​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 8 May 2021

சித்தன் அருள் - 1000 - பொதிகையில் முதலில் ஸ்தாபித்த அகஸ்தியர் சிலை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பொதிகையை அகத்தியப்பெருமானுக்கு தாரை வார்த்து அங்கேயே இருந்து கொள்ளும்படி ஆசிர்வதித்தது சிவபெருமான் என்பது தெரிந்திருக்கும்.

அப்படிப்பட்ட பொதிகையை பிற மதத்தவர்கள் கையடக்கி அவர்கள் வழிபாட்டு ஸ்தலமாக மாற்ற முயன்ற பொழுது, ஒரு சில நல்ல மனிதர்களின் முயற்சியால், அகத்தியப்பெருமானின் சிலை 1970-71இல் நிறுவப்பட்டது. அந்த சிலை இப்பொழுது இல்லை எனினும், அந்த நிகழ்ச்சி சம்பந்தமாக கிடைத்த இரு புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சிறிய சிலையாக இருந்தாலும், மிக அழகாக வடிவமைக்கப்பட்டதும், இன்றும் எங்கும் காண முடியாத அழகுடன் இருப்பதை கவனியுங்கள்.ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

5 comments:

 1. ஓம் அகத்தீசா போற்றி..
  அம்மா லோபமுத்ரா தாயே போற்றி்...

  ReplyDelete
 2. ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம்

  ReplyDelete
 3. ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம்

  ReplyDelete
 4. ஓம் அகத்தீசாய நம !
  குருவே சரணம் !

  ReplyDelete
 5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

  ReplyDelete