​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 24 November 2014

786


வணக்கம்!

அந்தநாள், இந்த வருடம் (04/11/2014) - கோடகநல்லூர் அனுபவ பதிவில் அடியவர்களுக்கு பச்சை வண்ணப் பெருமாள் அருளிய பல விஷயங்களில் ஒன்று "786" என்கிற எண் கொண்ட ரூபாய் நோட்டு. அந்த பதிவை வாசித்த அன்பர்கள், நிறைய பேர், "786" என்கிற எண்ணின் மகத்துவத்தை விளக்குமாறு கேட்டிருந்தனர். அதனால் இந்த தொகுப்பு.

ஒரு சிறு அதிசய தகவல் கிடைத்தாலும், அதை ஆராய்ச்சி செய்து அதன் மகத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வது, என் பிறவிக்குணம். அப்படி ஒருநாள் ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்களை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த குழுவில் ஒரு இஸ்லாம் மதத்தை சேர்ந்த நண்பரும் இருந்தார். விவாதிக்கப் படுகிற விஷயங்கள் போகிற போக்கை பார்த்து, அதில் என் வரையில் வாதித்த தன்மையை கண்டு பின்னர், என்னை தனியே அழைத்து சென்று ஒரு விஷயத்தை விளக்கினார்.

"786" என்பது எங்கள் மதம் இறைவனுக்கு, கவனிக்கவும், இறைவனுக்கு அளித்த பட்டம் என்று சொல்லலாம். அந்த எண்ணை  இறைவனாக பாவித்து வழிபட்டால், இறை அருள் வேண்டிய அளவுக்கு, ஏன் அதற்கும் மேலேயே கிடைக்கும் என்பதை நாங்கள்  அனுபவபூர்வமாக உணர்துள்ளோம். இதை வேண்டிய விஷயத்தில், வேண்டிய படி உபயோகித்துக் கொள்ளுங்களேன். உண்மையில் இதன் ரகசியத்தை எங்களுக்கு, வெளியிட அனுமதி இல்லை. இருப்பினும், சற்று முன் உங்கள் பேச்சில் இருந்த தெளிவை கண்டு இதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். மிக புனிதமான இறை வழிபாட்டுக்கு, எங்கள் மதத்தில் ஒரு குறிப்பிட்ட ஓதும் முறை உண்டு. அதில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் ஒரு குறிப்பிட எண்ணை கொடுத்து கூட்டி நோக்கினால், அதன் மதிப்பு 786 வரும். இந்த எண் எங்கிருந்தாலும், உதாரணமாக, ரூபாய் நோட்டு, வண்டி எண், வீடு, பொருட்கள், வங்கி கணக்கு எண் போன்றவற்றில் இருந்தால், அது இறை அருள் என்று நினைத்து வருபவருக்கு, அதன் வழியே வளர்ச்சி அருளப்படும். மேலும் மேலும் வாழ்க்கையில் வளர முடியும். இதை எதில் வேண்டுமானாலும் கண்டு அனுபவத்தால் உணருங்கள்" என்றார்.

அடடா! இப்படி ஒரு கணக்கு இருக்கிறதா! நம்பிக்கை தானே வாழ்க்கையின் அடித்தளம். அதில் இறையை சேர்த்து மேன்மேலும் வளரலாமே! ஏன், நாம் முயற்சி செய்யக் கூடாது? பின்னர் பலருக்கும் உதவலாமே, என்றெல்லாம் எண்ணம் தோன்ற, இதை செயல் படுத்துவோம் என்று தீர்மானித்தேன்.

என் நண்பர் ஒருவர் வங்கியில் காஷியர் ஆக வேலை பார்க்கிறார். அவரிடம் எனக்கு "786"ல் முடிவு பெறுகிற ஒரு நோட்டு வேண்டும் என்று கூறினேன். 

ஏன்? எதற்கு என்று கேட்டவரிடம், நான் தெரிந்து கொண்ட பின் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று கூறினேன்.

இரண்டே நாட்களில் "786" என்கிற எண்ணில் முடிகிற ஒரு 5 ரூபாய் நோட்டை கொண்டு தந்தார்.

யோசித்து பார்த்த பொழுது, அதை பெற்றுக் கொண்ட நேரம் மிகத் தெளிவாக இருந்தது. உண்மையாகவே அதை இறைவனுக்கு சமமாக எண்ணி என் பையில் ஒரு இடத்தில் பத்திரமாக வைத்தேன். பின்னர் மறந்து போனேன்.

