அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026 அன்று சென்னையில் நடந்த அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 17
வாக்குரைத்த நாள், நேரம் :- 05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
( பகுதி 16 அதன் தொடர்ச்சியாக ….)
===========================
# அடியவர் #12 - பாடல் பாடினார்கள்…
===========================
குன்றேறி நின்றவனே
குமரா என் முருகய்யா !
உருகாதா மனசுனக்கு
உன்ன விட்டா யாரய்யா?
ஊற்றுக்கண் போலத்தான்
உப்புத் தண்ணி கொட்டுதய்யா
வேலவனைக் காணாம
வெந்து மனம் வாடுதய்யா
ஆறுமுகம் உனக்குண்டு
அழகான மயில் உண்டு
ஆறுதல் தான் சொல்ல
ஒரு ஆளுமில்ல இங்கெனக்கு
வேல் பிடித்தவன் விடலாமா?
வீழ்ந்து தொழுதவன் அழலாமா?
அப்பன் சிவனும் மறந்தாரா?
ஆண்டி கோலம் முறைதானா?
வேல் பிடித்தவன் விடலாமா?
வீழ்ந்து தொழுதவன் அழலாமா?
அப்பன் சிவனும் மறந்தாரா?
ஆண்டி கோலம் முறைதானா?
குருநாதர் :- தாயே, எது என்று புரிய கேள்.
அடியவர் #12:- ( …….. உடல் நிலை குறித்த ஒரு கேள்வி ……… ) அது கிட்டத்தட்ட ஒரு அஞ்சு ஆறு வருஷமாவே இருக்கு. அவங்க அதனால ரொம்ப கஷ்டப்படுறாங்க. நைட் தூக்கம் இல்லை.
குருநாதர் :- தாயே, காலத்தின் கட்டாயம் பொறுத்திரு. பார்த்துக் கொள்வோம்.
சுவடி ஓதும் மைந்தன்:- பொறுத்திருன்றாரு.
அடியவர் #12:- அப்புறம் ஐயா வந்து தம்பி நைட்டு தூங்குறப்ப…..
குருநாதர் :- தாயே, சில விஷயங்களை யான்தான் மாற்ற வேண்டும். பொறுத்திருந்தால், ஏனென்றால் பிரம்மன் அழகாக எழுதி விட்டு சென்று விடுகின்றான். ஆனால் அதை மாற்றுவதற்கு யான் தான் போராட வேண்டும்.
அடியவர் #12:- அவங்க உடம்பு அளவுல ரொம்ப கஷ்டப்படுறாங்களே. இதனால் நான் போயிட்டா நல்லது அப்படின்னு நினைக்கிறாங்களே.
குருநாதர் :- தாயே, எது என்று கூற இதனால் தான் சொன்னேன். புரியவில்லை. எதை என்று புரிய இறைவன் எவரையும் பின் வாழ்க்கை பின் எவை என்று கூற வாழ்க்கை வாழ்வதற்கு விட்டு விடுவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- இறைவன் யாருமே …..
அடியவர் :- எளிமையா இருந்தா யாரும் வாழ முடியாது இல்லையா?
அடியவர் #13:- ( பரம்பரை பரம்பரையாக பிரச்சனை…… )
குருநாதர் :- எவை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- கவலை வேண்டாம்.
அடியவர் 7 :- அதெல்லாம் அப்படி எல்லாம் நினைக்காதீங்கப்பா.
===========================
# உறக்கத்தில் எல்லாம் நன்மையாக நடக்க……
===========================
அடியவர் #12:- ஐயா, நைட் தம்பி தூங்குறப்ப ரொம்ப உளறிட்டே இருக்கான். அவன் என்ன… அவன் நினைச்சதை பேசுறானா? இல்ல என்னன்னு தெரியல.
குருநாதர் :- தாயே, எது என்று புரிய கெட்டியாக எவை என்று ஒரு கூற தாமிரத்தை எதை என்று புரிய நிச்சயம், நிச்சயம் அறிந்தும் ஏது என்று புரிய எவை பல பின் சொம்பையும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட கலந்து எவை என்று அறிய கையில் இடுக.
