​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 3 January 2020

சித்தன் அருள் - 836 - பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

13/01/2020, திங்கட்கிழமை அன்று நம் குருநாதரின் திருநட்சத்திரம் வருகிறது. உலகெங்கும் உள்ள அகத்தியர் கோவில்களில்/ சன்னதிகளில்  அன்றைய தினம் மிகச்சிறப்பாக அபிஷேக பூஜைகள்/ஆராதனைகள் நடைபெறும்.

அடியேன் எல்லா வருடமும் அந்த தினத்தில், பாலராமபுரத்தில் அமைந்துள்ள "ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலில்" நடக்கும்  பூசையில் கலந்து கொள்வேன். அனைத்துமே அவர் அருளால் மிக சிறப்பாக அமையும்.

"சித்தன் அருள்" வலைப்பூவின் அகத்தியர் அடியவர்கள்/வாசகர்கள் அகத்தியர் திரு நட்சத்திர விழா/கோவில் பூசையில் பங்குபெறுகிற கோவில் தொடர்பை கேட்டிருந்தனர். உரிய தகவல்களை கீழே தருகிறேன்.

விருப்பமுள்ளவர், இந்த தகவலை உபயோகித்து தொடர்பு கொண்டு, அகத்தியர் திருநட்சத்திர விழாவில் பங்கேற்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ அகஸ்தியர் ஸ்வாமி திருக்கோவில்,
பாலராமபுரம், திருவனந்தபுரம், கேரளா.
தொடர்புக்கு : திரு. ரதீஷ், பாலராமபுரம் 9020202121
திரு. சுமேஷ், பூஜாரி, அகத்தியர் கோவில் 9497866079

அன்றைய தின அபிஷேக பூஜைகள் தொடர்பான விவரங்கள்.

காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்படும்.
காலை 5.30 மணிக்கு நிர்மாலய தரிசனம் பின்னர் 
அபிஷேக பூஜைகள்.
காலை 6.30 மணிக்கு பூஜை, தீபாராதனை 
காலை 8.45க்கு நிவேதனம், ஆரத்தி.
காலை 9 மணிக்கு கோவில் நடை சார்த்தப்படும்.
மாலை 5 மணி முதல் 7.30 வரை கோவில் திறந்திருக்கும்.

13/01/2020 அன்று ஏதேனும் ஒரு அகத்தியப்பெருமான் கோவிலில், பூஜையில் பங்குபெற்று, உழவாரப்பணி செய்து, அவரின் திருவருளை பெறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

சித்தன் அருள்.............. தொடரும்!

8 comments:

  1. ஐயா திருச்சி அருகே ஸ்ரீ அகத்தியர் சுவாமி கோவில் எங்காவது உள்ளதா என்று கூற முடியுமா

    ReplyDelete
  2. Anandhavalli Udaltherai Sri Agastheeswarar Temple
    Perugamani, Trichy District

    https://tamilnadu-favtourism.blogspot.com/2018/03/agastheeshwarar-temple-perungudi-trichy.html

    https://www.agathiar.in/

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

    ReplyDelete

  4. கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய பூசைக்கு அனைவரையும் வரவேற்கின்றோம்

    அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்!
    அனைவருக்கும் வணக்கம்.

    நமது குருவின் மகா ஆயில்ய கொண்டாட்டத்தில் அனைவரும் அருள் பெற இருக்கின்றீர்கள். இந்த பதிவின் மூலம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலய அகத்தியரின் மகா ஆயில்ய கொண்டாட்டதிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இந்த நிலையில் சித்தன் அருள் வலைப்பதிவில் ஒரு கேள்வியும் அதற்கான பதிலையும் தந்து இந்தப் பதிவை தொடர விரும்புகின்றோம்.

    அகத்தியருக்கு ஆயில்யம் நட்சத்திரம் என்பது இல்லை எனபதே கேள்வியின் நோக்கம். சிவன் செய்த யாகத்தால் அகத்தியர் தோன்றினார் என்பதே சொல்லப்பட்டது. இந்தக்கேள்விக்கு நம் குழுவின் சிலர் இவ்வாறு பதில் கூறி இருந்தனர்.


