அவ்வளவு சிறப்பு மிக்க இடம் இது. மயிலை முருகப் பெருமான் தனக்கு வாகனமாக அல்ல, தோழனாக ஏற்றெடுத்த இடம் இது. மயிலுக்கு மிகப்பெரிய மூக்கு. மயில் வந்து என்ன செய்யும். பாம்புகளை தீண்டும். ஆனால், எத்தனை பாம்புகள் அதை தீண்டினாலும், கொத்தினாலும், அதன் உடம்பில் விஷம் ஏறாது. அத்தகைய உடல் வாகை உள்ளடக்கியது அது. விஷத்தை தன்னோடு வைத்துக் கொண்டிருக்கிறான், எதற்கென்றால், அவனை விஷம் தீண்டக் கூடாது, அது போல் அவன், யார் விஷம் தீண்டினாலும், நம் முருகன் மயிலை விட்டு விஷத்தை எடுத்து விடுவான். கீறிப் பிள்ளைக்கு பாம்பை பிடிக்கிற, கொல்கிற தைரியம் இருக்கிறது. இருப்பினும் அது பாம்புகளை கொன்று இரையாக்கிய பின் அது பக்கத்தில் மூலிகையை, தர்ப்பையை தின்று விஷத்தை முறித்துக் கொள்ளும். புல்லுக்கு விஷத்தை எடுக்கும் சக்தி உண்டடா. தர்ப்பைபுல் விஷத்தை எடுக்கும். அதைத்தான் மறைமதி நாள் அன்றோ, அதாவது அமாவாசை நாளன்றோ, கிரகணத்தின் நாளன்றோ, எதற்காக கிரகணத்தைச் சொன்னேன் என்றால் இன்னும் இரண்டு நாளில் கிரகணம் வரப் போகிறது, அதையும் கணக்கில் வைத்துத்தான் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கிரகணத்தின் அன்று பூமியில் விஷத்தின் தன்மை அதிகமாக இருக்கும் என்பதினால், தர்ப்பையை தூக்கி உணவிலே போடுவார்கள், வீட்டிலே வைப்பார்கள். இந்த தர்ப்பைப் புல் எங்கிருக்கிறதோ, அதற்கு விஷத்தை எடுக்கும் சக்தி உண்டு. மூலிகையிலே எத்தனையோ விஷத்தை எடுக்கும் மூலிகைகள் உண்டு. எந்த மூலிகை விஷத்தை எடுக்கிறதோ இல்லையோ, தர்ப்பைப்புல் விஷத்தை தடுக்கும். தர்ப்பை புல்லை நன்றாக அரைத்து, தேன் கலந்து உட்கொண்டால், உங்களை பாம்பு தீண்டினாலும், பாம்பு இறக்குமே தவிர, நீங்கள் இறக்க மாட்டீர்கள். விஷம் உங்கள் ரத்தத்தில் ஒரு போதும் கலக்காது. இதையே, எந்த காலத்திலும், காலையிலும், மாலையிலும் அல்லது மூன்று வேளை உட்கொண்டால் போதும், உங்களுக்கு ஆயுள் பலம் அதிகரிக்கும், இருதயம் நன்றாக செயல் படும், உடல் கலங்கினாலும், கலங்கியது விஷத்தால் ஆனாலும், விஷம் வெளியேறிவிடும். எத்தனை வியாதிகள் உங்கள் உடலில் இருந்தாலும், அதோடு, தேன் கலந்து, கடுக்காய் தோல் கலந்து உட்கொண்டால் போதும். தோல் வியாதிகள் அத்தனையும் பறந்து போகும். தர்ப்பைப் புல்லோடு, நீங்கள் பால், தேன், பன்னீர் கலந்து, பௌர்ணமியிலோ, அமாவாசையிலோ உட்கொண்டு வந்தால் போதும். மூளை சம்பந்தப்பட்ட, நரம்பு சம்பந்தப் பட்ட அத்தனை நோய்களும் விலகிவிடும்.
