இந்த தொகுப்பின் தலைப்பை பற்றி, அதன் உட்கருத்துக்களைப் பற்றி அடியேனின் நண்பர், யோகா பயிற்றுவிப்பவரிடம், ஒரு சில நாட்களுக்கு முன் உரையாடினேன். அதிலிருந்து வந்த ஒரு சில உண்மை கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
"அநேகமாக, எல்லா சித்தர்களும் யோகக்கலையை வலியுறுத்தி இருந்தாலும், ஒரு சிலரின் யோகா கலை மட்டுமே இங்கு பயிற்றுவிக்கப்படுவதின் காரணம் என்ன?' என்றேன்.
"ரசவாதம் எல்லா சித்தர்களுக்கும் கைவந்த கலை. இருப்பினும் அகத்தியரிடம் கேட்டால், அவர் போகர் பெருமானைத்தான் முதன்மை படுத்துவார். போகரை விஞ்சிய ரசவாதம் தெரிந்தவர் இங்கு யாரும் இல்லை என்பார். அதுவும் உண்மை. அதற்காக மற்றவர்கள் எல்லோரும் விஷய ஞானம் தெரியாதவர் என்று அர்த்தமில்லை. அதுபோல் யோகா கலையில் எல்லோரும் தேர்ந்தவர்கள் ஆயினும், அந்த கலை எந்த காரணத்தினால் ஒருவருக்கு மிகச்சிறப்பாக அமைகிறது என்பதை, காரண, காரியங்களை பஞ்ச பூதங்களின் நிலையில் நின்று, உணர்ந்து, மிகத் தெளிவாக சூத்திரம் எழுதி தெரிவித்ததால், "பதஞ்சலி சித்தரே" யோகக்கலைக்கு ஆசானாக, ஆச்சாரியனாக கருதப் படுகிறர். பதஞ்சலி சூத்திர முறைப்படி யோகக்கலையை கற்று தேர்வது மிக கடினம். முழுவதும் கற்றவர் யாருமில்லை. அதற்கு ஒருவருக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும். ஏன் என்றால், பதஞ்சலி சூத்திர யோகக்கலையை முழுவதுமாக ஒருவர் கற்று தேர்ந்துவிட்டால், அவர் இறைவனுக்கு சமமானவராக, அத்தனை பலமுள்ளவராக, அனைத்தையும் உருவாக்கி, கட்டுப்படுத்துபவராக மாறிவிடுவார். அதனால்தான், பதஞ்சலி சூத்திரத்தை முழுவதுமாக பயின்றிட ஒரு ஜென்மம் போறாது என்ற ஒரு சொல் உண்டு. உதாரணமாக, அந்த சூத்திரத்தில் சித்தம் என்பதற்கு ஐநூறு அர்த்தங்கள் உண்டு. அந்த ஐநூறும், ஒவ்வொன்றும் ஐநூறாக பிரியும்." என்று நிறுத்தினார்.
ஒரு சின்ன கேள்விக்கு இத்தனை விரிவான பதில் இருக்கிறது என்றறிந்த அடியேன், அசந்து போனேன். வாழ்க்கையில், என்றேனும் வாய்ப்பு கிடைத்தால், பதஞ்சலி சூத்திரத்தை கற்றுணரவேண்டும், என்றிருந்த அவாவை, அப்பொழுதே கைகழுவிவிட்டேன்.
அத்தனை மர்மங்கள் இந்த மனித உடலுக்குள் மறைந்திருப்பதினால், முறையாக எதையும் கற்றுணர்ந்து, அவையடக்கத்துடன், ஆசையின்றி தன் கர்மாவை கழித்து வருகிற, இவரைப் போன்றவர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
"நம் உடலில் 72000ம் நாடிகள் உள்ளதாக பதஞ்சலி சூத்திரத்தில் கூறப்படுகிறது. உடலின் வலது பக்கம் 36000ம் உடலின் இடது பக்கத்தில் 36000மும். யோகா பயிற்றுவிக்கும் பொழுது இரண்டு பக்கத்துக்கும் ஒரேபோல் பயிற்சி கொடுத்தால்தான் உடல் சரியான நிலையில் இருக்கும். ஒரு பக்கம் மட்டும் செய்தால். பயிற்சி கிடைக்காத பக்கத்துக்கு உடல் பலகீனம் ஏற்படும். அந்த பலகீனத்தை தாங்கிக்கொள்ள உடல் மறுபக்கத்தை நாடும் பொழுது வேதனை, வலி, தசை இருக்குதல், வீக்கம் போன்றவை ஏற்படுத்தி, உடலை சோர்வடையச் செய்கிறது. உதாரணமாக, பதஞ்சலி சூத்திரப்படி, ஒரு ஆசனம் பயிலும் முன் உடலை பிராணாயாமத்தினால் தயார்படுத்த வேண்டும் என்கிறார். இது அறியாத ஒருவர், உடலால் முடியும் என்பதற்காக, நேரடியாக பத்மாசனத்தில் அமர்ந்துவிட்டால், உடலின் தாங்கு சக்தி இருக்கும் வரை வலி தெரியாது. பின்னர் கால் முட்டிகளில் வலி வந்து போகாத பொழுது சிரமப்படவேண்டி இருக்கும். உடலை ஆசனங்கள் செய்வதற்கு மூச்சு பயிற்சி வழி தயார் படுத்த வேண்டும். அதற்கு பொறுமை மிகவும் அவசியம்." என்றார்.