    நட்சத்திரங்களுக்கு அப்பாட்பட்டவர் அகத்தியப் பெருமான். இந்த மானுடங்களை கடைத்தேற்ற அவரால் வகுக்கப்பட்டது ஆயில்ய பூசை. இந்த பூசையால் பயன்பெற்றோர் ஏராளம்.இது மிக மிக உண்மை..சித்தர்களுக்கு நாளென்பது கிடையாது. நட்சத்திரம் என்பதும் கிடையாது. இவை எல்லம்மா நம் வழிபாட்டிற்காக/ மன மகிழ்ச்சிக்காகவே உள்ளது.அன்றைய தினம் குருவினை சரணடைய ஒரு வாய்ப்பு என்றும் கூட சொல்லலாம். இன்னும் ஆழமாக மனதை உழுதால்,சித்தன் அருள் இவ்வாறு பேசுகின்றது.

    Read more - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html


    குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து

    ரா.ராகேஷ்
    கூடுவாஞ்சேரி

    ReplyDelete
  5. மதுரை மாவட்டத்தில் ஸ்ரீ அகத்தியர் ஆலயம் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Tiruchunai Agastheeswarar Temple, Madurai. In the Madurai - Tiruchchirappalli highway. From karuNgAlakkudi bus stop about two km.

      https://temple.dinamalar.com/en/new_en.php?id=480

      https://shaivam.org/hindu-hub/temples/place/471/thiruchchunai-agasthIswarar-temple

      Delete
  6. பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ்
    இறை அன்பர்களே...

    பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்,திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்,திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில் என பார்த்தோம். இதில் நாம் சென்ற போது அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார். கும்பாபிஷேகம் முழுமை பெற்ற பின்னர் இன்னும் அவரை தரிசிக்க இயலவில்லை. வருகின்ற 2020 புது ஆண்டில்அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் தரிசனம் பெற விழைகின்றோம். வேண்டுவது நம் விருப்பம். வேண்டியதை தருவது அவனின் தாள் அன்றோ! இந்த தொடர்பதிவில் இன்று நாம் காண கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் தரிசனம் மற்றும் ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் காண இருக்கின்றோம்.


    கும்பேசுவரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள பெருமையினையும் இக்கோயில் பெற்றுள்ளது.

    Read more -https://tut-temples.blogspot.com/2020/01/9.html

    குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து

    ரா.ராகேஷ்
    கூடுவாஞ்சேரி

    ReplyDelete
  7. அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020
    அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

    குரு என்ற வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி. மாயமின்றி நம்மை வாழ்க்கைக்கடலில் நீந்த குரு அவசியம். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர நம்மை ஆயத்தப்படுத்துபவர் குரு. இன்றைய சூழலில் குரு கிடைப்பது அரிது. கிடைத்த குருவை தொடர்வது அரிதினும் அரிது. குரு தொட்டுக்காட்டிய வித்தையை பழகுவது அரிதினும் அரிது. ஆம். குரு இல்லா வித்தை பாழ்! இன்று குருமார்கள் பலர் கேள்விக்குரிய செய்திகளாக வலம் வந்து விடுகின்றார்கள். அதனால் தான் சொன்னோம் குரு கிடைப்பது அரிது என்று. நமக்கெல்லாம் உலகிலேயே உன்னதமான குருவாக ஸ்ரீ அகத்தியர் பெருமான் கிடைத்துள்ளார். நம் குழுவின் மூலம் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்யம் நட்சத்திர வழிபாடு செய்து வருகின்றோம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாம் மேலும் சில அகத்தியர் ஆலயங்களில் நம் சேவையை தொடர்ந்து வருகின்றோம். அகத்தியர் ஆயில்ய பூசை முதலில் புறத்தில் நடைபெறும். நாட்கள் செல்ல செல்ல நாம் அகப்பூசையில் கொண்டாடி மகிழ்வோம் என்பது நிதர்சனம்.

    அகத்தியம் காட்டுவது அன்பே தான். அன்பின் ஆழம் தான் அகத்தியம். இன்று மேலும் ஒரு அகத்தியர் குரு பூசை விழா அழைப்பிதழை இங்கே பகிர உள்ளோம்.


    நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
    நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
    செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
    சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
    வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
    வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
    அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
    அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!


    Read more - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

    குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து

    ரா.ராகேஷ்
    கூடுவாஞ்சேரி

    ReplyDelete