குருநாதர் :- எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் நதிக்கு வா. எவை என்று புரிய, எடு. எவை என்று அதில் தன் நிச்சயம் தன்னில் சொம்பில் பின் இட்டு பின் கையை.
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, தாமிரபரணிக்கு வந்து…..
அடியவர் #12:- சரிங்க அய்யா.
சுவடி ஓதும் மைந்தன்:- அதுல மண் எடுத்து சொல்லி…...
அடியவர் #12:- சரிங்க,
சுவடி ஓதும் மைந்தன்:- தாமிர. அதுல வந்து என்ன பண்ணு? சொப்பு,
அடியவர் 7 :- (தாமிர) செப்புல…. நம்ம தாயத்து பண்ணிக்கிறோம்ல. அது மாதிரி கை வளையல் மாதிரி பண்ணி….. அதுக்குள்ள மண்ணு போட சொல்றாரு.
(லோபாமுத்திரை அன்னையின் தாமிரபரணியில் எடுத்த புனித மண்ணை , கையில் செம்பு தாயத்து போல செய்து அணிந்து கொள்ள வேண்டும் )
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா, மண்ணுல வைக்கணும்.
அடியவர் 7 :- மண்ணு அதுக்குள்ள போடணும்.
அடியவர் #13:- சரிங்க
அடியவர் 7 :- கரெக்டா. ஐயா..
குருநாதர் :- அப்பனே, எதை எது என்று புரிய அப்பனே, நல்விதமாகவே. அப்பனே, எப்பொழுதும் பின் எவை என்று கூற கருங்காலியான வேல் ஒன்றை அப்பனே, அவனிடத்தில் எப்பொழுதும் வைத்துக்கொள்ள வேண்டும்.
அடியவர் :- கருங்காலி வேல்…
சுவடி ஓதும் மைந்தன்:- வேல் எப்பவுமே வந்து அவர் பாக்கெட்ல வச்சுக்கணும்….
குருநாதர் :- அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே, எலுமிச்சை. அப்பனே, சில நாட்களுக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தலையணையில் வைத்துக் கொள்வது நல்லது.
சுவடி ஓதும் மைந்தன்:- எலுமிச்சை இருக்கும்ல வந்து….
குருநாதர் :- எதை என்று புரிய பின்பு சொல்கின்றேன்.
அடியவர் #12:- ஐயா, இப்ப நான் வந்து 11th படிச்சிட்டு இருக்கேன். 12th முடிச்சு என்ன படிச்சா? என்ன இது பண்ணா?
குருநாதர் :- தாயே, இதை முடி முதலில்.
ஒரு அடியவர் :- ( சிரிப்புகள் )
குருநாதர் :- இதைத்தான் எவை என்று புரிய பின், எவ்வாறு பின் எவ்வாறு எதை என்று கூற பின், அதிக பின் எவை என்று கூறப்பின், சதவீதம் எடுப்பது என்பது எல்லாம் இதில் பின் கவனத்தை காட்டு. பின் அடுத்து தானாகவே வருவது வரும்.
அடியவர் #12:- சரி….
சுவடி ஓதும் மைந்தன்:- முதல்ல இதை கவனத்தை காட்டு.
அடியவர் 7 : நிறைய சதவீதம் எடுக்க சொல்லறாரு…பின்னாடி நீ என்ன ஆசைப்படுறியோ, அது வரும். அதை நினைச்சு இப்ப கவலைப்படாத….
அடியவர் #12:- சரி,
===========================
# இனிமேல் கேட்பவர்களுக்கு தர்மத்தை பற்றி கூறி, பின்னர் வாக்குகள்.
===========================
குருநாதர் :- அப்பனே தர்மத்தை பின் மாற்று. எவை என்று கூற தர்மத்தைப் பற்றி கூறி, பின் உரைக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்து வரும்ல என்ன தெரியுமா?
அடியவர் :- தர்மத்தை பற்றி சொல்லனும்….
சுவடி ஓதும் மைந்தன்:- (இனிமேல்) பாடல் இல்ல, பாடல் சாப்டர் க்ளோஸ்.
அடியவர் :- தர்மம்,
சுவடி ஓதும் மைந்தன்:- தர்மம் பற்றி கூறி…
அடியவர் :- தர்மம் பற்றி சொல்லுங்க.
