​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 21 May 2020

சித்தன் அருள் - 865 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


வேறு சில முத்திரைகளையும் அறிந்துகொள்வோம்.

அபான முத்திரை:-

நடுவிரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்டை விரலின் நுனியை தொடவேண்டும். 

உடலில் தங்கி உள்ள நச்சுத்தன்மை கலந்த நீரை இந்த அபான முத்திரை சுத்தப்படுத்தும். சிறுநீரகம், மலக்குடல், பிறப்புறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. பெண்களுக்கு சுகப்பிரசவம் தருவதோடு, கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளை நீக்க வல்லது. மூலம், நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்தை வலுப்படுத்தி, இதயத்துடிப்பை சீராக்கும்.


வருண் ஷாமக் முத்திரை:-

சுண்டுவிரலை கட்டைவிரலின் அடியில் வைத்து அழுத்தி ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடித்து இதனை செயற்படுத்த முடியும். இந்த முத்திரை முகம், கை, கால் என்பவற்றில் ஏற்படும் வீக்கங்களை குறைகிறது. உடலில் நீர் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபட பொருத்தமான முத்திரையாகவுள்ளது. உடலில் நீர் எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும்.   இம்முத்திரையானது வயிறு எரிவை குணப்படுத்துவதோடு முகம், கை, கால் என்பவற்றில் ஏற்படும் வீக்கங்களை குறைகிறது, உடலில் நீர் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தி தடிமல், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிலிருந்து விடுபட பொருத்தமான முத்திரையாகவுள்ளது.


சங்கு முத்திரை செய்முறை:-

இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதியும்படி வைத்து வலது பெருவிரல் தவிர மற்ற விரல்களால் அதை இறுக மூடிக் கொள்ளவும். வலது பெருவிரல் இடது கையின் மற்ற நான்கு விரல்களையும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். தைராய்டு சுரப்பிகளை இயங்கச் செய்கிறது. தொண்டை சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், செரிமானக் கோளாறுகளைப் போக்கவும் வல்லது. மூளை சோர்வடையாமல் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. திக்குவாய் நீங்கவும், நல்ல குரல்வளம் பெறவும் உதவுகிறது.


பிரம்மார முத்திரை:-

இடதுகை ஆட்காட்டி விரலை மடித்து இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு வைக்கவும். இடதுகை கட்டைவிரலால் நடுவிரலின் நகத்திற்குப் பக்கவாட்டில் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைகளை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம். இந்த முத்திரையை விரிப்பில் அமர்ந்து கொண்டோ, சேரில் அமர்ந்து கொண்டோ செய்யலாம். அலர்ஜி உடல் தடிப்பு குணமாகும். மூச்சுத்திணறல் பிரச்சனைகளை குணமாக்கும் சுவாசகோச முத்திரை.


செய்முறை : முதல் நிலை

பெருவிரலில் உள்ள அடி ரேகை, நடுரேகை மற்றும் நுனியைக் கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டுவிரலால் கட்டை விரலின் அடி ரேகையையும், மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரலின் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டிவைக்க வேண்டும். இந்த முத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90 டிகிரி மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். கையை கவிழ்த்துவைத்தோ, கீழ்நோக்கியோ செய்யக் கூடாது. விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ கால்களை தரையில் ஊன்றியோ, அவசர காலத்தில் படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 5 முதல் 6 முறை செய்யலாம். அல்லது இரைப்பு, இருமல் குறையும் வரை செய்துகொண்டே இருக்கலாம். ஒவ்வொரு முறையும் 5 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இரைப்பிருமல் கட்டுக்குள் வரும்.    மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்கம் ஆகியவை குறையும். ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்துவர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சுவிடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும். இரைப்பிருமல் வரத்தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்ய வேண்டும். இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது. ஆஸ்துமா நோய் வராமல், வருமுன் காக்க இந்த முத்திரை உதவும். இன்ஹேலர், மருந்துகள், மருத்துவர் இல்லாத சமயங்களில் இந்த முத்திரை முதலுதவியாக மூச்சுத்திணறல் குறையும் வரை பயன்படுத்தலாம். சளி தொந்தரவுகள், தும்மல், அலர்ஜி ஆகியவை சரியாகும்.

சுவாசகோச முத்திரை செய்முறை : இரண்டாம் நிலை

இடதுகை ஆட்காட்டி விரலை நேராக நீட்டவும். இடதுகை சுண்டு விரலை மடக்கி இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்திலும், மோதிரவிரலை கட்டை விரலின் நடுப்பாகத்திலும், நடுவிரலை கட்டை விரலின் நுனியைத் தொட்டமாறும் வைக்கவும். கையை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். ஆஸ்துமா குணமாகும். இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு சுவாசகோச முத்திரை தீர்வு அளிக்கிறது.


சித்தன் அருள்............. தொடரும்!

9 comments:

 1. எனது புத்தி மாறி கொண்டே இருக்கிறது அதனை எப்படி ஐயா சரி செய்வது

  ReplyDelete
  Replies
  1. த்யானம், மூச்சு பயிற்சி, இவை சரிபண்ணும். உங்களை சுற்றி நடப்பதை, உள் அதிராமல் பாருங்கள். பார்வையாளனாக இருங்கள். மூச்சுக்காற்றை கவனியுங்கள்.

   Delete
  2. நன்றி ஐயா.த்யானம் எப்படி செய்வது என்று விவரிக்க முடியுமா

   Delete
  3. ஐயா வாழ்க வளமுடன் வகுப்பு, வேதாத்திரி மகரிஷி வகுப்புக்கு சென்றால் தியானம் கற்று கொள்ளலாம்.முயன்று பாருங்கள். இது எல்லா ஊர் லும் உள்ளது..வாழ்க வளமுடன் ஐயா.

   Delete
 2. வணக்கம் ஐயா,my m had open heart surgery 3 months before. She had wheezing slightly. We went to doctor 2 days before they took all the tests doctor said Everything is ok...he couldn't find out what's the reason for this shortness of breath....can she do svasakosa muthirai.... please help me sir. Om Agasthiyar ayyan thunai.

  ReplyDelete
  Replies
  1. செய்யலாம். அதன் கூடவே மூச்சு பயிற்சியும் செய்வது நல்லது. பிராணாயாமம் மெதுவாக முடிந்தவரை செய்யச் சொல்லுங்கள்.

   Delete
 3. Ayya vanakam.sri lopamudra samata agastiyar thiruvadi.saranam.adiyen guru photo oru step laueum prerumal photo Ellam mele selfvil .vaitu ullaen.first guru poojai or swamiku poojai ah.so confused.pls tell what to do.

  ReplyDelete
 4. குருவுக்கு பூசை செய்துவிட்டு இறைவனுக்கு செய்யலாம். இறைவனுக்கு கீழே அமர்வதை குரு அகத்தியர் விரும்புவார்.

  ReplyDelete
 5. Ayya megaum nandri.thai tantai padamae saranam.

  ReplyDelete