​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 9 January 2014

சித்தன் அருள் - 158 -நம்பிமலை - பொதிகை பயணம், 3 சித்தர்கள் வாக்கு, 9 சித்தர் ஆசி!


அங்கிருந்து 58வது காத தூரத்தில் ஒரு மலை உச்சியின் மேல் ஏறி அமர்ந்து தியானம் செய்தால் போதும். அன்றொரு நாள் தவசி பாறையில் (சதுரகிரியில்) ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு தன் எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும், இறந்தகாலத்தையும் பற்றிக் கேட்டான். தானாக அந்த பாறையில் இருந்து ஒரு ஒலி, அசரீரி கேட்க்கும். அந்த அசரீரி அவன் கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை பற்றி அத்தனையும் சொல்வதை சதுரகிரி மலையிலே கேட்கலாம். அதே போல இங்கே மலையின் உச்சியிலே, ஒரு பாறையில், தென்கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டால், ஆங்கொரு சித்தர்கள் மூன்று பேர்கள் அமர்ந்து கொண்டு, ஒருவன் நிகழ்காலத்தையும், ஒருவர் கடந்தகாலத்தையும், ஒருவர் எதிர்காலத்தையும் பற்றி கூறுவர். அந்த காட்ச்சியும், இங்கிருந்து 42 காத தூரத்தில் இருக்கிறது. புலிகளும், இன்னும் காட்டுப் பன்றிகளும், இன்னும் பல யானைக் கூட்டங்களும், மான்கள் கூட்டங்களும் நிறைய அங்கு உண்டடா. அவைகள் எல்லாம் அன்றாடம், எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டு, அவர்களே பல சித்தர்களாக மாறியிருப்பதெல்லாம் காணலாம்.

இன்னொரு அதிசயமான செய்தி, இங்கிருந்து பொதிகைக்கு செல்லுகின்ற நேரத்தில் ரெண்டு நாள் கழித்து, ஆங்கொரு தேன் கூடு இருக்கிறது. அந்த தேன் கூட்டுக்கு கீழே ஒரு சிறு பள்ளம் போகும். அந்த பள்ளத்தில் இறங்கிக் கொண்டால் அங்கு ஒரு குகை தெரியும். அந்த குகைக்கு தெற்குப் பக்கத்தில் திரும்பினால், ஒரு தீபம் மட்டும் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். யார் அந்த தீபத்தை ஏற்றினார், எப்பொழுது ஏற்றினார் என்று தெரியாது. ஆண்டாண்டுகாலமாக, ஆண்டு 1000 ஆண்டுகளாகவே, அந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட தீபத்தை வணங்கி வந்தால், அது தான் அகினியே. அக்னி தேவனே, தனக்குத்தானே, அங்கு வருபவர்களுக்கு எல்லாம் வழிகாட்டவும், யாருக்கு எந்த இடையூறும் இல்லாமல், நல்லதொரு வழியை காட்டவும், அந்த தீபம் எரிந்து கொண்டிருக்குமாம், பகல் நேரத்தில். இரவு நேரத்தில் அந்த வழியாக சென்றால், மின்மினிப் பூச்சிகள் போலவே, ஒரு 108 மின்மினிப் பூச்சிகள் இரவு, இருபக்கமும் சாரையாக நின்று, உங்களுக்கு நல்லதொரு வெளிச்சத்தைக் காட்டும். நல்லபடியாக பொதிகைக்கு செல்ல வைக்கும். இவ்வளவு அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக, அந்த மலை வழி செல்லுபவர்க்கெல்லாம் இந்த ஒரு காட்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், அகத்தியன் நான் இந்த வார்த்தைகளைச் சொல்லுகிறேன். நடந்ததை சொல்லுகிறேன். 