அடியவர் 7 :- தர்மத்தை பத்தி சொல்லுங்க. ஒரு ரெண்டு வரி தர்மத்தை பத்தி சொல்லுங்க.
அடியவர் :- தர்மம் தலை காக்கும்…..
அடியவர் #13 :- ஐயா, நம்மளால என்ன முடியாதோ அதை பிறருக்கு கொடுக்கணும்…அது தர்மம்.
===========================
# குலதெய்வத்தின் அருளும், முன்னோர்கள் ஆசிகளும் - குறைவாக இருந்தால் என்ன நடக்கும் ?
===========================
குருநாதர் :- தாயே, எது என்று அறிய, குலதெய்வத்தின் அருளும், முன்னோர்கள் ஆசிகளும். பின் நிச்சயம் தன்னில் கூட குறைவாகவே கிடைத்து உள்ளது. எது என்று புரிய, இதனை பின் சக்திகளாக மாற்ற, நிச்சயம் தன்னில் கூட பொறுத்திருந்தால் அனைத்தும் தானாக நடக்கும். ஏன்? எதற்காக? முன்னோர் வழிபாடும் இருவர் இல்லத்திலும் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்களும் சரியா செய்யல. உங்க முன்னோர்கள் சரியா செய்யல. இவங்க சரியா செய்யல.
குருநாதர் :- இதனால் அனைத்து தடைகளும் எவை என்று புரிய சிலர் எவை என்று கூற, உன் இல்லத்திலும் எதை என்று கூற, மனம் எவை என்று கூற? சஞ்சலங்கள்
சுவடி ஓதும் மைந்தன்:- இதனால் உனக்கும் சஞ்சலமும். உன் வீட்டில் இருக்கிறவனுக்கும் சஞ்சலங்கள்.
குருநாதர் :- எது என்று கூற இதுபோல் இவனிடத்திலும் எவை என்று கூற சஞ்சலங்கள் பின் எவை என்று கூற ஏமாற்றங்கள் சில பின் நம்பிக்கை துரோகங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால இவங்க வீட்லயும் சில நம்பிக்கை துரோகங்கள் நடக்கும். ஏமாற்றம் நடக்கும். இவன் குடும்பத்திலேயும் ஓகேங்களா?
குருநாதர் :- இதனால் முன்னோர்களின் பின் எவை என்று கூட குலதெய்வத்தின் வழிபாடும் முறையாக செய்ய வேண்டும். சொல்லிவிட்டேன். இருவர் இல்லத்திலும் இல்லை. ஒருவர் இல்லத்தில் இருந்து, ஒருவர் இல்லத்தில் பின் இல்லாவிடிலும் பரவாயில்லை. ஆனால் உங்கள் இருவர் இல்லத்திலும் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- சரியா? நீங்களும் முன்னோர்கள் வந்து வழிபடல. நீங்களும் வழிபடல. அதனால உங்க வீட்லயும் சரி. ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகங்கள், அதெல்லாம் வரும். உங்க வீட்ல வந்து மனக்குழப்பங்கள் எப்படிடா? ஏதுடான்னு சொல்லிட்டு… சிலதெல்லாம் வரும். இதெல்லாம் வந்து
குருநாதர் :- எதை என்று கூற முதலில் குலதெய்வத்திற்கு சிறப்பாக செய்யுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- முதல்ல வந்து குலதெய்வத்திற்கு சிறப்பா செய்யணும். நீங்க வந்து சிறப்பா செய்யணும்னா என்ன பண்ணனும்? குலதெய்வத்தை போயிட்டு நல்லா வந்து சாமி கும்பிட்டு நாலு பேருக்கு நல்லா ஆக்கி போட்டு சாப்பாடு போடணும்.
அடியவர் #13 :- அய்யா முன்னோர்கள் சாபம் இருக்குன்னு ….?
குருநாதர் :- எதை எது என்று புரிய தாயே, நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூட பின் படிப்படியாக அனைத்தும் மாறும்.
சுவடி ஓதும் மைந்தன்:- படிப்படியா மாறும்.
