​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 11 April 2019

சித்தன் அருள் - 803 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"நிமித்தம்" என்கிற தலைப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட, "சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" தொடர்கிறது.

"நிமித்தம்" என்கிற வார்த்தையின் அர்த்தமே, இந்த நேரம். அது நிகழ்காலம். அங்கிருந்து உடனடியான எதிர்காலத்தை ஒருவர் சரியாக கணிக்கலாம். அதற்கென நிறைய சாதனை செய்ய வேண்டும். சிலருக்கு அந்த சாதனை, எளிய மூச்சு பயிற்சி எப்பொழுதும் செய்வதனால், எளிதாக கைவல்யமாகும். இங்கு கவனிக்கப் படவேண்டியது ஒன்று தான். அந்த பயிற்சியை சாதனை செய்பவர், தன் சித்தத்தை ஒரு பொழுதும் கலய விடுவதில்லை. தேவை இல்லாத அதிர்வுகளை, தன்னுள் புக விடுவதில்லை. சித்தம் நிலைத்தவருக்கு, எந்த வித பெரிய இரைச்சலான சூழ்நிலையும், இயல்பானதாக மாறிவிடும். எதுவும் அவரை பாதிப்பதில்லை. எனவே, தன் முழு கவனத்தையும் பஞ்ச பூதங்களின் தனிப்பட்ட சைகைகளின் மீதும், அல்லது பஞ்ச பூதகலவைகளின்  சலனங்கள் மீதும் செலுத்தி, அவைகள் உரைக்கும் பதிலை உணர்ந்து, உரைக்க முடியும். உதாரணமாக, ஒரு சித்த வித்யார்த்தியை அல்லது சித்த மார்கத்தில் ஓரளவு முன்னேறிவிட்டவரிடம், ஒருவர் தனக்கு ஒரு வீடு அமையுமா? என்று கேட்கிற நேரத்தில், தன் சுற்றுப்புற சூழ்நிலையில் இயற்கை தெளிவுபடுத்துகிற சமிக்சைகளை உற்று பார்த்து, அவருக்கான பதிலை "ஆம் அல்லது இல்லை" என்று கூற முடியும். அது சரியாகவும் இருக்கும்.

எப்படி? என்று எதிர் கேள்வி கேட்டேன்.

அந்த கேள்வியை உள்வாங்கி, உணர்ந்து, ஒரு நிமிடம் கண் மூடி திறக்கும் பொழுது, அவர் ஒரு பூ, செடியிலிருந்து விழுவதை கண்டால், " ஆம்" என்பார். அல்லேல், அக்னியை கண்டால் "இல்லை" என்பார். "மண்" விழுந்தால் நஷ்டம் வரும், பசு நடந்தால், "இறை அருளினால்" உடன் அமையும், என்றெல்லாம் அர்த்தம் உண்டு. இப்படி, பஞ்ச பூதங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிற, சமிக்சைகளை, விரிவாக பார்த்து பழக வேண்டும். கேள்வி கேட்கும் நேரம் யார் ஆட்சி, வந்தவரின் கர்மா, என்றெல்லாம் உணர வேண்டும். அப்படி பார்ப்பவர் கூட என்னதான் பெரியவராக இருந்தாலும், மனித ஜென்மம் எடுத்து நிற்பதினால், அருகில் உள்ள கேட்டவரின் எதிர் காலத்தை பார்த்துவிட்டபடியால், சாட்சி பூதமாக இருக்கும் "காலம்" நடக்க வேண்டியதை மாற்ற நினைக்கும். அதனால் தான், நிமித்தம், ப்ரச்னம், ஜோதிடம் போன்றவற்றை உபயோகித்து பலன் சொல்பவர்கள், பலன் கூறியவுடன்,  ஒரு சில பரிகாரங்களை தொடர்ந்து செய்யச் சொல்வார்கள். இதன் தாத்பர்யம் என்ன வென்றால், சாட்சி பூதமான நாராயணன் (காலம்), அந்த பலனை மாற்றிவிடக்கூடாது எனவும், மேலும் கேட்டவர் ஒரு நல்ல கர்மாவினால் (பரிகாரம்) ஒரு புண்ணியத்தை சேர்த்துக்கொண்டு, அந்த பலனை அடையட்டுமே என்கிற நல்ல எண்ணத்தாலும் தான். ஆனால் மனிதன் என்ன செய்கிறான்? பூமி காரகனான செவ்வாயின் அதி தேவதையான சுப்ரமண்யனுக்கு அபிஷேகம் செய் என்றால், முருகருக்கும் வீட்டுக்கும் என்ன சம்பந்தம், என்று யோசித்துவிட்டு, சொன்னார் செய்கிறேன் என்று ஏனோ தானோ என்று செய்கிறான். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், "ஒருவன் மிக கவனமாக ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து, உத்தமமான பொருட்களை வாங்கி சொன்ன பரிகாரத்தை செய்ய வேண்டும்", என்று யோசிப்பதில்லை.  இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களுக்கும் பின்னால் எந்த கர்மா தடையாக நின்று, அவன் அடைய வேண்டியதை தடுக்கிறது, என்று எளிதாக காண முடியும். தவிர்க்கிற வழியையும், நிமித்த சாஸ்த்திரத்தினால் சரியா கணிக்கவும் முடியும்" என்றார்.