அது மட்டுமல்ல, இங்கிருந்து செல்பவர்கள், மிக மிகக் குறைவு. என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு காரியத்துக்காக, விசேஷத்துக்காகத்தான் செல்வது வழக்கம். அப்பொழுது, இதுவரை யாருமே, அந்த மலையிலிருந்து உருண்டு விழுந்ததாகவோ, தவறி விழுந்ததாகவோ, அகால மரணமுற்றதாகவோ இல்லை. அதுமட்டுமல்ல, அந்த அக்னி தீர்த்தத்தைச் சொன்னேனே, அக்னி தீர்த்தத்தை வணங்கிவிட்டு, அங்கிருக்கும் சித்தர்களை பட்டாம்பூச்சியாக ரசித்துவிட்டு, பிறகு, அக்னிதேவன் அங்கொரு நெய் விளக்காக எரிந்துகொண்டிருக்கிறானே, அங்கும் தரிசனம் செய்து வந்தால், அவருக்கு, உடலில் உள்ள நோய்கள் அத்தனையுமே, அந்த ஷணமே விலகிவிடும். அது மட்டுமல்ல, இதய நோய் உள்ளவர்களும், உதிரத்தில் அங்கொரு விஷத்தை கலந்தவர்களும், என்னென்ன உயிர் கொல்லி நோயால் அவதிப் படுபவர்களும், அவர்கள் உயிர் காப்பாற்றப்படும். இப்பொழுது சந்தேகம் எழலாம். உயிர் கொல்லி நோய்கள் வருபவர்கள், எப்படி அந்த மலையில் ஏற முடியும்? அவர்கள் ஏறினால்தானே, உயிர் பிழைக்க முடியும் என்று கேட்கலாம். நீங்கள் தான் பகுத்தறிவுவாதிகள் ஆயிற்றே. இப்படி எண்ணங்கள் வரத்தான் செய்யும். அதற்கும் விடை வைத்திருக்கிறேன். உண்மை. எவன் ஒருவன் அந்த தாய் பாதம் வழியாக, பொதிகை மலைக்கு செல்வதாக எண்ணிக் கொண்டால் அவனுக்கு பரிபூரண சுதந்திரத்தையும், எந்த வித ஆபத்தில்லாத, தோஷம் இல்லாத வாழ்க்கையை, அகத்தியன் யாம் தருவேன். யாமே முன் இருந்து அவரை கை பிடித்து, பக்க பலத்தோடு யாம் அனுப்பி வைக்கிறேன். இனிமேல் அந்த வழியாக செல்பவர்களுக்கு இந்த தரிசனங்கள், நிறைய கிடைக்கும். அது மட்டுமல்ல, அவர் குடும்பத்தில், யார யார், என்றைக்காவது, ஏதோ தவறு செய்திருந்தாலும் சொத்தை இழந்திருந்தாலோ, அதை மீண்டும் பெற்றுக் கொடுக்கும். யார் யார் இவருக்கு விஷம் ஊட்டி கொல்ல நினைத்தார்களோ, யார் யார் இவனுக்கு ஒதுக்குப் புறம் வேண்டும் என்று ஒதுக்கி வைத்தார்களோ, யார் யார் இவர் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்று தடை விதித்தார்களோ, யார் யார் அதர்வண வேதத்தை சேர்ந்து யக்ஷிணி என்ற தேவதையை ஏவிவிட்டு குடும்பத்தை கெடுக்க நினைத்தார்களோ, அவர்கள் அத்தனை பேர்களும், தவிடுபொடியாவார்கள்.  யாரும் அவரை எதுவும், ஒன்றும் செய்ய முடியாது. அவ்வளவு பலம் வாய்ந்த, சக்தி வாய்ந்த சித்தர்கள் நடமாடுகின்ற அற்புதமான பூமியடா இது. இப்பொழுது எதற்காக இதைச் சொன்னேன் என்றால், நம்பி கோவிலிலே அப்பொழுதுதான் சில காரியங்கள் சொன்னேன். சிலவற்றை சொல்ல மறந்துவிட்டேன்.

