காக்கும் கடவுளை மனதில் எண்ணி, பலமாக உரைக்கின்றேன், கொங்கணவன். உண்மையில் ஞானி அவர்கள் எவர் என்பதும் கூட இனி வரும் நாளில் தெரிய வரும் என்பேன். ஆனால், உண்மையான ஞானி என்பவர் யார் என்று இனி வரும் நாளில் தெரியவரும். அகத்தியரின் அருளும் பெற்று இருந்து, பின் பின் எவ்வாறு உயர்வது என்று கூட அகத்தியன் சரியான முறையில் கணித்துக் கொண்டுதான் போயிருக்கிறான் என்பேன். இதனால், பின் இவைதான் என்று கூறாமல், அகத்தியனும் பக்கத்திலே பன்மடங்கு இருப்பான் என்பேன். ஏன் என்றால், இப்பவுர்ணமி அன்று (சித்திரா பௌர்ணமி) கூட சித்தர்கள் தவத்தை மேற்கொள்வார்கள் என உறுதியாக கூறுகிறேன். இப்புவியில் என்ன என்ன நடக்கப் போகிறது என்று அறிவார்கள் சித்தர்கள். இதனால் இப்பவுர்ணமியை "சித்தர்கள் பௌர்ணமி" என்று கூட அழைக்கலாம். பின் அனைவருக்கும் நல்மனதாய் சித்தர்கள் ஒவ்வொரு இடத்திலும் தவம் செய்வார்கள் என்பேன்.
சரியான முறையாய் சித்தர்களை வணங்குபவர்களுக்கு பின் நல் முறையாய், எவை வேண்டும் என்பவர்களுக்கு, அவை தன் பக்தர்களுக்கு எப்பொழுது வரும் என்றும், அதனுடன் கட்டங்களையும், நிச்சயமாய் வந்து நீக்கி விடுவார்கள். அகத்தியனும் தவத்தில் தான் உள்ளான் என்பேன். இவ்வருடத்தில் எந்த எந்த கட்டங்கள் வருகிறது என்று அவனுக்கும் தெரிந்து விடும்.
இப்பவுர்ணமியில் சில சித்தர்கள் அண்ணாமலையில் வலம் வருவார்கள். மலை பகுதிகளிலும் இதுபோல்தான், ஓர் சித்தன் தவம் செய்வான். இப்படி பல இடங்களிலும் சித்தர்கள் தவம் செய்வார்கள். எந்தெந்த விளைவுகள், இவ்வுலகில் மாற்றம் அடையச் செய்கிறது என்று கூட ஒரு வாக்கு இருக்கிறது. இதனால்தான், எத்தனையோ பரிகாரங்கள் உரைக்கினும், இப்பவுர்ணமியில் அதை செய்தாலும், பலனளிக்காது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூர்த்திகளிடம் பிரார்த்தனை செய்தாலும், அவர்கள் தலை எழுத்தை சித்தர் வழியில் செல்ல மாற்றுவார்கள். ஏன் என்றால், இது "சித்தர்களுக்கான பௌர்ணமி" என்று கூறப்படுகிறது.
பரிகாரங்களை இங்கு(கோடகநல்லூர்) வந்து செய்கிற பொழுது, ராகு காலத்தில் வந்து செய்கிற பரிகாரங்கள் பலனளிக்கும் என்பேன். நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நல்முறையாய் ராகு கேதுக்களை கட்டுப்படுத்த இன்னொரு முறையையும் யான் சொல்கின்றேன். பிறை என்று சொல்கிறார்களே "மூன்றாம் பிறை" அதை தொடர்ந்து நவமாதங்கள் பார்த்துவிட்டால் ராகு, கேதுக்கள் நன்மை செய்துவிடும். இதை யார் உணர்வார்கள். ஏன் என்றால், எதனையும் நீக்குவதற்கும், அடிக்கடி பெருமாள் இங்கு வந்து அமர்ந்து விடுவார், யான் பார்த்தேன். யானும் வேங்கடவன் மலையில் தங்கி இருக்கும் பொழுது, இவன்தனை இழுத்து, இழுத்து வரவேண்டியுள்ளது. அதனால்தான் இப்பொழுது இங்கு வந்தேன் என்பேன்.
நல்விதமாய் ஆசீர்வாதங்கள். நல் முறையாய் சித்தர்களின் அருளால் நன்மையே ஏற்படும். அகத்தியனும், நல் முறையாய், நல்ல வழிகாட்டியாய் இருப்பான் உங்களுக்கு. இனிமேலும் வரும் காலங்கள் உயர்வான காலங்கள் என்பேன். நல்முறையாய் வரும் காலங்கள் மக்களுக்கு சரியானதாய் இல்லை என்றாலும், அகத்தியனை நம்பி, பின் அவர்பின் தொடர்பவர்களுக்கு, பின் குறை இல்லாத வாழ்வே அகத்தியன் அளிப்பான், என்று நல்வாக்கு, பலிக்கும்.
அப்பனே உங்களுக்கும், நல்முறையாய், நல்ல ஆசீர்வாதங்களை, அகத்தியன் பெற்று தந்து கொண்டிருப்பான். இவ்வுலகில் நலமாக வாழ மூலாதாரமாக இருப்பது இறை சக்தி ஒன்றுதான். இறை சக்தி இருந்தால், பின் நல் முறையாய் அனைத்தும் தேடி வந்துவிடும். உங்கள் அனைவருக்கும் நல்முறையாய் இறை அருளை பெற்று தருவதற்கு, மூலகாரணமே அகத்தியன் என்பேன். இப்பொழுதும் நல் முறையாய், உங்களை பற்றிய சிந்தனைகளும் ஓடுகிறது என்பேன். இப்பொழுது தவம் செய்கின்றார்கள். ஈசனும் கூட வந்து நின்று எங்கெங்கோ பார்த்தான். அவன் திருவிளையாடல் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஈசன் வந்து பார்த்ததை நாடியில் யான் கூறியதை கண்டு மகிழ்ந்து, அகத்தியன் த்யானத்தில் இன்னும் இருப்பான். அனைத்து சித்தர்களும், இந்நாடியில் வந்து வாக்குரைப்பார்கள்.
எம்முடைய ஆசிகள், நலன்கள்.
சித்தன் அருள்........... தொடரும்!
Hari Ohm
ReplyDeleteஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ReplyDeleteஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
அனைத்தும் அகத்தியர் செயலே
ReplyDeleteஓம் அகத்திய குருவே துணை
ஓம் அகதீசாய நமக
குருவே சரணம் குருபாதம் சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏
ReplyDeleteஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி..போற்றி..
ReplyDeleteஅம்மா லோபமுத்ரா தாயே போற்றி...
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏
ReplyDeleteஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
ReplyDeleteஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
சித்தர்கள் மற்றும் இறைவனின் கருணை நம் அனைவரையும் காப்பாற்றும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அனைத்து சித்தர்கள் பாத கமலங்களுக்கு போற்றி போற்றி.
குரு வாழ்க 🙏 குருவே துணை 🙏🙏
ReplyDeleteOm agatheesaya namaha.
ReplyDelete