அதை தொடர்ந்து வந்த நாட்களில், என்னிடம் நிறையவே பணம் புழங்கத் தொடங்கியது. கடன் வாங்கி சென்றவர்கள், திரும்பி வராத பணம் எல்லாம் வசூல் ஆகத் தொடங்கியது. எப்பொழுது கூட்டிப் பார்த்தாலும் மொத்தம் 500 ரூபாய் இருக்கிற என் பையில் அதுமுதல், 5000 முதல் 10000 ரூபாய் வரை இருக்கும். 

அட! இது நன்றாக இருக்கிறதே. சரி இரண்டாம் கட்ட பரிசோதனை செய்வோம் என்று காத்திருந்தேன். அதற்குள், இரண்டாவதாக "786" எண்ணுடன் ஒரு 10 ரூபாய் நோட்டை நண்பர் கொண்டு தந்தார்.

அது வந்த இரண்டாவது நாள், ஒரு நண்பர் வந்து, அவர் கட்டிக்கொண்டிருக்கிற வீட்டை முடிக்க வேண்டுமானால் இன்னும் ஒரு 50000 ரூபாய் வேண்டும், இனி எங்கும் கடன் வாங்குகிற/கிடைக்கிற வழியே இல்லை. ஏதாவது உதவி பண்ண முடியுமா? என்றார்.

"அய்யா! என்னிடம் அவ்வளவு காசு இல்லை! ஒரு விஷயம் தருகிறேன். அதை உங்கள் வீட்டில் கொண்டு வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இறைவன் அருளினால், ஒரே மாதத்திற்குள் நீங்கள் வீட்டை கட்டி முடித்து, கிரகப்ரவேசம் செய்துவிடலாம்" என்று கூறி முதலில் கிடைத்த 5 ரூபாய் நோட்டை கொடுத்து பூசை அறையில் வைத்துக் கொள்ளச் சொன்னேன்.

14 நாட்களுக்குள் தேவையானதைவிட மேலாக பணம் கிடைத்து, 21வது நாளில் கிரகபிரவேசம் செய்து குடி போனது, என்னை ஆச்சரியப் பட வைத்தது. 

ஹ்ம்ம்! இரண்டாவது சோதனையிலும், தெளிவான பதில் கிடைத்தாயிற்று. ஒரு முறை கூட சோதித்துப் பார்க்கிறேன் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். இறைவன் கொண்டு தந்ததோ மூன்று சூழ்நிலைகளை.


 1. முதல் பெண்ணிற்கு கல்யாணம் நடத்தி ஒரு வருடத்திற்குள் இரண்டாவது பெண்ணிற்கு கல்யாணம் உடனே நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு கடைநிலை ஊழியர் ஒருவர் பணம் இன்றி தவித்தார். அன்று தான் வங்கியில் சென்று எடுத்து கொண்டு வந்த பணத்தில் இருந்த "786" எண் பதித்த ஒரு 100 ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்து வீட்டில் வைத்துக் கொள்ளச் சொன்னேன். அவரும் என்னிடமிருந்து நம்பிக்கையுடன் வாங்கி சென்றார். ஒரு வாரத்திற்குள் எதிர் பார்த்ததை விட அதிகமான பணம் வந்து சேர்ந்து, தன் இரண்டாவது மகளின் திருமணத்தை ஜாம் ஜாம் என்று முடித்துவிட்டார். இன்று அவர்கள் அமைதியாக சந்தோஷமாக வாழ்கின்றனர். அவர் அந்த நோட்டை இன்றும் பூசை அறையில் வைத்து வழிபாடு செய்து வருவதாக கூறினார்.
 2. நிறைய பணம் சொத்து இருந்தும், தன் மகளின் திருமணம் நடக்காமலே இருந்த ஒருவர், தன் மனக்குறையை கூற, "786" எண் கொண்ட ஒரு நோட்டை அவரிடம் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னேன். இரு வாரத்தில் கல்யாணம் நிச்சயமாகி, ஒரு மாதத்திற்குள் திருமணம் நடந்தது.
 3. படித்துவிட்டு பலவருடங்கள் வேலை கிடைக்காமல் இருந்த ஒருவரின் மகனுக்கு, இதே போல் "786" எண் கொண்ட நோட்டை கொடுக்க, அவனுக்கு வேலை கிடைத்து, இன்று குடும்பம் அமைந்து, நல்லபடியாக வாழ்க்கை நடத்துகிறான்.

