​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 14 April 2019

சித்தன் அருள் - 805 - ஓதியப்பரும், அகத்தியரும், புத்தாண்டும்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று தொடங்கும் "விகாரி" வருட புத்தாண்டு, உங்கள் அனைவருக்கும், இறைவன், அகத்தியப்பெருமான் அருளுடன் நிறைவான, நிம்மதியான வாழ்வை அருளட்டும், என அகத்தியப்பெருமானின் "சித்தன் அருள்" வலைப்பூ சார்பாக வாழ்த்துகிறோம்!

பாலாராமபுரம் அகத்தியர் கோவில் திருவிழா மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம், எரித்தாவூர் என்கிற மலைக்கோவிலிலிருந்து முருகர் இறங்கி வரவே, அகத்தியப்பெருமான் அவரை எதிர் கொண்டு மரியாதை செய்து, அவர் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இருவரும் கோவில் முன் அமர்ந்தபின், கிராமத்தின் அனைத்து தெரு வழியாகவும் சென்று அனைத்து மக்களையும் ஆசிர்வதிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

அப்பொழுது எடுக்கப்பட்ட இரண்டு வீடியோக்களையும் ஒரு சில படங்களையும், நீங்கள் கண்டு இன்புற கீழே தருகிறேன்.

[எரித்தாவூர் முருகர் மலையிலிருந்து இறங்கி வரும் காட்சி]


[முருகருக்கும் அகத்தியப்பெருமானுக்கும் அடியவர்கள் சார்பாக புஷ்பாபிஷேகம்]


அகத்தியப்பெருமானுக்கு சித்தராக அலங்காரம்!


முருகரும், அகத்தியப்பெருமானும் கோவில் முன் அமர்ந்திருக்கும் காட்சி!ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................. தொடரும்!

9 comments:

 1. ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் துணை

  ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ReplyDelete
 2. விகாரி வருட புத்தாண்டு இறைவன், அகத்தியப்பெருமான் அருளுடன் நிறைவான, நிம்மதியான வாழ்வை அனைவருக்கும் அருளட்டும். நேரில் திரு விழாவை பார்த்த நிறைவை தந்தது
  மிக்க நன்றி.

  என்றும் அன்புடன்,
  வெங்கடேஷ்

  ReplyDelete
 3. தஞ்சை திரு.கணேசன் அய்யா அவர்கள் ஜீவநாடி **தற்போதும்** படித்துக்கொண்டிருக்கிறாரா?... தெரியப்படுத்தவும் நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. ஆம். தற்பொழுது திரு கணேசன் அவர்களுக்கு நாடி வாசிக்க அகத்தியர் அனுமதி அளித்து விட்டார் என்று கேள்வி பட்டேன். அவர் கைபேசி எண்ணுக்கு SMS அனுப்பி அனுமதி பெற்று சந்திக்கலாம்.

   Delete
  2. மிக்க நன்றி :-)

   Delete
  3. Shall I get Thiru. Ganeshan ayya phone number? Please share.

   Delete
 4. Om lopamudra samata agastiyar thiruvadi pottri.

  ReplyDelete
 5. ஓம் அகத்தீசாய நமஹ ஓம் ஓதியப்ப நமஹ

  ReplyDelete
 6. Malai kovil sonnavudanae enakku andha malaikovil niyabagam vandhudhichi ! ......

  ReplyDelete