உண்மையிலேயே ஆச்சர்யமாக இருக்கிறது! காலமாக இருப்பது சாட்சி பூத நாராயணன் என்றீர்களே! அதை சற்று விளக்க முடியுமா?

அனைத்து சாஸ்த்திரங்களும், நாராயணனை காக்கும் கடவுள் என்கிறது. காக்கும் சக்தி, அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கும். கவனிப்பது என்பதே சாட்சியாக மாறுகிறது. அதனால்தான் நாராயணன் அந்த வேலையை சிறப்பாக செய்வதினால், அவருக்கு (சாட்சி) பூத நாராயணன் என பெயர் வைத்தனர். பஞ்ச பூதமாக இருந்து அனைத்தையும் கவனித்து, சாட்சியாக இருக்கிறார், என்பதை மனிதருக்கு உணர்த்தவே, கோவில்களில் பூத நாராயணரின் சிற்பத்தில், அவர் கண்ணை முழுவதுமாக திறந்து பார்த்துக் கொண்டிருப்பது போல் வடிவமைத்தனர். அது ஒரு உவமை. உண்மையில், அவர் பார்வையிலிருந்து எதுவுமே தப்பிக்க முடியாது என்பதே உண்மை.

அனைத்து தெய்வ திருமேனியிலும், பூணூல் அணிந்திருப்பதுபோல் வடிவமைத்துள்ளனரே! சித்த மார்க்கம், இதற்கு என்ன விளக்கம் கூறுகிறது? என்றேன்.

உனக்கு என்ன விளக்கம் தேவை? சாஸ்த்திரப்படி அமையும் விளக்கமா? அல்லது அது சுட்டிக் காட்டும் விளக்கமா? என்றார்.

சித்தர்களின் எளிய சுட்டிக்காட்டுதல் என்ன? என்று சற்று அழுத்தமாக கேள்வியை கேட்டேன்.

பூணூலை பற்றி மட்டும் கூறாமல், வேறு சில விஷயங்களையும் பற்றி கூறினால், அவை அனைத்தின் தாத்பர்யம், உனக்கு ஒரு விரிவான பார்வையை தருவிக்கும். கூறுகிறேன், என்றார்.

மிக கவனமாக அவர் கூற வருவதை கவனிக்க தயாரானேன்.

சித்தன் அருள்...................... தொடரும்!

5 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி

    ReplyDelete
  2. Mikka nandri ayya .. om madha lobamudra sametha agatheesaya guruve namaha 🙏🏻🙏🏻🙏🏻Om Namo Lakshmi namo narayana 🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  3. ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக!

    ReplyDelete
  4. அன்னை லோபமுத்திரை ஸமேத அகஸ்திய பெருமான் திருவடி சரணம் , மனம் அடைங்கினால் மணம் வீசும் அய்யன் குருநாதன் உடன் அன்னை திருவடி கிடைக்கும்

    ReplyDelete