​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 20 November 2014

சித்தன் அருள் - 200 - விளையாட்டு சித்தர்!

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேதே அகத்தியர் சித்தருக்கு நமஸ்காரம்!

அகத்தியப் பெருமானின் அருளால், இத்தனை வருடங்களாக (நான்கு வருடங்கள்) "சித்தன் அருள்" வலைப்பூ" நம்மிடை வந்து, இன்று "சித்தன் அருள் தொகுப்பு" 200வது இலக்கத்தை தொட்டுள்ளது. இதன் பெருமை, வளர்ச்சி அனைத்தும் அகத்தியரைதான் சேரும். அவர் அருள் இன்றி இது நடந்திருக்குமா என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. இந்த இனிய தருணத்தில், இத்தனை விஷயங்களை மிக கனிவுடன், பெருந்தன்மையுடன் பகிர்ந்து கொண்ட என் இனிய நண்பருக்கும், இந்த வலைப்பூவை வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு, ஊக்கப்படுத்திய அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும், என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன். இன்னும் சில விஷயங்களை மனம் திறந்து உண்மையை உங்கள் முன் உரைக்க வேண்டும் என்று ஓர் அவா இருக்கிறது. அதற்கான நேரம் வரவேண்டும். அது ஒரு முடிவுரையாக வரும். ஆரம்பமாகியது எதுவும், என்றேனும் ஒரு முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும். அதுதான் இயற்க்கை நியதி. அகத்தியர் அருளுவது வரை இந்த சித்தன் அருள் தொடரும் என்று கூறிக்கொண்டு............. இந்த வார சித்தன் அருளுக்கு செல்வோம், வாருங்கள்!


அந்த சிறுவனுக்கு எவ்வளவுதான் படிப்பினை சொல்லிக் கொடுத்தாலும் படிப்பு வரவில்லை.

பணம், தண்ணீர் போல் சிலவழிந்தது தான் மிச்சம். சகலவிதமான குருகுலங்களில் அவனைச் சேர்த்துப் பார்த்தாலும், அந்த சிறுவன் விளையாட்டுப் புத்திக் கொண்டு காணப்பட்டானே தவிர, படிப்பில் முழுகவனமும் இருக்கவில்லை.

அதோடு மட்டுமின்றி, எல்லா குருமார்களும், அந்த சிறுவனது சேஷ்டைகளைக் கண்டு, அவனது பெற்றோரை திட்டினர். இப்படி ஒரு பிள்ளையை பெற்று விட்டதற்காக நீங்கள் வெட்கப்பட்டு தலை குனியணும் என்று திட்டவும் செய்தனர்.

இதனால் மனமுடைந்து போன அந்த சிறுவனின் பெற்றோர்கள் அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிடலாம் என்று திட்டமிட்டனர்.

இதை அறிந்த அந்தச் சிறுவன், "நீங்கள் ஏன் வெளியூர் போகவேண்டும்?  என்னால் தானே உங்களுக்கு இந்த கஷ்டம். நானே வெளியூர் போகிறேன். என்னால் யாரும் துன்பப்படவேண்டாம்" என்று சொன்னான்.

இதைக் கேட்டதும் அந்தச் சிறுவனின் பெற்றோர் அதிர்ந்து போனார்கள். பையனை சமாதானப் படுத்திப் பார்த்தார்கள்.

எதையும் விளையாட்டுத் தனமாக எடுத்துக் கொள்ளும் தங்கள் பையன், இன்றைக்கு வித்தியாசமாக பேசுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

தங்களை விட்டு பையன் எங்கேயும் சென்று விடக் கூடாதே என்பதற்காக அவனை விட்டு பிரியாமல் கண்ணிமைபோல் காத்ததோடு, அருகிலுள்ள சிவாலயத்திர்க்குச் சென்று இறைவனை மனமுருகப் பிரார்த்தனை செய்தனர்.

அன்றிரவு, படுக்கையில் படுத்திருந்த பிள்ளை காணாமல் போனவுடன், துடி துடித்துப் போனார்கள்.

எங்கு போயிருப்பானோ, என்ன ஆகியிருக்குமோ என்று பயந்து நடுங்கினர்.

பையனை காணாமல் போனதால், நள்ளிரவு முதலே தேட ஆரம்பித்தனர், எங்கு தேடியும் பையனை கிடைக்கவில்லை.

பையன் இல்லாத தாங்கள் இனி உயிர் வாழ வேண்டிய அவசியமில்லை என்று முடிவெடுத்து, சிவன் கோவிலில் உள்ள குளத்தில் குதித்து இறக்க முடிவு செய்தனர்.

