​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 27 June 2014

சித்தன் அருள் - கஞ்சமலை பற்றிய வரலாற்று தகவல்!


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

கஞ்சமலை பற்றி சித்தன் அருள்-180வது பதிவு வந்தவுடன், அதைப்பற்றிய நிறைய தகவல்களை வாசகர்கள் கேட்டிருந்தனர். எனக்கு தெரிந்தவரையில் பதில் கூறினாலும், சித்தன் அருளை வாசிக்கும் ஒரு அடியவர், திரு.இரா.சாமிராஜன் என்பவர், சேலத்துக்காரர், சற்று விரிவான தகவலுடன் ஈமெயில் அனுப்பினார். அதை, நீங்கள் எல்லோரும் அறிந்து கொள்வதற்காக, கீழே தருகிறேன். நன்றியை சாமிராஜனுக்கு தெரிவிக்கவும்.

கார்த்திகேயன்!

கஞ்சமலை (எ) சித்ரகோயிலின்  தலவரலாறு

அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்

காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர்.

"கஞ்சம்' என்றால் "தாமரை' எனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் "கஞ்சம்' என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம்.

சித்தர் வந்த கதை : காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.

""ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,'' என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான். காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

""அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்?'' என்றார்.

இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார். ""குருவே! நான் தான் காலாங்கி,'' என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.

திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, ""அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,'' என்றார். காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார்.

இருவரும் இளைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே "இளம் பிள்ளை'. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை "காலாங்கி சித்தர்' என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து "சித்தேஸ்வரர்" என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.

பின் குறிப்பு:

என் குடும்பத்தாரிடம் சொல்கிறேன், இந்த வாரம் கோவிலுக்கு போக சொல்லி படம் மற்றும் கோவில் சுற்றியிருக்கும் படம் எடுத்து அனுப்புகிறேன். எனது சொந்த ஊர் சேலம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஊரில் நானும் பிறந்ததை நினைக்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.கஞ்சமலைன்னு சொல்லுறது விட சித்தர்கோவில் மருவி சித்ரகோயில் என்று இப்போ பேச்சுவழக்கில் உள்ளது. 

மிக்க நன்றி அய்யா,
இரா.சாமிராஜன் 

10 comments:

  1. புலவர் மா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி, சித்தேஸ்வரர் திருக்கோயில் வெளியிட்டுள்ள தலவரலாறு ஒன்று உள்ளது. அதில் மேலும் விவரங்களும் புகைப்படங்களும் உள்ளன.

    ReplyDelete
  2. மிகவும் அருமை சேலத்தில் இருந்தது கஞ்சமலை போகும் வழி சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. சேலம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து கஞ்சமலை 20 கி.மீ., தூரத்தில் உள்ளது. இங்கிருந்து 68 ஏ, 68 பி, 29 ஏ ஆகிய தடம் எண் கொண்ட பஸ்கள் கிளம்புகின்றன.

      Delete
  3. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  4. Om Sri lopamutra samedha agatheesaya nam aha

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்,
    சிவயநம, திருச்சிற்றம்பலம்.
    எங்கள் ஊரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ ஆலயத்தின் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் என்ன கரன்தலோ தெரியவில்லை ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இது குறித்து நான் அகத்தியர் அருள்வாக்கு கேட்க விரும்புகிறேன். எனவே எனக்கு முவரி மற்றும் கட்டண விபரம் தெரிவிக்கவும். நன் தங்களின் பதிலை அவசியம் எதிர்பார்கிறேன்.
    நன்றி
    சிவயநம, திருச்சிற்றம்பலம்

    ReplyDelete
  6. ஐயா வணக்கம்,
    சிவாயநம, திருச்சிற்றம்பலம்
    எங்கள் ஊரில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தின் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இதுகுறித்து நான் அகத்தியர் அருள்வாக்கு கேட்க விரும்புகிறேன். எனவே எனக்கு முகவரி மற்றும் கட்டண விபரங்கள் ஆகியவற்றை தெரிவிக்கவும். நான் தங்களின் பதிலை அவசியம் எதிர்பார்கிறேன். நன்றி
    சிவாயநம , திருச்சிற்றம்பலம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சிவநேசன் ஏகாம்பரம் அவர்களே! தங்கள் மெயில் பார்த்தேன். நீங்கள் நினைப்பதுபோல் என்னிடம் நாடி கிடையாது. ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்துகொன்டத்தை நான் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். சித்தன் அருள் வலைப்பூவில், கல்லார் ஆஸ்ரமமும், சென்னையில் ஒரு இடத்திலும் நாடி வாசிக்கிற விலாசத்தை முதல் பக்கத்தின் வலது பக்கத்திலேயே கொடுத்துள்ளேன். அதில் உள்ள என்னை தொடர்பு கொண்டு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்க. எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று வாழ்த்தி, அன்புடன்

      கார்த்திகேயன்!

      Delete
    2. நன்றி ஐயா,

      Delete
  7. வணக்கம் ஐயா கஞ்சமலை எங்கு உள்ளது முகவரி கிடைக்குமா

    ReplyDelete