இது இருந்தால், இறை என்று நம்பினால், பலவித நல்ல விஷயங்களை நம்மை சுற்றி நடத்திக் கொடுக்கும் என்று தெளிவு பெற்ற நான், அன்று முதல் அப்படிப்பட்ட எண் பதித்த நோட்டை பலருக்கும் கொடுப்பதற்காக சேகரிக்க தொடங்கினேன். பலருக்கும் கொடுத்தேன். கிடைத்தவர்கள், தங்களுக்கு பல விஷயங்களிலும் நினைத்தது போல் நடந்தது என்று கூறினார்.

இந்த வருட கோடகநல்லூர் பெருமாளின் சிறந்த தினத்தை கொண்டாட தீர்மானித்த பொழுது, ஒரு வேண்டுதலை வைத்தேன். அன்று அங்கு வரும் அடியவர்களுக்கு நீங்கள் அருளுவதின் கூட, அடியேன் அனைவருக்கும் "786" பதித்த நோட்டை, உங்கள் பாதத்தில் வைத்து பூசை செய்தபின் கொடுக்க விரும்புகிறேன். அந்த எண்ணம் ஈடேற அருள வேண்டும் என்றேன்.

"நீ கொடுப்பது புதிய நோட்டாக இருக்கட்டும்" என்று "786"இல் தொடங்குகிற ஒரு பத்து ரூபாய் கட்டு கிடைக்க வழி செய்தார். அது கையில் கிடைத்தவுடன் நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆம் அன்று வரை ஒரு நோட்டு இல்லை 5 நோட்டு வரை கிடைத்து கொண்டிருந்த என்னிடம், 100 நோட்டு கொண்ட ஒரு கட்டு கிடைத்தால்! அது அவர் அருள் தான், இப்பொழுதே தொடங்கிவிட்டது, அன்றைய தினம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று சொல்லாமல் சொல்கிறார் என்று உணர்ந்து, அதை அப்படியே பூசை அறையில் வைத்திருந்து, அன்றைய தினம் அங்கு கொண்டு சென்று, அவர் பாதத்தில் வைத்து, அனைவருக்கும் கொடுத்தேன், இலவசமாக. அவர் அருளுடன். இனி கிடைத்தவர்கள் யாரேனும், தனக்கு நடந்த ஒரு நல்ல விஷயத்தை சித்தன் அருளிலோ, திரு கார்த்திகேயனிடமோ தெரிவித்தால், அதை அறிந்து சந்தோஷப் படுகிற ஒரு வாய்ப்பு மட்டும் தான் எனக்கு உண்டு.

"786" என்பது இறைவன் என்றால் "786786" என்கிற எண் கொண்ட நோட்டு "சிவசக்தி" அல்லது "சங்கரநாராயணன்" ரூபமாகிவிடும் என்கிற எண்ணம் எனக்குள் வந்தது. அப்படிப்பட்ட ஒரு நோட்டு 10 லட்சத்தில் ஒன்று, மிக அரிதாகத்தான் நம்மிடம் வர வாய்ப்பு உண்டு. ஒரு நாள் பூசையில், அது எனக்கு வேண்டும், அதை வைத்து பலருக்கும் நல்லது செய்ய வேண்டும் என 4 வருடங்களுக்கு முன் இறைவனிடம் வேண்டிக்கொண்டு, மறந்து விட்டேன். ஒரு வருடத்திற்கு முன், திடீரென அந்த வேண்டுதல் ஞாபகம் வர, "என்ன அய்யா! என்ன ஆயிற்று? வேண்டுதலை கொடுத்தேனே. இதுவரை நீங்கள் அருளவே இல்லையே" என்று மறுபடியும் ஞாபகப்படுத்தினேன்.

"பொறுத்திரு! நேரம் வந்துவிட்டது!" என்று பதில் வந்தது. சும்மா சொல்லக் கூடாது, வாங்குபவனின் நல்ல நேரத்தையும் தொடர்புபடுத்தித்தான் யாரிடம் என்ன போய் சேர வேண்டும் என்று தீர்மானிப்பார்கள் பெரியவர்கள். மூன்றாவது நாள், அதுவும் ஒரு 100 ரூபாய் நோட்டு வடிவத்தில் வந்து சேர்ந்தது. இன்றும் அதை பத்திரமாக பூசை அறையில், இறைவன் பாதத்தில் வைத்திருக்கிறேன். அதன் வழிதான் எல்லோருடைய அனைத்து பிரார்த்தனைகளையும், இன்றும் இறைவனிடம் சமர்ப்பிக்கிறேன். அதன் படத்தை மேலே தந்திருக்கிறேன்.

