​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 23 January 2014

சித்தன் அருள் - 160 - சித்தர்கள் பார்வையின் தன்மை, சித்தத்தனமை கைவல்யமாக!

ஏன் என்றால் இவர்கள் இருவருக்குமே பிற்காலத்தில் சித்தநிலை வரப் போகிறது. சித்தநிலை என்பது பற்றற்ற நிலை மட்டுமல்ல, இவர்கள் எதை வேணுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்த தப்பும் செய்யலாம், ஆனால் அவர்களுக்கு மனிப்பு உடனே கிடைக்கும். வார்த்தைகளை கொட்டலாம், கோபப்படலாம், ஆத்திரப் படலாம், மன்னிப்பு உடனே கிடைக்கும். அவர்கள் கோபப்பட்டு பேசமாட்டார்கள், ஏன் என்றால், அவர்கள் செய்கின்ற சரியான பணிவிடை எல்லாரையுமே மயக்க வைக்கிறது. ஒருவன் அன்னதானம் ஒருநாள் செய்தால் போதும். ஓராண்டு காலம் அதிகமாக வாழ்வான் என்பது முறை. இவர்களோ, எதையும் எதிர்பார்க்காமல், கடுமையான உழைப்பினால் அன்னதானம் செய்துகொண்டு வருகிறார்கள். ஆங்கொரு விநாயக சித்தனுக்கே இவர்கள் அடி பணிந்திருக்கிறார்கள். விநாயகன் என்பது யார்? கேது தானே. கேது தானே ஞானகாரகன். ஞானத்தின் அடியில் இருப்பவனுக்கு ஞானம் கிடைக்காமல் போகுமா? ஆகவே பற்றற்ற நிலையில் கொண்டு விடுவதற்கல்ல. ஞானத்தை உண்டு பண்ணப் போவதால் தான், இன்னும் மூன்று ஆண்டுகளில் இவர்கள் நிலை மாறப்போகிறது. மிக உயர்ந்த உச்சாணிக் கொம்பிலே இருக்கப் போகிறார்கள். இன்றைக்கு பார்க்கின்ற இவர்கள் நிலைக்கும், இன்னும் மூன்று ஆண்டுகள் கழிந்து பார்க்கின்ற நிலைக்கும் வித்யாசம் இருக்குமடா! அற்புதமான மாற்றங்கள் மனதிலே ஏற்படப்போகிறது. இன்னும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அருமையான சேவை செய்து, உலகத்தில் யாருக்கும் கிடைக்காத சில புண்ணியங்களை எல்லாம் இவர்கள் பெறப் போகிறார்கள். அந்த நல்லதொரு செய்தியையும் இவர்களுக்கு சொல்லவேண்டும் என்று சொல்லி;

இப்பொழுது புளியமரத்துக்குப் பக்கத்திலிருந்து சித்தர்கள் விலகிக் கொண்டிருக்கிறாற்களடா! இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பார்த்தால், பூச்சி சத்தம் போடுவது போல் கேட்க்கும். சித்தர்கள் அங்கே நடமாடுவதையும், அவர்கள் குரல் எழுப்புவதையும் இவர்கள் கேட்கலாம். சற்று கூர்ந்து கவனித்தால் தெரியும், பக்கத்தில் நின்று பார்க்கவேண்டாம். அவர்களை சுந்தந்திரமாக விட்டுவிடவேண்டும். இங்கிருந்து பார்த்தாலே தெரியும். அவர்கள் சப்தம் காதிலே கேட்கும். பட்சிகள் சப்தம் போல கேட்கும். அவர்கள் மொழியே அப்படிப்பட்டதுதான். ஆகவே சித்தர்கள் இங்கு நடமாடிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, சித்தர்கள் காக்கிறார்கள், ஒருவேளை சித்தர்கள் தரிசனம் கூட, இன்றைக்கு முழித்திருந்தால், மூன்றாவது ஜாமத்திலே கிடைக்கலாம்.

