​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 13 May 2021

சித்தன் அருள் - 1001 - அன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு சில விஷயங்களை கேட்டு அதற்கு நாடி வழி நம் குருநாதர் பதிலளிக்கையில், பொதுவாக ஒரு விஷயத்தை கூறினார். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

இனி வரும் காலங்களில், மனிதனுக்கு, என்ன வியாதி இது என்று தெரியாத அளவுக்கு நோய்கள் வரும், என்கிறார் அகத்தியப்பெருமான். அவற்றிலிருந்து விடுபட, கீழ் கூறிய மூலிகைகளை பொடித்து, ஒன்று சேர்த்து, தேனில் கலந்து, ஒரு சிறு உருண்டையாக்கி, தினம், காலை, மதியம், இரவு என மூன்று வேளை உட்கொண்டால், நோயிலிருந்து விடுபடலாம் என்ற தகவலை நமக்கு அருளிய பின் "இருவாரங்களுக்கு த்யானத்தில் இருக்கப்போகிறேன், அருள் வாக்கு யாருக்கும் இப்போது கிடையாது" என்று கூறி சென்றிருக்கிறார்.

அவர் கூறிய மூலிகைகள் (அளவு குறிப்பிடவில்லை):-

 1. எலுமிச்சை தோல் - 4
 2. சோம்பு
 3. கிராம்பு 
 4. பட்டை 
 5. சுக்கு 
 6. மிளகு 
 7. ஏலக்காய் 
 8. அதிமதுரம் 
 9. சித்தரத்தை 
 10. ஆடாதோடை 
 11. துளசி 
 12. மஞ்சள் 
 13. கடுக்காய் 
 14. இஞ்சி 
 15. கரிசலாங்கண்ணி 
 16. பொன்னாங்கண்ணி 
 17. மணத்தக்காளி 
 18. கோரைக்கிழங்கு 
 19. நித்யகல்யாணி 
 20. ஆவாரம்பூ பொடி 
 21. குறுமிளகு 
 22. கருஞ்சீரகம்
 23. செம்பருத்தி பூ 
 24. அவுரி இலை
 25. வெற்றிலை
 26. தூதுவளை 
 27. கற்பூரவல்லி
 28. நெல்லிப்பொடி
 29. காசினிப்பொடி
 30. வேப்பம்பூ
இயன்றவர்கள், அகத்தியப்பெருமானின் இந்த மூலிகைகளை பயன்படுத்தி, நல் ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

13 comments:

 1. Om Sri l0pamudra Samantha Agasthiar thiruvadi Saranam.Thai thanthai pottri.

  ReplyDelete
 2. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ கருணாமூர்த்தியே அகத்தீசா உங்கள் தாமரை பாதங்கள் சரணம் சரணம்

  ReplyDelete
 3. அய்யா நன்றி. நாடி வழி திரு ஜானகிராமன் அன்றி வேறு அடியார்களுக்கும் அருளுகிறாரா

  ReplyDelete
 4. ஐயா, வணக்கம்.

  ஒரு விண்ணப்பம் - தங்களுக்கு நல்ல பரிச்சயமான சித்த வைத்தியரிடம் இதற்க்கான அளவுகளை வைத்தியமுறைப்படி குறித்து கொடுக்க வேண்டுகிறோம்.

  நன்றிகள் பல.

  ஓம் அம் அகத்தீசாய நமஹ ||

  ReplyDelete
 5. Om sri Lobamudra samethey Agastheeswararay saranam
  Om sri Lobamudra samethey Agastheeswararay saranam
  Om sri Lobamudra samethey Agastheeswararay saranam

  ReplyDelete
 6. ஓம் அகத்தியர் அய்யன் துணை
  அகத்தியர் அய்யன் துணை எப்போதும் எங்களுக்கு காப்பாக இருக்கும்...
  Ayya...If you give measurements it would be helpful ayya. Thanks

  ReplyDelete
 7. ஐயா தயை கூர்ந்து இந்த மருந்துகள் அளவு சித்த வைத்தியகளிடமாவது கேட்டு சொல்லுங்கள். ஓம் லோபமுத்திரை அகத்தியர் பாதங்கள் போற்றி.

  ReplyDelete
  Replies
  1. Mam if u needthis herbs mixed with honey form contact me 9629496486..நித்தியகல்யாணி is a alkaloid form so use flower part

   Delete
  2. Mam if u needthis herbs mixed with honey form contact me 9629496486..நித்தியகல்யாணி is a alkaloid form so use flower part

   Delete
 8. ஓம் அகத்தீசாய நம!
  குருவே சரணம்!

  ReplyDelete
 9. I am a postgraduate in pharmacy department ..அகத்தியர் சொன்ன அத்தனை மூலிகைகளை பயன்படுத்தி தேன் கலந்து தயாரித்து தர என்னால் முடியும் ..தேவை எனில் தொடர்பு கொள்ளவும் my number

  ReplyDelete