கீரி வந்து பாம்பின் தலையைத்தான் கவ்வும். கீரி, பாம்பு சண்டையை நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ, நான் சொல்லுகிறேன், கீரி பாம்பின் தலையை நோக்கித்தான் கவ்வுமே தவிர, மத்தியத்தை நோக்கி தாக்காது. அதன் தலையை கடித்து அப்படியே தூக்கி எறிந்துவிடும், ஏன் என்றால், அதற்கு விஷம் எங்கு இருக்கிறது என்று தெரியும். அந்த விஷத்தன்மையை முறிக்கும் தன்மை அந்த கீறி பல்லுக்கு உண்டு. ஆனால் மயிலுக்கோ, பாம்பு அதன் உடலில் எத்தனை முறை கொத்தினாலும், விஷம் மயிலுக்கு ஏறாது. அப்படிப்பட்ட அருமையான மயிலை, நமது முருகப் பெருமான், இந்த இடத்தில் தனது 7வது வயதிலே தேர்ந்தெடுத்தான். அந்த மயிலின் வாரிசுகள் கூட இன்றைக்கு இங்கு நடமாடிக் கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்ல, இந்த 29 மலைகளை பற்றி எல்லாம் சொன்னேன். இங்கு முருகப் பெருமான் அமர்ந்திருக்கும் பொழுதுதான், ராமப்பெருமான் இங்கு வந்து அமர்ந்தான். முருகப் பெருமான் ராமப்பெருமானை தரிசிக்க ஆசைப்பட்டு அந்த ராமர் கோயிலுக்கு நடந்து சென்ற வழியிலே, ராமனே, எதிர்க்க வந்து கட்டி அணைத்து, கொஞ்சி குலாவி, ஆனந்தப் பட்டு, பரவசபட்ட, அந்த இடம் கூட இதே இடம் தான். ஆக, முருகன் ஆசைப்பட்டு, பிரியமாக ராமனை சந்திக்கப் போனதும், ராமன் தன் குடும்பத்தோடு வந்து, எம்பெருமான் முருகனை கட்டித் தழுவி, முத்தமிட்டு, அவன் பாடுகின்ற தமிழை எல்லாம் கேட்டு ஆனந்தப் பட்ட இடம் கூட இதே இடம்தான். இந்த புனிதமான இடத்திலே விஷங்களை எடுக்க கூடிய சக்தி இருக்கிறது. இந்த இடத்துக்கு வந்து, ஒருமுறை உலா வந்துவிட்டால் போதும் அல்லது அமாவாசை அன்றோ, பௌர்ணமி அன்றோ, அஷ்டமி, நவமி அன்றோ இங்கு வரலாம். அஷ்டமி என்பது பொதுவாக சுப காரியத்துக்கு ஏற்புடையது அல்ல என்று சொல்கிறார்கள். ஆனால் அஷ்டமி, நவமி அன்று தான், இங்கு யார் யாருக்கு எந்தெந்த சுப காரியம் நடக்கிறது என்றும், மற்ற நல்ல நாட்களில் செய்யாத புண்ணியங்கள் எல்லாம், இந்த அஷ்டமி நவமியில் வந்து இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால் போதும். அத்தனையும் நடக்கும். சிலருக்கு நல்ல காலங்கள் ஏற்புடையதல்ல. சிலருக்கு நல்ல விஷயங்கள் பிடிக்காதது போல, சிலருக்கு கெடுதல் விஷயங்கள்தான் நன்றாக நடக்கும். ஆக, வாழ்க்கையிலே கெடுதலையே சந்தித்திவிட்டு நொந்து போனவர்கள் எல்லாம், எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும், எத்தனை ஜென்மங்கள் இருந்தாலும், அவர்களுடைய தோஷங்கள் அத்தனையும் விலகவேண்டும் என்றால், அஷ்டமி அன்று இங்கு வந்து முருகப் பெருமானை தரிசித்து, ஆனந்தமாக அமர்ந்து, கந்த சஷ்டி கவசத்தையோ, அல்லது சுப்பிரமணிய புஜங்கத்தையோ, தவறாது மூன்று முறை சொல்லிவிட்டு போனால் போதும். உங்கள் உடம்பில் உள்ள எல்லா நோய்களும் சிக்கென பறந்துவிடும்.
