​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 2 July 2020

சித்தன் அருள் - 874 - தாவர விதி!


தாவர சாபம் அல்லது தாவரங்களுக்கு இழைத்த அநீதி மனித குலத்தில் பல்வேறு நிலைகளில் ஒருவரை வருத்துகிறது.
 • வயதான காலத்தில், நோய்கள் வந்தால், சித்த/ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்டாலும், நோய் குணமாகாத நிலைமை.
 • அதே மருந்து, நாம் பார்த்துக்கொண்டிருக்க, பக்கத்தில் ஒருவருக்கு விரைவாக சுகப்பிராப்தியை கொடுப்பது,
 • எந்தவித மருத்துவம் பார்த்தாலும், நோய் என்னவென்று, கண்டுபிடிக்க முடியாமை,
 • சில நேரங்களில், கொடுக்கும் பிற மருத்துவ மருந்தே, உயிருக்கு ஊறு விளைவிப்பது, 
 • சந்ததிகளால் வயதான காலத்தில் நோய் வாட்டும் நேரத்தில் கைவிடப்படுவது,
 • கட்டுக்குள் அடங்காத தலைமுறை, 
 • அவர்கள் செய்து கூட்டுகிற பாபங்கள்,
 • பிறப்பு முதலே வயிறு, நுரையீரல், மார்பு, இவைகளில் நீர் கட்டு, நிரந்தர சளி
 • ஒவ்வாமை, என எவ்வளவோ சொல்லலாம்.

இவைகளில் நாமும், பின்னர் வரும் தலைமுறைகளும் மாட்டிக் கொள்ளாமல், அமைதியாக, ஆரோக்கியமாக வாழ, தாவர சாபம் நீங்க, சில எளிய வழிகள் உள்ளன.
 1. இரும்பு, தகரம் போன்றவைகளை, தாவரங்களை பறிக்க உபயோகிக்காதீர்கள்.
 2. தாவரங்களிடம் நடந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை, முன் சொன்னது போல், நித்ய வாழ்க்கையில் நடை முறைப்படுத்துங்கள்.
 3. தவிர்க்க முடியாமல் ஒரு தாவரத்தை அழிக்க வேண்டி வந்தால், சித்தர்கள் கூற்றின்படி, 1008 செடிகளை நட்டு வளர்க்க வேண்டும்.
 4. குழந்தைகளுக்கு, தாவர விதைகளை வாங்கிக்கொடுத்து, அவைகளை விதைத்து, வளரச்செய்யும் முறையினை, கற்பிக்கலாம். 
 5. இதை பள்ளிக்கூடங்களில், அவர்கள் அனுமதியுடன், மாணவ, மாணவியருக்கு, செடி, விதை போன்றவை வாங்கிக்கொடுத்து, ஊக்குவிக்கலாம். இது ஒரு சிறந்த பரிகாரமாக அமையும்.
 6. வெயில் காலத்தில், இருக்கும் தாவரங்கள் வாடிவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யலாம்.
 7. தேவைக்கு மட்டும் எடுத்துக்கொண்டு, எது எப்படி போய் அழிந்தாலும் நான் கவலை கொள்ள போவதில்லை என்கிற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
 8. தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது, என்றுணர்ந்து, அவைகளின் தழைத்து வளரும் முயற்சிக்கு தடையாய் இருக்கும் விஷயங்களை நாமே முன் வந்து அகற்றுவது.
 9. தாவரங்களை படைத்தது இறைவன் ஆகினும், அவை அனைத்தும் சித்தர்களுக்கு உரிமை உள்ளதென உணர்ந்து, அவர்களிடமும், நம் தேவைக்கு பறிப்பதற்கு முன் ஒரு அனுமதி விண்ணப்பத்தை வைப்பது,

என எத்தனையோ வழிகள் உண்டு.

"புரிந்தது! அகத்தியப் பெருமான் மருத்துவம் என்பது மற்ற சித்தர்களை விட சற்று வித்யாசமாக இருக்கும் என கேள்விப்பட்டுள்ளேன். சுருங்கக்கூறின், உணவே மருந்து என்பார். அதேபோல், அநேகமாக எந்த வியாதிக்கும், உட்கொள்ளும் உணவை சீர்படுத்தி, நோயை குணப்படுத்தும் மருத்துவ முறையில் அவர் சிறந்தவர். இருப்பினும், அடியேனுக்கு ஒரு கேள்வி உள்ளது. சிறிது நீண்ட காலம் எடுக்கினும், தொடர்ந்து அந்த மருந்தை உட்கொண்டால், உடலை வருத்தும் எந்த நோயும் குணமாகிற, ஒற்றை மூலி தாவரம் இங்குள்ளதா?" என்றேன்.

