​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 30 January 2014

சித்தன் அருள் - 161 - நம்பிமலை - புளியமரம்!

அப்படிப்பட்ட சித்தத்தன்மை அடைகின்ற பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. இந்த சித்தத் தன்மை இதுவரை சதுரகிரியில் கிடைத்ததில்லை. அதுதான் ஆச்சரியம். சதுரகிரியில் எத்தனையோ ஆச்சரியங்கள் நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நடக்கப் போகிறது. ஆனால் சித்தத்தன்மை அடையவேண்டும் என்று எல்லொருக்குமே ஆசை. எல்லோருக்குமே, உடனே சித்தனாக வேண்டும், நினைத்ததை சாதிக்கவேண்டும், தன்னை எல்லோருமே மதிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது இயல்பு. தப்பில்லை. உயர்ந்த நிலைக்கு ஆசைப்படுவது தவறே கிடையாது. ஆசைப்பட்டால் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும். ஆசை படாமல் இருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும். அதில் எப்படி என்றால், பாம்பு சீறவேண்டும் ஆனால் கடிக்ககூடாது. அது போல் ஆசை படவேண்டும், ஆனால் அதற்காக, மற்றவர்களை மன வருத்தப் படச் செய்யவோ, துன்புறுத்தவோ, அதையும் உடலாலோ, உள்ளத்தாலோ ஏற்படுத்தக் கூடாது. பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது. பிறர் மனைவியைவஞ்சிக்ககூடாது. குழந்தைகளை திட்டக்கூடாது. யாரையும், எவரோ என்று தவறாக எண்ணிக்கொண்டு பேசக்கூடாது. அவர்கள், எல்லோருக்குமே சித்தத்தன்மை இருக்கும் என்று புரிந்து கொள்ளவேண்டும். அந்த தன்மையை உண்டாக்குகிற புனிதமான இடம், இந்த இடம் தான்., இதே நேரத்தில் தான்.

சற்று முன் சொன்னேனே, ஆங்கோர் புளியமரத்துக்கு அடியில், ஒரு 414 சித்தர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னேனே, அத்தனை சித்தர்களும் இங்கு வந்து நம்பியை தொழுதுவிட்டு, நம்பிமலையை விட்டுச் செல்லாமல், ஆசையோடு, முக்கண்ணனையும் தரிசிக்கவேண்டும் என்று காத்திருப்பார்கள். ஆகவே சித்தர்கள் ஏன் தங்குகிறார்கள் தெரியுமா? அடிக்கடி முக்கண்ணன் இங்கு வந்து அளவளாவிவிட்டுச் செல்வதால், இங்கு வந்து முக்கண்ணனை தரிசித்துவிட்டுச் செல்லலாமே என்று தான், அந்த சித்தன் இட்டு, நட்ட மரம் தான் அந்த புளியமரமடா. சித்தன் அந்த மரத்துக்குள் இருக்கிறான். அந்த மரத்துக்குள் உயிராக இருக்கிறான், வேராக இருக்கிறான், ஆணிவேராக இருக்கிறான். அந்த புளிய மரமே சித்தனடா!

[நம்பிமலை - புளியமரம்]

