[புகைப்பட நன்றி:திரு.சரவணன்]
அகத்தியப் பெருமானின் "ஜீவநாடி" என்னிடம் வந்து சேர்ந்தபின், என் வாழ்க்கையில் நிறைய ஆச்சரியப்படுகிற அளவுக்கு நல்லது நடந்தது என்பதே உண்மை. என் தாயார் கோடிக்கணக்கில் "ஸ்ரீராமஜெயம்" எழுதியதால் இந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று பின்னர் அகத்தியரால் சொல்லப்பட்ட பொழுது, நான் மிகவும் அகமகிழ்ந்து போனேன். ஆம் அனைவருக்குமே எல்லாமும் கிடைக்க ஊன்றுகோலாய் இருப்பதே அவரவர் பெற்றோர்கள்தானே. ஜீவநாடியால், ராமர், சீதா, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரர், நரசிம்ஹர், வேங்கடவர், சிவபெருமான், முருகர், பிரம்மா, சரஸ்வதி போன்ற தெய்வங்களின் காட்ச்சியும், அருளும் எனக்கு கிடைக்க காரணமாக அகத்தியர் இருந்தார். அந்த காட்சி கிடைத்த நிமிடங்கள் என்பது வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.
ஒரு நாள் ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு த்யானத்தில் அமர்ந்த பொழுது ஒரு வேண்டுகோளை அவர் முன்னே வைத்தேன்.
"எல்லோரும் சுந்தர காண்டம் எழுதியிருக்கிறார்கள். அதுபோல் நானும் உங்கள் புகழை எழுதவேண்டும். அதற்கு அருளவேண்டும்!" என்றேன்.
"தலையாய சித்தராம் அகத்தியன் தானிருக்க - அன்னவரே உனக்கு வழி காட்டுவார்" என்று காட்சி தந்து அருளி மறைந்தார்.
ஒரு நாள், அகத்தியர் நாடியில் அனுமன் காட்சி தந்து அசரீரியாக சொன்னதை சொல்லி கேட்ட பொழுது,
"பொறுத்திரு தயரதன் மைந்தா - பூலோகப்புண்ணியன், சாரதா தேவியின் மைந்தன் அவன் தரிசனத்தால் - அஞ்சனை மைந்தனின் அவதாரம் நும்மால் எழுதவரும். யானும் துணை இருப்பேன். என அருளாசி" என்று அகத்திய மாமுனி வாழ்த்தினார்.
20 வருடங்கள் உருண்டோடியது. நானும் சாரதா தேவியின் மைந்தன் என்று யாராவது ஒருவர் பத்திரிகை ஆரம்பிப்பார், அதில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன்.
ஆனால் மகா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா சந்நிதானப் பெரியவர் சிருங்கேரி சுவாமிகள் அனுக்ரகத்துடன் "அம்மன் தரிசனம்" என்னும் பக்தி நூல் மாதா மாதம் வரும் என்பதும், இதைத்தான் புண்ணியன் சாரதா தேவியின் அம்மன் தரிசனம் என்று அகத்தியர் உரைத்தார் என்பதும் எனக்கு அப்போது தெரியவில்லை. அம்மன் தரிசனம் நூலில் பல கட்டுரைகள் எழுதி வந்தாலும், சுந்தரகாண்டம் பற்றிய நினைப்பு வரவே இல்லை. இடையில் ஏதோ ஒரு காரணத்தால், தொடர்ந்து எழுதுவது முடியாமல் போனது.
மறுபடியும் அந்த பத்திரிகையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் நாடியில் அதை பற்றி கேட்ட பொழுது,
"அன்றே சொன்னோம் அகத்தியன் யாமும், முற்றிலும் மறந்தனை. மூலத் திருமைந்தன் விந்தைமிகு அனுமன் காண்டம் வெளிவர, மூன்றாம் பிறவி எடுத்த மூதாதைக் கவிஞர் முருகன் பெயருடைய தாசனிவன் - சாரதா அன்னையவள் அரும் பெயரால் - ஆற்றிவரும் தரிசனத்தில் தொடரட்டும் அனுமன் வலம்" என்று உத்தரவு கொடுத்தார்.
அனுமன் அனுகிரகத்தோடு இருபது ஆண்டுகளுக்கு முன் அகத்தியர் வாழ்த்துக்களோடு வந்த சொல்படி பின்னர் "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்னும் தலைப்பில் வால்மீகி ராமாயணத்தை, நம் தமிழ் பெரும் கவி சக்ரவத்தி கம்பன் பெருமானுடன் ஒப்பிட்டு அந்த தொகுப்பை வெளியிட்டேன்.
அதில் ஆச்சரியம் என்னவென்றால், இன்ன தசா புக்திக்கு இந்த சுலோகம் வாசிக்கவும் என்று அகத்தியர் இடையில் நுழைந்து வாக்கு தந்தார்.
உண்மையை சொல்வதானால், இதை நான் எழுதவில்லை. அனுமனும், அகத்தியரும் சேர்ந்து எழுத்து உருவில் கொண்டு வந்தார்கள் என்பதே உண்மை. ஆதலால், இந்த "சுகம் தரும் சுந்தர காண்டம்" எல்லாருடைய வாழ்க்கையிலும் ஆனந்தத்தை தரும் என்றால், அந்த பெருமை அவர்கள் இருவரையுமே சாரும்.
இந்த தொகுப்பில், என்னென்ன தசைகள் நடந்தால் என்னென்ன பிரச்சினைகள் வந்தால் சுந்தர காண்டத்திலுள்ள எந்த ஸ்லோகத்தைச் சொன்னால் நற்பலன் கிடைக்கும் என்பது குறிப்பிட்டுள்ளது. இந்த சுந்தரகாண்டத்தை கையில் வைத்திருந்தாலே, "கெடுதல்" என்பது ஒரு போதும் ஏற்படாது என்பது திண்ணம், ஏன் என்றால் இதில் உள்ள வார்த்தைகள், அனுமன் ஆசிர்வாதத்துடன், அகத்தியர் உபதேசத்துடன் வெளிவந்தது.
இந்த தொகுப்பில் அகத்தியப் பெருமான் காட்டிக் கொடுத்த ஸ்லோகங்களை வாசித்து தம் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளை விலக்கிகொண்ட பலரும் எனக்கு நன்றி தெரிவித்த பொழுது, அனுமனுக்கும், அகத்தியருக்கும் நான் நன்றி சொன்னேன்.
அகத்தியர் அடியவர்களே!
மேற்சொன்ன விஷயங்களை அறிந்தவுடன், நான் யாரேனும் அந்த தொகுப்பை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா என்று தேடினேன். என் நண்பரிடமும் கூறினேன். ஒரு நாள் செய்தி வந்தது. புத்தகம் வாங்கிவிட்டதாகவும் உடனேயே அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். அந்த புத்தகம் வந்து சேர்ந்து வாசித்த பொழுது, எத்தனையோ பிரச்சனைகள் என்னை விட்டு விலகியது. நினைத்தது நடந்தேறியது. எல்லாம் அகத்தியரின் கை வண்ணம்.
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற நோக்கத்தில், அது எங்கு கிடைக்கும் என்கிற நோக்கில் விவரங்களை கீழே தருகிறேன். நம்பிக்கை உள்ளவர், விருப்பம் உள்ளவர் அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், தினமும் வாசித்து வாருங்கள். நல்ல பலனை அடைவீர்கள். புத்தக வெளியிட்டாளர்களுக்கு வியாபாரம் ஆகவேண்டும் என்கிற நோக்கில் இதை இங்கு தெரிவிக்கவில்லை. இதில் வியாபார உத்தியே கிடையாது. நீங்கள் எல்லோரும் நல்லபடியாக, அகத்தியர் அருளால் வாழவேண்டும் என்கிற நோக்கில் கூறுகிறேன். அத்தனை பெருமையும் அகத்தியர் பாதங்களுக்கே.
புத்தகத்தின் பெயர் : "சுகம் தரும் சுந்தரகாண்டம்"
கிடைக்கும் இடம்:-
அருள் மிகு அம்மன் பதிப்பகம்
16/116, T.P.கோயில் தெரு,
திருமலா ப்ளாட்ஸ்,
(ஸ்ரீ ராகவேந்திரா மடம் எதிரில்)
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
தொலைபேசி: 42663546, 42663545
சித்தன் அருள் .............. தொடரும்!
Om Agatheesaya Namaha !!!
ReplyDeleteOm Agatheesaya Namaha !!!
Om Agatheesaya Namaha !!!
Ayya,
ReplyDeleteLong live and God Bless!! Good hearted you are. I pray Agathiyar bless us all who struggles in this wordly life and show us good path and motivate us in being good soul no matter how difficult is the situation and choose always be Good and Do good to others.
Jai Gurudeva!!!!
Dear Karthikeyan sir, thank you for sharing the information with beautiful drawings about the Sundarakandam. I would like to purchase the book.
ReplyDeleteOm Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ReplyDeleteVanakkam sir. The picture is so lively. It seems Saravanan sir has poured his heart and soul into it. Inspiring article! Heartfelt thanks.
ReplyDeleteThis episode refers to "Amman darisnam" magazine published by Sringeri mutt. In the latest issue of this magazine, there is a long article (in Tamil) about Sri Agastya. http://www.ammandharsanam.com/magazine/May2014unicode/page019.php
DeleteThe cover page of the book "sugam tharum sundara kanadam" by late Hanmuthdasan alias Ramaswamy can be seen here: http://www.newbooklands.com/new/product1.php?catid=2&&panum=11004
DeleteThank you so much sir for sharing such a useful info.Agasthiyar arul andri vaerondrum illai.Om Agatheesaya lobamuthra thayae thunai.
ReplyDeleteSaravanan sir thanks to you for the drawings.Really wonderful art by you sir.We can feel the presence of the theme in picture.
Iyya,
ReplyDeleteThank you very much. I was thinking to buy Sundara gaandam book. Now i got a way. Thanks to our Mahaguru Agasthiyar.
This comment has been removed by the author.
ReplyDeleteThank you very much for the info. This evening, I bought the book from Amman Pathipagam, on return from office, and brought it home. The shop keeper told me that there have been quite a lot of enquiries today over phone about the book. I told them about this blog and also suggested to them to keep good number of copies ready at hand during the coming days.
ReplyDeleteGet tears reading about Agasth Muni. Thanks Sir
ReplyDeleteNRSridharan
Chennai
Om Agathisaya Namaha.
ReplyDeleteI am a regular reader of ur blog. Thank you providing wonderful informations which were not know to many. This helps us to understand more about Hinduism and how a person should be.
I wish to ask you one more help too. When i read this blog, i came to know that writing God's name is also a way of getting punniyam. Before that i thought , what was there in writing God's 1000 times or more. Could you explain about this in detail and can u tell us, where there are any other things like this, which were not known to many.
Thanks,
Usha
Anjaneyar Matrum Agathiyar serntha indha padhippu meisilirkka vaikindradhu.
ReplyDeleteSundarakandam - Sugam tharum Sorgam..!!
Om sreem hreem Sri agathiya sitthaswamiye potri..!!
Migavum arumai.
Latha Anand
Singapore
I got the book and started reading karthikeyan sir...I am now confident that my child will get completely alright...and I feel so secured ..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஐயா
ReplyDeleteYes, I also got my copy of 'Sugam tharum sundaragandam'. To my surprise five volumes of Naadi sollum kathaigal by late Shri Hanumathdasan are also available in that shop and needless to say I bought one set.
ReplyDeleteThank you Shri Karthikeyan.
NRSridharan
sir
ReplyDeletei want this book.but i do know what is the real name of ayya hanumandhasan ?because im in canada.i am so confuse to get this book from online.someone help me to tell the real name of author.so i get the right book.thank u.
subha
The authors name is thiru.ramaswamy.
DeleteDear sir is english translation of this sacred book available ...om agtheesaya namah...
ReplyDelete