​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 19 April 2019

சித்தன் அருள் - 806 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


பூணூலை பற்றி பேசினாலே, பொதுவாக இவ்வுலகில் பிரச்சினைதான் வரும். இருப்பினும், என் கேள்விக்கு உனக்கு தெரிந்த விடையை கூறு. பூணூல் போடுகிற நிகழ்ச்சியை என்னவென்று கூறுவார்கள்?

"உபநயனம் என்பார்கள்" என்றேன்.

அந்த வார்த்தையின் அர்த்தம்?

"ஒருவனை இறையிடம் அழைத்துச்செல்வது" என்று கூறுவார்கள்!

'சரியான பதில். இதை நாங்கள் "ஒருவனுக்கு" "அவனை" அறிமுகப்படுத்துவது, என்று கூறுவோம்" என்றார். இங்கு அவன் என்பது இறைவன் அல்லது அந்த மனிதனின் உண்மை சொரூபம் எனக் கொள்ளலாம். பிரளயகாலம் முடிந்து யுகம் தொடங்கும் நேரத்தில், மஹாவிஷ்ணுவுடன், பூணூல் தோன்றியது என்று புராணங்கள் கூறுகிறது.

சிவபெருமான் கையிலிருக்கும் சூலம், பூணூல், முருகரின் கையிலிருக்கும் வேல், போன்றவை, ஒரு மனிதனுக்குள் ஓடும் வாயுவை குறிக்கும். இடைகலை, பிங்களை, நடுமத்தியாக சுழுமுனையை குறிக்கும். எந்த ஒரு மனிதனும், தன்னை அறிய, இறை நிலையை உணரவேண்டுமானால், உள்ளே மூன்றாக ஓடும், பிராண வாயுவின் காலை பிடிக்க வேண்டும், என்பதை உணர்த்தவே, இறையே இறங்கி வந்து, இந்த சின்னங்களை நமக்கு காட்டி, சூக்க்ஷுமமாக உணர்த்துகிறது. நீயே உணர்ந்திருக்கலாம், ஒருவனுக்கு பூணூல் போட்டபின், வீட்டில் இருக்கும் பெரியவர்கள், அவன் குறைந்தது இரண்டு நேரம், பிராணாயாமம், சந்தியாவந்தனம் பண்ணுகிறானா என மேற்பார்வை செய்வார்கள். அவனுக்கு உரைக்கப்பட்டது மிகப்பெரிய பொக்கிஷம். அதை அவன் பத்திரமாக பயிற்சி செய்து பாதுக்காக்கிறானா? மேலும் முன்னேறுகிறானா  என்று சோதிப்பார்கள்.  மூன்று நூல்கள் - பிரம்மச்சரியம், ஆறு நூல்கள் - மணமாகிய குடும்பநிலை, ஒன்பது நூல்கள் - பிதுர்கர்மா என நூல்களின் எண்ணிக்கை, ஒருவன் வளர்ச்சியை குறிக்கும். எவனொருவன் பிராணாயாமத்தை சரியாக செய்து வருகிறானோ, அவன் ஒன்பதை அடையும் பொழுது, உடல் மெலிந்து, தேஜஸ் நிறைந்து வழிய, எங்கும் ஒரு நல்ல தன்மையை பரப்புபவனாக மாறுவான். இது கூட, குடும்ப சூழ்நிலையில் இருந்தாலும், சித்த மார்க்கத்தின் முக்கிய குறிக்கோளை, தன் கடமைகளை குடும்பத்துக்கு சரிவர செய்வதினால், எளிதாக அடைந்துவிடலாம், என மனிதனுக்கு உணர்த்துவதே, இறையின் விருப்பமாகும்.

நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தால், சற்று தாகம் எடுக்கவே, பெரியவர், இளையவரை அழைத்து "நீர் கொண்டுவா!" என்றார்.

இளயவரோ, போகும்முன் "உங்களுக்கு ஏதேனும்  வேண்டுமா?" என்றார்.

"ஒரு காப்பி கிடைக்குமா?" என்றுவிட்டேன்.

சிரித்துக்கொண்டே உள்சென்றவர், பெரியவருக்கு நீரையும், அடியேனுக்கு காப்பியையும் கொண்டு தந்துவிட்டு, "நேற்று நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வியை இப்பொழுது பெரியவரிடம் கேளுங்களேன்" என்று சொன்னார்.

"என்ன கேள்வி?" என்பதுபோல் பெரியவர் அடியேனை பார்த்தார்.

"பால் என்பது பசுவின் ரத்தத்திலிருந்துதானே கிடைக்கிறது. பின்னர் எப்படி அது சாத்வீகமாகும், சைவமாகும்? இதற்கு சித்தமார்கம் என்ன விடையளிக்கிறது?" என்றேன்.

"ஹ்ம்ம்  நல்ல கேள்வி! ஒருவனின் உடலில் ஓடும் ரத்தம், உள்ளிருக்கும் இருக்கும் எலும்பு, சதை, நரம்பு போன்றவை அவன் பெற்றோர்களால் பகிரப்பட்டு, அவன் பிறந்த பொழுது தாயிடமிருந்து பால் குடித்து வளர்கிறானே, அப்படிப்பட்ட நிலையில் அந்த குழந்தை வளர்வது சைவமா? அசைவமா? " என்று நிறுத்தினார்.

"என்னிடம் பதில் இல்லை" என்றேன்.

"உன்னிடம் ஒரு நூறு ரூபாய் இருக்கிறது. எனக்கு அது தேவை. உனக்கு தெரியாமல் அதை நான் எடுத்துக் கொண்டுவிட்டால், என்னை என்னவென்று அழைப்பாய்?" என்றார்.

"திருடன் என்றழைப்பேன்"

"அதே ரூபாயை, நான் கேட்க, நீயாக எனக்கு தந்தால்?"

"தானம் வாங்கியவர் என்றாகின்றீர்"

"அதெப்படி ஒரு விஷயமே, இரண்டு வித சூழ்நிலையை உருவாக்குகிறதோ, அதுதான் பால் விஷயத்திலும். ஒரு தாய் தன் குழந்தைக்கு விரும்பி பால் கொடுக்கிற நிலையில் இருக்கிற மனநிலையில் அது தோஷத்தை சுமப்பதில்லை. அது போல் விரும்பி பாலை தருகிற பசுவின் நிலையில் தோஷம் இல்லை. இருந்தாலும், உலகில் மனிதனுக்கு என்று படைக்கப்பட்ட விஷயங்கள் அனைத்திலும் தோஷம் உண்டு. அதனால்தான், ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும், பிறவியே வேண்டாம் இறைவா என்று வேண்டுகிறார்கள். ஒரு உயிரை அழித்து உயிர் வாழும் பொழுது, மன்னிக்க முடியாத குற்றம் உருவாகிறது. அதே நேரத்தில், பிற உயிரை வாழவைத்து, தானும் வாழும் பொழுது, மன்னிக்கக்கூடிய குற்றம் உருவாகிறது. எனவேதான், சித்தர்கள், பெரியவர்கள் அனைவரும் சர்வம் இறைவனுக்கு அர்ப்பணம் என்று வாழ்கிறார்கள். நம்மை, எந்த புகழுக்கும், பெருமைக்கும் அடிபணியாமல் இருக்க சொல்கிறார்கள்!" என்றார்!

"ஹ்ம்ம்! இருந்தும் மனிதர்கள் புரிந்து வாழ்கிறார்களா?"

"ஆம், இல்லை போதாது என்பதே பதில்" என்றார்.