அந்த விநாயக சித்தனுக்கும் அந்த புளிய மரத்துக்கும் சம்பந்தம் உண்டு. விநாயகன் என்பது கேது என்று ஏற்கனவே சொன்னேன். அவனிடம் படிக்க முடியாது என்பதால், அவன் சொன்னான். "ஏகுக இந்த மலையில். தங்குக இரவில்" என்று அசரீரி வாக்காக சொன்னான். அதுவரை அகத்தியன் கூட அவனை பார்த்து வியந்துகொண்டிருந்தேன். எத்தனை மலைகளை சுற்றி வந்திருக்கிறான் எத்தனை கட்டங்களை தாண்டி வந்திருக்கிறான். அத்தனையும் தாங்கும் இந்த தைரியத்தோடு அவன் அமர்ந்திருக்கிறான் என்று சொன்னால், முன் ஜென்மத்தில், மிகப் பெரிய சித்தனாக இருந்து, சிறந்த வழிகாட்டியாக இருந்து, தோளாக இருந்தவன் தான் இந்த தங்கராசு என்பவன். முன் ஜென்ம தொடர்பு இருந்ததால் தான் அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான். அவனுடைய பரிவு பெற்றுவிட்டால், கேதுவினுடைய பரிபூரண ஞானம் கிடைத்துவிடுகிறது. கேது என்பது ஞானகாரகன் என்று பெயர். அந்த ஞானம் அவனுக்கு இயல்பாகவே வந்துவிட்டது. வந்திருக்கிறான். அல்ல, குருவே அவனை நாடி வந்திருக்கிறான். அதுதாண்டா ஆச்சரியம். இப்படிப்பட்ட புனிதமான சம்பவங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் நடக்கத்தான் போகிறது. நான் சொன்னேனே, புளிய மரத்துக்கு கீழே இருக்கிற சித்தர்கள் எல்லாம் இப்பொழுது ஒவ்வொன்றாக வெளியே கிளம்புகிறார்கள் என்று. எதற்காக? உன்னை பயமுறுத்துவதற்காக அல்ல, சித்த லீலைகளை காட்டுவதற்காக அல்ல. இந்த மலையை சுற்றி ஒரு முறை வந்து சுவாசித்துவிட்டு இறங்கி விடுவார்கள். அந்த புனிதமான நாள் தான் இந்த நாள். அதை அன்றைக்கே, அப்பொழுதே சொல்லியிருக்க வேண்டும். ஏதோ ஞாபகத்தில், அகத்தியன் எங்கெங்கோ சென்றோ, உலகத்தை நோக்கியோ, கரும்குளத்தை நோக்கி சென்று விட்டேன் பார். அதுதான். அப்பொழுதுதான் சித்தர்கள் ஞாபகம் சற்று குறைந்துவிட்டது. இவர்கள் எல்லோருமே, அகத்தியனை வணங்குபவர்கள் தான். அவர்களும் இப்பொழுது வலம் வந்து இந்த நம்பியை தரிசனம் செய்துவிட்டு, ஆனந்தமாக செல்வார்கள். அவர்கள் தரிசனம் செய்து மூச்சு விடுவார்கள். அந்த மூச்சு விடுகின்ற தன்மை இங்கு பன்னீர் போலவே தெளிக்கும். அதில் பன்னீர் வாசனை அடிக்கும். அந்த வாசனைகள் மிக அற்புதமானவை. அதை யார் ஒருவன் உடல் தேகத்தில் பட்டு விட்டாலோ, அவனுக்கு எந்தவித குட்ட நோயோ கடைசி வரை, அவன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கோ வராது. இதெல்லாம் தெய்வ ரகசியங்களடா. அகத்தியனுக்கு என்னவோ மனதில் தோன்றிற்று, இன்று தான் சொல்லவேண்டும் என்று.

