எதிர்காலத்தில், எந்தன் கை பிடிக்க ஒரு நாயகி வரவில்லையே என்ற கவலையும் உண்டு. இன்னவன் குடும்பத்திலே, ஒரு மிகப் பெரிய பிரம்மஹத்தி தோஷம் உண்டு. அதுமட்டுமல்ல, அன்னவன் குடும்பத்தை சேர்ந்த பலர் என்ன பண்ணியிருக்கிறார்கள் என்றால், முன் ஜென்மத்தில் ஜமீன்தாராக இருந்தவர்கள் என்று ஏற்கனவே சொன்னேன். ஜமீந்தார் காலத்துக்கு முற்காலத்தில், ஏறத்தாழ 333 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மலையும், மலையை சார்ந்து இருந்த இடங்களையும் ஆண்டுகொண்டிருந்த காலத்திலே, தெரிந்தோ, தெரியாமலோ செய்த பிழை ஒன்று உண்டு. ஐந்து சிறுவர்களை, கண்ணை கட்டிவிட்டு, மலையிலே இருந்து கீழே தள்ளி, கருவேலங் குச்சியால், அவர்கள் கண்ணை குத்தி வேடிக்கை பார்த்த நிகழ்ச்சி ஒன்று உண்டு. அப்பொழுதே அகத்தியன் நினைத்தேன், இன்னவனுக்கு தந்தைக்கு, தந்தைக்கு, தந்தை; அன்னவன் அகத்தியன் நாடியை நாடி வந்த பொழுது, அப்பொழுது சொன்னேன் "உன் குடும்பத்தில் ஆங்கொரு பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது. அந்த தோஷத்தை நிவர்த்திக்க, நீ ஏகுக ராமேஸ்வரம் என்று சொன்னேன். ராமேஸ்வரம் சென்று அன்றைக்கே ஒரு தில தர்ப்பணம் செய்துவிட்டு வந்திருந்தால், இவன் குடும்பத்தில் நேத்ர தோஷம் ஏற்பட்டிருக்காது. நேத்ரம் என்றால் கண், தோஷம் என்றால் கண் பார்வை இல்லாத நிலமை. ஆனால், இதற்கு அவன் காரணமல்ல, அவன் தந்தைக்கு, தந்தைக்கு, தந்தை செய்துவிட்ட மிகப் பெரிய குற்றமே காரணமாகும். இப்பொழுதும் பழுது ஒன்றுமில்லை, அதற்கான மூலிகை ஒன்று இங்கே இருக்கிறது. நேத்ரா தோஷ நிவாரணி என்று ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டேன். அதை விட பன்மடங்கு உள்ள செடி, இப்பொழுது தான் முளைத்திருக்கிறது. அதையும் பார்த்துவிட்டுத்தான், அதையும் உனக்கு சொல்லவேண்டும் என்பதற்காகத்தான், அகத்தியன் உன்னை இங்கு அழைத்தேன். இல்லை என்றால், அகத்தியன் இந்நேரம் மலையை சுற்றி வந்து கொண்டிருக்கிற நேரம். யாருக்கும் வாக்குரைக்க மாட்டேன் என்று சொன்ன நேரம். ராகுவின் நேரமானதால், நல்லது வேண்டாம் என, மங்களமான விஷயம் வேண்டாம் என்று சொன்னேன். இப்பொழுது ராகுவே மனமுகுந்து போனதால், அன்னவன் துணை கொண்டுதான் அகத்தியன் நான் இதை செப்புகிறேன். ஆகவே அன்னவன் ஒன்று செய்யட்டும். இங்கிருந்து, ஏற்கனவே சொன்னேனே, 42 காத தூரத்தில், ஒரு அருமையான செடி ஒன்று பூத்திருக்கிறது. அதற்கு, நேத்ர தோஷ நிவாரணி என்று பெயர். சிவபெருமானின் முக்கண்ணை போலவே அந்த செடி இருக்கும். மொத்தமே 9 செடிகள், 