​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 3 July 2014

சித்தன் அருள் - 181 - கருங்குளம் - எல்லோருக்கும் தேவையான தகவல்!


வணக்கம் அகத்தியப் பெருமானின் அடியவர்களே!

ஒவ்வொரு எண்ணமும், ஒரு அனுபவத்தை தரும் என்பது அடியேனது திடமான நம்பிக்கை. அதிலிருந்து இறை அருளையும், பெரியவர்களின் கனிவையும் உணரமுடியும்.

சித்தன் அருள் - 165இல் அகத்தியப் பெருமான் நமக்காக கரும்குளம் பெருமாள் கோயிலை பற்றி சொல்லும் பொழுது, மலைக்கு கீழே அமர்ந்திருக்கும் தம்பதி சமேதரான நவக்ரகங்களை பற்றி சொல்லி, பின்னர் கீழே உள்ள பரிகாரத்தை யாவரும் செய்யலாம் என்று சொன்னார்.

​"நவக்ரகங்கள், தம்பதிகளுடன் இருக்கின்ற அந்த அறிய பெரும் காட்சி, உலகத்திலே முதன் முதலாக, இங்குதான் நடை பெற்றது.  உலகத்திலேயே, முதன் முதலாக நடை பெற்ற அந்த காட்ச்சியைத்தான் , இங்குள்ள அத்தனை பேருக்கும் அகத்தியன் எடுத்துக் காட்டி, சாபங்கள் எல்லாம் போக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வரச்சொன்னேன். நவக்ரகங்கள் தம்பதிகளாய் அமர்ந்து அகமகிழ்ந்து இருக்கின்ற நேரம். எதிரும் புதிருமாய் இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேருகின்ற காலம். யார் யார் எவருக்கு விரோதிகளோ, பொறாமை பிடித்தவர்களோ, வஞ்சனை செய்பவர்களோ, கெடுதல் செய்பவர்களோ, யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெட்டி பாம்பாய், அடங்கிவிட்டு, அமைதியாகவும், ஆனந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கப் போகிறார்கள். நாளைக்கு ஏதேனும் திருமணம் நடக்கவேண்டும் என்றாலோ, அல்லது திருமணத் தடை இருந்தாலோ, எதுக்கு எதாக இருந்தாலும் இங்கு வரவேண்டாம், இங்குள்ள தம்பதிகள் சகிதம் உள்ள நவக்ரகங்களுக்கு, ஏதேனும் சிறு காணிக்கை அனுப்பி நினைவு படுத்திக் கொள்ளலாம். அல்லது, மன சுத்தத்துடன் மனதார நினைத்துக்கொண்டு, நவக்ரக தம்பதிகளை வந்து வணங்கினால், காலா காலத்துக்கும் அவர்கள் திருமண வாழ்க்கை ஒரு போதும் பாதிக்கப் படமாட்டாது. திருமண வாழ்க்கை பாதிப்பு மட்டுமல்ல, அத்தனை எதிர் பார்ப்புகளும், என்னென்ன தடங்கல்களை யார் யார் செய்வார்கள் என்பதை எல்லாம் இந்த நவகிரக உலகத்துக்குள் அடக்கம்."

நான் நவக்ரகங்களின் பக்கமே செல்பவன் அல்ல. அதற்காக துச்சாடனம் செய்பவனும் அல்ல. ஏதேனும் ஒரு கோவிலில் அவர்கள் சன்னதியை கடந்து செல்லவேண்டி வந்தால், "இது இறைவனை பார்க்கவேண்டி வந்துள்ளது. அங்கேயே செல்கிறது" என்று மனதில் நினைத்துவிட்டு சென்றுவிடுவேன். சில வேளை, "நீங்கள் அங்கேயே அமர்ந்து உங்கள் வேலையை பாருங்கள், நான் இறைவனை சரணடைய செல்கிறேன்" என்றுவிட்டு விலகிவிடுவேன். அது சரியா, தவறா என்றெல்லாம் சிந்திப்பதே இல்லை. உத்தரவு மேலிடத்திலிருந்து வந்த பின் யோசிப்பது கிடையாது. அது தான் என் வழக்கம்.