வானத்தை நோக்கி பார்த்தான் அகத்தியன் மைந்தன். மின்மினிப் பூச்சிபோல் ஒரு நட்சத்திரமும் தெரியவில்லையே, ஏனடா ஒரு காட்சி கூட கொடுக்கவில்லை என்று அகத்தியனை கடிந்துகொண்டே வந்தான். அவனுக்கும் சொல்லுகிறேன், நீ அவசரப்படுகிறாய், நினைத்தபோது காட்சி கொடுப்பதற்கு, நீ மகானாவதர்க்கு, இன்னும் தகுதி வேண்டும். அகத்தியனோடு 50 ஆண்டுகாலமாக இருந்தால் மட்டும் நீ பெரியவனாகிவிட மாட்டாய். நிந்தன் நாவில் நான் இருக்கிறேன். கூறு போட்டு பார் என்று சொன்னேன். அது மற்றவர்களுக்கு. நீயே இங்கு வந்து ரெண்டு தவறு செய்துவிட்டாய், காலையிலும், மாலையிலும். நீ அப்படி எண்ணாதே. உனக்கு காட்சி கிடைக்கவில்லை என்றால் அகத்தியனை ஏன் பழி சுமத்துகிறாய்? அகத்தியன் கையில் இருப்பதாலோ, போகன் பையில் இருப்பதாலோ, சித்தர்கள் வானிலே தோன்ற மாட்டார்கள். அதே சமயத்தில் இந்த கேள்வியை எதிர் பார்ப்பாயோ? சதுரகிரி மலையில் நின்று கேட்டிருந்தால், இன்றைக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் சித்தர்களை உனக்கு அடையாளம் காட்டியிருப்பேன். உன் கண் முன்னால் நிமிர்ந்து பார்த்தால், வானத்தில் நட்சத்திரக் கூட்டம் அங்கே தொங்கிக் கொண்டு இருக்கிறதடா! எல்லா சித்தர்களும் இன்றைக்கு சதுரகிரியில் கூடியிருக்கிறார்கள். ஏன் என்றால், அகத்தியன் நான் அங்கிருந்து தானே இப்பொழுது பேசுகிறேன். இங்கிருந்து பேசவில்லையே. நான் உலா வருவேன் என்று சொன்னேன். இப்பொழுது சதுரகிரியிலிருந்து பேசுகிறேன். ஆகவே நட்ச்சத்திரக் கூட்டம் அங்கே இருக்கிறது. இன்றைக்கு நட்ச்சத்திர கூட்டம் இங்கு வராது. ஆகவே, இது கால சூழ்நிலை. வருண பகவானின் காலம் இது. அவன் எப்பொழுது வேண்டுமானாலும் தன் ஆட்சியை நிலை நிறுத்துவதற்காகவோ, இந்த பூமி செழிப்பதற்காகவோ, இந்த மலையும், மலையை சார்ந்த இடங்கள் நல்லபடியாக இருப்பதற்காகவோ, இந்த மலையை சூழ்ந்திருக்கும் நல்ல உள்ளங்கள், நீண்ட காலமாய் வாழ வேண்டும் என்பதற்காகவோ, அவர் வருண பகவான், அப்பொழுது ஒன்றிரண்டு துளியை தெளிக்கத்தான் செய்வார். அதை பன்னீராக எடுத்துக் கொள். மறந்து விடாதே. ஆகவே இந்த மலையில் அந்த அதிசயம் நடக்கும். ஆகவே முடிந்தால் பாருங்கள். முடியவில்லை என்றால் அகத்தியனை பழிக்காதீர்கள். இது சித்தர்கள் வெளியே வருகிற நேரம். அந்த புளிய மரத்துக்குக் கீழே, 422 அடிக்குக் கீழே, 16 சித்தர்கள் அமர்ந்திருக்கிறார்கள் இன்றைக்கு. அந்த 16 சித்தர்களும் வருவார்களா? என்று தெரியாது. ஆனால் சில குறிப்பிட்ட சித்தர்கள் வந்து எட்டிப் பார்ப்பார்கள். ஏன் என்றால், அகத்தியனே இங்கு வந்து அபிஷேகம் செய்துவிட்டு போனதால், அகமகிழ்ந்து போன அவர்கள், இரவு நேரத்தில் வந்து எட்டிப் பார்க்க கூடும். ஆக வழிப் பாதையில், படிக்கட்டில் யாரும் படுக்க வேண்டாம். ஓரத்திலே சென்று ஒதுங்கி அமர்ந்து படுங்கள். அவர்கள் வந்து போவது கூட அருமையான வாசனையாகத் தெரியும். ஆக உணவில் கூட, இப்பொழுது சாப்பிடுகின்ற உணவில் மீதம் இருந்தால், அதில் கூட அந்த சுவை கிடைக்கும். ஆகவே, அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வந்து எட்டிப் பார்க்கலாம். தண்ணீர் இருந்தால் கூட அதுவே சுவையாக மாறும். ஏதோ ஒன்றை தொட்டு ஆசிர்வாதம் பண்ணலாம். அல்லது அவர்களே, வாய் வைத்து அருந்திவிட்டு, மீதம் வைத்து விட்டுப் போகலாம். ஆகவே குடிக்கின்ற நீரில் கூட சில சுவை இருக்கும். ஏதேனும் உணவுப் பொருள் மிச்சம் மீதி இருந்தால், அதை இப்பொழுது சாப்பிடுவதற்கும், இன்னும் மூன்று நாழிகை கழித்து, மூன்றாவது ஜாமத்துக்குப் பிறகு, நான்காவது ஜாமத்தில் தொட்டுப் பார்த்தால், அந்த வாசனை தெரியும். தெரியாவிட்டால் அகத்தியனை பழிக்காதே. அவர்கள் வருவார்கள் என்று சமிக்ச்சை தெரிந்தது. சமிக்சையின் அடிப்படையில் தான் இதைச் சொல்லுகிறேன். 

​​
அருமையான இடம். ஆனந்தமான இடம், யாருக்கும் கிடைக்காத பாக்கியம்.  ஆகவே, இங்குள்ள அத்தனை பேர்களுமே, ஒரு காலத்தில் அண்ணன் தம்பியாக இருந்தவர்கள் தான். விட்டுவிட்டு போகவில்லை, இல்லை என்றால் ஒன்று சேர மாட்டார்கள். ஒவ்வொரு ஜென்மத்திலும் அண்ணன் தம்பி தொடர்பு உண்டு. ஒருவருக்கொருவர் குடுத்து வாங்கியது உண்டு. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, கை கோர்த்து இந்த மலையை சுற்றி வந்ததெல்லாம் உண்டு. ஏன் என்றால் இவர்கள் அத்தனை பேர்களுமே, சித்தத்தன்மை அடைந்தவர்கள். சித்தத்தன்மை என்றால் என்ன என்று கேட்காதே. உன் நிலையை தாண்டிவிட்டு உயர்ந்த நிலையில் இருக்கலாம். தியானம் செய்துதான் ஒருவன் சித்தத்தன்மை அடையவேண்டும் என்று கட்டாயம் இல்லை. எவன் ஒருவன் மானசீகமாக எந்த கடவுளை நோக்கியோ, அல்லது எந்த சித்தனை நோக்கி வணங்கினாலே, அவன் சித்தத்தன்மை பெற்று விடுவான். இந்த மலைக்கு மட்டும் அந்த சிறப்பு. வேறு எந்த மலைக்கும் அந்த சிறப்பு கிடையாது. இல்லை என்றால், வைணவக் கோவிலிலே, சித்தன் தரிசனம் கிடைக்குமா? யோசித்துப் பார்த்தால், எத்தனையோ உண்மைகள் இருக்கிறது. அதைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம். எப்படி சித்தர்கள் இங்கு வந்து தங்கினார்கள், வைணவத்துக்கும், சித்தத்தன்மைக்கும் என்ன தொடர்பு? சித்தன் என்றால் முக்கண்ணனுக்கு சேர்ந்தவர்கள் தானே, எப்படி வந்தார்கள் என்று கேட்கலாம். அதற்கு ஒரு விடையை, காலையிலேயே, சற்று முன் சொன்னேன். அகத்தியன் ஆங்கொரு நம்பி பெருமானுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருக்கும் போது, அங்கு முக்கண்ணன் வந்தான் என்று சொன்னேன். முக்கண்ணன் வர வேண்டிய இடம் என்பதால், முக்கண்ணன் வந்தால் சித்தர்களும் வர வேண்டியது தானே. முக்கண்ணன் அடிக்கடி வந்து போய கொண்டிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு வைகாசி விசாகத்திலும், ஆடி கிருத்திகையிலும், அமாவாசை நேரத்திலும், இரவு நேரத்தில், அண்ணன் தம்பி போல ஒருவருக்கொருவர் கை கொடுத்துப் போவதுண்டு. அச்சமயத்தில் தான் ஆச்சரியமான சம்பவம் நடக்கும். திடீரென்று மிருங்கங்கள் பிளிரும். வானத்தில் திடீரென்று மின்னல் வீசும். திடீர் ஒளி ஒன்று தோன்றி மறையும். திடீரென்று, நீங்கள் பார்க்கின்ற அனைவருக்குமே, உடம்பில் ஒளி புகுந்தது போல் தோன்றும். இது ப்ரம்மையினாலோ, பிரமிப்பினாலோ அல்லது ஏதோ அதிர்ச்சியினாலோ தோன்றுவது அல்ல. நின்று கொண்டிருக்கிற உங்கள் உடம்பிலேயே, ஏதோ ஒளி வந்து பாய்ந்து தடவிக் கொடுத்துவிட்டு செல்வது போல் தோன்றும். அது இன்றைக்கு கூட நடக்கலாம். எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம். எந்த நேரத்திலும் நடக்கலாம். எல்லோருக்கும் நடந்திருக்கலாம். அவர்கள் எல்லாம் அருள் வாக்கு பெற்றவர்கள். அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக சித்தத்தன்மை அடைந்தவர்கள். அதற்குத்தான் சொன்னேன். சித்தன் என்பது கண்ணை மூடிக்கொண்டு, தவம் புரிந்து, காலாகாலமாக உடம்பை வருத்திக் கொண்டு அடைவதல்ல சித்தநிலைமை. சித்தன் என்பது, எவன் ஒருவன் ஆத்மார்த்தமாக, எந்த தெய்வத்தை நோக்கியோ, எந்த சித்தனை நோக்கியோ, எந்த மாமுனியை நோக்கியோ, எந்த நேரத்திலும், இரவானாலும், பகலானாலும், உடல் சுத்தம் இல்லாவிட்டாலும், மன சுத்தத்தோடு வணங்கினால், அவன் சித்தத் தன்மை அடைந்து விடுவான். 

சித்தன் அருள்............ தொடரும்!

15 comments:

 1. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

  ReplyDelete
 2. Karthi vanakkam puthiya thakaval arputham ahathumai adaiya sithan atul venduvom.ahtheesaya namaha.

  ReplyDelete
 3. Jai Sarguru OM Aagthisaya Namaha Agathiyar Thiruvadi Potri Potri Potri

  ReplyDelete
 4. சித்த தன்மை அடைவதை பற்றி அகத்திய பெருமான் ஏதேனும் சொல்லி இருக்கிறாரா? என்ற என் கேள்விக்கு இன்று விடை கொடுத்த எல்லாம் வல்ல அகத்திய பெருமானுக்கும், எழுதிய உங்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 6. ஓம் அகத்தீசாய நமஹ.

  கார்கோடகநல்லூரில் கடந்த நவம்பர் 14 அன்று வழிபட்டால் நல்லது என்று தெரிவித்தது போலவே எந்தெந்த நாள்/நாட்களி்ல் நம்பிமலை சென்று வழிபடலாம் என்றும் ஐயா அவர்கள் தெரிவித்தால் என்னைப் போன்றவர்களுக்கு மிக்க பயனுள்ளதாய் இருக்கும்

  ReplyDelete
 7. வணக்கம்!

  நல்ல எண்ணம் தான். ஒன்று, அகத்தியர் சொல்கிற நாள், நட்சத்திர, திதி, தமிழ் மாதம் இந்த வருடம் என்று வருகிறது என்று பார்த்து போகலாம். இரண்டு, முடிந்தவரை அந்த நல்ல நாள் வரும்போது, முயற்சி செய்து சொல்லப் பார்க்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள்.

  கார்த்திகேயன்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.

   Delete
 8. Thanks Ayya...

  Om Agatheesaaya Namaha.

  Ayya i need your help.Please pray Agasthiyar Ayyan to fulfill my prayer.I m praying too.Please do for me Ayya.
  Thanks.

  ReplyDelete
 9. hai siththanarul readers my name is murugan i am in chennai basically i am aghasthiyar ayya devotee i have nerve (narambu) related problem it makes lot of pain to my body and to my life shri kakabujanda maharishi suggest varmakalai treatment i don't no good vermakalai talented persion please help me i am expecting your valuable suggestions .murugan(mob:9952010561)

  ReplyDelete
 10. ஓம் அகத்தீசாய நமஹ.

  குருவின் உபதேசம் இல்லாமல் மந்திரங்கள் உச்சாடனம் செய்யக் கூடாது என்கிறார்களே, ஆதித்ய ஹிருதயம் மற்றும் காரிய சித்தி மாலை போன்றவற்றை நாமாகவே உச்சரித்து, வீட்டு பூஜையறையில் வழிபடலாமா? சில மந்திரங்களை நாமாகவே சொல்கிறோமே...( உதாரணம் - காயத்ரி மந்திரங்கள் )
  கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ஐயா.

  ReplyDelete
 11. Regarding aathithya hridayam see this link.

  http://siththanarul.blogspot.in/2011/08/blog-post_8319.html

  Regarding Mantras, I have only one opinion. If you get it through a Guru, the pronounciation will be sharp, along with his blessing. So it will form inside us very fast. It does not mean that one should not chant any mantra without Guru's upadesam. Even if one chant a mantra without upadesam, it will still protect the person. Except "artha Jaamam", one can chant any "sathveega mantra" any time of the day. Believe in that mantra and you can see the effect taking place immediately.

  Mantras create a vibration in our Body and keep the chakras in our Body perfect 24 x 7 to face any situation. Great souls found the apt words which will create the exact vibration within our body and named it as "Mantras"

  ReplyDelete