​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 7 November 2014

அடியவர்கள் ஒன்றுகூடி அருள் பெற்ற கோடகநல்லூர் - 04/11/2014 - 2

கோடகநல்லூர் அனுபவம் தொடர்கிறது.

எதையுமே, இறைவன், சித்தர்கள் அருள் இருந்தால்தான் வெற்றிகரமாக முடிக்க முடியும். என்னதான், நம் முயற்சி இருந்தாலும், முழுமை பெறுவது அவர்கள் அருளால்தான். இதை அன்று நான் பிரத்யட்சமாக உணர்ந்தேன்.

கோவிலின் முதல் வாசலை கடந்து உள்ளே சென்ற எனக்கு, அடியவர்களின் கூட்டம் திகைப்பை உண்டாக்கியது. கருடாழ்வார் சன்னதி வரை நின்று கொண்டிருந்தனர். முதலில் கருடாழ்வாரை வணங்கிவிட்டு, ஒரு பக்தரிடம்

"அய்யா! கொஞ்சம் விலகித்தந்தால், ஒரு நிமிடத்தில் சுவாமியை இங்கிருந்தே பார்த்துவிட்டு விலகி விடுகிறேனே" என்று கூறினேன். அவரும் அனுமதிக்க, சன்னதியை எட்டிப்பார்த்து, "பெருமாளே! இதோ வந்திருக்கு! இதனுடன் எல்லோரையும் ஆசிர்வதிக்கவேண்டும்! நிறைய கூட்டமாக உள்ளதால், நான் அப்புறம் உள்ளே வந்து தரிசிக்கிறேன்!" என்று கூறிவிட்டு ஒரு இடத்தில் ஒதுங்கி நின்றேன்.

அன்றைய தின தரிசனத்துக்கு வந்து சேர்ந்த நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து வணக்கம் சொன்னார்கள். கோவில் உள்ளே எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. உள்ளே போவதை பற்றி பின்னர் யோசிக்கலாம் என்று தீர்மானித்துவிட்டு, இன்று இங்கு வரும் பக்தர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்ததெல்லாம் சரியாக எடுத்து விட்டோமா என்று மனதுள் கணக்கு போட்டேன்.

  1. மூன்று வித பிரசாதம் (சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம்) இவை பெருமாளுக்கு நிவேதனம் செய்துவிட்டு வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும் என்று தீர்மானம். இது, 1800 வருடங்களுக்கு முன் எல்லா தெய்வங்களும் தங்கள் கைகளால் பிறருக்கு உணவு கொடுத்ததை ஞாபகப் படுத்துவதற்க்காக, பெருமாள் சார்பாக வேண்டும் என்கிற எண்ணம். அதற்கு, முன்நின்று ஏற்பாடு செய்தவர் வந்து "கூட்டம் ரொம்ப அதிகம். நாம் 9 படி (12 கிலோ) பிரசாதம் சொல்லியிருந்தோம். பிரசாதம் செய்தவர், கூட்டத்தை கண்டு, இது காணாது என்று 12 படி போட்டுள்ளார். என்ன செய்ய?" என்றார். "பெருமாள் ஏற்பாடு செய்கிறார். இருக்கட்டும்" என்றேன். "பஞ்சாமிர்தமும் பெருமாளுக்கு வேண்டி போட்டிருக்கு" என்றார். "சரி!" என்றேன்.
  2. பெருமாளுக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம், தாயாருக்கு புடவை பூமாலை போன்றவை வந்து சேர்ந்து உள்ளே சேர்த்தாயிற்று என்றார். "சரி!" என்றேன்.
  3. என் வரையில், அங்கு வந்து இருக்கும் பக்தர்களுக்கு கொடுப்பதற்காக, க்ரௌஞ்சகிரியில் முருகன் தன் தாயிடம் குடித்து கக்கின பால், ஒதிமலயில் ஓதியப்பருக்கு அபிஷேகம் செய்த எண்ணை, "786" எண் கொண்ட ஒரு 10 ரூபாய் கட்டு, பழனி நவபாஷாண முருகர் சந்தனம் இவை தயாராக இருந்தது.
  4. இரு நண்பர்களுக்காக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் சொல்லி வைத்து வாங்கிய "நரசிம்ஹர், கிருஷ்ணர் வில்லு" - பச்சை வண்ணன் பாதத்தில் வைத்து நேரடியாக அவர்களிடம் கொடுப்பதற்காக இருந்தது.
[பத்மநாப சுவாமி கோவில் "ஒண வில்லு"]

நினைத்த விஷயங்கள் எல்லாம் தயாராக இருக்கவே, ஓரிடத்தில் அமர்ந்து உள்ளே செல்லும் நேரத்துக்காக காத்திருந்தேன். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு வைதீக குழுவினர், உள்ளே மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தனர். வேறு எந்த தேவை இல்லாத சத்தமும் அந்த கோவிலில் இல்லை. மற்றவர்கள் மிக அமைதியாக இருந்தனர்.

அமைதியாக அமர்ந்திருக்கையில், ஒருவர் வந்து செய்தி சொன்னார்.

"நான் இன்று காலையிலேயே வந்துவிட்டேன். காலை 6 மணிக்கு திருச்சியிலிருந்து ஒரு 50 பேர் கொண்ட ஒரு குழு வந்து சென்றது. அவர்கள் நாடியில் பதஞ்சலி முனிவர் வந்து குறிப்பிட்டபடி இன்றையதினம் இங்கு வந்து, தாமிரபரணியில் 37 முறை கிழக்கு நோக்கி நின்று மூழ்கிவிட்டு, கணபதி, பிரம்மா, பெருமாள் போன்ற தெய்வங்களின் மந்திரங்களை குறிப்பிட்ட அளவுக்கு ஜெபித்துவிட்டு, பெருமாளை தரிசனம் செய்து, விளகேற்றிவிட்டு சென்றார்கள்" என்றார்.

"அட! சித்தன் அருளில் அகத்தியர் சொன்னபடி கணக்கு பண்ணி அவர் போட்டது சரியாகத்தான் இருக்கு என்பதற்கு இது ஒரு சாட்சி!" என்று நினைத்துக் கொண்டேன்.

மௌனமாக அமர்ந்திருக்கையில், ஒருவர் வந்து "நீங்கதான் சித்தன் அருள் கார்த்திகேயனா?" என்று கேள்வி கேட்டார்.

"இல்லை அய்யா! அது வேறு ஒருவர்" என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அன்று திரு கார்த்திகேயன் வந்திருந்தால் சரியாக மாட்டிக் கொண்டிருப்பார், அவர் ரொம்ப குடுத்து வெச்சவர், தப்பிச்சுட்டார்! என்று மனதுள் நினைத்துக் கொண்டேன்.

உள்ளே கலசம் வைத்து மந்திர உச்சாடனம் தொடங்கப்பட்டது. உற்சவ மூர்த்திக்குத்தான் அபிஷேகம், அலங்காரம் நிறைவு பெற்றிருந்தது. மூலவருக்கு கலசதீர்த்தம் காத்திருந்தது. கோமுகம் வழி அபிஷேக தீர்த்தம் எங்கேனும் வெளியே வழிகிறதா என்று கோவிலை சுற்றிப் பார்த்தேன். அப்போது ஒருவர் வந்து என்ன தேடுகிறீர்கள் என்றார். சொன்னேன்.

"அதெல்லாம் இங்க கிடைக்காது. அபிஷேக தீர்த்தம், நேரடியாக குழாய் பாதிக்கப்பட்டு ஆற்றில் விடப்பட்டுள்ளது. கோவிலில் அபிஷேக தீர்த்தத்தை வேண்டுமானால் பூசாரியிடம் தான் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

"அட! அப்படியானால், நாம் குளித்த நேரம் என்பது பெருமாளின் அபிஷேக தீர்ர்த்தம் தாமிரபரணியில் கலந்த நேரமா? அதனால் தானோ அகத்தியப் பெருமானும், இன்றும் தாமிரபரணி மிக சுத்தமாக இருக்கும் ஒரே இடம் "கோடகநல்லூர்" என்றாரோ" என மனதுள் வியந்தேன்.

அமர்ந்திருக்கும் பொழுது ஒரு எண்ணம் தோன்ற, இரு வில்லையும், 10 ரூபாய் கட்டையும் ஒருவரிடம் கொடுத்து அர்ச்சகரிடம் சேர்த்து பெருமாள் பாதத்தில் வைக்கச் சொன்னேன்.

இதற்கிடையில், உள்ளிருந்து ஒரு சிலர் வெளியே வந்து நிற்க, உள்ளே செல்ல அவகாசம் கிட்டியது. உள்ளே மெதுவாக நுழைந்து, பெருமாள் முன் நிற்க அவரது அலங்காரம் ஒரு தாக்கு தாக்கியது. தலை முதல் கால் வரை பூமாலை சார்த்தி பஞ்சகச்சம் உடுத்தி, திருமண் (அட்டிகை) சார்த்தி புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தார். என்னுள் மிகுந்த திருப்தி பரவியது. இதைத்தானே கேட்டாய், கிடைத்து விட்டதா? என்று கேட்பது போல் இருந்தது. 







[உற்சவ மூர்த்தியின், தேசிகர் சுவாமியின் அபிஷேக படங்கள்]

சித்தன் அருள்................ தொடரும்!

3 comments:

  1. Dear Sir, I had come to the temple on 4/11/2014 at 10.15 am and left at 10.45 am, as I could not stay thru the full puja. At that time, the Bhattacharyar had commenced making the arrangements for the puja and there were about 15-20 people present. One person told me that he came there thru ref. of Sithan Arul blog. S. Suresh

    ReplyDelete
  2. Anna, Vannakkam, after a break happy to read Nov 04th experience and blessings, when you find time please tell us about "ஒண வில்லு" thank you

    Om Agatheesaya Namaha: Om sairam, May Baba and Lord Muruga bless us always.

    ReplyDelete
    Replies
    1. ஒருமுறை தன் பக்தனை காப்பாற்றிட வேண்டி, பெருமாள் இறங்கி வந்து, ராமரின் கோதண்டத்தை கொடுத்தாராம். அது கொடுத்த நேரம் கேரளத்தில் ஓணம் விழா சிறப்பாக கொண்டாடுகிற நேரம். அதை நினைவு கூறும் விதமாகவும், பெருமாளிடமிருந்து வில் பக்தர்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதாலும், திருஒணம் கொண்டாடப்படுகிற மாதத்தில், முன்பதிவு செய்தவர்களுக்கு கோவிலில் சுவாமியிடம் வைத்து பூசை செய்து கொடுப்பார்கள். வருடத்தில் அந்த மாதத்தில் மட்டும்தான் அது கிடைக்கும். பத்மநாபர் சுவாமி கோயிலில் அது பல விதங்களில் மேலே படத்தில் காட்டிய ரூபத்தில் கொடுக்கப்படுகிறது. பத்மநாபர் வில்லு, நரசிம்ஹர் வில்லு, கிருஷ்ணர் வில்லு, ராமர் வில்லு, சாஸ்த்தா வில்லு, கணபதி வில்லு என்று பல வகை உண்டு. பத்மநாபர் மிகுந்த பணக்காரர் என்று அறிந்த பின் பக்தர்களுக்கு, அவர் வில்லின் மீதுதான் ரொம்ப மோகம். அதனால் அது கிடைப்பதும் கடினம் என்றும் கேள்விப்பட்டேன். ஒரே நாளில் பத்மநாபர் வில்லுக்கான முன்பதிவு இந்தமுறை தீர்ந்துவிட்டது என்றும் கேள்விப்பட்டேன்.

      Delete