வட்டப் பாறையில் அமர்ந்து கொண்டு அன்றொருநாள், இதை எல்லாம் விளக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இதையே, வட்டப்பாறையாக மாற்றிக் கொண்டேன். ஏன் என்றால், இந்த வட்டப்பாறைக்கு அங்குள்ள தங்கராசு அழகான விளக்கம் அதை சொன்னான். வட்டப்பாறையில் கடா வெட்டுவதாகச சொன்னான். அகத்தியன் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சொன்னேனே, ஞாபகம் இருக்கிறதா? வட்டப்பாறை என்பது பலிகளை கொடுக்கிற இடம்தான். அந்த வட்டப்பாறையில் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, வானில் வெண்ணிலா வட்டமாக சுற்றி வரும்பொழுதுதான் தென்றல் காற்றோடு அழகாக அமர்ந்து கொண்டு நானும் 17 சித்தர்களும் அமர்ந்திருக்க, மனித சித்தர்கள் எல்லாம் நேர் எதிரில் அமர்ந்திருக்க, நிறைய கேள்விகளை எல்லாம் உங்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம். இந்த மாதிரி அதிசய நிகழ்ச்சி 1540 ஆண்டுகளுக்கு முன் தான் நடக்கும் என்று சொன்னேன். அதற்கு முன்னோட்டமாக ஒத்திகை பார்க்கத்தான் உங்களை எல்லாம் வரவழைத்திருக்கிறேன். இது பற்றிய விவரம் பின்னால் நான் உரைப்பேன். அந்த வட்டப்பாறையை சொன்னது உண்மை. வட்டப் பாறையில் பலி கொடுப்பதெல்லாம் உண்மை. அங்கொரு மகா பத்திரகாளி இருந்தது உண்மை. அதயெல்லாம் கண்டு ஆனந்தப்பட்ட போதுதான், இங்குள்ள முக்கண்ணனும், நம்பி நாயகனும், மற்றவர்களும் சேர்ந்து, பொது மக்களை பயமுறுத்துவதற்காக இப்படி வேஷம் போடக்கூடாது. கொடிய வேஷம் போடக்கூடாது, சாந்தி, சாந்தி, சாந்தி என்று, அங்கு அற்புதமான ஒரு சந்தனத்தை, இந்திரனால் கொடுக்கப்பட்ட சந்தனத்தை, மூன்று நாட்கள் விடாமல் அரைத்து, அந்த இடத்தில் ஒட்டி வைத்த பிறகு, அந்த பத்திரகாளி சாந்தியானாள். இன்றைக்கும் அந்த பத்திரகாளிதான், இந்த காட்டிலே, அவ்வப்போது எந்த கெடுதலும் ஏற்படாமல், உலா வந்து கொண்டிருக்கிறாள். அவள் உலா வரும் போது, யாருமே, அவள் எதிரில் இருக்ககூடாது. யார் எந்த மனித உடலும் படக்கூடாது. அந்த நாளில், நான் சத்தியம் வாங்கியிருக்கிறேன். இங்கு எந்த மனிதர்களும் அங்கு தங்க மாட்டார்கள். யாருமே இங்கு தங்கமாட்டார்கள். எந்த மனித உயிர் பலிகளும் இங்கு கிடையாது.  ஆனாலும் மனிதர்கள் செய்கின்ற பலி உண்டடா. தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக, சில தேவை இல்லாத தவறுகளை எல்லாம் செய்து வருகிறார்கள். அதனால் எல்லாம் புனிதம் கெட்டுப் போகும் என்று எண்ணியிருந்தேன். எத்தனையோ முறை, பல முகமாக எச்சரிக்கை செய்தும் கூட, தன்னை புனிதமானவன் என்று எண்ணிக் கொண்டு வந்த ஒருவன், இங்கே 22 வயது பெண்ணை கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய வில்லையா? அது யார் என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் இந்த மலை சற்று விசனம் அடைந்து புனிதம் எல்லாம் கெட்டுவிட்டது. அந்த புனிதத்தை தருவிப்பதற்காக அகத்தியன் கங்கையை வேண்டினேன். கங்கை இங்கு வந்து, சற்று முன் சொன்னேனே, அக்னி தீர்த்தம் என்று, அதற்குப் பக்கத்தில் கங்கை அமர்ந்த நேரம், தாமிரபரணியும், கங்கையும் ஒன்று சேர்ந்து, அந்த இடத்தை தண்ணீரை தெளித்து, புனிதமாக்கிவிட்டார்கள். ஆக சில கொலைகள் நடந்திருக்கிறது, சில உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதயெல்லாம், தாமிரபரணியும், கங்கையும், புண்ணிய நதிகளான அவர்கள், தன் பொன்கரத்தால் புண்ணியாவாசனம் செய்து, இந்த இடத்தை புனிதப்படித்தியிருக்கிறார்கள். ஆகவே, இந்த இடம், மிக, மிக, மிக, எத்தனை "மிக" வேண்டுமானாலும் போட்டுக்கொள், அத்தனை மிகப் புண்ணியமான ஸ்தலம். இங்கு ஒருமுறை வருவதற்கே இத்தனை சௌகரியம் கிடக்கும் என்றால், இந்த கோவிலை நோக்கி வருகின்ற இவர்களுக்கெல்லாம், எத்தனை புண்ணியம் கிடைத்திருக்கும் என்று எண்ணிப்பார். ஆகவே எல்லாருமே புண்ணியசாலிகள். ஆத்மா, மிக சுத்தமான ஆத்மா. ஆகவே அவர்கள் வரலாம்.

இனி அகத்தியன், சதுரகிரியில் அமர்ந்து, சுந்தர மகாலிங்கத்துக்கு அருகில் அமர்ந்து, என்னப்பன், முக்கண்ணன் அழைப்பதால், அவனருகில் அமர்ந்து, அவன் பொற்பாதத்தை பிடித்து விடவேண்டிய ஒரு பொறுப்பு இருக்கிறது. இல்லை என்றால் அவன் சயனம் கொள்ள மாட்டான். அந்த முக்கண்ணனின் பொற்பாதத்தை பிடித்து அமுக்குவதற்காக, அகத்தியன் உள்ளே செல்லுகிறேன். அதுவரை என் சித்தர்கள் உன்னை காப்பார்களாக என்று அருளாசி.

சித்தன் அருள் ................. தொடரும்!

33 comments:

 1. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

  ReplyDelete
 2. wonderful!! amazing!! Eagerly waiting for next thursday

  ReplyDelete
 3. thangal Padhivirkku nandrigal pala pala, idhil sollapattirukkum thiru Thangarasuvum, Kallar, Mettupalayathil Irukkum gurujium Ondra enbadhai thelivupadutha virumbugiren. Siththa thanmai adaivatharkkana vazhiyai Agathiyar unarthivittar. Avar porpadhangalil siram thazhthi vanagugiren. Om agatheesaya nama, Om agatheesaya nama, Om agatheesa nama --

  ReplyDelete
  Replies
  1. ​ஆமாம்! அவரேதான்!

   Delete
 4. Jai Sarguru OM Agathisaya Namaha Sarguru Patham Saranam Patha. AYYA Agathiyare Kindly here MY Prayer Ayya....

  ReplyDelete
 5. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
  ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
  ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
  ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

  ReplyDelete
 6. Oum agastheesaya namaha! karthikeyan sir! Ithula Agathiar solli irukera Thankarasu than Kallar swamigala!!

  ReplyDelete
  Replies
  1. ​ஆமாம்! அவரேதான்!

   Delete
 7. Those who have gone and met and had some time with that great soul @ Kallaar, are blessed and lucky!

  ReplyDelete
 8. ஏதோ,தேவலோகத்தில் அமர்ந்து ,மகா சித்தர் அகத்தியர் பகவானின் சொற்பொழிவை கேட்ட உணர்வு.கட்டு.ரையை வாசித்து முடிக்கும் வரை நம் வசத்தில் நாமே இல்லை. அன்புடன் இராமசாமி,சத்திரப்பட்டி, இராசபாளையம்,

  ReplyDelete
 9. ஏதோ,தேவலோகத்தில் அமர்ந்து ,மகா சித்தர் அகத்தியர் பகவானின் சொற்பொழிவை கேட்ட உணர்வு.கட்டு.ரையை வாசித்து முடிக்கும் வரை நம் வசத்தில் நாமே இல்லை. அன்புடன் இராமசாமி,சத்திரப்பட்டி, இராசபாளையம்,

  ReplyDelete
 10. ஆஹா! தேவலோக வாசம்.
  ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

  ReplyDelete
 11. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
  Does anyone has info on " திருவண்ணாமலை சப்தரிஷி நாடி " ? where to find ? Any address/ phone number ?? Your guidance most appreciated.

  Thanks!
  Bala

  ReplyDelete
  Replies
  1. In Tiruvannamali, I had consulted a Nadi astrologer-- Mr. Karthikeyan, Sannidhi street, near Raja Gopuram. tel. 9486563230. I found him honest and straight-forward. There is another nadi centre on Chengam Road (Girivalam path) close to Ramana Eye hospital tel. 9047605036 -- but I have not been here personally.

   Delete
  2. Thanks for replying . just trying to find based on http://siththanarul.blogspot.ca/2012/04/67_05.html .
   I will pass the info to my dad.

   Delete
 12. Sir, who is the "Vinayaka sithan" referred to here-- is it our Lord Ganesh or someone else? Thanks.

  ReplyDelete
 13. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
  kadamba vanam place -- Athri maharishi ashram or temple ??? where is it?

  Thanks!

  ReplyDelete
 14. Aiya avargalukku Vanakam pala

  Adiyen Thangarasan yendra naamam pala murai Agathiya Peruman Jeeva Nadi vaasippil kurippithu erunthathai ariven. Eruppinum uruthipadutha eyalaatha nilaiyil amaithi kaathu konden.

  Indru thaangale athanai uruthipaduthi ullir. Mikka nandri.

  Tavayogiyidam thodarpu kondulla yennai pol palarukkum indru perum aanandhamum magilchiyum alithullirgal. Nandri aiya.