குருநாதர் :- எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட தாயே, பின் எவை என்று கூறப்பின் எவை என்று மூதாதையர் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட செய்ய வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அம்மா, உங்க அப்பாவுக்கு யாராவது சொல்லி நீங்க கண்டிப்பா செய்யணும். கண்டிப்பா, அவங்க முன்னோர்களுக்கு வந்து இறந்தவங்களுக்கு செய்யல.
அடியவர் #13 :- இப்ப மஹாளய அமாவாசையும் அவங்களுக்கு கூட செஞ்சோம் அய்யா …
சுவடி ஓதும் மைந்தன்:- அம்மா..அம்மா…ஒரு வருஷம்… அது எல்லாம் செய்றது…. இப்ப அதிகமா இல்லைன்னா நீங்க மாசம் மாசம் செய்யணும்மா.
அடியவர் #13 :- மாசம் மாசம் அமாவாசை.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா, மாசம் மாசம் டெபனிட்டா அமாவாசை செய்யணும். ஓகேங்களா? இல்லைன்னா மனக்குழப்பங்கள் உங்களுக்குள்ள எப்படி ஏதுன்னு சொல்லிட்டு வந்துரும். அதனால வந்து
குருநாதர் :- அறிந்தும் இன்னும் ஆன்மா முழுமை பெறவில்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- இன்னும் சில ஆன்மாக்கள் முழுமை பெறவில்லை.
குருநாதர் :- இதனால் அவை வருந்தினால் நீங்களும் வருந்துவீர்கள். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன்:- அந்த அந்த மனசு வந்து இன்னும் முழுமை பெறாம வருந்துட்டு இருக்குது. வந்து அப்ப என்ன பண்ணுவீங்க? உங்களுக்கும் மனக்குழப்பம் ஏதாவது ஒன்னு இது ஆகிடும்ன்றாரு.
குருநாதர் :- நிச்சயம் உதவிகள் செய்கின்றேன், தாயே,
சுவடி ஓதும் மைந்தன்:- நான் உதவி செய்கிறேன் என்றார். வந்து
குருநாதர் :- எது என்று புரிய இதனால் நிச்சயம் தன் தொடர்ந்து பின் எவை என்று கூறப்பின் அறிந்தும் கூட பின் அமாவாசை எவை என்று புரிய நிச்சயம் தன் தானம் பின் அந்தனருக்கு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட மூன்று வகையான காய்கள், எது என்று மூன்று வகையான நிச்சயம் இனிப்பு, மூன்று வகையான இவ்வாறாக நிச்சயம் தன்னில் கொடுத்து, ஆண் பெண்ணுக்கும் உடுத்த ஆடை, எவை என்று கூற பின் அரிசி தானம் இவை தன் செய்து கொண்டே வரவேண்டும் நீங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஒவ்வொரு அமாவாசைக்கும் அப்படினா… ஒரு அந்தணர்க்கு…
அடியவர் 7:- வீட்டுக்கு வந்து சாப்பாடு போட சொல்லுங்க. மூணு சுவிட்டு (இனிப்பு), மூணு விதமான காய்கறி பண்ணி, அவருக்கு சாப்பாடு எல்லாம் போட்டு, துணி தானத்தை பண்ண சொல்றார்.
அடியவர் #12:- வீட்டுக்கு அழைச்சா ஐயா?
சுவடி ஓதும் மைந்தன்:- வீட்டுக்கு அழைச்சும் சரி, கோயில், கோயில் எங்காவது பண்ணலாம். காய்கறி எல்லாம் வாங்கி குடுத்துட்டு, அரிசி எல்லாம் வாங்கி குடுத்துட்டு பண்ணனும். இது எது பண்ணனும்? அமாவாசை, அமாவாசை பண்ணனும்.
குருநாதர் :- எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் ஓடும் நதியிலே நிச்சயம் தன்னில் கூட, அதாவது நிச்சயம் பின் எதை என்று புரிய பின்.
சுவடி ஓதும் மைந்தன்:- புரிந்து கொள்ளும்மா. ஓடும் நதியில் கூட நீங்க வந்து என்ன பண்ணனும்? அந்த பிண்டத்தை கரைகணும்.
குருநாதர் :- எவை என்று கூற ஏனென்றால் யாரும் கவனிக்கவில்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- யாருமே செய்யலன்றாருமா. முன்னோர்களுக்கு நீங்களும் யாரும் செய்யலப்பா. அதனால ரெண்டு பேருமே செய்யணும்ன்றாருமா? வந்து ஓகேங்களா?