இப்பொழுது, இத்தனையும் படித்த உங்களுக்கு "786" எண்ணின் மகத்துவம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒன்றை நினைவில் கொள்ளவும். இது அகத்தியப் பெருமான் நமக்கென அருளியது.

"அருள் வேண்டுபவர்கள், அருள் பெற்றவர்கள், அவரவர் தன் கடமையையும் உணரவேண்டும், அதன் படி நடக்கவும் வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த அருள் நிலைத்து நிற்கும். அல்லாதவர்களுக்கு அருள் உடனே விலகிவிடும். பின்னர் வாழ்க்கை மொத்தமும் கானல் நீர்தான்."

எல்லோரும் சரியாக உணர்ந்து, அவர் அருளை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். நமக்கு கிடைத்த அருள், நமக்கெனே மட்டும் அல்லாமல், பிறருக்கும் (முகமறியாதவர்களுக்கும்) உதவியாக இருந்தால், அதுவே அகத்தியப் பெருமான் நம் போன்ற மனிதர்களிடம் எதிர்பார்க்கும் வாழ்க்கைப் பாதை.

இதை பற்றி எழுத அனுமதி அளித்த அகத்தியப் பெருமானுக்கும், அவரது வலைப்பூ "சித்தன் அருளுக்கும்", தொகுப்பாளர் என் நண்பர் திரு.கார்த்திகேயனுக்கும், வாசித்து உணரப்போகிற அகத்தியர் அடியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு,

நமஸ்காரம்!

32 comments:

 1. Brother Agnilingam Arunachalam,

  Sairam, Om Agatheesaya Namaha: Please excuse me for not typing in Tamil.

  Having given us darshan of Lakshmi Narayanan or Siva Sakthi (100Rs Note) is itself a blessing for readers, Thank you for the enlightenment of such a great piece of your write up and the form of Goddess.

  This is darshan is enough to bring us loads of happiness and we seek thy blessings for the same.

  Brother Velayutham Karthikeyan, Sairam, Just after 200 Episode, you have really made my day by allowing Brother Arunachalam to share the above with us, Thank you so much

  May Sayee and Ayya Mahamuni bless us ever with whatever is needed for us SAIRAM

  ReplyDelete
 2. Vanakkam. அகத்திய மாமுனியின் ஞானம் பகுதியில் இருந்து ....

  ஞான மார்க்கத்தில் உள்ள அனுபவத்தை யாராலும் விவரிக்க முடியாது ஏனெனில் அதனை அனுபவிக்க தான் முடியும் .
  சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
  சகலவுயூர் சீவனுக்கு மதுதானாச்சு
  புத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள்
  பூதலத்தில் கோடியிலே ஒருவருண்டு
  பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
  பாழிலே மனத்தைவிடார் பரம ஞானி
  சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சஞ்
  சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே .
  விளக்கம் :
  உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஒன்றே தெய்வம். இதனை
  அறிந்தவர்கள் இவ்வுலகில் கோடியில் ஒருவருண்டு என்றும் ,
  மனதினை அடக்கி தேவையற்ற விசயங்களில் மனதினை
  செலுத்தாதவர்களை பரம ஞானி என்றும் கூறுகிறார் .
  எங்கும் இறைவனை தேடி அலையாமல் உண்மையான சூட்சமத்தை உணர வேண்டுமெனில் உண்மையான மூலத்தை அறியவேண்டும் ,அந்த மூல ரகசியம் உன் சுழிமுனையிலே தான் இருக்கிறது .அவ்வாறு உள்ள சுழிமுனையின் தன்மையை உணர்ந்தால் மோட்சம் கிடைக்கும் என்று கூறுகிறார்.
  Anbudan. S V

  ReplyDelete
 3. Om Agastheesaya Namaha !!!
  Om Agastheesaya Namaha !!!
  Om Agastheesaya Namaha !!!

  ReplyDelete
 4. Amitab Bhachan in his famous movie coolie wears the coolie badge with number as 786. There is a scene which explains the relevance of 786 in the movie.