  Shanmugam Avadaiyappa
  Malaysia

  ReplyDelete
  Replies
  1. Vanakam ayya ,

   pathivukku nandri ... mikka mazhichi ...
   Naanum Kallaril ulla Tavayogi Thangarasan Adigalidam , aasigalai petrullein yenbathil aanantham adaikirein .. Yellam yem APPAN Agathiyarin seyal ...
   Unggalin aduthu aduthu varum pathivugalai padikke kaatthirukkirein ...
   Om Agatheesaaye Nama ..

   G.K. Bala Chandran ,
   Malaysia

   Delete
 15. Dear Sir, last sunday our group did uzhavarappani at Thaanthondreeswarar Temple at Perumperkandigai, near Acharapakkam. This temple is believed to be more than 5000 year old. It is one of the 17 places where Sage Agasthiyar got the Celestial Darshan of Shiva-Parvathi marriage.

  Within the temple complex is a big tree (திருவாத்தி மரம் ) under which Sage Agasthiyar got the Darshan. இந்த மரத்தைச்சுற்றி சதுர வடிவில் மேடை அமைக்கப்பட்டு நான்கு புறமும் நந்தியம்பெருமான் திரு உருவச்சிலை அமைந்துள்ளது.

  The temple archakar told us that the four Nandhis represent the Sanakaathi Munivargal. The tree itself is very old and is believed to be more than 5000 years old, like the temple.

  About 50 metres directly opposite this tree, there is a small structure, where there is big image of Agasthiya Maharishi. This image is made of wood( அத்தி மரம்) and beautifully painted in gold.

  Ganapathi Subrmaniyam

  ReplyDelete
 16. Sir, Kindly tell me that any JEEVA NADI, in and around Madurai & Rajapalayam. Please Reply.

  ReplyDelete
 17. இவை எல்லாம் எந்த வருடத்தில் நடந்த அனுபவங்கள்?????

  ReplyDelete
 18. Naadi was read in 2009 and the incidents happened during several years.

  ReplyDelete
 19. Ayya,

  i had prayers example i will pray thirupathi venkatachalapathi that i will put kaanikkai if i will cure from particular problem.After that if i will remember that i have to fulfill my kaanikai but if i forget what vaenduthal.what shall i do ayya? sorry ayya i should not forget but happened to so many Gods like bannaari amman,aadhi seshan.please forgive me and give the solution.so that i will correct my mistakes.

  thanks Ayya.

  ReplyDelete
 20. ஐயா வணக்கம்.

  தமிழ்நாட்டில்,எனக்கு தெரிந்து நிறைய அகத்தியர் ஆஸ்ரமம் உள்ளது..இதன் காரணம் என்ன???
  இவற்றில் எங்கு எந்த ஆஸ்ரமத்தில்அகத்தியர் நடமாட்டம் உள்ளது???
  அகத்தியர்க்கு நிறைய அவதாரம உள்ளதா???

  ReplyDelete
 21. Actually, God never expects anything from us. He accepts, our offerings to know that we, as his children are keeping our words as we prayed. Thats why Sri Ramar became famous for his promise and his words. Praying at times of difficulty and forgetting on overcoming the same are human tendency. Try to elevate yourself from being an ordinary human being to an uplifted, realised soul. For that one has to keep his words. Start with doing small good things to others. Naturally, you will be able to keep your words. Instead of offering money and tonsure at the first instance, try to coverup with good deeds to others. In time you will see that you might have done a lot of things than an offering, which you usually do.

  ReplyDelete
 22. mikka nandri Ayya.

  Om Agasthiyar potri potri...Agasthiyar paatha kamalangal potri.

  ReplyDelete
 23. Om Agathesaya namana. Dr. Ravi kumar from USA He is building a small temple for AGATHIYA PERUMAN AND LOBAMUTHRA ANNAI at Kalyana thertham near Papanasam.(Thirunelveli DT). He is going to do Ganapathy homam and Sutharsana homam at coming FEB-15th at kalyana thertham. Every body can send their name and natchathiram for sangalpam he said. It is a free service. Please help to spread the word around the world sir. His web site is http://sriagathiyarlopamudratemple.com/index.html
  Then please click the homam icon on the right side. ( Please put this one on your web site sir. Thank you) Valli

  ReplyDelete
 24. Please put the flyer on the front page of your web site sir. The flyer link follows:
  http://www.sriagathiyarlopamudratemple.com/yagam.html#menu
  Thank you so much sir. Because many peoples not read the comments below the article. (so the chances are low). So please put the flyer at your front page Sir. Thank you so much. Valli

  ReplyDelete
 25. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete