​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 7 April 2019

சித்தன் அருள் - 802 - அகத்தியரும் ஹனுமந்ததாசன் ஸ்வாமியும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வேலை பளு காரணமாக, நிறைய இடங்களுக்கு அலைய வேண்டி வந்ததால் சரியான நாளில், சித்தன் அருளில், தொகுப்பை தர முடியவில்லை.

என்னதான், அகத்தியர் பார்வை நம்மீதெல்லாம் இருக்கிறது என்று திடமாக நம்பினாலும், அடிக்கடி அதை சோதித்து பார்க்கிற புத்தி, பழக்கம் அடியேனுக்கு உண்டு. ஒரு சிலவேளை, இது ரொம்ப அதிகமோ என்று கூட தோன்றும். இருந்தாலும், தகப்பனிடம்தானே கேட்கிறோம். ஒன்றில் சரி, அல்லது இல்லை என்று வரும். பார்த்துவிடலாம், எது வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று, தீர்மானிப்பேன்.

4/4/2019, வியாழக்கிழமை. அகத்தியர்மைந்தன் என்றழைக்கப்பட்ட திரு.ஹனுமந்ததாசன் (அகத்தியர் ஜீவ நாடி வைத்திருந்து, அகத்தியர் அருளால் நிறைய பேர் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தவர்) அவர்களின் பிறந்த நாள். அடியேன் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவன். அன்றைய தினம் அவருக்கு ஏதேனும் ஒருவிதத்தில் மரியாதை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன்.

என்ன செய்வது? யாரிடம் கேட்பது? என்ற யோசனை வந்ததும், முதலில் நம் குருநாதர் அகத்தியப்பெருமான் தான் ஞாபகத்துக்கு வந்தார்.

"அய்யனே! உங்கள் அபிமான மைந்தனின் பிறந்தநாள் அன்று, அவருக்கு ஏதேனும் ஒரு மரியாதை செய்ய அடியேன் விழைகிறேன். தாங்கள் மனம் கனிந்து அருளவேண்டும். தங்கள் திருமேனியில் அணிந்த ஒரு பூவை தந்தாலும் போதும். அதை அவருக்கு அணிவித்து மகிழ்வேன். ஆனால், இப்பொழுது உள்ள சூழ்நிலையில், அடியேனுக்கு தங்கள் திருக்கோவிலுக்கு வந்து உங்களை தரிசிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு வேளை வியாழக்கிழமை தரிசனம் கூட நடக்குமா என்று தெரியவில்லை. தயை கூர்ந்து, அடியேன் வராவிட்டாலும், யார் மூலமாவது கொடுத்துவிட்டால், மிக்க நன்றி உரைப்பவனாவேன்" என புதன் இரவு அவரிடம் விண்ணப்பித்தேன்.

வியாழனன்று முடிந்தால் விடியற்காலையில் அவரை சென்று தரிசனம் செய்து வரலாம், என நினைத்தேன்.

நம்மால் ஆசைப்படத்தான் முடியும். ஆசை நிறைவேற வேண்டுமானால், அவர் அருள வேண்டும். புதன் அன்று வேலை முடித்து வீடு வந்த பொழுது இரவு 10 மணி ஆகிவிட்டது. மிகுந்த அசதியில், உறங்கிப்போனேன். வியாழக்கிழமை காலை கண் விழித்ததும் வெகு நேரமாகிவிட்டது. சரி! முதல் வழி அடைந்துவிட்டது. மாலை தரிசனத்துக்கு செல்வோம் என மாற்றிவைத்தேன்.

அன்று மாலை நாலு மணிக்கு தொடங்கிய ஒரு வேலை, முடித்த பொழுது 8 மணி ஆகிவிட்டது. ஹ்ம்ம்! இரண்டாவது வழியையும் அடைத்துவிட்டார், என புரிந்தது.

மிகுந்த யோசனைக்குப்பின் அகத்தியப்பெருமானிடம், அடியேன் நிலையை தெரிவித்து வேறு ஒரு நாள், பாலராமபுரம் கோவிலுக்கு வந்து தங்களை தரிசிக்கிறேன், என வேண்டிக்கொண்டேன்.