சித்தன் அருளில் கரும்குளத்தை பற்றி வந்தது, அகத்தியப் பெருமானின் அடியவர்கள் நிறைய பேர் தொடர்பு விலாசம் அல்லது தொலை பேசி எண் கிடைக்குமா என்று கேட்டிருந்தனர். என்னிடம் அந்த தகவல் இல்லாமல் இருந்தது, கொடுக்க முடியவில்லை. இத்தனை தகவலை கொடுத்த "சித்தன் அருளால்" ஏன் அவர்கள் கேட்ட தகவலை கொடுக்க முடியவில்லை என்று யோசித்தேன். சரி! ஒரு முறை சென்று தேவையான அனைத்து தகவலையும் அள்ளிவருவோம் என்று தீர்மானித்தேன். தனியாக செல்ல விருப்பம் இல்லாததால், ஒரு நண்பரை நாடி கேட்டேன். அவரும் சரி என்றார். ஆனால் என்னுள் தான் ஒரு குழப்பம் நிறைந்து நின்றது.

நவக்ரகங்களை தேடி செல்லாத நமக்கு, அகத்தியர் ஏன் இப்படி ஒரு வேலையை கொடுக்கிறார், என்று யோசித்து, "அய்யா! கூட இருந்து நடத்திக் கொடுங்கள். போய் பார்த்ததால் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது" என்று அவரிடமே வேண்டிக் கொண்டேன். 

முதல் நாள் இரவு நண்பர் என்னை வந்து சந்தித்தார்.

"நம் பயணம் தீர்மானித்தாயிற்றா? எப்பொழுது கிளம்பலாம்? நாளை செல்வோமா" என்று கேள்விகளை தொடுத்தார்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அவர் கேட்ட கேள்விகளை மனதுள் வாங்கி பெருமாள் பாதத்தில் வைத்து விட்டு சிறிது நேரம் த்யானத்தில் அமர்ந்தேன். இன்னும் மனது அங்கு செல்வது பற்றி உறுதியான தீர்மானம் எடுக்கவில்லை என்பது புரிந்தது. சற்று நேர அமைதி!

திடீரென்று யாரோ சொல்வது போல் கேட்டது.

"நீ, என் ஆனி திருமஞ்சனம் காண்பாய்."

அவ்வளவுதான். த்யானம் கலைத்து வெளியே வந்து சிரித்துக் கொண்டே,  ​"நாளை செல்கிறோம், காலையில் வாருங்கள்" என்று கூறி நண்பரை அனுப்பி வைத்தேன்.

அதன் பின், மெதுவாக தின காலண்டரை பார்க்க "மறுநாள் ஆனி மாதம் பிறப்பு" என்று போட்டிருந்தது. அமைதியானேன். என்னவோ நடக்கப் போகிறது என்பது புரிந்தது.

மறுநாள் காலை, கிளம்பும் பொழுது தாமதமாகிவிட்டது. கோவில் ஒரு 10 மணிவரை திறந்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். தரிசனம் கிடைக்குமா என்று தெரியவில்லை. என்னவானாலும், நெரிசலில் மாட்டிக்கொண்டு சென்று சேரும் பொழுது 10.30 ஆகிவிடும். சரி பார்க்கலாம் என்று மனதில் நினைத்து, பெருமாளிடம் வேண்டிக் கொண்டேன்.

"பெருமாளே, நாங்கள் கிளம்பி வருகிறோம். தரிசனம் வேண்டும். தாமதாகிவிட்டது. ஏதோ ஒன்றை பார்த்து செய்யுங்கள்" என்று விட்டு பயணத்தை தொடங்கினோம்.

சென்று சேர்ந்த பொழுது காலை மணி 10.30. படி வழி ஏறிச்சென்றால் இன்னமும் நேரம் ஆகும் என்றோ, பெருமாள் மாற்று வழியில் மலை மேல்வரையிலும் வண்டியில் வரவழைத்தார் என்று தான் சொல்ல வேண்டும். வேக வேகமாக் ஓடிச்சென்று முதல் சன்னதியில் எட்டிப்பார்க்க, நிறைய பேர் (ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்) அமர்ந்திருந்தனர். பெருமாள் சன்னதி பூட்டியிருந்தது.

மலைமேல் இரண்டு சன்னதி. ஒன்று கரும்குளம் பெருமாள் சன்னதி. இன்னொன்று ஸ்ரீனிவாசர் சன்னதி. ஸ்ரீனிவாசர் சன்னதியை இழுத்து மூடிவிட்டு வந்த அர்ச்சகர் நேராக மடப்பள்ளியை நோக்கி சென்றார்.

பிறகு வெளியே வந்தவர், "எல்லோரும் வந்தாச்சா? இன்று எல்லாமே தாமதமாகிவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. இனி திருமஞ்சனம் தொடங்கலாமா?" என்று முன்னாடி அமர்ந்திருந்த அந்த குடும்பத்தின் தலைவரை நோக்கி கேட்டார்.

அவரும் திரும்பி எல்லோரையும் பார்த்துவிட்டு, "எல்லோரும் வந்தாகிவிட்டது, பூசையை தொடங்குங்கள்" என்றார்.

நான் சற்று புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தேன். என்ன சொல்ல? எதை சொல்ல? இப்படியெல்லாம் பக்தனுக்காக பெருமாள் காத்திருப்பாரா?

சன்னதிக்குள் சென்ற பூசாரி அலங்காரம் கலைத்த பொழுதுதான் பார்த்தேன், அங்கு சிலை இல்லை. சுதை சிற்பம் போல் பெருமாள் நின்று கொண்டிருந்தார். சந்தன மரத்தில் கடைந்தெடுத்த ஒரு உருவம். திருப்பதி வேங்கடவரின் நெற்றியில் இருக்கும் நாமம் போல் சற்று பெரிய உருவம், அவ்வளவு தான்.

அபிஷேகம் நடந்தது. மிக ஆனந்தமாக இருந்தது அந்த காட்சி. ஒரு ஸ்தூபி போல் இருந்தாலும், அபிஷேக நேரத்தில் பெருமாள் கண் திறந்து நம்மை பார்ப்பது போல். எனக்குத்தான் என்னவோ தோன்றியது என்று நினைத்தேன். இல்லை நண்பரும் பிறகு அதையே சொன்னார். ஆனந்தமான அருள், எல்லோரையும் சூழ்ந்து நிற்பதை உணர முடிந்தது.

மனதில் எதுவும் தோன்றவில்லை. ஒன்றும் வேண்டவில்லை. பிறகு தான் உணர்ந்து "பெருமாளே! அனைவரையும் நல்ல படியாக வாழவையுங்கள், அருள் புரியுங்கள்" என்று வேண்டிக் கொண்டேன்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்த பொழுது, என்னால் நம்பவே முடியவில்லை. சாதாரண ஸ்தூபியாக இருந்த பெருமாளை, அத்தனை அழகாக மாற்றினார் அந்த அர்ச்சகர். இதை நேரில் சென்று பார்த்தால் தான் உணரமுடியும். அத்தனை கண் கொள்ளாக் காட்சி.

பூசைகள் முடிந்து, எல்லோருக்கும் மூன்று விதமான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பெற்றுக் கொண்டு வெளியே வந்து அங்கிருந்த ஒருவரிடம் நவக்ரக சன்னதியை பற்றி விசாரிக்க, மலை அடிவாரத்தில் சிவன் கோவிலுக்குள் இருப்பதாக கூறினார். நாடி வாசிக்கப்பட்ட முருகர் சன்னதியும் அங்கேயே உள்ளது என்றார்.

"ஆனால் இப்பொழுது பூட்டியிருப்பார்களே! ஒரு விஷயம் பண்ணுங்க! கீழே இறங்கிப்   போய், சிவன் கோவில் குருக்கள் வீடு கண்டுபிடித்து, விசாரித்துக் கொள்ளுங்கள்" என்று தகவல் தந்தார்.

சுட்டு எரிக்கும் வெயில். படி வழியாக, மெதுவாக கீழே சென்று, குருக்கள் வீட்டை கண்டுபிடித்து, அவரிடமிருந்து வேண்டிய தகவலை வாங்கிக் கொண்டேன். 

"கோவில் பூட்டியிருந்தாலும், என் பசங்க, எதிரே உள்ள சாஸ்தா கோவிலில் தான் இருப்பார்கள். இன்று விளக்கு பூசை உண்டு. அதற்காக ஏற்பாடு பண்ணிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சொன்னால், கோவிலை திறந்து காட்டுவார்கள்" என்றார்.

நன்றி கூறி விடை பெறும் பொழுது, "பூட்டிய கோவிலை திறக்கச் சொல்வது சரி அல்ல!" என்று தோன்றியது. யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தீர்மானித்து, கோவில் வாசல் வரை சென்று நின்று ஒரு நிமிடம் த்யானம் செய்துவிட்டு, "இன்னொருமுறை, உன்னை நேரத்துக்கு வந்து தரிசனம் செய்கிறேன் இறைவா" என கூறிவிட்டு அங்கிருந்து நேராக கோடகநல்லூர் சென்றோம்.

தாமிரபரணியில், கோடகநல்லுரில் ஆனந்தமாக ஒன்றரை மணி நேரம் நீராடிவிட்டு, அர்ச்சகர் வரவுக்காக காத்திருந்தோம்.

மாலை 6 மணிக்கு சன்னதியை திறந்தார்கள். யாருமே இல்லை. நாங்கள் மட்டும்தான். ஆனந்தமான தரிசனம். பெருமாளின் கரும்குளம் அருளுக்கு நன்றியை கூறிவிட்டு, திரும்பி வந்து சேர்ந்தோம்.

சரி!இனி விஷயத்துக்கு வருவோம். அகத்தியர் அடியவர்களின் நலனுக்காக கரும்குளத்தின் தொடர்பு விவரங்களை கீழே தருகிறேன். விருப்பம் உள்ளவர்கள், பரிகாரம் செய்து கொள்ளலாம். பூசை செய்து பிரசாதத்தை அனுப்பி கொடுப்பதாக அந்த குருக்கள் சொன்னார்.

குருக்கள் பெயர்: எஸ். மீனாக்ஷி சுந்தர பட்டர்,
விலாசம்: அருள்மிகு மகாதேவ மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோவில், கரும்குளம் - 628 615, திருநெல்வேலி ஜில்லா.
தொடர்பு எண்: செல்:9488619703, வீடு:04630-264077
ஈமெயில் : omsivokam.om55@yahoo.com

அகத்தியர் அடியவர்களே! நீங்கள் எல்லோரும், பிரச்சினைகளை கழித்துவிட்டு, அமைதியாக, ஆனந்தமாக, நல்ல படியாக வாழவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த தகவலை தருகிறேன். எல்லோரும் முடிந்தவரை தொடர்பு கொண்டு, நலம் பெற வாழ்த்துக்கள்.

மேலும், திரு.மணிகண்டன் சுப்ரமண்யன் என்கிற அகத்தியர் அடியவர், "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்கிற புத்தகத்தை, இதுவரை தேடியும் கிடைக்காத, அகத்தியர் அடியவர்களுக்கும், வெகுதூரத்தில்/வெளி நாட்டில் வசிக்கும் அடியவர்களுக்கும், அவர்களே பிரியப்பட்டால், இலவசமாக வழங்க முன் வந்துள்ளார். வேண்டுபவர் திரு. மணிகண்டனை  smanikandan1@gmail.com ​ என்கிற ஈமெயில் தொடர்பில், விலாசத்தை தெரிவித்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு யோகம் இருந்தால், நிச்சயமாக அந்த சுந்தர காண்டம் உங்களை வந்து சேரும்.​

மேலும் ஒரு விஷயம் கூட. சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, சிவபெருமானுக்கு 63 மூவர் போல,பெருமாளுக்கு ஆழ்வார்கள் போல, முருகருக்கு 41 அடியவர்கள் உண்டு. அவர்கள் பெயரோ, அவர்களை பற்றிய தகவலோ, இல்லை ஏதேனும் புத்தகம் அதை பற்றி வெளியிட்டிருந்தால், இந்த வலைப்பூவை வாசிக்கும் அகத்தியர் அடியவர் யாராக இருந்தாலும், எனக்கு sgnkpk@gmail.com என்கிற மெயிலில் தகவலை அனுப்பிவைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

அனைத்தையும் அகத்தியர் திருவடிகளில் வேண்டுதலுடன் சமர்ப்பித்து.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!  

​சித்தன் அருள்.............. தொடரும்!​

20 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  2. There is a view that Navagrahas are amsams of major Deities: Siva-Surya; Parvati-Chandra; Perumal-Budan; Brahma-Guru; Indra-Sukran; Ema dharmar-Sani; Kali-Ragu; Chitragupta-Ketu. Details are given in Dina-thanthi: http://www.dailythanthi.com/Others/Devotional/2014/07/01103812/Navagraha-Features.vpf

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா சமேத ஸ்ரீ அகஸ்திய குருவே போற்றி

    ReplyDelete
  4. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  5. OM AGATHEESAYA NAMAHA
    OM AGATHEESAYA NAMAHA
    OM AGATHEESAYA NAMAHA

    ReplyDelete
  6. Thank you for giving Mr.Manikandan's e-mail address. ( I am living in abroad) I send a mail to Amman pathipagam two three times but not a proper answer yet. i will send a mail to Mr. Manikandan. Thank you Karthikeyan sir.

    ReplyDelete
  7. There is a belief that instead of saying "potri" just once, if you say it two times i.e. "potri potri", it is equivalent to saying it many many many times.

    ReplyDelete
  8. Oh classic narration. Aren't navagrahas representatives of Gods viz Brahma, Vishnu and Siva.

    In one of the sanskar TV programmes one Swamiji said God is considered as three in one viz G(enerator), O(perator) and D(estroyer.)

    ReplyDelete
  9. FROM MATSYA PURANA: "The Adhi Devatas to each of the Planets are as follows: Shiva for Surya, Parvati for Chandra, Skanda for Mangal, Vishnu for Budha, Brahma for Brihaspati, Indra for Shukra, Yama for Shanaischara, Kaala Devata forRahu and Chitragupta for Ketu. The Pratyabhidevatas respectively are Agni, Varuna, Prithvi, Vishnu, Indra, Aindri, Prajapati, Sarpa and Brahma."

    http://www.kamakoti.org/kamakoti/matsya/bookview.php?chapnum=12&PHPSESSID=df3cfc0c18a51ab6825a119146f4ea31

    ReplyDelete
  10. Sent couple of emails to Amman pathipagam , even called them over phone and I couldn't get a proper response.

    Thank you for sharing Mr.Manikandan's e-mail address.I'll connect with Manikandan.

    ReplyDelete
  11. ஓம் அகத்தீசா போற்றி

    ReplyDelete
  12. In last year's blog post dated 5.8.2013, Lord Muruga's birth date was given as Aavani month, Poosam nakshatram. Last year it was on 2nd Sept 2013. As per this year's calendar, it falls on 23rd August 2014. Request Karthikeyan to confirm. Thanks.

    ReplyDelete
  13. Lord Muruga's 41 adiyars: "the history of the followers of Lord Muruga (Murugan adiyargal) is written as Sey Thondar Puranam. This is composed by Thenur Varakavi Chokkalinga pillai on request of Thanigamani Chengalvaraya Pillai. Like Panniru thirumurai – Murugavel panniru thirumurai is getting released. This book is getting released on 19th Nov. 2011 at Chidhambara Mahal, Mela Chinthamani, Trichy." http://www.pppindia.com/blog/spiritual/murugan/

    Also see: http://forumhub.mayyam.com/archive/viewtopic.php?t=9&postdays=0&postorder=asc&start=495&sid=1a2ff2b8ee31e096796827819ed33a65
    This also refers to the same book.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Om Sri lopamutra samedha agatheesaya nam aha

    ReplyDelete
  16. I called up Amman Padhippakam to enquire about the book. it costs rs.150. they even send it through courier. the cost for the courier is rs.30. so if we take a demand draft for rs.180 and send it to them along with our address details, they will send you the book through courier. the courier charges might differ if you are in a different city. I thought this will help others who want to purchase the book.

    ReplyDelete
  17. ஆதிசிவன் திருமகனே அகத்தியரே போற்றி
    ஆனைமுகன் ஆறுமுகன் சோதரனே போற்றி
    தமிழ் தந்த பொதிகைமுனி திருவடிகள் போற்றி
    அமிழ்தாக இனிக்கின்ற அகத்தீசா போற்றி
    இறைபணியில் பக்தியுடன் அறந்தாங்கி சங்கர்

    ReplyDelete
  18. sivanadiyar, why have you shared perumal thirumanjanam?

    ReplyDelete
  19. சுகம் தரும் சுந்தரகாண்டம் can be bought here https://www.nhm.in/shop/1000000013812.html

    ReplyDelete