சிவன் கோவில் குளத்தருகே வந்த பொழுது, அவர்களை தடுத்து நிறுத்திய ஒரு முதியவர், "ஏன் இந்த தவறான முடிவிற்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் பிள்ளை ஒரு தெய்வீக குழந்தை. பிற்காலத்தில் மிகப் பெரிய சித்தனாக வரப்போகிறான், அவனால் உங்களுக்கு பெயரும், புகழும் வரப் போகிறது. எனவே, தவறான முடிவை கை விட்டுவிட்டு, வீடு போய் சேருங்கள், காணாமல் போன உங்கள் மகன் விரைவில் வீடு தேடி வருவான்!" என்று அசரீரி வாக்கு போல் கொடுத்தார்.

அந்த பெரியவர் கண்ணில் காணப் பட்ட ஒளியும், உடம்பில் கண்ட தேஜஸும், மிகப் பெரிய முனிவர் போல் தோன்றிற்று.

அந்தப் பெரியவருக்கு எப்படி தங்களது தற்கொலை முயற்சி தெரிந்தது என்ற ஆச்சரியம் தாங்காமல், அந்தப் பையனின் பெற்றோர்கள், அவரை வணங்கியபடி மீண்டும் தங்கள் இல்லத்திற்கு திரும்பினர்.

பதினைந்து நாட்கள் கழிந்திருக்கும்.

வெளியூரிலிருந்து வந்த இருவர் நேராக அந்தப் பையனின் இல்லத்திற்கு வந்து, "நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்! உங்களது பிள்ளை சில அற்புதங்களைச் செய்து காட்டுகிறான். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எங்கள் மகனை, பாடியே விபூதி கொடுத்து உயிர் பிழைக்க வைத்தான். அவனிடம் விவரம் கேட்டு, தங்கள் முகவரியைப் பெற்று உங்களுக்கு நன்றி சொல்லி, எங்களது அன்புக் காணிக்கையை அளித்துப் போகவே நாங்கள் இங்கு வந்தோம்" என்று மிகவும் ஆனந்தப் பட்டு, அவர்களின் காலில் விழுந்து வணங்கி காணிக்கையை அளித்துவிட்டு போனார்கள்.

அந்தப் பையனின் பெற்றோர்களுக்கு இதை கேட்க ஆனந்தமாக இருந்தது.

ஆனாலும் ஒரு வருத்தம்.

இப்படிப்பட்ட திறமை கொண்ட அவன், உள்ளூரிலேயே இருந்து அதிசயங்களைச் செய்து காட்டியிருக்கலாமே என்பது தான் அது!

சரி! எது நடந்தாலும், அது இறைவன் செயல். அன்றைக்கு அந்தப் பெரியவர் சொன்னதுபோல் பையன் வீட்டிற்கு வந்தால் போதும், என்று மனதை தேற்றிக் கொண்டனர்.

மறுநாள் விடியற்காலை வேளை!

நான்குபேர் ஒரு மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்கள். நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலிருந்தது. கொண்டு வந்த வெள்ளித்தட்டில் புடவை, வேஷ்டி, தங்க நாணயங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, அந்தப் பையனின் தந்தையிடம் வந்து, "விளையாட்டுச் சித்தர் வீடு இதுதானே?" என்று கேட்டனர்.

சித்தன் அருள்............... தொடரும்!

19 comments:

  1. Om Agasthiyar ayyanae Sri Lobamuthra thaaye potri potri...

    Thennadudaya sivane ennaatavarkum iraiva potri potri..

    tomorrow i need good solution for my confusion.Hope Agasthiyar ayyan will help me to sort out my issue.
    as im staying in bangalore,going to coimbatore for a delivery,no idea to which doctor should i want to go .mine will be c-section.

    ReplyDelete
    Replies
    1. இறைவன் அருளாலும், ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதியப் பெருமான் ஆசிர்வாதத்தாலும். எல்லாம் எளிதாக, நலமாக நடந்திட வேண்டிக் கொள்கிறேன்.

      Delete
    2. Hi Manonmani,

      As far as I heard, Dr.Lalitha of Ramakrishna Hospital and Dr.Saradha Jaganathan of Good Life Clinic are very good. Not sure if Saradha Jaganathan is also consulting in Ramakrishna hospital.

      Thanks & Regards,
      Kanjana Vasudevan

      Delete
    3. Dear sister, With the Divine Blessings of Lord Almighty and with the Constant Grace of Sage Agasthiyar, I am confident that you will have a safe delivery. My prayers for the same. Best wishes.

      Delete
  2. Brother Sairam,

    Om Agatheesaya Namaha:

    Very happy to have been reading and understanding 200 episodes with your consistent efforts, Thanks to Guru Sayee & Mahamuni Ayya and of course to you.

    May Agatheesar and Sayee bless you with good health and strength to share with us many more and enlighten all of us here with your rich expertise, Please accept our Pranams, across the desks we are pleased to seek your blessings too

    ReplyDelete
    Replies
    1. Thank you for your good prayers and wishes. Everything rests in the hands of Sage Agasthiyar Maharishi. Let us pray for good things to happen here.