குறிப்பாக விஷத்தன்மை, பேச்சிலே விஷம், பார்வையிலே விஷம், உடம்பிலே விஷம், நடத்தையிலே விஷம், போக, விஷங்கள் தான் இப்பொழுது நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிறது. ஆக, கலிபுருஷனின் அட்டகாசம் அதிகமாகி கொண்டிருக்கிற காலம் இது. ஆக, எல்லார் மனதிலும் விஷங்கள். எப்படி வருகிறது, ஏது வருகிறது என்று தெரியாது. ஆனால், விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால், மூளையை பாதித்து, உடம்பை பாதித்து, குடும்பத்தையே பாதிக்கும். விஷம் என்றால், வார்த்தைகளிலே விஷம் என்று சொன்னேன். பார்வையில் விஷம் என்று சொன்னேன். நடத்தையில் விஷம் என்று சொன்னேன். அந்த விஷம் நிறைய யார் யாருக்கெல்லாமோ, உங்களை சுற்றி இருக்கலாம். பொறாமை உங்களை சுற்றி இருக்கலாம். உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமை பட்டு, உங்களை கீழே தள்ள நினைக்கலாம். உங்களுக்கு ஏதேனும் ஒரு இடைஞ்சல் கொடுக்க வேண்டும் என்று எங்கிருந்தும் ஏதேனும் ஒருவர் வந்து சேரலாம். அவர்கள் கலிபுருஷனின் அவதாரங்களாக செயல்படுபவர்கள். அந்த கலிபுருஷனின் அவதாரங்களாக செயல் படுகின்றவர்களை எல்லாம், இந்த முருகப்பெருமான் தன் மயில் வாகனத்தில் அமர்ந்து கொண்டு, ஆனந்தமாக யோசித்துப்பார், பிரார்த்தனை செய்துபார், அவன் இங்கிருந்தே மயிலை அனுப்பி, அந்த விஷத்தை எடுத்துவிடுவான். மயில் இறகு பட்டாலே போதும், அந்த விஷத்தன்மை இறங்கி போய்விடும்.
ஆக, முருகப் பெருமான் நடந்து விளையாடிய இடம் மட்டுமல்ல, அவன் கொஞ்சி விளையாடி, அவன் பாதங்கள் இந்த 29 மலைகளிலே பட்டு நடமாடியிருக்கிறான். பொற்பாதங்களும் இன்றைக்கும் அங்கே இருக்கிறது. அங்கே முருகப் பெருமானின் சிரிப்பொலியையும் கேட்கலாம்.
முருகனை நேரடியாக சந்திக்க முடியாதவர்கள், முருகனின் பொற்பாதத்தை நினைத்து வேண்டுகிறவர்கள், முருகனை நேரடியாக சந்தித்து சண்டை போடவேண்டும் என்று உரிமையுடன் போராடிக் கொண்டிருப்பவர்கள், முருகப் பெருமான் அடியார்கள் அத்தனை பேரும், இந்த மலையிலோ, நதியிலோ உட்கார்ந்து ஒரு செவ்வாய் கிழமை அன்று இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள், ஆனந்தமாக மேற்கு திசை நோக்கி அமர்ந்து "முருகா" என்று கூப்பிட்டால், அவன் நேராக வந்து காட்சி அளிப்பான்; என்று அருளாசி.
[அகத்தியர் அடியவர்களே, இத்துடன் அந்த ஒலிநாடா நின்று போனது. எனக்கு தெரிந்த என்னெனவோ செய்து பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. சில அகத்தியர் அடியவர்கள் கணிப்பொறி துறையில் வல்லவர்களிடம் கொடுத்து சோதிக்கச் சொன்னேன். ஒரு பதில்தான் எல்லோரும் சொன்னார்கள். அதில் சப்தம் பதியப்படவில்லை என்று. சரி! நமக்கு விதிக்கப்பட்டது அவ்வளவு தான் என்று நினைத்து, கிடைத்ததை தந்திருக்கிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள்.]
இந்த மலையை பற்றி துழாவிய போது கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
- இந்த மலையில் பௌர்ணமி, அமாவாசை தினங்களில் கிரிவலம் செல்கிறார்கள். 18 கிமீ நடக்க வேண்டுமாம். ஒருமுறை கிரிவலம் சென்று வந்தாலே நம் உடலில் உள்ள விஷங்கள், வியாதிகள் போன்றவை இந்த வனத்தில் உள்ள மூலிகை காற்றால் நம் உடல் தழுவப்பட்டாலே, விலகிவிடுமாம்.
- இந்த மலைக்கு பக்கத்தில் சுமார் 20 கிமீ தூரத்தில், அயோத்தியப் பட்டினம் என்ற ஒரு ஊர் உள்ளது. அங்கு ஒரு கோதண்ட ராமர் கோவிலும் உள்ளது. மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு கோவில். ராமருக்கு முடி சூட்டிய (பட்டாபிஷேகம்) இடம். நல்ல நேரம் போய்கொண்டிருக்க, அதை தவற விடாமல் இருக்க, இங்கு முதலில் பட்டாபிஷேகம் செய்யப்பட்டதாம். பின்னர் அயோத்தி சென்று இன்னொருமுறை பட்டாபிஷேகம் செய்து கொண்டாராம். அதிலும் மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால், ராமர் அமர்ந்து ஒரு காலை மடக்கிய நிலையில் ஆசிர்வதிக்க, அருகில் சீதாபிராட்டியார், லக்ஷ்மணன், ஆஞ்சநேயர், சுக்ரீவன், விபீஷணன் நின்ற கோலத்தில் இருக்கிறார்கள்.
- அயோத்திக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டும் என்று இல்லை. இந்த அயோத்தியப் பட்டினத்தில் வந்து தரிசித்தாலே, அனைத்து அருளும் கிடைக்கும் என்று ராமரே கூறியதாக சொல்கிறார்கள்.
Om agatheesaya namaha
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteதயவு செய்து கஞ்சமலை முருகனின் படம் தர முடியுமா? INTERNET இல் தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை. thank you
Thank you, Karthikeyan. Would the date of this episode be 2008 or 2009?
ReplyDeleteVanakkam ayya ,
ReplyDeleteதர்ப்பைப் புல் endral yenna ?
Bala, Darba grass is readily available in India. It is always used in homams and ceremonies. The reference to Darba grass goes back to Vedas.
DeleteBala...tharppai is known locally in Malaysia as Lalang (Imperata cylindrica).
DeleteThanks anna
DeleteOm Agatheesaya Namaha !!!
ReplyDeleteOm Agatheesaya Namaha !!!
Om Agatheesaya Namaha !!!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ReplyDeleteFor photos, goto http://www.panoramio.com/photo/72748386.
ReplyDeleteThis is the first photo, use right arrow to see more photos.
ஓம் அகத்தீசாய நம
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம
Thank you sir. I already checked this one. But not a Murugan photo in this.
ReplyDeleteBut yesterday I found out one Kanjamalai Murugan photo in the net. It is so beautiful. The URL is:
https://www.google.com/webhp?sourceid=chrome-instant&ion=1&espv=2&ie=UTF-8#q=kanjamalai%20murugan%20photo
Thank you
Thanks 🙏 and FYI, this URL is not working. Can you please give the working one?
DeleteThanks
Rajesh
Our tradition is 4-step invocation eg "om gam Ganpataye nama", "om aim Saraswatyai nama". Om addresses the Divine in general. The Bija (gam, aim, sri etc.) addresses an aspect or shakti of the Divine. The third word addresses a particular devta or rishi. The fourth word nama signifies respect, surrender and an aspiration to get closer to that deity or rishi.
ReplyDeleteThus, the 3-step short-cut "om agatheesaya nama" misses out on the bija. But the 4-step "om sri Agastheesaya nama" seems to be more adherent to our tradition and to the principles of sound (shabda brahm). Thank you.
Beautiful reply Sir, thank you for telling us the 4 step mantra...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWhen a person wants to seriously pursue mantra upasana (i.e. repeating the mantra hundreds of times a day, every day, along with nyasa, with the ultimate purpose of having the vision of the devta or the phala of the mantra), then it becomes tapas and, yes, in that situation, the mantra is better got through a Guru. Many times, Gurus may give a very simple mantra eg “Jai Ram”, but because Guru gave it, it will work well.
ReplyDeleteBut, on the other hand, when a mantra is casually employed a few times a day – more like a stotra or stuthi or sloka – then it is only an expression of his bhakti. Today’s practical reality is that the population is crores of people and true Gurus are hardly to be found.
This comment has been removed by the author.
ReplyDeleteGreat discussion between Shweranga and Suresh Srinivasan and hats off to these two but I am not joining the issue !!!
ReplyDeleteNear Kanjamalai, Balamurugan has made his home in a temple at Rakkipatti-Vellaimalai. This temple is on the Coimbatore Highway and it is surrounded by trees in what looks like a bungalow.
ReplyDeleteTemple name: Swayambu Sri Raja Balamurugan Maha Sannidhanam. I had been to this temple many times, but now knowing the Balamurugan link with nearby Kanjamalai, it all becomes clear - Why Balamurugan took up residence at Rakkipatti.
Please visit the temple and take blessings & guidance from RajaBalaMurugan, Swamiji and other sidda-purushas. Kanchi MahaPeriyava also is with Swamiji giving his blessings and guidance.
Link for temple website- http://swayambalaya.com/
Google maps - https://goo.gl/maps/vnKhiigsa55bqrJVA
Om Agatheesaya nama Om lopamudradevi nama Om shivaya nama
ReplyDelete