​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 15 April 2020

சித்தன் அருள் - 859 - திருவோணம் நட்சத்திரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் உத்தரவு, சித்தன் அருள் தொகுப்பு - 840 இல் கீழவருமாறு உரைக்கப் பட்டிருந்தது.

"ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும்  அவைகளை மோக்ஷத்திற்கு கரை ஏற்றிவிட இங்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. ஆதலின், கீழ்கண்ட பிரார்த்தனையை அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள் செய்யச்சொல்கிறார்.

எல்லா மாதமும் "திருவோணம்" நட்சத்திரத்தன்று, ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும். இதை செய்யும் முன், பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும். நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார் என உரைத்துள்ளார். பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள் வாக்கும் வந்துள்ளது."

அடியேன் இந்த உத்தரவை எல்லா மாதமும் நிறைவேற்றி வருகிறேன். அதன் பெருமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இந்த மாதம் "திருவோணம்" நட்சத்திரம், நாளை, வியாழக்கிழமை, 16/04/2020 அன்று வருகிறது, என்று சித்தன் அருள் வலைப்பூவை வாசித்துவரும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் வாய்ப்பை வழங்குவதற்காக இன்று தெரிவிக்கிறேன்.

அகத்தியரின் உத்தரவை நிறைவேற்றி, அவர் அருள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

சித்தன் அருள்.................. தொடரும்! 

15 comments:

  1. Ayya Vanakkam,

    108 counting - eppadi ninaivu vaithukolvathu?

    ReplyDelete
    Replies
    1. ஒரு தென்னை ஓலை குச்சி அல்லது வேறு ஏதாவது குச்சியை 10 துண்டுகளாக உடைத்து  இடது  கால் பக்கம் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு 10 முடிந்ததும் ஒரு குச்சியை வலது பக்கம் நகர்த்தி வையுங்கள். 10 குச்சியும் இடதிலிருந்து வலது பக்கம் வந்துவிட்டால், 100 முறை ஜபம் முடிந்துவிட்டது. பின்னர் 8 முறைதான் பாக்கி இருக்கும். இடது கை விரல்களை உபயோகித்து எண்ணலாம். 

      Delete
    2. Nanri Ayya,
      Virainthu seyal paduthugiren

      Delete
    3. Ayya,
      Muthal muriyaaga naan agathiyarin uththaravai niraivetriyatharkaga magizhchiyadaigiren. Nanum iththagaya narkaariyangalil eedupada iraivan arulum thangaludaya udhavium kidaiththadarkaaga pala aayiram nandrigalai Sri Agaththiyap perumaanidam samarpikiren.

      Nandrigal.

      Delete
    4. அகத்தியப் பெருமானுக்கும், இறைவனுக்கும் நன்றி கூறுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பொறுமையாக இருந்து தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கிற நல்ல விஷயங்களை கவனியுங்கள். இந்த புண்ணியத்தால், விதி விலகி வழி விடுவதை அனுபவம் மூலம் அறியலாம். உங்கள் சமர்ப்பணம் மிக மிக சிறந்ததாக அமைந்து ஏற்றுக்கொள்ளப்பட்டால், குருநாதரே உங்களை நோக்கி இறங்கி வந்துவிடலாம். பார்க்கலாம்.

      Delete
    5. Ayya,

      Netru neengal kurippitta ". உங்கள் சமர்ப்பணம் மிக மிக சிறந்ததாக அமைந்து ஏற்றுக்கொள்ளப்பட்டால்" idhan porul enna?

      Delete
  2. ஐயா வணக்கம்
    கோவிலின் உள்ளே நுழைய அனுமதி இல்லை, பெருமாளிடம் எப்படி உத்தரவு கேட்பது

    ReplyDelete
    Replies
    1. கோவிலுக்கு போய் இதை செய்யச் சொல்லவே இல்லை. பெருமாளிடம் உத்தரவு வாங்கச் சொல்லவும் இல்லை. அகத்தியரின் உத்தரவின் பேரில் இதை செய்கிறேன் என்று மனதுள் வேணடிக்கச்சொன்னார். உங்கள் வீட்டிலிருந்து இதை செய்யுங்கள்.

      Delete
  3. தவறுக்கு வருந்துகிறேன்.நன்றி

    ReplyDelete
  4. Vanakam aiya...antha sembai tharaiyil veikalama allathu vellai thuni mel vaike venduma...nanri

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    நன்றி ஐயா நினைவு தந்தமைக்கு

    ReplyDelete
  6. ஓம் ஸ்ரீ அகதீசாய நம . ஓம் ஸ்ரீ அகத்தியர் குருவே துணை

    ReplyDelete
  7. sure sir..i will follow on next month

    ReplyDelete
  8. ஐயா வணக்கம். விதி விலகி வழி விடுவதை எப்படி தெரிந்து கொள்வது ஐயா. ஏதேனும் தெய்வீக நிகழ்ச்சி மூலம் கூறுங்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா.ஓம் குருவே துணை!

    ReplyDelete
  9. அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!
    அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

    அகத்தியர் பூசையின் போது இந்த பாடல் கேட்டிருக்கின்றோம். நம் தளத்திலும் பதிவிட வேண்டும் என்று விரும்பி மீண்டும் ஒரு முறை உத்திரவு பெற்று இங்கே தருகின்றோம். இணைய வெளியில் தேடிய போது நமக்கு கிடைத்தது. கொங்கணர் கடைக்காண்டத்தில் இந்தப் பாடல் வருகின்றது. இதோ அந்தப் பாடல்...

    அகத்திய மாரஷி நமா என்றென்றோது
    அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
    அகத்தியரே காஷாய வேடமீவார்
    அப்போது சித்தரெல்லாம் கைக்கொள்வார்கள்
    அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
    யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
    அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
    ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.


    -கொங்கணார் கடைக்காண்டம்.

    Read more - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

    நீங்கள் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/LHBzBMo1BXp244IZ82pcLh

    ReplyDelete