அலுவலகத்திலிருந்து, நேராக வீட்டுக்கு வராமல், ஒரு நண்பரை பார்க்க அவர் நடத்தும் கடைக்கு சென்றேன். மணி 9 ஆகிவிட்டது. இனி யார் கொண்டுவருவார்கள்! சரி! இன்று இல்லை போலும். அடியேன் இன்னும் நிறைய, முன் செல்ல வேண்டியதுள்ளது போலும், என்றெல்லாம் யோசனை எங்கோ சென்றது.

​நண்பர் கடையில் ஒரு காப்பி போடச்சொல்லி, அதை அருந்தியபடியே என்னவோ யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது,

"நமஸ்காரம்!" என்ற சப்தம் கேட்டு திரும்பி பார்க்க, வேறொரு நண்பர் நின்று கொண்டிருந்தார்.

"நமஸ்காரம்! என்ன விஷயம்!" என்றேன்.

"இன்று அகத்தியர் கோவிலுக்கு சென்றிருந்தேன். பிரசாதம் கிடைத்தது. அதை இந்த பையில் வைத்திருக்கிறேன். இதை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

ஒரு நிமிடம் அவரையும், அவர் கையிலிருந்த நீலநிறப் பையையும் யோசித்தபடி பார்த்து நின்றேன்.

மனம் நெகிழ்ந்து போனது. கண்களில் நீர் அரும்பத் தொங்கியது. இமைகளை தாழ்த்திக் கொண்டேன்.

அடியேன் அமைதியாக இருப்பதை கண்டு, அவரே, "இன்று தரிசனத்துக்கு சென்ற பொழுது, ஒரு நாளும் இல்லாதது போல், அகத்தியப்பெருமானும், தாயாரும் மிக எளிமையாக இரு துளசி மாலை மட்டும் அணிந்து நின்றனர். அது ஆச்சரியமாக இருந்தது. துளசி மாலையை அகத்தியர் கழுத்தில் பார்த்ததும், அது கிடைத்தால் பரவாயில்லையே! என்று நினைத்தேன். பூஜை முடிந்த பின் பூஜாரி இருவர் கழுத்திலுமிருந்த துளசி மாலையை எடுத்து தந்து, உங்களிடம் கொடுக்கச்சொன்னார். உங்களை இங்கு கண்டவுடன், இதை சேர்ப்பித்து விடலாம் என்று கொண்டு வந்தேன்" என்றார்.

வலது கரம் நீட்டி, அந்த பையை வாங்கினேன்.

"ஹ்ம்ம்! நல்ல நாடகம் நடக்கிறது. சும்மா யோசித்தாலே குருநாதருக்கு கேட்கிறது. அதிலும் விண்ணப்பித்தால், உடனேயே அருளுகிறார், குருநாதர். கூடவே அம்மையும் அருள்வதில் குறைவைக்கவில்லை" என்று புன்னகைத்தபடியே, நன்றி கூறினேன் அகத்தியப்பெருமானுக்கு.

வீடு வந்து சேர்ந்ததும், திரு ஹனுமந்ததாசன் அவர்களின் புகைப்படத்தை, அகத்தியப் பெருமான் படத்திற்கு கீழ் மாட்டி, மாலையை அவர் படத்தில் மாட்டினாள், அடியேன் மனைவி.

இந்த முறை அனுபவம், மிக எளிதாக, இனிமையாக அமைந்தது. 

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் இவ்வனுபவம் சமர்ப்பணம்!

சித்தன் அருள் ............. தொடரும்!

9 comments:

  1. ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக!

    ReplyDelete
  2. உங்கள் குருநாதருக்கு பாரபட்சம் அதிகம் , அவர் உங்களுக்கு மட்டுமே செய்கிறார் ... தன்னை நம்பிவருவோர்க்கு ஏதும் செய்வதில்லை ....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      அப்படியா!? அப்புறம்!

