​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 26 January 2020

சித்தன் அருள் - 840 - அகத்தியர்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கல்யாணதீர்த்தத்தில் அகத்தியர் பூஜை :-

கல்யாண தீர்த்தத்தில் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு சிறப்பான பூசை நடை பெற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட வீடியோவை ஒரு அகத்தியர் அடியவர் சித்தனருளுக்காக பகிர்நது கொண்டார். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 


அகத்தியர் அறிவுரை :-

அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் வந்து தனிப்பட்ட முறையில் வாக்குரைக்கும் பொழுது, சில விஷயங்களை பொதுவாக பகிர்ந்து கொள்ளச் சொல்வார். அடியேனுடைய நண்பர், ஒரு அகத்தியர் அடியவர், சமீபத்தில் நாடி கேட்கச் சென்ற பொழுது வந்த அருள் வாக்கை அடியேனிடம் பகிர்ந்து கொண்டு, சித்தன் அருள் வழி, அனைத்து அடியவர்களுக்கும் தெரிவிக்கும்படி, வேண்டிக்கொண்டார். அவர் தெரிவித்ததிலிருந்து பொதுவாக நம் எல்லோருக்கும் ஆன அருள்வாக்கை இங்கு தெரிவிக்கிறேன். அனைத்து அகத்தியர் அடியவர்களும், அவர் உத்தரவை சிரம் மேற்கொண்டு நடை முறைப்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

1.ஒரு சில மாதங்களுக்கு முன் மழை வளம் வேண்டி அகத்தியர் அடியவர்கள் அனைவரையும் விளக்கேற்றி வேண்டிக்கொள்ளச் சொன்னது நினைவிருக்கலாம். அத்தனை வேண்டுதலையும் இந்திரன் மனம் நிறைவாய் ஏற்றுக்கொண்டு, நிறைய மழை பெய்வித்து அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிய உத்தரவிட்டது, பயனை தந்துள்ளது. அனைத்து அடியவர்களுக்கும் அகத்தியப் பெருமானின் ஆசிகள்.

2. இனி வரும் காலத்தில் ஆயுதப்பிரயோகம், துஷ்டத்தன்மை, அறிவிழந்து மோகத்தால், மனிதர் மாள்வார். இவ்வையகத்தில் நடக்கப்போகும் தீங்கு விலகிட எங்கள் தலைநாதன் முருகனே துணையாய் நின்று, நலம் பல ஆற்றிடும் காலமப்பா. இந்த காலமதில் நலம் விளைய அனைவரும் முருகப்பெருமானை ஆராதிக்க வேண்டும். அப்படிச் செய்யின் உயர்வான புவன நலம் விளையும். நாம் செய்கிற விஷயங்களில் நிறைவான தலைமை பண்பு முருகனருளால் வந்து சேரும். தன் கடமையை குறைவற செய்ய வல்லவனாகிய முருகன், இணை ஒன்றும் இல்லாத சித்தர் தலைவன், வேண்டுதலுக்கிணங்கி இறங்கி வருவான். புவனம் முழுவதும் சுத்தியாகும். எத்தலம் ஏகி வேண்டினாலும், அழகனாம் முருகனே சூட்ச்சுமமாய் நின்று பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான். முருகனுக்கு ப்ரீதி செய்யின் பூரணமாகும். இந்த காலமதில் புவனத்தில் நலமே உண்டாகும். புவன நலம் காக்க, அன்னை வாலையின் உத்தரவின் படி, விரைவில் சித்தர்கள் விஜயம் எங்கும் உண்டாகும்.ஆசிகள்.

3. ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும்  அவைகளை மோக்ஷத்திற்கு கரை ஏற்றிவிட இங்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. ஆதலின், கீழ்கண்ட பிரார்த்தனையை அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள் செய்யச்சொல்கிறார்.

எல்லா மாதமும் "திருவோணம்" நட்சத்திரத்தன்று, ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும். இதை செய்யும் முன், பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும். நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார் என உரைத்துள்ளார். பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள் வாக்கும் வந்துள்ளது. அடியேன் இரண்டு மாதங்களாக செய்து உணர்ந்துவிட்டேன். திருவோண நட்சத்திரம் என்று வருகிறது என பார்த்து செய்ய வேண்டியது ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் கடமையாகும்.

4. மதுரையில் திருப்பரங்குன்றத்துக்கு அருகில் பசுமலை என்கிற இடத்தில் உள்ள "சக்தி மாரியம்மன் கோவிலில்" நம் குருநாதர் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் 07/02/2020 அன்று காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் சுபமுகூர்த்தத்தில் நடைபெற உள்ளது. அந்த அழைப்பிதழை கீழே உள்ள தொடுப்பில் தருகிறேன். அனைவரும் சென்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அவர்கள் அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.


சித்தன் அருள்................ தொடரும்!

4 comments:

  1. Ayyane ungal arul.... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    அப்படியே செய்கிறோம் ஐயனே

    ReplyDelete
  2. Ayya please ask medicine from our GURU for corona virus to save lives..

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்
    ஓம் அகத்தீசாய நம:
    குருவருளாலும் எல்லாம் வல்ல இறையின் திருவருளாலும்
    அ/மி லோபாமுத்திரை சமேத அகத்திய மகரிஷி ஆலய கும்பாபிஷேகம் இனிதே நிறைவுப் பெற்றது. அந்த
    நிகழ்ச்சியின் காணொலி படங்கள் அனைத்து அடியார்களின் பார்வைக்கு பதிவிட்டுள்ளோம்.
    இப்பணியில் பல வகையில் தொண்டாற்றிய அனைத்து நல் இதயங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கிறோம்.
    அ/மி அன்னையுடனாய அகத்திய மகரிஷி பாதம் காப்பு
    மதுரை பசுமலை அகத்திய மகரிஷி ஆலய திருப்பணிக்குழுவினர்கள்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    https://youtu.be/SxtNl3itfIY

    *இந்த அற்ப்புத காட்சியை அனைவருக்கும் , அனைத்து ஊடகங்களிலும் பகிர வேண்டுகின்றோம்*

    இறை அருளால் பிப்ரவரி 7ஆம் தேதி , 2020 அருள்மிகு ஶ்ரீ உலோபாமுத்திரை உடன்உறை அகத்திய மாமுனி ஆலய குடமுழுக்கு விழா இனிதே நிறைவேறியது. உங்கள் பார்வைக்கு சமர்பிக்கின்றோம்.

    🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸
    *சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வேந்தன், தமிழ் வளர்த்த அகத்திய மாமுனி புகழ் ஓங்குக*
    🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸

    ReplyDelete