குருநாதர் :- தாயே, தாயே, இதை செய்து வாருங்கள். வெற்றி நிச்சயம்.
சுவடி ஓதும் மைந்தன்:- இதை செஞ்சு வந்தால் வெற்றி நிச்சயம். நீங்கள் நினைச்ச காரியம் நடைபெறும்.
குருநாதர் :- இல்லையென்றால், நிச்சயம் தன்னில் கூட பல போராட்டங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்படி இல்லைன்னா, வந்து சரியா செய்யலைன்னா, பல போராட்டங்கள்,
குருநாதர் :- தடைகள் எது என்று கூற சில நோய்கள், தடைகள்…
சுவடி ஓதும் மைந்தன்:- சில நோய்கள், இதெல்லாம் வந்து வரும் என்று சொல்றார்.
குருநாதர் :- எது என்று தொடர்ந்து செய்யுங்கள். நிச்சயம் தன்னில் கூட அவன் ஆன்மாவை மகிழ்ந்து உங்களை பின் நல் பின் எவை என்று வழிக்கு எடுத்துச் செல்லும்.
சுவடி ஓதும் மைந்தன்:- நன்றாக நீங்க செஞ்சீங்கன்னா, சில ஆன்மாக்கள் முற்று பெறாத ஆன்மாக்களே என்ன பண்ணும்? ஆசீர்வாதம் கொடுத்து?
அடியவர் :- நல்வழிப்படுத்தும்,
சுவடி ஓதும் மைந்தன்:- நல்வழிப்படுத்தும்.
குருநாதர் :- தாயே, எம்முடைய ஆசிகள் கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஓகே.
அடியவர் #12:- அம்மாவுக்கு உடம்பு சரியில்லை..?
குருநாதர் :- தாயே, எவை என்று புரிய சொல்லிவிட்டேன். பிரச்சனையை.
சுவடி ஓதும் மைந்தன்:- அம்மா, இதுதான்மா? வந்து அந்த அம்மா, உங்களோட முன்னோர்கள் யாரும் வருந்துட்டு இருக்காங்கமா வந்து முழுமை அடையல. வந்து நீங்க அவங்க வீட்டுக்கு போயிட்டாங்கன்னு சொல்லாதீங்க. அவங்களுக்கும் கிடையாது, உங்களுக்கும் கிடையாது. இதை நீங்க செஞ்சுகிட்டே வாங்க. மாரும்மா,
அடியவர் #13 :- குலதெய்வத்தை அறிந்து கொள்ள
குருநாதர் :- எதை முதலில் இதை செய்யுங்கள், தானாக தெரியவரும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இதை செஞ்சுகிட்டாவே, தானே தெரியவரும். ஓகே, வந்து தானே தெரியும். மேல போய் இதை செய்யுங்கம்மா.
===========================
# சுவடி ஓதும் மைந்தன் திருமணம் குறித்து கேள்வி…
===========================
அடியவர் #12 :- உங்களுடைய மைண்ட்ல ஜானகிராம் ஐயாக்கு எப்ப ஐயா திருமணம்?
சுவடி ஓதும் மைந்தன்:- (சிரிப்பு)
அடியவர்கள் :- (ஹாஸ்ய சிரிப்பு)
குருநாதர் :- எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று அறிய. இதனால் எதை என்று அறிய, பல சொந்தங்களை இவனுக்கு கொடுத்துள்ளேன். அவர்கள் மூலம்…
சுவடி ஓதும் மைந்தன்:- சொந்தம் எல்லாம் அப்படி இல்ல. பல சொந்தங்கள் இவர்கள் எல்லாம் கொடுத்துக்கிறேன்ல. அதனால, அவர் மூலம் அப்படி சொல்லிட்டாங்க.
அடியவர் #12 :- எங்க மூலமா உங்களுக்கு வருங்கிறாங்களா?
அடியவர் :- இல்ல, இல்ல, எப்படி சொல்றாங்க சொந்தம் கொடுத்திருக்கேன்னு சொல்றாரு.
