடத்தி கொடுப்பதை போல் இருந்தது. அதை, சற்று அலங்காரப்படுத்தி, குருநாதர், குருபத்னி மட்டும் இருக்கும் வகையில் சித்தன் அருளில் தந்தேன். அவரிடம் இது எங்கிருக்கிறது என்று கேட்டிருக்கிறேன். பதில் கிடைத்ததும் தருகிறேன்.

      Delete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. முத்திரைகள் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் ஐயா
    காலையிலா அல்லது மாலையில். எத்தனை நாள் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. 45 நிமிடம் செய்யவேண்டும். உங்களுக்கு வசதிப்படுகிற நேரத்தில். 24 மணி நேரத்துக்குள்.

    ReplyDelete
  5. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  6. iyya prana muthirai seiyum pothu enna manthiram sonnal nantraga irukkum koorungal iyya?

    ReplyDelete