[ ஓதியப்பர் கோவில், ஒதிமலை ]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"அந்தநாள் - இந்த வருடம்" என்கிற தலைப்பில் ஓதியப்பர் என்கிற ஒதியங்கிரி குமார சுப்ரமண்யரின் பிறந்தநாள் 09/09/2015 புதன்கிழமை வருவதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. அன்று ஒதிமலையில் மிகச் சிறப்பாக "அகத்தியர் அடியவர்களால்" ஓதியப்பரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என்கிற தகவல் கிடைத்தது. பல அடியவர்களும் தொகுத்து அனுப்பிய மடலை உங்கள் முன் சந்தோஷமாக சமர்ப்பிக்கிறேன்.
- செவ்வாய் கிழமை 08/09/2015 அன்று ஓதியப்பருக்கு யாகம் நடத்தி 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் சிறப்பான முறையில் நடந்தது. வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அபிஷேக ஆராதனைகளை கண்டு அவர் அருள் பெற்றனர். பின்னர் கலச அபிஷேக தீர்த்தம் எல்லோருக்கும் வழங்கப் பட்டது.
- மறுநாள் புதன்கிழமை அன்று பிறந்த நாளை கொண்டாடவேண்டி இரவு அங்கு தங்கிய அன்பர்கள் "சித்தர்களின்" அருகாமையை, ஆட்டத்தை உணர்ந்ததாக கூறுகிறார்கள்.
- நாடு ஜாமத்தில் படி ஏறி வந்தவர்களுக்கு, பைரவர் துணை சென்றாராம். அவர்கள் நின்றால் நின்று, நடந்தால் நடந்து, மிகப் பொறுப்பாக, பத்திரமாக அவர்கள் மலை ஏறி உச்சி சென்றடைய உதவியாக இருந்தது, மிக ஆச்சரியமாக இருந்ததாம்.
- ஒரு நண்பரின் ஆணைப்படி, மூடி இருந்த கோவில் வாசல் படியில் ஒரு பாட்டில் தண்ணீரை ஒரு அன்பர் வைத்திருந்து புதன் கிழமை அன்று அதை குடித்துப் பார்க்க, அதில் பன்னீர், வெட்டிவேர் போன்ற அம்சங்களின் மணம் இருந்ததாக, மிக சுவையாக இருந்ததாக, தகவல். (நன்றி! அகத்தியப் பெருமானுக்கு உரியது!)
- ஒரு குழவில் வந்த ஒரு அகத்தியர் அடியவர் மூன்று நாட்களாக வாய்புண், தொண்டை புண்ணால் எதுவுமே சாப்பிட முடியாமல் தவித்திருக்க, அவருக்கு, அந்த தண்ணீரை குடிக்க கொடுத்திருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், அரை மணி நேரத்தில், அவர் பூரண குணமடைய, அன்றைய தினம் நடந்த அன்னதானத்தில், காரமான உணவை, எந்த ஸ்ரமமும் இன்றி வயிறு நிரம்புகிற அளவுக்கு சாப்பிட்டாராம். (நன்றி! ஓதியப்பர், சித்தர்கள்).
- மெதுவாக ஒவ்வொரு குழுவாக சேர்ந்து வர, விடுமுறை நாள் ஆல்லாவிடினும், 200 முதல் 250 அகத்தியர் அடியவர்கள்/அன்பர்கள் அன்று ஓதியப்பர் பிறந்தநாளை கொண்டாட வந்திருந்தனர். அதில் வந்த அனைவரும் "அகத்தியரின் - சித்தன் அருளை" படித்தே வந்திருக்கிறார்கள், என்பது அவரது வலைப்பூவின் தாக்கத்தை உணர்த்துகிறது. (நன்றி! அகத்தியரே!).
- ஒரு குழுவில் வந்தவர்களுக்கு திடீரென "உழவாரப் பணி" செய்ய வேண்டும் என்ற அவா வர, நான்கு பேர்களாக சேர்ந்து கோவில் சுற்றுபுறம் முதல் கோவில் வெளி படி வரை பெருக்கி சுத்தம் செய்து, ஸ்ரமத்துடன் ஏறி வரும் பக்தர்களுக்கு, பாதையை சீர்படுத்தி கொடுத்தனர்.
- பின்னர் ஓரிருவர் கோவில் பிரகாரத்தில் "அங்க பிரதட்சிணம்" செய்ய, வந்து காத்திருந்த அகத்தியர் அடியவர்களும் அதில் கலந்துகொண்டு, ஓதியப்பர் அருள் பெற்றனர்.
- காலை 11 மணிக்கு பூசாரி வந்து, கோவில் நடை திறந்ததும் ஓதியப்பரின் திவ்ய தரிசனம்!
- தரிசனம் முடிந்ததும், அனைவரையும் அமரச் சொல்லி, நான்கு மணிநேரம் பூசை சடங்குகள் நடந்ததாம்.