"இன்றும் சித்தர்களை வருத்தப் படவைப்பது மனிதனின் அசைவம் உண்ணும் ஆசை, பிற மனிதர்கள்/பொருட்கள் மீதான பொறாமை/எண்ணம், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனிதனின் மன நிலை, தன் அகம்பாவத்தால், யோசிக்க முனையாத மனத்தால், தன் வாழ்க்கையை மிக மிக சிக்கலாகிக்கொண்ட நடவடிக்கைகள். இவை அத்தனையும் மிக கொடுமையான கர்மாவை சேர்க்கும் என்று தெரிந்தும், தொடர்ந்து செய்கிறார்கள். என்று ஒருவன் தன் வலியை உணர்கிறானோ, அன்று முதல் அவன் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. சரியாக புரிந்து கொள், வாய்ப்பிருக்கிறது. எளிய வாழ்க்கையை போதிப்பதே சித்த மார்க்கம். அப்படி வாழத்தொடங்கிவிட்டால். இருப்பதெல்லாம் அதிகமாக தோன்றத் தொடங்கும். அப்பொழுது பிறரை பற்றிய எண்ணம் வந்தால், கர்மா நன்றாக இருந்தால், அதிகமானதை தானம் செய்ய முடியும். அங்கு, புண்ணிய கார்யம் தொடங்குகிறது. நல்ல எண்ணம் எங்கும் பரவ அவன் காரணமாகிறான். அதனால் தான் திருந்துவதும், தொடங்குவதும் ஒருவன் உள்ளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறோம். அப்படி ஆரம்பித்துவிட்டால், அவன் மனம், எண்ணங்கள், செயல்கள், உடல் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். பஞ்ச பூதங்களின் எந்த பாதிப்பும், அவன் உடல் அளவில் தாங்குவது எப்படி என்று படிக்கத் தொடங்கிவிடுவான். பின்னர் அவன் வாழ்க்கையே, இயற்கையாகிவிடும். இந்த இயற்க்கை தன்மையே அவனுக்கு, அவனுள் இருக்கும் இறைவனை அறிமுகப்படுத்தி வைக்கும். அதன் பின்னர் அவன் சுத்தமாகிவிடுவதால், யாருக்காக அவன் வேண்டிக்கொண்டாலும், அது உடனேயே அவர்களுக்கு கைவல்யமாகிவிடும்" என்று ஒரு பேருண்மையை போட்டு உடைத்தார்.

சித்தன் அருள்.............. தொடரும்!

10 comments:

 1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி

  நன்றிகள் கோடி ஐயா

  பின் பற்றி வாழ்வதற்கு முயற்சி செய்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! பின்பற்றி வாழ்வதை விட, அகத்தியர் சொன்னதே உண்மை வாழ்க்கை என்று அப்படியே மாறிவிடுங்கள். உங்களால், எதையும் சரியாக செய்ய முடியும். நிறைய புரிந்து கொள்ளவும் முடியும்.

   Delete
  2. நன்றி ஐயா. அப்படியே செய்கிறேன்.

   Delete
 2. Mikka nandri ayya ... Om Madha Lobha mudra sametha Agatheesaya namaha🙏🏻🙏🏻🙏🏻

  ReplyDelete
 3. Arunachalane eeesnae ! arunachalam sir i cant type in tamil here using google tamil input , plz fix that glitch..

  appo ithuku munnadi tamil la panniyae nu kekkalam , notepad la type panni atha copy paste panna . :P

  Thamizhuku ilakkanam ezhuthiya agathiyar ku, avar padhivu la tamnil la typ panna mudiyala omg enna kodumi ithu :P :P

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வலைப்பூவில், தமிழில் பதில் போடுபவர்கள், பக்கத்திலேயே ஜிமெயில் திறந்த்துவைத்து, தட்டச்சு செய்து, அங்கிருந்து நகலெடுத்து, வலைப்பூவில் போடுகிறார்கள். வலைப்பூவில் தமிழில் தட்டச்சு செய்ய கூகிள் அனுமதிப்பதில்லை. அப்படி முயற்சி செய்து பாருங்கள். தமிழில் பதில் போடலாம்.

   Delete
 4. Google Indic keyboard app download செய்து தமிழில் டைப் செய்யலாம், ஐயா.

  ReplyDelete
 5. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ என் குருவே தோன்றா துணையன் நீயே சரணம் சரணம் 🙏🙏🙏

  ReplyDelete