சுவடி ஓதும் மைந்தன்:- இவ்வளவு சொந்தங்கள் எல்லாம் என்னோட எப்படி சொல்றாருன்னா, இவனுக்கும் எப்படி சொல்றாருன்னா,
அடியவர் #13 :- நிறைய பேர் ஐயாவுக்கு….
அடியவர் #12 :- ( அகத்தியர்) ஐயாவுக்கு லோபமுத்ரா அம்மா இருக்குற மாதிரி ( சுவடி ஓதும் ) தம்பிக்கு ( துணைவி) வேணும்.
ஒரு அம்மை அடியவர் :- சொந்தம் எத்தனை இருந்தாலும், மனைவி மாதிரி வருமா?
குருநாதர் :- எதை எது என்று புரிய தாயே, எவை என்று கூற பின் நினைத்தது நடக்கும்,
அடியவர் 7 :- நினைச்சது நடக்கும்னு சொல்லிட்டார்….
அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- (சிரிப்புகள்)
அடியவர்கள் :- (ஹாஸ்ய சிரிப்புகள்)
சுவடி ஓதும் மைந்தன்:- அப்படித்தான் சொல்லுவாரு ஐயா. அடுத்து என்ன சொல்லுவாருன்னு தெரியாது… டக்குன்னு.
அடியவர் 7 :- உங்க வேலை தானே தூண்டி விடுறது.
ஒரு அம்மை அடியவர் :- சொந்தத்துலயா என்று கேளுங்கள் அய்யா ?
குருநாதர் :- நிச்சயம் எது என்று புரிய. பின் அனைத்து என் சொந்தங்களே.
சுவடி ஓதும் மைந்தன்:- அகத்தியரை அனைவரும் யார் வணங்குறாங்களோ, அவங்கதான். சரி (விட்டு) விடும்மா ( இப்போது இதனை) .
அடியவர் :- முயற்சி பண்றோம் அய்யா.
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்து யாருக்குங்க ஐயா.
அடியவர் :- கேட்டவங்க எல்லாம் உட்காருங்க. ஒரு நிமிஷம், தர்மத்தை பத்தி பேசணும்ல. சரி, நீங்க உட்காருங்க.
===========================
# அடியவர் #14…
===========================
அடியவர் #14 :- ……..
குருநாதர் :- அப்பனே, எம்முடைய ஆசிகள் நிச்சயம் தன்னில் கவலை வேண்டாம். விவரமான வாக்கெல்லாம் சொல்கின்றேன் அப்பனே, அங்கங்கு எம்முடைய ஆசிகளும் கெடுத்தது என்பேன் அப்பனே. ஆனாலும் எதை என்று புரியாமல் இருக்கின்றாய் என்பேன் அப்பனே.
குருநாதர் :- நல்விதமாக அப்பனே, விநாயகப் பெருமானே, அனைத்தும் தொழுத்திட்டு வா. சில மனக்குழப்பங்கள் நீங்கும். அப்பனே, நல்விதமாக ஆற்றலும். அப்பனே, விநாயகப் பெருமான் கொடுப்பான். அப்பனே. பின் உன்னை நீ அறிந்து கொள்ள அப்பனே, சுலபமாக இருக்கும் என்பேன்
குருநாதர் :- அப்பனே, கவலை வேண்டாம். அப்பனே, வெற்றிகள் உண்டு. அப்பனே, ஆனாலும் இடையிடையே, அப்பனே, ஏதாவது ஒரு பிரச்சனை பின் வடிவு எவை என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட. அதனால், அப்பனே, எது என்று புரிய அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. வடிவுக்கரசி துணையிருப்பாள் என்பேன் அப்பனே. இதனால் நாடு.
சுவடி ஓதும் மைந்தன்:- வடிவுக்கரசினா என்ன அது?
அடியவர்கள் :- வடிவுடையம்மன். திருவொற்றியூர்.
சுவடி ஓதும் மைந்தன்:- திருவொற்றியூர் போக வேண்டும்.
குருநாதர் :- அப்பனே, அங்குதான் உன் மூலாதாரமே உள்ளது என்பேன் அப்பனே, எது என்று புரிய அப்பனே, அங்கு சென்று கொண்டே இரு. அப்பனே, சில விஷயங்கள் உனக்கு புரியும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உடனே நீ, அப்பனே, வெல்லலாம். அப்பனே, இதுதான் வாழ்க்கை என்று புரிந்து கொள்ளுவாய்.
சுவடி ஓதும் மைந்தன்:- வடிவுடையம்மன் எங்க இருக்காங்க? திருவொற்றியூர் .
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அங்கேயும், அப்பனே, எவை என்று புரிய. அப்பனே, ஏனென்றால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் ஒரு பிறப்பில், அப்பனே, உன்னை அங்கேதான் புதைத்து வைத்தார்கள் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மீண்டும், அப்பனே, உயிர் வந்துள்ளது என்பேன் அப்பனே. அதனால் அங்கு, அப்பனே, சென்றால் ஒரு ஞானம் பிறக்கும். அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- ஒரு ஜென்மத்துல அங்கதான் உங்களை புதைச்சிருக்காங்க. எடுத்துட்டு போயிட்டு. அப்ப, அங்க நீங்க போனீங்கன்னா, சில விஷயங்கள் வாழ்க்கை இப்படித்தான்டா. அங்க சில விஷயங்கள் உங்களுக்கு புரியும்ன்றாரு.
குருநாதர் :- அப்பனே, நல்விதமாக எதை என்று புரிய அப்பனே, கவலை வேண்டாம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உன்னுடைய பிறவி. அப்பனே, எதற்காக? ஏது? என்றெல்லாம் அப்பனே, வருங்காலத்தில் சொல்கின்றேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, இப்பொழுது எம்முடைய ஆசிகள். சித்தரின் ஆசிகளும்.
குருநாதர் :- அப்பனே, எவை என்று புரிய. அப்பனே, இதனால் , அப்பனே, நீயே அப்பனே, ஒரு பக்குவம் ஏற்படுத்தி. அப்பனே, பின் எது என்று புரிய அப்பனே, பின் பக்குவங்கள் பல பெற்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, உன்னை நீ வென்று. அப்பனே, நல்விதமாக. அப்பனே, இப்படித்தான் வாழ்க்கை என்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு. அப்பனே, பிரம்மன் எழுதி வைத்திருக்கின்றான் அப்பா,
சுவடி ஓதும் மைந்தன்:- பிரம்மன் அடி அடின்னு அடிக்கிற மாதிரி எழுதி வச்சிருக்கிறார் உன்னை இப்போது வந்து, உன்னை நீ தெரிஞ்சுக்கணும். எல்லா விஷயத்திலும் வந்து ஒரு இது மாதிரி இருக்கு.
குருநாதர் :- ஆனாலும் கவலை இல்லை என்பேன் அப்பனே, பல வகையான அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் தர்மங்கள். அப்பனே, உன்னை எதை என்று புரிய. அப்பனே, இதனால் நல்முறையாகவே, அப்பனே, பின் அழைத்துச் செல்லும்.
குருநாதர் :-அப்பனே, நன்முறையாக அப்பனே, எம்முடைய ஆசிகள் இருக்கின்ற பொழுது கவலைகள் இல்லை.
குருநாதர் :- அப்பனே, அனுதினமும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் விநாயகப் பெருமானை வணங்கி வா. அப்பனே, போதுமானது.
குருநாதர் :- அப்பனே, விநாயகப் பெருமானுக்கு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் சீதக்களப பாடலை பாடி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அருகம்புல்லை அப்பனே, பின் அவன் பின் தலையில் வைத்து, அப்பனே, பின் ஒன்பது முறை சுற்றி வா. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மீண்டும் வாக்கு உரைக்கின்றேன். ஆசிகள், ஆசிகள்.
அடியவர் #14 :- நன்றி ஐயா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்து குலதெய்வம் கும்பாபிஷேகத்துக்காக பிரார்த்தனை பண்ணனும். கும்பாபிஷேகம் வரல….
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, எதையும் கவலைப்படாதே அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பார்த்துக் கொள்வோம். அப்பனே, இப்பொழுது போதும். உனக்கு ஆசிகள், ஆசிகள்.
சுவடி ஓதும் மைந்தன்:- இப்ப எதை பத்தியும் கேட்கக்கூடாது..
அடியவர் #14 :- வீட்டு அருகில் கோயில் ( கட்ட முடியுமா ?).