உங்கள் கணக்குப்படி, கடிகார முள்ளில் 9.30ஐ தாண்டின பிறகு அந்த காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அந்த திசை நோக்கி கண் மூடி ஒருமுறை த்யாநித்தாலே போதும். 9 சித்தர்கள் அருள் வாக்கும் பெற்று, அவர்கள் ஆசியும் பெற்று, இவர்கள் அத்தனை பேர்களுடைய எதிர்கால வாழ்க்கையையும் செம்மையாக மாற்றிவிட முடியும். சித்தர்கள் இங்கு நடமாடுவதால், இவர்களுக்கெல்லாம், மிகப் பெரிய குடுப்பினை இருக்கிறது. யாருக்கும் கிடைக்காத பலன்கள் வரும், பலவீனங்கள் ஒழியும். எண்ணற்ற, நல்ல எண்ணத்தோடு, மற்றவருக்கு உதவி செய்யும் எண்ணத்தோடு, பரிபூரணமாக இங்கு வருகின்ற அத்தனை உள்ளங்களுக்கு எல்லாம், இந்த அகத்தியன் கணக்குப்படி, அவர்களுக்கு, சொர்க்கத்தில் இடம் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது என்று தான் அகத்தியன் சொல்வேன். ஏன் சொர்கத்தில் இடம் என்று சொல்கிறேன் என்றால், வாழ்க்கையே நரகமாகிவிட்டது. சொர்க்கம் எங்கடா கிடைக்கப் போகிறது, என்றெல்லாம் வேதனைப்படலாம், நொந்து போகலாம். சின்னச் சின்ன ஆசைகளைத்தானே எதிர் பார்த்தேன், அது கூட நடக்கவில்லை என்று அகத்தியனை மட்டுமல்ல, விதியை கூட நொந்து விடலாம். ஏன் சிலர், தெய்வ பக்தியிலிருந்து மாறி, வேறு எதிர் பாராத மூட நம்பிக்கைகளின் பக்கத்தில் கால் வைக்கலாம். பதவி சுகம், பண சுகம், குடும்ப சுகம், வாழ்க்கை சுகம், நில சுகம், மனை சுகம், இன்னும் தோட்ட துரவங்கள் சுகம், அத்தனையும் தாண்டி, சந்தோஷமான சூழ்நிலையில் தான் அகத்தியன் இங்கு உட்கார்ந்து பேசும் பொழுது, இவர்கள் அத்தனை பேர்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கப் போகிறது. பதவி இழந்தவர்களுக்கெல்லாம் மீண்டும் பதவியை கொடுக்கலாம். அதற்கு, அகத்தியன் இப்பொழுதே பச்சை கொடி காட்டிவிட்டேன். யார் யாரிடம், எவரவர், எத்தனை தூரம் ஏமாந்திருக்கிறார்களோ, அதை கூட மீண்டும் திரும்பி, அவர்களை கொடுக்க வைக்கிறேன். அந்த பாக்கியமும் நடக்கும்.

இதோ 9 சித்தர்களும் சுற்றி வருகிறார்கள். 9 சித்தர்களும், அகத்தியனை வணங்கிவிட்டு செல்லுகின்ற காட்ச்சியைத்தான் காண்கிறேன். அந்த 9 சித்தர்களும் இவர்களை வாழ்த்துவார்கள். அதனால், எதை எதனை இழந்தனையோ, அதையெல்லாம், மீண்டும் பெறப்போகிறாய். கலைத்துறையை சேர்ந்தவர்களானாலும் சரி, அரசியல் துறையை சேர்ந்தவர்களானாலும் சரி, தொழிற்துறையை சேர்ந்தவர்களானாலும் சரி, பணியாளர்கள் ஆனாலும் சரி, எதுவுமே பற்றற்ற நிலையில் வாழ்ந்து கொண்டு, வாழ்க்கை என்பதே இவ்வளவுதான் என்று விரக்தியின் உச்சத்திலே, மனித ஜடம் போல் நடமாடிக் கொண்டிருக்கும் அத்தனை பேர்களுக்குமே, அகத்தியன் மட்டுமல்ல, இங்குள்ள 9 சித்தர்கள் சார்பிலும், அவர்களுக்கு எந்த வித குறையும் இல்லாமல், அவர்கள் நினைத்ததை சாதிக்கவும், இழந்ததை மீண்டும் பெறவும், அது எந்த பதவி சுகமாகவும் இருக்கலாம், பண சுகம் இருக்கலாம். அவர்கள் அதை மீண்டும் பெற வைக்கிறேன்.