"இருந்தாலும் ரொம்பத்தான் ஆசைப்படுகிறீர்கள். ஆடிய ஆட்டம், சேர்த்த கர்மாக்கள் எல்லாம், ஒரு மூலிகையில் விலகிவிட வேண்டும் என்பது, கொஞ்சம் அதிகமாக தோன்றவில்லை? சரி!, இருக்கிறது. நீங்கள் அனைவரும் தினமும் காண்கிற தாவரங்களின்/மரங்களின் இலைகளில் அந்த பொக்கிஷம் அடங்கியிருக்கிறது. வாழை, மா, பலா, கொய்யா, பவிழமல்லி, துளசி, வில்வம், தும்பை, என அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றினை, தினமும் குடிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதன் சாறு இறங்கிய நீரை தினமும் குடித்து வந்தால், உடல் நோய்கள் விலகும், குறைகள் அகலும். உதாரணமாக, கொய்யா இலை பற்றி ஒரு தொகுப்பு என்னிடம் உள்ளது. அதை அனுப்பி தருகிறேன். படித்துப் பாருங்கள். உங்கள் கேள்விக்கு சிறந்த பதிலாக இருக்கும்" என்றார்.

அவர் அனுப்பியதை கீழே தருகிறேன்.

கொய்யா மரத்தின் பழத்தை விட அதன் இலைகளுக்கு தான் மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ளன. அடிக்கடி சளிப்பிடிக்கும் நோயாளிகளும், ஆஸ்துமா நோயாளிகளும் கொய்யாப் பழத்தைச் சாப்பிடக் கூடாது. மற்றவர்கள் தினம் ஒரு கொய்யாப் பழம் சாப்பிடலாம். கொய்யாப் பழம் மலச்சிக்கலை நீக்க வல்லது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்புச் சுவை உடைய கொய்யா பழத்தைச்  சாப்பிடக் கூடாது. அவர்கள் துவர்ப்பு சுவை உடைய கொய்யாக் காயைச் சாப்பிட வேண்டும்.

கொய்யா  இலையின் பயன்கள்:-

தன்மை : குளிர்ச்சி, சுவை :  துவர்ப்பு

கொய்யா இலைக் குடிநீர்:-

போகர் சித்தரை வணங்கி, தாவர மூலிகை தேவியை வணங்கி, பச்சையான 8 கொய்யா இலைகளைப் பறித்து வந்து, ஒரு பாத்திரத்திலிட்டு  அதில் 500 மி.லி நீர்விட்டு பாதியாக வற்றக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி இளம் சூட்டில் காலை உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் குடிக்கவும். இதேபோல் குடிநீர் செய்து மாலையிலும் குடிக்கவும். இவ்வாறு 3 மாதங்கள் தொடர்ந்து  குடித்துவர சர்க்கரைநோய் கட்டுப்படும். அதிக உடல்பருமனும் குறையும்.  சர்க்கரை நோய்க்கு ஆங்கில மாத்திரை  சாப்பிடுபவர்கள் அந்த மாத்திரைகளை உணவிற்கு பின்பு சாப்பிட்டு, இந்த குடிநீரை உணவிற்கு முன்பு குடித்து வரலாம். ஆரம்பநிலை சர்க்கரை நோய்க்காரர்களுக்கு இந்த கொய்யா இலைக் குடிநீரே நல்ல பலனைத் தரும்.