      எப்படி வாழ்ந்தால் அவருக்கு பிடிக்குமோ, அப்படி ஒருவர் தன்னை மாற்றிக் கொண்டுவிட்டால், அடிக்கடி, ஏன் எப்பொழுதும், அந்த ஒருவரையே சுற்றி சுற்றி வருவார், அவர். அத்தனை கனிவானவர், அகத்தியப் பெருமான்.

      நீங்களும் முயற்சி செய்யுங்களேன். இது தற்புகழ்ச்சி இல்லை. நடந்த, நடக்கிற உண்மையை உரைக்கிறேன். என் முயற்சி என்பது இங்கு ஏதும், இல்லை. ஒரு குழந்தையின் சிந்தனை ஓட்டம்தான் அடியேனுக்கும்.

      ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

      அக்னிலிங்கம்!

      Delete
    2. 100 percent true agnilingam ayya.creativei 8---agathiyar ungalukkum arula neengal vidathu muyarchi seiyungal.nambungal nadakum enpathu sitharkal vakku

      Delete
  3. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  4. 2010 ல் அகத்தியர் ஜீவா நாடி பார்த்தேன் , அப்பொழுது எனக்கு பேச்சு குறைபாடு இருந்தது , அது எப்போது குணம் ஆகும் என்று கேட்டேன் அதற்க்கு அவர் இன்னும் 6 மாதம் என்றார் , அவர் சொல்லி 8 வருடங்கள் கடந்துவிட்டது இன்னும் குணமாகவில்லை . இப்போது அவர் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது . மனிதர்களை போல எதையாவுது சொல்லி தப்பித்து கொள்ளும் குணம் மஹான் இடத்திலும் இருக்கிறது , நான் தான் அப்பாவியாக இருந்துவிட்டேன் . சரி அவரும் நம்மை போல் முக்திக்கு அலைபவர் தானே :p

    ReplyDelete
    Replies
    1. "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா".

      நானும் ஜீவ நாடியை 2012ல் சென்று பார்த்த பொழுது ஆறு மாதம் கழித்து வரச்சொன்னார் . ஆனால் ஆறு மாதத்தையும் பிறகு திரு கணேசன் அவர்களுக்கு ஜீவநாடி வாசிக்க குருநாதர் அனுமதிக்கவில்லை. நானும் எதிர்பார்த்து காத்திருந்து வெறுத்து போய் விட்டேன். ஆனால் அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து வேறு ஒரு கஷ்டம் வந்த பொழுது அகத்திய பெருமானை சரண் அடைந்தேன். நான் கேட்டதை அவர் கொடுக்க வில்லை. ஆனால் எனக்கு என்ன தேவையோ அதை விட அதிகமாகவே வேறு விதத்தில் இப்பொழுதும் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார். அகத்தியன் பாதத்தில் சரணாகதி அடையுங்கள். எல்லாம் நன்றாக நடக்க அய்யன் துணை இருப்பார்.

      Delete
  5. Nanum avarai sandhitha andha arpudhamana nilai migavum inimaiyanadhu. Oru nediya kootam avarai kanbatharkku nindru Nal petru, Antha nalilum salikkamal kathirundhu avaridam asiyum alosanaiyum petra adiyavaril naum oruvan. Enadhu manaiviku nalpatta noi gunamaga sendrurindhen. Ippodu en manaivi nalamaga ullal. Agathiyarukkum , hanumath dasan ayya avargalukum enadhu vazhnal nandrigal M.S.Ravi Chennai

    ReplyDelete
  6. நானும் இறைசித்தர் அகத்தியர் மகனை பார்க்க அனுமதி கிடைத்து பார்த்தேன். அவரிடம் அகத்தியர் தரிசனம் வேண்டும் என்று கேட்க சதுரகிரி போ கிடைக்கும் என்றார். தொடர்ந்து சதுரகிரி சென்றேன், 22 வது சதுரகிரி தரிசனத்தின் போது தரிசனம் கொடுத்தார் இறைவன் அகத்தியர். நன்றி

    ReplyDelete