"நோயினால் வருந்துபவர்களுக்கு, பதஞ்சலி சித்தர் முறையில் பிராணாயாம பயிற்சி கொடுப்பதற்கு, எனக்கு குருவின் அனுமதி அல்லது உத்தரவு வேண்டும். அனுமதி இல்லாமல், அவர்கள் அருகில் கூட செல்ல முடியாது. ஏன் என்றால், எல்லா கலைகளும் கடைசியில் சென்று நிற்பது மனிதரின் "கர்மாவில்". இதனால்தான் சித்தர்கள் "புண்ணியத்தை சேர்த்துக்கொள், அல்லேல் பாபத்தையாவது செய்யாதே" என திருப்பி திருப்பி கூறுகிறார்கள். சித்தர்கள் அருகாமை கிடைப்பதற்கு, மனித பிறவியில் அவர்கள் சொல்கிற விதத்தில், நல்லவனாய் இருந்தால் மட்டும் போதும். சரியான நேரத்துக்கு அவர்களே வந்து நம்மை வழி நடத்துவார்கள் என்பது உண்மை. இக்கால சித்த, ஆயுர்வேத மருத்துவர்களை தவிர மற்ற பிரிவுகளில் உள்ள மருத்துவர்கள், தாங்கள் கொடுக்கும் மருந்தினால் வியாதி குணமாகிறது என்று பெருமைப்படுகின்றனர். ஆனால் ஒருபோதும், ஒருவருக்கு உதவிய மருந்து, மற்றவருக்கு, சரியாக கொடுத்தும், ஏன் குணமாவதில்லை, என்று யோசிப்பதில்லை. அதுதான் விதி என்பதை கூட நம்புவதில்லை." என அடியேன் கேள்விகளை கேட்காமலேயே, மிக விரிவான பதிலை, தந்தார்.
"சரி! ஒரு மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு எளிய யோகா முறைகளை பற்றி கூறுங்களேன்" என்றேன்.
"ஒரு வீடியோவை அனுப்பி தருகிறேன். அதில் கூறப்பட்டுள்ள 7 விதமான பயிற்சியை தினமும் காலையில் எழுந்த உடன் ஒவ்வொரு பயிற்சியும் ஒரு நிமிடம் என மொத்தம் 7 நிமிடம் செய்து வந்தால் ஒரு மனிதன் மிக ஆரோக்கியமாக வாழலாம். ஏனென்றால் உடலை கட்டுப்படுத்துகிற அனைத்து நரம்புகளும், கையிலும், காலிலும் முடிவடைகிறது. இதில் சொல்கிற பயிற்சிகள் கையும், விரலும் சம்பந்தப்பட்டது." என்றார்.
பின்னர், அந்த வீடியோவை அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். அது மலையாள மொழியில் ஒரு மருத்துவர் பேசுகிற வீடியோ. உங்கள் அனைவருக்காகவும், அதை இங்கே தருகிறேன். அடியேன் செய்து பார்த்தேன். மிக சிறந்த பலன் கொடுக்கிறது. அதில் கூறப்படுகிற, செய்து காட்டப்படுகிற பயிற்சியை தினமும் செய்து, நல் ஆரோக்கியம் அனைவரும் பெற வேண்டிக்கொள்கிறேன்.
nandri ayya
ReplyDeleteOm agatheesaaya namaha
ReplyDeleteNandri ayya
Vaazhga valamudan nalamudan
Our asana mum Cheyyavillai
ReplyDeleteOnnum puria villai pls
வணக்கம். அந்த வீடியோவில் யோகா ஆசனங்கள் கிடையாது. கைவிரல்களை, மணிக்கட்டை, கையின் உள்பகுதி, பின் பகுதியை ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து உடலின் குறைகளை நிவர்த்தி செய்து, எப்படி நன்மை பெறலாம் என்று சொல்கிறார். அனைத்து நரம்புகளின் முடிவும், கையில் உள்ளது. அந்த இடத்தில் அழுத்தம் கொடுத்து, சக்தியை உள்செலுத்தி, உள்ளுறுப்புகளை உணரச்செய்வதே இந்த வீடியோவின் முக்கிய எண்ணம். ஆசனங்கள் கிடையாது.
Delete**********ஏனென்றால் உடலை கட்டுப்படுத்துகிற அனைத்து நரம்புகளும், கையிலும், காலிலும் முடிவடைகிறது. இதில் சொல்கிற பயிற்சிகள் கையும், விரலும் சம்பந்தப்பட்டது********
Deleteமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
ReplyDeleteஅனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தேவாரம் - மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
பொதுவாக நாம் தற்போது அதிகமாக வாழ்த்துச் செய்தி கூறும் போது வாழ்க வளமுடன்! என்று கூறி வாழ்த்தி வருகின்றோம். அதனையும் தாண்டி சைவத்தில் கற்றுக் கொண்டு வரும் போது "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் "என்ற பதிகம் கண்டோம். இப்படியொரு உயர்ந்த வாழ்த்துச் செய்தி நம் தமிழ் மொழியின் மேன்மையையும், சைவத்தின் மகத்துவத்தையும் உணர்த்தி வருகின்றது. ஒரு முறை நாம் இப்படி வாழ்த்திய போது, "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் " என்றால் என்ன? என்று நம்மிடம் சிலர் வினா எழுப்பினர். முடிந்த வரை குருவருளால் இந்தப் பதிவில் விடை காண முயற்சி செய்கின்றோம்.
"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் "
Read more - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_28.html
நீங்கள் "தேடல் உள்ள தேனீக்களாய் - TUT" குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/LHBzBMo1BXp244IZ82pcLh
Om Agatheesaya Namah.
ReplyDelete