கொய்யா இலைக் குடிநீரை தினமும் காலை,மாலை குடித்துவர கீழ்க்காணும் நோய்கள் குணமாகும்.
 1. நீரழிவு நோய் (டைப்-2)  கட்டுப்படும்.
 2. உயர் இரத்த அழுத்தம் சீராகும்.
 3. மலச்சிக்கல் நீங்கும்.
 4. மூலநோய்க் குணமாகும்
 5. இரத்தமூலம் நீங்கும்
 6. தீராத வயிற்றுவலி தீரும்
 7. அதிக உடல் பருமன் குறையும்.
 8. குறை தைராய்டு என்ற ஹைப்போ தைராய்டு சீராகும்.
 9. கெட்ட கொழுப்பை (L.D.L),(T.G.L) கரைக்கும்.
 10. மாத விடாய்கால அதிக இரத்தப் போக்கை நிறுத்தும்.
 11. பெண்களுக்கு வெள்ளைப்படுதலை குணமாக்கும்
 12. கருப்பை, சினைப்பை நீர்க்கட்டிகளை கரைக்கும்
 13. கருப்பை நோய்களை நீக்கி குழந்தைப் பேறு கிடைக்க வழிவகுக்கும்
 14. ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும். விந்துக் கசிதலை நிறுத்தும்.
 15. விந்தணு குறைபாட்டை போக்கும்.
 16. விரை வீக்கத்தைக் குணமாக்கும்.
 17. பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தைக் குறைக்கும்.
 18. புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.
 19. மஞ்சள் காமாலையைக் குணமாக்கும்.
 20. கல்லீரல்,கணையம் நோய்களைக் குணமாக்குகிறது.
 21. சிறுநீரை நன்கு பிரிக்கும்.
 22. சிறுநீர் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கும்.
 23. நீரடைப்பு,சதையடைப்பு நீங்கும்.
 24. வாந்தி நிற்கும்
 25. நெஞ்சு எரிச்சல் நீங்கும்
 26. வயிற்று உப்பிசம் நீங்கும்.
 27. வயிறு எரிச்சல் நீங்கும்
 28. வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
 29. வாய்ப்புண், தொண்டைப்புண்,வயிற்றுப் புண்கள் ஆறும்.
 30. குடிபோதை வெறி தணியும்.
 31. மது மீது நாட்டம் குறையும்.
 32. கிருமிகளால் வரும் வயிற்றுப் போக்கை நிறுத்தும்.
 33. சூட்டினால் வரும் இருமல் குணமாகும்.
 34. இதய நோய்கள் குணமாகும். இரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
 35. நன்கு பசி எடுக்கும்.
 36. செரியாமை நீங்கும்.
 37. அடிக்கடி ஏப்பம் வருதல் குணமாகும்.
 38. தலைச்சுற்றல்,மயக்கம் சீராகும்.
 39. காலரா கட்டுப்படும். (தினம் 4 வேளை குடிநீர் குடிக்க வேண்டும்)
 40. வயிற்றில் கெட்ட கிருமிகளை அழிக்கிறது.
 41. உடல் சோர்வைப் போக்குகிறது.
 42. மூளையை பலப்படுத்துகிறது.
 43. தோல்நோய்களை குணமாக்குகிறது. இளம்வயது உடையவர்களுக்கு ஏற்படும் தோல் சுருக்கத்தை நீக்குகிறது. முகப்பருக்களைப் போக்குகிறது.
 44. இரத்தத்தை சுத்தமாக்குகிறது.
 45. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
 46. தூக்கமின்மையைப் போக்குகிறது.(இரவு படுக்கப் போகும் முன்பு குடிக்கவும்)
 47. மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
 48. பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்குகிறது.
 49. மூட்டுவலி,,மூட்டு எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.
 50. நரம்புத் தளர்ச்சியை போக்குகிறது.
 51. கண்பார்வைத் திறனை அதிகரிக்கிறது.
 52. கெட்ட பாக்டீரியா, பூஞ்சைகளை அழிக்கிறது.
 53. நினைவாற்றலை அதிகரிக்கிறது.
 54. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கின்றது.
 55. உடலுக்குத் தேவையான  உயிர்ச்சத்துக்களும் (வைட்டமின்) தாது உப்புக்களும் நிறைந்தது.ஆகவே இளநரையைத் தடுக்கும்.
 56. வைட்டமின் "C 'பற்றாக் குறையினால் வரும் ஸ்கர்வி நோய் வராமல் தடுக்கிறது.
சித்தன் அருள்....................... தொடரும்!

3 comments:

 1. ஆஹா கொய்யா இலை ஒரு அருமையான ஒற்றை மூலி தாவரம் என அறிந்து கொண்டோம். அனைத்தும் சித்தரின் அருள்.
  ஓம் அகத்தீசாய நமஹ.

  ReplyDelete
 2. ஒம் ஈஸ்வராய நமக

  ReplyDelete
 3. கொய்யா இலைகளில் இவ்வளவு மருத்துவ குணங்களா ஆச்சர்யமாக உள்ளது.மேலே கூறிய மற்ற தாவர இலைகளின் மருத்துவ பயன்களும் கிடைத்தால் வெளியிடுங்கள் ஐயா
  நன்றி..
  ஓம் அகத்தீசாய நமஹ ..

  ReplyDelete