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் முடியும்என்பேன் அப்பனே, ஆனாலும் அங்கங்கு தகடுகள் புதைந்து கிடைக்கின்றது என்பேன் அப்பனே. அதன் சக்தி, அப்பனே, பின் கீழே போனால் தானாக தெய்வம் மேலே வரும். அப்பா, கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாம் என்ன பண்ணி வச்சிருக்காங்க?
அடியவர் #14 :- தகடு.
சுவடி ஓதும் மைந்தன்:- தகடை புதைச்சு வச்சிருக்காங்க. அதனால வந்து அதெல்லாம் (தீய யந்திரத்தின்) பவர் போகணும். அது பவர் போச்சுன்னா… தானாக வந்து… அந்த அம்மா வந்து… யார் மூலமோ ஒருத்தர் மூலமா ஏற்படுத்தி கோயில் கட்டிடலாம் என்று சொல்கின்றார்.
அடியவர் #14 :- யார் அய்யா வைத்தது ?
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தகடுகள். நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எவை என்று புரிய,அப்பனே, பின் வலுவிழுக்க செய்கின்றேன். பின்பு யான் உரைப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- அந்த தகடுகள் வந்து வச்சுக்கிறாங்க. அங்கங்க, அங்கங்க போய்க்கிறாங்க. அதுக்கு இது கோயில் நடந்துட்டுன்னு சொல்லிட்டு. அதனால அந்த தகடு வந்து வேற மாதிரி பவர் போயிருச்சு. அதனால அது வந்து க்ளோஸ் ஆகும் பொழுது நான் சொல்றேன். பண்ணிட்டாரு.
அடியவர் #14 :- சரிந்த அய்யா
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்து…
அடியவர் #14 :- இந்த வழிபாடு பண்ணனுமா?
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா,
அடியவர் :- இல்ல, அவர் வீட்ல வழிபாடு பண்றதுக்கு ஆசி. ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கார்.
குருநாதர் :- அப்பனே, எது என்று கூற அப்பனே, பின் அதை குறைத்து, அப்பனே, சென்றால்தான். அதனால்தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவை தன் அப்பனே, பின் எவை சில தீய பின் எண்ணங்களை ஏற்படுத்திவிடும் என்பேன் அப்பனே, அதனாலதான். அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- அது யாருன்னு அது மாதிரி சொல்லலன்னா அந்த தகடுகள் வந்து சில தீய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுமான்றார். வந்து அதனால சொல்லலன்றார்.
குருநாதர் :- அப்பனே, சரியாக அப்பனே, பின் ஆடி மாதத்தில் எது என்று ஆடிய சிறப்பாக அவ்வமைக்கு நிச்சயம் ஏற்பாடு செய்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆடி மாதத்துல சிறப்பா ஏற்படுத்தணும். நீங்க வந்து நல்லா கூழ் ஊத்தி இது பண்ணி… நல்லா சிறப்பா ஏற்படுத்தணும்ன்றார் வந்து….
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் மாதத்தில் பாடினால் போதுமானது.
சுவடி ஓதும் மைந்தன்:- அந்த நேரத்துல போய் பாடினால் போதும்ன்றார். ஆடி மாதத்துல நீங்க சிறப்பா செய்யணும். அந்த அம்மாக்கு சரி.
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய. இதனால் தான் அப்பனே, பின் எது என்று அறிய , அங்கும் இங்கும் சென்று அப்பனே, பின் எவை எது என்று புரிய. அப்பனே, அங்கங்கும் புதைத்திருக்கிறார்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- அங்க போறது. இங்க போறது. அது சொல்றது… சொன்னாருன்னா எடுத்துட்டு வருது. ஒரு தாயத்து எடுத்துட்டு வருது. அங்க புதைச்சிட்டு இருக்காங்க. எல்லாத்தையும் வந்து அதனால வந்து அது வேற மாதிரி போயிட்டு இருக்குதுன்றார். வந்து
குருநாதர் :- நல்விதமாக பின் ஆடி மாதத்தில் சிறப்பானதை செய். மீண்டும் எவை என்று எவை என்று வாக்குகள் செப்பிக்கின்றேன். நலங்களாகவே….
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete