​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 31 July 2014

சித்தன் அருள் - 187 - அகத்தியர் அருள் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அகத்தியப் பெருமான் உத்தரவினால், பெங்களூரில், திரு.கணேசன் (தஞ்சாவூர்) அவர்கள், பொது நாடி வாசித்தார்கள். தனிப்பட்ட விஷயங்களை விட்டு, பொதுவாக மனித வாழ்க்கை செம்மை பெற என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை, தயை கூர்ந்து அருளினார் அகத்தியப் பெருமான். நாடி வாசித்து நமகெல்லாம் நல்வழி காட்டிட உதவிய திரு கணேசனுக்கும், அருளிய அகத்தியப் பெருமானுக்கும் நம் எல்லார் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டு, அவர் அருளுக்கு செல்வோம்.

முதலில், பொதுவாக நன்னெறியை உரைத்து பின்னர், பொதுவான கேள்விகளுக்கு பதிலளித்தார் அகத்தியர் பெருமான்.

"இறைவனின் அருளைக்கொண்டு இயம்புகிறோம் இத்தருணம். இறைவன் அருளாலே நல்லாசி, எம்முன்னே அமர்ந்துள்ள சேய்களுக்கு. இயம்புங்கால் “இறைவனை வணங்கி, இறைவனை வணங்கி, இறையை வணங்கி” என்று யாம் துவங்குவதன் பொருள், இஃதொப்ப நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளின் வடிவம் இப்படித்தான் என்று வைத்துக்கொள்ள இயலாது. இஃதொப்ப வடிவத்தில் மனதை லயிக்க விட்டு, பிறகு, வடிவமற்ற பூரணத்தை உணர்தலே மெய்ஞானமாகும். இஃதொப்ப இறையென்றால் அதற்குள் பூரணம் அனைத்தும் அடங்கியது என்பதாலும், ஓர்ரூபம், ஓர் வடிவம், ஓர் நாமம் இல்லாதானே பரம்பொருள் என்றும், அந்தக் கருத்தினைக் கொண்டே யாம் பொதுவில் ‘இறை வணங்கி’ என்று இயம்புகின்றோம். 

இஃதொப்ப இத்தகு இறைதன்னை மூத்தோனாக, இளையோனாக, முக்கண்ணனாக, மஹாவிஷ்ணுவாக, நான்முகனாக, அன்னையர்களாக இன்னும், இன்னும் பலப்பல ரூபங்களாக மாந்தர்கள் வழிபடுவதும், வணங்குவதும் அஃதொப்ப அந்தந்த மனிதனின் மனப்பான்மைக்கு ஏற்ப அவனவன் வணங்கி வருவதும் நன்றுதான். பின்பு என்றுதான் அனைத்தும் பூரணம் ஒன்று என்று உணர்வது ? அந்த ஒன்றினை உள்ளுக்குள் உணர்ந்து, அந்த ஒன்றுக்குள் மனதை ஒன்ற வைத்து, அந்த ஒன்றையே ஒன்றி, ஒன்றி, ஒன்றி, ஒன்றே ஒன்று என்று உணரும் வண்ணம் ஒரு நிலை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வரும் வரை, மனிதன், அவனவன் வழியில் செல்ல, அஃதொப்ப பரம்பொருளே வழிவிடுகிறது. 

இஃதொப்ப அத்தகு இறைக்கு, பரம்பொருளுக்கு, பரிபூரண சரணத்தை மனம், வாக்கு, காயத்தால் எந்த மனிதன் வைத்து விட்டானோ, அவனே, அஃதொப்ப சாயுச்சம், சாய்ரூபம், சாய்லோகம், சாமீபம் என்கிற இஃதொப்ப நிலைகளை அடைவான். இஃதொப்ப நிலைதாண்டியும் இறை இருக்கிறது என்பதால், இஃதொப்ப நிலை நோக்கி இஃதொப்ப சேய்கள் தொடர்ந்து வர இறைவன் அருளால் யாம் மீண்டும் நல்லாசிகள் கூறுகிறோம். 

இஃதொப்ப பொதுவில் வாக்கு என்றால் தனித்து என்று? என்பது இஃதொப்ப ஏக, ஏக மாந்தனின் வினாவாகும். ஆகுமப்பா! பொதுவில் கூறுவதையும், அஃதொப்ப தனிமையில் கூறுவதையும் யாம் ஒரு பொழுதும் இறைவனருளால் பூர்த்தி என்று சொல்லவில்லை. என்றாலும் இஃதொப்ப தக்க ஆத்மாக்களுக்கு அஃதொப்ப புரிதலுள்ள ஆத்மாக்களுக்கு கடுகளவேனும் இந்த ஜீவ அருள் ஓலைதன்னை புரிந்துகொண்டு இதன் வழியில் நடக்க சித்தமாய் உள்ள ஆத்மாக்களுக்கு இஃதொப்ப ஓலை வாசிக்கப்பட்டாலும், வாசிக்கப்படாவிட்டாலும் யாம் இறைவன் அருளால் தோன்றாத் துணையாக இருந்து கொண்டே இருக்கிறோம். 