  Its a great number in Islam.

  ReplyDelete
 5. May I have a '786' note from you? My phone number 9944521668. If I get another rupee in future , then I will return it to you. Thank you. Help me please.

  ReplyDelete
  Replies
  1. கந்தசுவாமி! எப்படி உங்களை வந்து சேரும்? போஸ்டில், கூரியரில் அனுப்பக்கூடாது.அது தவறு. நீங்களே வேறு வழி கண்டுபிடியுங்கள்.

   Delete
 6. magic number 786 is explained here

  http://ajitvadakayil.blogspot.in/2012/06/om-parvat-capt-ajit-vadakayil.html

  ReplyDelete
 7. வணக்கம் கார்த்தி மொபைலில்
  டைப் செய்வது கஷ்ட்டமாக
  உள்ளது இது ஒரு சிறிய முயற்சி
  786 பற்றி அறிய விரும்புகிறேன்
  திரு அருணாசலத்தின் போன்
  இ மெயில் id tharaவேண்டுகிறேன்
  அன்புடன் சுப வெ

  ReplyDelete
  Replies
  1. திரு வெங்கடேசன் அவர்களே!

   அகத்தியர் அடியவர் கேட்டுக் கொண்டபடி, அவரிடம் தொகுப்பை தரச் சொன்னேன். அவரும் அதை பற்றிய எல்லா விஷயங்களையும் தந்துவிட்டார். அவர் போன் எண்ணை, அனுமதி இன்றி நான் தருவது சரியல்ல. அவர் ஈமெயில் agnilingamarunachalam@gmail.com. ஒரு ஈமெயில் அனுப்பி பாருங்கள். பதில் வந்தால் உங்கள் அதிர்ஷ்டம்.

   கார்த்திகேயன்!

   Delete
  2. ennakum kidaikummu murugan kakkiya pal mattrum rupee note

   Delete
 8. Ayya,
  Thanks for your post.Few months back my hubby got 10rs with the number from some pandit.He gave voluntarily to my hubby and asked him to keep this money with him but should not keep below the hip(not in pant pocket or hand bag below the hip).He coudnt maintain to keep in upper pocket so he kept in pooja room and we prayed.

  please dont mind but we didnt see any difference in financial status,we are not praying for to get more money but we are in need hope you can understand.

  so pls can you explain the reason according to you and what to do?
  Thank you sir.

  ReplyDelete
 9. சார் தயவு செய்து எனக்கும் அந்த எண் கொண்ட ரூபா நோட்டு கிடைக்குமா ப்ளீஸ் ?

  ReplyDelete
 10. அகத்தியர் பெருமான் திருவடி சரணம்.ஐயா,வணக்கம்.
  அகத்திய பெருமானின் அருட்கருணையினால் எனக்கு 786 எண்ணுள்ள ஒரு நோட்டு கிடைத்துள்ளது,அந்த நோட்டினை நான் நல்ல முறையில் பயன்படுத்த, வழிபடும் முறைகளை கூறி என்னை நல்வழி நடத்த வேண்டுகிறேன் ஐயா.நன்றி

  ReplyDelete
 11. அகத்தியர் பெருமான் திருவடி சரணம்.ஐயா,வணக்கம்.
  அகத்திய பெருமானின் அருட்கருணையினால் எனக்கு 786 எண்ணுள்ள ஒரு Rs.100 நோட்டு கிடைத்துள்ளது,அந்த நோட்டினை நான் நல்ல முறையில் பயன்படுத்த, வழிபடும் முறைகளை கூறி என்னை நல்வழி நடத்த வேண்டுகிறேன் ஐயா.நன்றி

  ReplyDelete
 12. அகத்திய பெருமானின் அருட்கருணையினால் எனக்கு 786 எண்ணுள்ள ஒரு Rs.100 நோட்டு கிடைத்துள்ளது,அந்த நோட்டினை நான் நல்ல முறையில் பயன்படுத்த, வழிபடும் முறைகளை கூறி என்னை நல்வழி நடத்த வேண்டுகிறேன் ஐயா.நன்றி

  ReplyDelete
 13. I also got one 100 rs note.