      Delete
  3. Dear Kartikeyan sir, Congrats on completing 200 episodes. I am regular reader after coming across this thread and I was interested to know more about siddargal and I am lucky to be here to learn about Agastheeyar as well as other siddars. Thank you sir.


    nalini

    ReplyDelete
  4. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,

    கார்த்திகேயன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகள்.
    சித்தன் அருள் வலைப்பூ மேலும் மேலும் வளர அகத்தியரை பிரார்த்திப்போம்.
    அனைவருக்கும் அகத்தியர் அருள் வழங்க பிரார்த்திக்கிறேன் .

    என்றும் அன்புடன்
    வெங்கடேஷ்

    ReplyDelete
    Replies
    1. ​மிக்க நன்றி வெங்கடேஷ்!

      Delete
  6. 22/11/2012 அன்று 100வது பதிவை கண்டு, சரியாக 2 ஆண்டுகளில் 200வது பதிவை தொட்டிருக்கிற சித்தனருள், (பிற பதிவுகள் கணக்கிடப்படவில்லை)குருநாதர் அகத்தியர் அருளால் தொடர்ந்து கொண்டே இருக்க அவரருளை வேண்டி பிராத்திக்கிறோம். உண்மைகள் முடிவுரையாகத்தான் வரவேண்டும் என்றால், அவை வெளிவராமேலேயே ரகசியமாகவே இருக்கட்டும். சித்தனருள் பலருக்கு நல்ல வழிகாட்டியாக ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள துணை புரிந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஓதியப்பரை அறிமுகம் செய்து வைத்ததே அதற்க்கு சாட்சி. நம்பி மலையையும் கோடகனல்லுரையும் கருங்குளத்தையும் பாபநாசம் தாமிரபரனியையும் குருநாதரின் அருள் வாக்காக உலகத்திற்கு அளித்த பெருமை சித்தனருளுக்கே உண்டு. திரு.அனுமந்தாசன் குருநாதரின் ஆணைப்படிதான் அவரின் அடியவர்களுக்கு தெரியபடுத்த கார்த்திகேயன் உங்களிடம் இந்த தகவல்களை அளித்து சென்றுள்ளார். அவரின் இன்னும் பல அறிய தகவல்கள் பைரவர் வாகனத்திடம் கிடைத்த முழு தேங்காய் போல யாருக்கும் பயன்படாமல் ரகசியமாகவே இருக்கிறது என்று அறியும் போது வேதனையாக இருக்கிறது. அவையும் என்று எப்பொழுது யார் மூலம் வெளிப்படுத்தப்படவேண்டும் என்பதும் குருநாதரின் ஆணையாக இருக்கிறது என்ற சமாதானத்துடன் இந்த மாயா உலகில் இறை பக்தியுடன் கர்மாவை கழித்து பிறவித்தளை அறுத்து இறைசேர அவரருளை பெற சித்தனருள் துணை நிற்கட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  8. Dear my friend Mr. Karthikeyan sir,
    Good Morning.
    OM SRI LOBAMUTHRA MATHA SAMETHA OM SRI AGASTHEESAYA NAMAHA.

    My hearty blessing to our blog and to u for crossing 200.

    In these 1460 days, our GURUJI HAS DELIVERED ONLY 200 SECRETES ONLY. The counting numbers may be very less compared to the days, but COUNT LESS PEOPLE WERE BENEFITED FROM THIS BLOG AND IMPROVED THEIR LIFE STYLE FOR AT LEAST 25% AND STILL TRYING TO BECOME PERFECT.
    WE PRAY OUR GURUJI AND U CONTINUE THIS HOLY SERVICE FOR EVER AND REVEAL ALL SECRETES ABOUT ALL SUBJECTS OF OUR LIFE.

    Our friend Mr. Manonmani velliangiri will receive a very good news and hearty blessings to him, his wife and the new child.

    thanking you

    yours

    g. alamelu venkataramanan.
    chennai.

    ReplyDelete
    Replies
    1. Let us pray to Sage Agathiyar to bless everyone with his guidance!

      Delete
  9. எல்லாம் வல்ல இறை துணையிருப்பார் அண்ணா

    ஓம் ஸ்ரீ லோபாமுத்தராம்பா சஹித ஸ்ரீ அகஸ்த்திய குருவே போற்றி

    ReplyDelete
  10. Om Agasthiyar Ayyan Sri Lobamuthra Thaayae thunai
    Thanks to everyone those who blessed and pray for me.I met a nice doctor,hope everything will be take care by our ayyan amma and God.

    Congratulations Thiru Karthikeyen sir,all credit goes to you for your spritual work.so many of us benifited by you.Thanks to you Sir.

    ReplyDelete
  11. Dear Karthikeyan Sir,

    Congrats for the 200th Post and with its very Good Landmark by posting with many Spritual Information. My heartfelt wishes for this work as its not easy job. I can imagine how much of efforts involved on this and with Shri Agsatiyar Blessings this Blog will go New Heights in future.

    Keep doing the God work Sir. Im fortunate to come across this site and im really blessed to read the posts on every Thursday.

    All iz well
    Gokul

    ReplyDelete