அப்பா, அப்பனே! இஃதொப்ப இப்பிறவிக்கு தாய், தந்தை யார் என்று தெரிகிறது மாந்தனுக்கு. எப்பிறவிக்கும் தாய், தந்தை யார் ? என்றால் (அது) இறைதான். அந்த இறையை உணர்வதற்கு அல்லது அந்த இறை உணர்த்துவதை உணர்வதற்கு வேண்டியது முழுக்க, முழுக்க சத்தியமும், தர்மமும் மட்டுமே. இந்த சத்தியத்தையும், தர்மத்தையும் வைத்துக்கொண்டு அதன் பின்பு கடுகளவு பக்தி இருந்தால் அதுவே போதும் இறையை உணர்ந்து கொள்ள. எனவே இஃதொப்ப இறையை தரிசிப்பதும், இறையை தரிசித்து அதன் அருளை உணர்வதும் மிக எளிது. இயம்பிடுவோம் மேலும். எளிது என்றால் ஏன் அது அனைவருக்கும் சாத்தியப்படவில்லை? என்று ஆராய்ந்து பார்க்குங்கால், யாங்கள் அடிக்கடி கூறுவது போல மாந்தனுக்கு, தான் உணர்ந்ததை, தான் பார்த்ததை பிறர் நம்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால் கட்டாயம் இஃதொப்ப இறை சார்ந்த பலன் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். “ இல்லை. என் அறிவு, என் வித்தை, என் உழைப்பு. நான் முன்னேறுகிறேன். இறை எங்கே வந்தது ? பிறவி எங்கே வந்தது? நவக்கிரகம் எங்கே வந்தது ? இதையெல்லாம் நம்பாத மாந்தர்களும் நன்றாக வாழ்கிறார்களே ?” என்றால் இஃதொப்ப யாம் கூறியதைக் கூறுகிறோம். ஒவ்வொரு பிணி நீக்கும் மருந்து தொடர்பான அந்த லிகிதத்திலே இன்ன, இன்ன உட்பொருள்கள் கலக்கப்பட்டு இருக்கின்றன என்கிற குறிப்பு இருக்கும். ஆயினும் அஃதொப்ப வித்தை கல்லாத மனிதனுக்கு அந்த குறிப்பை வாசித்தாலும் புரியாது. பெரும்பாலும் யாரும் வாசிப்பதும் இல்லை. அதற்காக அந்த மருந்து உள்ளே சென்றால், “இவனுக்கு என்னைப் பற்றித் தெரியாது. எனவே ஏன் என் கடமையை செய்ய வேண்டும் ?’ என்று வாளாய் இருக்கிறதா? இல்லையே“. மருந்தின் நுட்பம் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், மருந்து எப்படி வேலை செய்கிறதோ, அஃதொப்ப பிறவி இருக்கிறது என்று நம்பினாலும், நம்பாவிட்டாலும், நவக்கிரகங்கள் வாயிலாக இறைவன் பரிபாலனம் செய்கிறார் என்பதை ஒரு மனிதன் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அஃதொப்ப நடந்து கொண்டேதான் இருக்கும் இறைவனின் விளையாடல். இஃதொப்ப நிலையிலே ஒன்றை நம்புவதும், நம்பாமல் இருப்பதும் கூட அவனவன் கர்ம பாவத்தைப் பொருத்தது. இஃதொப்ப எம் சேய்களுக்கு, நம்பும் சேய்களுக்கும், நம்பா சேய்களுக்கும், இனிவரும் சேய்களுக்கும், இனி எதிர்காலத்தில் இந்த ஜீவ அருள் ஓலைதன்னை நாடி வருகின்ற சேய்களுக்கும் இறைவனருளால் யாம் தற்சமயம் கயிலையில் இருந்தே நல்லாசிகளைக் கூறுகிறோம்.

ஆசிகள், ஆசிகள், ஆசிகள்.

​சித்தன் அருள்................ தொடரும்!​

10 comments:

 1. vanakkam
  "கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால் கலந்துருகி
  யாடுமடா ஞானம் முதற்றே" என்கிறார் அகத்தியர்

  agatheesaaya namaha.
  agatheesaaya namaha.
  agatheesaaya namaha.

  anbudan s.v.

  ReplyDelete
 2. Om Agasthiyar Shri lobamuthra thayae potri potri.

  Sir,kindly tell us when this arul vakku happened in bangalore.how did they called people to participate.i really missed the chance.but everything is happening by HIM.
  Thank you

  ReplyDelete
  Replies
  1. it happend on 20th july ., If u join in the googlegroups of jeeva arul naadi .. all function announcements and naadi readings will be on mp3 and as well in tamil font as in form of posts...., Join via this link http://jeevaarulnaadi.com/contactus.php or https://groups.google.com/forum/#!forum/agathiar

   Delete
 3. Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!

  ReplyDelete
 4. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

  ReplyDelete
 5. ஓம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீஅகத்தியர் பெருமான் திருவடிகள் சரனம்!

  ReplyDelete
 6. I had the privilege of attending the programme with my wife. Its a great spiritual experience talking to the Great Muni.

  Our lives are changed overnight.

  Om Shri Agatheesaya Namha

  ReplyDelete
 7. Thankyou sir for your kind reply.will join in group.

  ReplyDelete
 8. OHM AGATHEESAYA NAMA...OHM GURUVE POTRI...

  ReplyDelete