9 இலைகள் இருக்கும். அதன் அடியிலே, வேரிலிருந்து ஒரு ஒளி வட்டம் கீழிருந்து மேலே சென்று கொண்டிருக்கும். நள்ளிரவு நேரத்தில் தான் பறிக்க முடியும், ஆனால் தக்க பாதுகாப்புடன் தான் செல்ல வேண்டும். அந்த நேத்ர தோஷ நிவாரணி என்று சொல்லுகின்ற அந்தச் செடி, மற்ற செடிகளுக்கு வெளிச்சத்தை காட்டுவது போல் இருக்கும். எந்த வித கருவியும் கொண்டு செல்லாமல், எந்த வித ஒளி உமிழும் கருவியும் கொண்டு செல்லாமல், நடை பாதையிலிருந்து அங்கிருந்து 12 காத தூரம் சென்றால், நடு மட்டத்தில், நந்தவனத்தில், கரும் துளசிக்கு பக்கத்தில் அந்த ஒளி படரும் செடி முளைத்திருக்கிறது. அது ஒரு மூலிகை செடி. தள்ளி நின்று கண்டால் தெரியும். பூமியிலிருந்து ஒளிவட்டம் அதன் இலைக்கும் செடிக்கும் போய் கொண்டிருக்கும். அது பின்னால் 12 ஆண்டுகள் கழித்து மாமரமாக மாறும். ஆனால் அது மாமரமாக மாறும் வரை அந்த செடியை வைத்திருப்பார்களோ, வெட்டிவிடுவார்களோ, அகத்தியன் யாம் அறியேன். ஆனால் இன்றைய தினம் அந்த செடி பூத்திருக்கிறது. அங்கு சென்று அந்த செடி இலையை, தைரியமாக பறித்து வரலாம்.
அதை பறித்து விளக்கெண்ணையை வைத்து, ஆமணக்கு எண்ணை என்று அதற்கு பெயர், ஆமணக்கு எண்ணயில் அந்த செடியின் சாற்றை பிழிந்து வேப்பமர பொந்திலே அதை வைத்து, அடைகாத்து, 32 நாள் கழித்து, அந்த சாற்றை எடுத்து, ஒளி இழந்த அந்த குழந்தை, நபர்களுக்கெல்லாம் இரவில் நடுநிசி நேரத்தில், 12 மணியிலிருந்து 2 மணிக்குள் அந்த காலம் மூன்றாம் ஜாமத்தில், ஒரு சொட்டு, 2 சொட்டு என்று ரெண்டு பக்கம் விட்டு வந்தால், எந்த மருத்துவரினாலும் சாதிக்க முடியாத அந்த சாதனையை, அந்த மூலிகை செடி சாதிக்கும். அந்த செடியை நட்டவர் "போகனடா". ஆகவே, போகன் நட்ட முதல் செடி அது தான். அவன் உச்சந்தலயிலிருந்து உள்ளங்கால் வரை என்றுதான் எழுதியிருக்கிறான். அதை இப்பொழுது சற்று புரட்டிப் பார்த்தேன். போகனிடம் ஏற்கனவே அனுமதி வாங்கிவிட்டதால், அகத்தியனே போகன் சார்பாக பேசுகிறேன். போகன் நட்ட முதல் செடி அதுதான். ஆனால் 24 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அந்த செடி பூக்கும், காய்க்கும். அதன் பூவுக்கு வாசனை இருக்காது. நெருங்கி போனால், சந்தன வாசனையும், மகிழம்பூ வாசனையும் அடிக்கும். மகிழம் பூ இருந்தாலே, அங்கே பாம்புகள் அதிகம் வரக்கூடிய இடமடா. அந்த வாசனைக்கு ஆசைப்பட்டு வரும். ஆகவே, அங்கு சில அற்புதமான நாகங்களை பார்க்கலாம். அது எதுவும் செய்யாது, யாரையும் கடிக்காது. அந்த அற்புதமான நாகத்தை பார்த்துவிட்டால், ஆதி