  ReplyDelete
 14. Please give me the same
  I am in lot of debt
  My phone number
  9003404871

  ReplyDelete
 15. Please give me the same
  I am in lot of debt
  My phone number
  9003404871

  ReplyDelete
 16. Will you please give me the same
  I am in lot of debt .I am in so much of depressed
  Will you please

  ReplyDelete
 17. I am having one Rs.10 326786 number note, but we are in serious troubles,
  My parents, my younger sister and me having lot of debt. we are all so much of depressed, kindly help us my mb. 7868062215
  Will you please help us.....

  ReplyDelete
 18. Place that note in your pooja room and worship it as "God" and pray to Agasthiyap perumaan. He will show you the way.

  ReplyDelete
 19. Sir, I have the information about (God as) 786 notes on 06/11/2016 only. After that I forgot that and unexpectedly I have read this article today morning only. I checked today afternoon, surprisingly I got one Rs.1000/- note number as 786593 from my cash balances. I would like thanks to Agasthiyap perumann. Kindly inform more details if any to my email id apmvijayan@gmail.com. Thanks

  ReplyDelete
 20. sir, my hand one Rs.10/- who to use

  ReplyDelete
 21. I am having one Rs.10 3786507 number note, but we are in serious troubles,
  me having lot of debt. we are all so much of depressed, kindly help us my mb. 9840731525
  Will you please help us.....

  ReplyDelete
  Replies
  1. 786 என்கிற செல்வத்தை இறைவனாக பாவித்து வரலாம், அல்லது பூசை செய்து வரலாம். அறையிலோ, பணப்பெட்டியிலோ அதை பத்திரமாக வைத்து, கிடைக்கிற பணத்தை எல்லாம் அதன் மீது வைத்து வந்தால், அந்த பணத்தை எடுக்க வேண்டி வராது. எடுக்க வந்தாலும், அது ஒரு நல்ல விஷயத்துக்குத்தான் உபயோகிக்கப் படும். அது மட்டுமல்ல, நம்மை சுற்றி, எப்பொழுதும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நன்மைகளே நடக்கும். இறை அருளால் நலமாக வாழுங்கள்.

   Delete
 22. How can i get the blessing to get 786 currency ..

  ReplyDelete
 23. ஐயா இன்று மதியம் May 31 நேரம் 2.30 to 3.30 ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பில் கொடுத்து விட்டு மீதிப்பணம் ரூபாய் 50 வாங்கினேன்.புதிய 50 ரூபாய் நோட்டு 786 என்று தொடங்கும் படி இருக்கிறது.எனக்கு தெரிந்து இந்த 31 வயதில் இதுதான் முதல்முறையா​க 786 என்று​தொடங்கும் ரூபாய் நோட்டு கிடைத்துள்ளது.இதை எப்படி பயன்படுத்துவது என்று புரியவில்லை. அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்கள். சர்வலோக சகல கோடி சித்தர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி கேட்கிறேன்.யாராவது விபரம் கூறவும்.
  தொடர்புக்கு
  udhayaganeshit2012@gmail.com
  WhatsApp +918667799359

  ReplyDelete
  Replies
  1. 786 என்கிற செல்வத்தை இறைவனாக பாவித்து வரலாம், அல்லது பூசை செய்து வரலாம். அறையிலோ, பணப்பெட்டியிலோ அதை பத்திரமாக வைத்து, கிடைக்கிற பணத்தை எல்லாம் அதன் மீது வைத்து வந்தால், அந்த பணத்தை எடுக்க வேண்டி வராது. எடுக்க வந்தாலும், அது ஒரு நல்ல விஷயத்துக்குத்தான் உபயோகிக்கப் படும். அது மட்டுமல்ல, நம்மை சுற்றி, எப்பொழுதும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நன்மைகளே நடக்கும். இறை அருளால் நலமாக வாழுங்கள்.

   Delete
  2. மிக்க நன்றி ஐயா
   சிவ சிவ

   Delete
  3. மிக்க நன்றி ஐயா
   சிவ சிவ

   Delete
 24. அய்யா, வணக்கம்
  எனது ஆதார் அட்டையின் கடைசி எண்கள் '786' என வழங்கப்பட்டுள்ளது. முதலில் இந்த எண்களை கவனிக்கவில்லை. ஒரு நாள் ஆதார் எண்ணை நினைவில் கொள்ள, எண்களை மனதில் பதிய வைக்க முயற்சிக்கும்போது, தான் 786 என்ற எண்கள் மின்னியது. இது குறித்து தங்களின் கருத்துக்களை அறிய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 25. Ennidam antha 786 irukku pro 500 an 100 .50
  10 200

  ReplyDelete