- இடையில், அனைவரையும் சென்று, அன்னம் அருந்திவிட்டு வரச் சொல்ல, அன்று அங்கு வந்திருந்த அன்பர்களுக்கு பிறந்த நாள் அன்று அன்னதானத்தில் பங்கு கொண்டு, அவர் பிரசாதத்தை சாப்பிடுகிற பாக்கியம் கிட்டியது.
- "எண்ணை காப்பு" போட்டபின், அபிஷேகம் தொடங்கி, அரிசிமாவு, மஞ்சள் பொடி, மூலிகைப் பொடி, பஞ்சாமிர்தம், நெய், தேன், தயிர், பால், சந்தானம், பழச்சாறு,, பன்னீர், கடைசியாக விபூதியுடன் அபிஷேகம் நிறைவு பெற்று, அழகனே அதியழகனாக பிரதிபலிக்கும் அளவுக்கு அலங்காரம் பண்ணி, ஓதியப்பரை குளிரவைத்தனர். முழு அலங்காரத்துடன் ஓதியப்பர் ஜொலித்து நின்றதை காண, ஆயிரம் கண் போதா, கோடி கண்கள் வேண்டும் என்று ஒரு அடியவர் உணர்ச்சிகரமாக கூறியுள்ளார். (உண்மை! அழகுக்கு, அழகு செய்ததை காண அருள் பெற்றவர்கள் அன்றைய தினம் அங்கு கூடிய அகத்தியர் அடியவர்கள்!).
- கடந்த மூன்று வருடங்களாக, அவர் பிறந்த நாள் அன்று, எண்ணை காப்பு போடும் பொழுது தொடங்குகிற மழை இந்தவருடம் இல்லையாம்! ஓதியப்பரிடம் இதை பற்றி உத்தரவு கேட்க, அன்றைய தினம் நடந்த பூசை வழிபாடுகளை தான் திருப்தியாக ஏற்றுக் கொண்டதாக பதில் கொடுத்தாராம். (அட! அந்த பதிலை பெற்ற அந்த புண்ணியவான் யாரோ!)
- அதிலும், ஒரு வீட்டில் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டால் என்ன சூழ்நிலை இருக்குமோ, அந்த அளவுக்கு, ஓதியப்பரின் கோவிலில், ஒரு குடும்ப சூழ்நிலை இருந்ததை பலரும் உணர்ந்துள்ளனர்.
- தாமதமாகிவிட்டதே! எனக்கு ஓதியப்பரின் தரிசனம் கிடைக்குமா! என்ற கேள்வியுடன் மலை ஏறி வந்த ஒரு அன்பருக்கு, அவர் வந்த பின் நடை திறந்து, ஓதியப்பர் அபிஷேகத்தை காண முடிந்ததுடன், போதாதென்று, ஓதியப்பருக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது, திடீரென்று, அகத்தியப்பெருமான், அருணகிரி நாதர் சிலைகளை அவர் (ஓதியப்பர்) முன் வைத்து அபிஷேகம் செய்தது, பார்க்கவைத்தது, நாங்களும் இருக்கிறோம் என்பதை உணர்த்தியதாக ஒரு அன்பர் கூறியுள்ளார். (அகத்தியர் குழந்தைகளுக்கு, இது அவருடைய ஆசிர்வாதம் தான்!).
- இறையருள் அன்று பரிபூரணம் என்று உணர்ந்தாலும், அபிஷேக பூசை முடிந்ததும் பல அன்பர்கள், கருடர் வந்து தரிசனம் செய்ததை கண்டிருகின்றனர். (உண்மை! பல நாட்கள் அபிஷேக நேரத்தில் கருடர் வந்து மூன்று முறை கோவிலை சுற்றி விட்டு செல்வதை பல ஓதியப்பர் அடியவர்களும் கூறியதை, கேட்டிருக்கிறேன்!).
- ஓதியப்பர் உத்தரவின் பேரில், முதல் முறையாக, அன்னதானத்துடன், இந்த வருட பிறந்த நாள் கொண்டாடப்பட்டது என்பது மகிழ்ச்சியான செய்தி. இது மேன் மேலும் தொடரவேண்டும்!
- தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலத்தின் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் அவர் அருள் பெற்றதுடன், திருப்தி, அமைதி அருளப் பெற்று சென்றனர் என்பது மிகக் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு விஷயம்.
மிக்க மகிழ்ச்சி! மன நிறைவு! எப்போதும் இது நிலைக்க ஓதியப்பரை வேண்டிக் கொள்கிறேன்!
[ ஓதியப்பர் ]
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!
கார்த்திகேயன்!
Brother Sairam,
ReplyDeleteOm Agatheesaya Namaha: Great Darshan,
Thanks for sharing our Siddhar Family's experiences, Hope we would also have a call sometime sooner to cherish the fulfillment.
May Guru bless us all, Sairam
Om Saravana Bhava !!!
ReplyDeleteOm Saravana Bhava !!!
Om Saravana Bhava !!!
Om Saravana Bhava !!!
ReplyDeleteOm Saravana Bhava !!!
Om Saravana Bhava !!!