சேஷனை நேரடியாக பார்த்த புண்ணியம் கிடைக்கும். எந்த வித தொல்லையும் இல்லாமல் சுருண்டு ஓரத்தில் படுத்துக் கிடக்கும். ஆனால் அதிலும் ஒரு ஒளி இருக்கும். அதன் பின் புறத்தில் நாமங்களில் பார்த்திருப்பாய், மூன்று வகை நாமங்கள் வரிசையாக இருக்கும். மேலே நடுவே, கீழே என்று மூன்று வகை நாமங்கள் அந்த பாம்புக்கு உண்டு. இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால், அப்படிப்பட்ட பாம்புகள், ஒருவேளை, நடமாடி, நம்பி கோவிலுக்கு வரலாம். தரிசனம் செய்வதற்காக. யாரையும் கடிக்காது. ஆனால் கடுமையான விஷம் கொண்டவை. அந்த நாகப் பாம்புகள், அந்த மரத்தை சுற்றி இருப்பதால், அந்த இலையின் ஒளிவட்டம் கூட அந்தக் கண்ணுக்கு தெரியும். அந்த செடியின் இலையை பறித்து, விளக்கெண்ணை, ஆமணக்கெண்ணையில் ஊறப்போட்டு, சாறு பிழிந்து வேப்ப மரத்துப் பொந்துக்குள் வைத்துவிட்டு, 32 நாட்கள் கழித்து எடுத்து வந்து, அதை ரெண்டு சொட்டு கண்ணிலே விட்டால், இழந்த பார்வை பெறலாம் என்று சற்று முன் சொன்னேன். அது எந்த மருத்துவத்திலும், தற்கால மருத்துவர்கள் அல்ல, எக்கால மருத்துவனாலும் சாதிக்க முடியாத சாதனயடா. அதையும் முடிந்தால், ஏன் என்றால் சற்றுமுன் அகத்தியன் இங்கு வந்து அமர்ந்த பொழுது, பழைய ஓலைச் சுவடியை புரட்டிப் பார்த்து, நல்லதொரு ஜமீந்தார் குடும்பத்தை சேர்ந்தவன், நாலு திக்கும் கொடி கட்டி பறந்தவன், மலை பாங்கு அரசனாக வாழ்ந்தவன், ஏகப்பட்ட மூலிகைகளை பயிரிட்டு அப்பொழுதே நிறைய கொடுத்தவன். அந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்பதாலும், இவன் மூதாதையர்கள் செய்த தவறால் தான் அங்கு நான்கு பேர்கள் விழியை இழந்து நிற்கின்ற காட்ச்சியை அகத்தியன் யான் கண்டேன். அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்றுதான் அகத்தியன் விரும்பினேன்.
ஏற்கனவே, முன்பு உரைத்தேன். யாருக்காவது, எதற்காவது அகத்தியன் மேல் பற்று கொண்ட அனைவருக்கும் ஏதேனும் ஒரு நன்றி கடன் செய்யவேண்டும் என்று அகத்தியன் ஆசைப் பட்டேன் என்று சொன்னேன் அல்லவா! அப்பொழுது இது ஒன்று விட்டுவிட்டது. ஏன் என்றால் இது மிக மிக முக்கியம். வாழ்க்கையிலே ஒளி ஏற்றிய புண்ணியம் என்று இதைத்தான் சொல்லுவார்கள். விளக்கு வைத்து ஒளி ஏற்றுவது என்பது ஒரு பக்கம். வாழ்க்கையில் ஒளி ஏற்றுவது என்பது மறுபக்கம். ஆனால் இவர்களுக்கு கண்ணிலே ஒளி இல்லை, வாழ்க்கை இல்லை. கண்ணிலாமல் வாழ்க்கை இருந்து விட்டால், மிகப் பெரிய கொடுமை. அந்த கொடுமையை அனுபவித்த எத்தனையோ பேர்களை காப்பாற்றி இருக்கிறேன்.
எனக்கொரு யோசனை சற்று முன் தான் தோன்றிற்று. இல்லை என்றால் அகத்தியன் இத்தனை தூரம் வாய் திறந்து பேசியிருக்க மாட்டேன். மௌனமாக் உலா வந்து கொண்டிருப்பேன். 9 சித்தர்களை வைத்து உங்களை காக்க வைத்துவிட்டேன். ஆகவே அஞ்சிட வேண்டாம்.
சற்று முன் சொன்னேனே, ஆங்கொரு தங்கத்துக்கு மன்னனாக இருக்கிறவன், நீ இருக்கிறாய், அகத்தியன் இருக்கிறாய் என்று, அந்த வார்த்தை அகத்தியனுக்கு புளங்காகிதமாயிற்றடா. என்ன நம்பிக்கை உனக்கு அகத்தியன் மேல்? எப்படிப்பட்ட நம்பிக்கையை அசையாமல் வைத்திருக்கிறான். எத்தனை காரியங்களை படிப்படியாக செய்கிறான் என்பதை எல்லாம் பார்க்கும் போது இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை அகத்தியன் வைத்திருக்கிறேன் என்று அகத்தியனே ஒருமுறை மாரை தட்டிக் கொள்கிறேனடா. அகத்தியன் தன் நிலை விட்டு இறங்கக் கூடாது. அவன் 4000 ஆண்டு முனிவன், அவன் பற்று பாசம் எல்லாம் தாண்டி நிற்கிறவன் என்றாலும் கூட, லோபா முத்திரையை பக்கத்தில் வைத்துக்கொண்டு அகத்தியன் பற்று பாசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கலாம். லோபாமுத்திரை என்பது காவிரி தான். காவிரிதான் என்னிடம் 6 மாதம் காவிரியாகவும், 6 மாதம் லோபா முத்திரையாகவும் இருக்கிறாள். 6 மாதம் தாமிர பரணி நதியாகவே இருக்கிறாள். ஆக, தாமிரபரணி நதியைத்தான் அகத்தியன் அருகிலே வைத்துக் கொண்டு இருக்கிறேனடா! இல்லை என்றால், எந்த மாநிலத்துக்கும், எந்த ஊருக்கும் கிடைக்காத சிறப்பு, தாமிரபரணிக்கு கிடைக்குமா? ஆகவே, லோபா முத்திரையை வணங்கினால், தாமிரபரணியை வணங்கியது போல் ஆகும். லோபமுத்திரையை நான் நினைத்தால், தாமிர பரணியே உனக்கு வந்து அபிஷேகம் செய்தது போல் ஆகும். லோபமுத்திரையை வணங்கினால், காவிரி நதியே வந்து உன்னை கட்டியணைத்து, தாயாக முத்தமிட்டு, நெஞ்சில் தடவி கொடுத்து, பூ வாரி பொட்டுவைத்து, உன்னை கை தூக்கி அணைத்து செல்வதைப் போலவே எண்ணலாம். அத்தனை பாசமும், பண்பும் அகத்தியன் வைத்திருக்கிறேனடா! அகத்தியன் ஒரு பிரம்மச்சாரி, அகத்தியனுக்கு மனைவி என்பது கிடையாது. ஆனால் தனிப்பட்ட ஒரு முனிவன் ஒரு வீட்டில் இருந்துவிட்டால், அதை தோஷம் என்று சொல்வார்களே என்பதற்காகத்தான், இதையெல்லாம் மானிடர்கள் பிற்காலத்தில் ஏற்படுத்துவார்கள், அதில் அகத்தியன் பெயரும் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ,அகத்தியனே லோபாமுத்திரை என்கிற பெயரை உண்டாக்கி, அதில் காவிரியையும், தாமிர பரணியையும் கலக்கச் செய்திருக்கிறேன்.
இப்போது கூட, இந்த நதி நீரை ஒரு வாரம் என்ன, ஒரு மாதம் வைத்திருந்தால் கூட கெட்டுவிடாது. அப்படிப்பட்ட புண்ணியநதி அது. அப்படிப்பட்ட தாமிரபரணி, தன் நீரிலேயே தானே குளிக்க ஆசைப்பட்டாள். அப்படி ஆசைப்பட்ட அவள், ஆனந்தமாக மலை உச்சியிலிருந்து இறங்கி, ஆனந்தமாக நீச்சல் அடித்துக் கொண்டு வருகிறாள். அப்படி வருகின்ற நேரத்தில் தான், என் எதிரே, இடது பக்கத்தில் இருக்கின்ற அந்த தங்கராசும் அவன் நண்பர்களும் நீராடி விட்டு வந்திருக்கிறார்கள். ஆகவே, தாமிரபரணியே, இவனை வாழ்த்தி நீராடிவிட்டு சென்று இருக்கிறது. அது என்பது மிகப் பெரிய புண்ணியம். அந்த புண்ணியத்தை சற்று முன்புதான் பெற்றார்கள் என்பதால், அதை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அவனையும் வரச்சொன்னேன். ஏன் என்றால், இவர்கள் நீராடியது வெறும் நீர் வீழ்ச்சி அல்ல. அவசரப் பட்டு குளித்ததாக எண்ண வேண்டாம். இந்த நேரத்தில் தான் தாமிரபரணி, மலை உச்சியிலிருந்து மெதுவாக, அமைதியாக இறங்கி வந்து, இரு பக்கமும் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, தன் இருகையால் தண்ணீரை எடுத்து தெளித்துவிட்டு வந்த நேரம். அப்படி தெளிக்கும் போதுதான் இவர்கள் இருவரும் நீராடினார்கள். ஆகவே, அந்த நீராடிய தன்மை, தாமிரபரணியே இவர்களுக்கு நீராடி வைத்திருக்கிறது என்பது மிகப் பெரிய புண்ணியம். இனி இவர்கள் எத்தனை காலம், ஆண்டுகள், இந்த மலையில் நடந்தாலும், இத்தகு அதிசயங்களைப் பெறப் போகிறார்கள். இங்கு அகத்தியன் சொன்னது கூட, சற்றுமுன் நடந்த அதிசயத்தைத்தான் சொல்லியிருக்கிறேன். இன்னும் பல அதிசயங்கள், அவர்கள் காணப் போகிறார்கள்.
சித்தன் அருள்.......... தொடரும்
ஓம் அஹத்தீசாய போற்றி
ReplyDeleteOm Agatheesaya Namaha
ReplyDeleteOm Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Vanakkam Ayya...
ReplyDeleteThanks for uploading Ayyan Agathiyar Arul. Could you please give the address of anybody seeing jeevanaadi now.
Thanks
@ Kallar Agathiyar Asramam. Full address available in "Siththan Arul" blog itself.
Deletejai sarguru OM Agathesaya Namaha
ReplyDeleteThank you ayya,
ReplyDeleteThanks for the information you had given immediately.i have one more question..now thiru.ganeshan avargal in thanjavur is seeing jeevanaadi.please clear my doubt ayya.
thanks
He will be seeing Jeevanadi only after Vaikasi Ammavasai 2014.
Delete"முக்கிய அறிவிப்பு
அன்பர்களுக்கு, ஜெ. கணேசனின் பணிவான வணக்கங்கள்.
சமீபத்தில் குருநாதர் அருளிய வாக்கின்படி, எதிர்வரும் வைகாசிக்குப் (June 2014) பிறகே வாக்கு என்று தெரிய வருகிறது. இதை அன்பர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்
இப்படிக்கு
ஜெ.கணேசன்."
Thank you bala sir for your valuable information.
ReplyDeleteOm Agasthiyarae potri potri...
thanks
ஐயா வணக்கம்,
ReplyDeleteஇது தங்களுடைய அனுபவாமா???அல்லது வேற ஒரு ஜீவ நாடி ஜோதிடரின் அனுபவத்தை ஏழுதுகிரிர்களா???வேற ஒருவர் என்றால் ,அவரை பற்றி இங்கு தெரிவிக்கவும்..நன்றி