யார் யாரும் இங்கிருந்து ஒரு பொருளை கூட எடுத்திருக்கக்கூடாது. பிறர் பொருளை அபகரித்திருக்கக் கூடாது. அப்படி அபகரித்திருந்தாலோ, எமாற்றினாலோ, அல்லது அவர்களை வஞ்சகம் செய்து கீழே தள்ளிவிட்டார்களோ, அவர்கள் அத்தனை பேர்களும், இன்றைய தினம் மெய் உணர்ந்து, தான் செய்த தவறை உணர்ந்து, அவர்கள் அத்தனை பேர்களையும், மன்றாடி மன்னிப்புக் கேட்க்க வைக்கப் போகிறேன். அந்த காரியம் வெகு சீக்கிரத்தில் நடக்கப் போகிறது. அப்பொழுதுதான், மனித நேயம் என்பது மட்டுமல்ல, தெய்வ நேயம் என்பது மட்டுமல்ல, அகத்தியன் போல சித்தர்கள் எல்லாம் இந்த அரும்பணி ஆற்றி வருகிறோமே, அதற்கெல்லாம் ஒரு உதாரண புருஷனாக, ஒரு உதாரண சம்பவமாக, இந்தக் காட்சி இன்னும் நடக்கப் போகிறது. அதைத்தான் குறிப்பிட்டு சொன்னேன், ஒரு நண்பர் ஒருவருக்கு. இன்றிலிருந்து 13 நாட்களுக்குப் பின் நல்லதொரு காரியம் நடக்கும் என்று சொன்னேன். 13வது நாள் அன்று கதவை திறந்து பார்த்துவிட்டு, நல்லது நடக்கவில்லை என்று அகத்தியனை பழிக்கக் கூடாது. ஏன் என்றால், அன்றைக்குத்தான், உன் தலை எழுத்தே, உன் விதியே மாறப் போகிறது.

சித்தன் அருள் .............. தொடரும்!

19 comments:

 1. om agatheesaya namaha om agatheesaya namaha om agatheesaya namaha

  om maha vallabha ganapathi om maha vallabha ganapathi om maha vallabha ganapathi

  om hayagreevaya namaha om hayagreevaya namaha om hayagreevaya namaha

  ReplyDelete
 2. அகஸ்தியர்க்கு நன்றிகள் ,அற்புதம் ,நாங்கள் செய்த பாக்கியம் இந்த விஷயங்கள் எங்களுக்கும் தெரிவிச்சதுக்கு

  ReplyDelete
 3. pranams at the lotus feet of Agastheesa! You are revealing secrets!
  vijaya

  ReplyDelete
 4. ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி!


  http://youtu.be/BTLtdnGws6w

  ReplyDelete
 5. ஓம் அகத்தீஸாய நம ஓம் அகத்தீஸாய நம அகத்தீஸாய நம, அகத்தியரின் பாதம் பணிந்து அவர் அருள் வேண்டி வணங்குகிறேன்.

  ReplyDelete
 6. ஓம் அகத்தீசாய நமஹ
  ஓம் அகத்தீசாய நமஹ
  ஓம் அகத்தீசாய நமஹ

  ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

  ReplyDelete
 7. Om Agatheesaya Namaha....ayya i couldnt get the deatails of the path clearly.please can anybody tell the route in which agasthiyar said in previous and today's post in nambi malai.if i will have a chance to go and get the blessings of our guru it will be greatfull.Thanks in advance.

  ReplyDelete
 8. அன்புள்ள கார்த்தி,
  வணக்கம்.

  அகத்தியர் நாடியில் உள்ள ஒரு குறிப்பு [பாடல்] தற்செயலாக பார்க்க நேரிட்டது. இது பற்றி உங்கள்
  அபிப்ராயம் அறிய விரும்புகிறேன்.
  பாடல் ;
  ' நாத வேத சித்த பூதம் நாலிரண்டு கோடியே
  வேத யோக ஞான பூதம் எட்டிரண்டு கோடியே
  கீத கானம் பாடும் பூதம் பத்திரண்டு வேலமாய்
  போதம் யோகம் புகழும் பூதம் ஆறிரண்டு இலக்கமே
  நான்ற வேத பூத கணங்கள் ஏழிரண்டு கோடியே
  நின்ற வேத பூத கணங்கள் எட்டிரண்டு கோடியே
  அந்தரத்தில் நின்றியங்கும் பூதம் ஆறு கோடியே
  விந்தை புரியும் நாத பூதம் ஐயிரண்டு கோடியே
  மூன்று லோகம் ஓடி ஆடும் முக்குணத்து பூதங்கள்
  மூன்று த்த்துவ முறை உணர்ந்த மோன ஞான பூதங்கள்
  மூன்று யோக முறையைக் கற்கும் முதிர்ந்த யோக பூதங்கள்
  மூன்று கோடி கணங்கள் பெற்ற வாலை சூல பூதங்கள்
  சாடைகளும் ஒலிகளும் சுடர்களுமே
  சுந்தர நாதனை எழுப்புது பார்
  சுந்தர நாதன் எழுந்து விட்டான்
  சுற்றமெல்லாம் ஆடுது பார்

  அன்புடன் s.v

  ReplyDelete
 9. Jai Sarguru OM Agathisaya Namaha

  ReplyDelete
 10. Om agatheesaya namaha; Om agatheesaya namaha;Om agatheesaya namaha, Enakku intha padhivai padithavudan Podhigai malaikku sellum aaval adhikamagivittadu. Guruvidam adhigam bakthiyullavargal anaivarum oru kuzhuvaga , oru naal fix seithu sella vendum endru thondrugiradhu.. agathiyarai manadhil vaithu oru nalai thervu seiyungal, nan kandippaga varuven , Nandrigal Om agatheesaya namaha- Ravi,Chennai,Mogapair

  ReplyDelete
 11. appadi senral kandippaga jeeva naadi padikkum swamiji marrum maathaji ai alaithu sella vendum.

  ReplyDelete
 12. ஐயா,தாய் பாதம் வழியாக பொதிகை செல்வதாக இருந்தால,அடியேனுக்கு கட்டாயம் தகவல் தர வேண்டுகிறேன். அன்புடன் மா.இராமசாமி, Phone No.7667045212.

  ReplyDelete
 13. பொதிகை செல்ல பகவான் அகத்தியர் அனுமதி கொடுத்து விட்டார். ஒரு பௌர்ணமி நாளில்,ஏற்கனவே போய் வந்த அனுபவம் உள்ளவர்களுடன் இணைந்து செல்ல சொன்னார். ஆகவே, போய் வந்த அனுபவம் உள்ளவர்கள், தயவு செய்து தகவல் கொடுத்தால், பொதிகை சென்று பகவான் அகத்தியர் தரிசனம் செய்து வரலாம். நன்றி. அகத்தியர் அடிமை மா.இராமசாமி, போன் : 7667045212.

  ReplyDelete
 14. அவர் குடும்பத்தில், யார யார், என்றைக்காவது, ஏதோ தவறு செய்திருந்தாலும் சொத்தை இழந்திருந்தாலோ, அதை மீண்டும் பெற்றுக் கொடுக்கும். யார் யார் இவருக்கு விஷம் ஊட்டி கொல்ல நினைத்தார்களோ, யார் யார் இவனுக்கு ஒதுக்குப் புறம் வேண்டும் என்று ஒதுக்கி வைத்தார்களோ, யார் யார் இவர் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்று தடை விதித்தார்களோ, யார் யார் அதர்வண வேதத்தை சேர்ந்து யக்ஷிணி என்ற தேவதையை ஏவிவிட்டு குடும்பத்தை கெடுக்க நினைத்தார்களோ, அவர்கள் அத்தனை பேர்களும், தவிடுபொடியாவார்கள். யாரும் அவரை எதுவும், ஒன்றும் செய்ய முடியாது. அவ்வளவு பலம் வாய்ந்த, சக்தி வாய்ந்த சித்தர்கள் நடமாடுகின்ற அற்புதமான பூமியடா இது. இப்பொழுது எதற்காக இதைச் சொன்னேன் என்றால், நம்பி viten iya engalai kappathu

  ReplyDelete
 15. My name is Sreenivasan staying in Chennai as I am possed by yaksini Devi I have suffered a lot and what Agastya has said is happened to me in life...I badly need help if any one goes to pothikai malai via Thai patham please add me in your group or please take me there to get Agastya Blessings....My Phone No is 9095430018....

  ReplyDelete
 16. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete