ஆக்சிஜென் என்று மனிதர்களால் அழைக்கப்படுகிற வாயுவை பிராண வாயு என்று கூறலாம். அதை உள்வாங்கித்தான் அத்தனை ஜீவன்களும் இவ்வுலகில் உயிர் வாழ்கின்றது. மனித உடலை ஒரு விந்தையான உலகமாக சித்தர்கள் கூறுவர். அப்படிப்பட்ட அரிய உலகத்தை கவனிக்காமல், மனிதன் உலகாயாத விஷயங்களில் கவனம் செலுத்துவதே, அவன் எதிர்கொள்கிற அனைத்து பிரச்சினைக்கும்,காரணமாக அமைகிறது.
ஒரு மனிதன் சுவாசிக்கும் காற்றை அவன் உடல் பத்துவிதமாக உள்ளே பிரித்து எடுத்துக்கொள்கிறது. ஆகவே, ஒரு மனிதனுள் இருக்கின்ற வாயுவை, "தசவாயுக்கள்" (தசம் - பத்து) என்று சித்தர்கள் அழைத்தனர். இந்த தசவாயுக்களும் உடலில் கால் முதல், தலைவரை பரவி நின்று, உடலியக்கத்தை நடத்துகின்றது. உடலில் இருக்கவேண்டிய. ஏதேனும் ஒரு வாயுவின் அளவில் குறைவு ஏற்படுகிற பொழுது, பித்தம், வாதம், கபம் போன்ற மூன்று உள் நிலைகளில் பாதிப்பு ஏற்பட்டு, உடல் நோய் வாய்ப்படுகிறது. இந்த தச வாயுக்கள் உடலுக்குள் பரவி நிற்பது மட்டுமல்லாமல், ஒரு தேர் ஊர்வதுபோல் அசைந்து நடக்கிறது. இவற்றை பிராணாயாமத்தினால் கட்டுப் படுத்த முடியும். அப்படி கட்டுப்படுத்த தெரிந்த ஒருவனை சித்தர்கள் "தசரதன்" என்றழைத்தனர்.
அந்த பத்து வாயுக்கள் எவை என்று பார்ப்போம்.
1. பிராணன்
2. அபானன்
3. வியானன்
4. உதானன்
5. சமானன்
6. நாகன்
7. கூர்மன்
8. கிருகரன்
9. தேவதத்தன்
10.தனஞ்ஜயன்
என்பவை தசவாயுக்களாம். தசம் என்றால் பத்து என்று பொருள்படும். மனித உடம்பின் இயக்கத்திற்கும், உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் உறுதுணையாய் இருப்பது இந்த தச வாயுக்களே ஆகும். இந்த வாயுக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தி, உடல் பழுதை நீக்கி, விதிக்கப்பட்ட நாள் வரை நோய், நொடி இன்றி ஒரு மனிதன் வாழ்ந்திட வேண்டியே, மூச்சின் முறையை உணர்ந்து, "பிராணாயாமத்திற்கு" சித்தர்கள் அத்தனை முக்கியத்துவம் கொடுத்தனர். தினசரி மூச்சு பயிற்சி, எந்த நோயையும் உடலை விட்டு விரட்டும். எந்த விதமான மருந்தும் பின்னர் அந்த உடலுக்கு தேவைப்படாது. பிராணாயாமப் பயிற்சி செய்பவர்கள் உடல் ஒருவித தேஜஸ்ஸை அடையக்காரணமே, இந்த தசவாயுக்களின் அமைப்புதான்.
ஒலியானது அதிர்வலைகளை ஏற்படுத்தும். உடலுள் புகுகின்ற அதிர்வலைகள், உடலுள் உள்ள தடைகளை நிரவி, சமன்படுத்தி, தச வாயுக்களும் உடலுள் தங்கு தடையின்றி பரவிநிற்க உதவி புரிகின்றது. உடல் இந்த "பிராணாயாமம் + ஒலி" கூட்டு அமைப்பில் மிக மிக சிறந்து விளங்கும் என்று உணர்ந்த சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் போன்றவர்கள், எந்த வாக்குகளின் உச்சரிப்பு என்ன செய்யும் என்று கண்டுபிடித்து, மந்திரங்கள் என்பதை ஜபம் என்கிற முறைக்குள் புகுத்தினர். அதிகாலை "சுப்ரபாத மந்திர" அதிர்வலைகளும், அஸ்தமன கால "ஸஹஸ்ரநாம மந்திர" அதிர்வலைகளும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். காஞ்சி மகான் ஒருவரின் உடல் பிரச்சினைக்கு மாற்று வழியாக, ஒரு மண்டலம் "விஷ்ணு சஹஸ்ரநாம" பாராயணத்தை பரிந்துரைத்தார். ஒரு மண்டல பாராயணத்தில் நோய் உடலைவிட்டு விலகிப்போனது. அப்போது ஒருவரின் கேள்விக்கு விடையாக "நாராயணனின் ஆயிரம் நாமங்களைக்கொண்ட விஷ்ணு சஹஸ்ரநாமமே அனைத்து நோய்க்கும் மருந்தை தன்னுள் கொண்டுள்ளது. அதை நம்பிக்கையுடன் ஒரு மண்டலம் ஜெபித்திட இந்த ஜென்மத்து பாபத்தை/நோயை விரட்டிவிடலாம்" என்றார்.
நம் முன்னோர்கள் பார்த்துப் பார்த்து கோர்த்து வைத்துவிட்டுப் போன மந்திரங்களில் பலவித அதிசயங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.
உதாரணமாக, மூச்சடைப்பு, இருதய நோய், உள்ளவர்கள் "விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்" வரும் கீழ் கண்ட ஸ்லோகத்தை தினமும் பலமுறை கூறிவந்தால், அது ஒரு சிறந்த மூச்சு பயிற்சியாக அமைந்து, உடலுள் உள்ள குறைகளை நிவர்த்தி செய்கின்றது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த மந்திரத்தை உச்சரிக்கிற பொழுது, ஆள்காட்டி விரலை மூக்கினருகில் வைத்துப் பார்த்தால், மூச்சு காற்று உள் செல்வதோ, வெளியே வருவதோ இல்லை என்பதை உணரலாம். ஆனால் வாய் வழி மட்டும் காற்று வெளியே செல்வதை உணரலாம்.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே!
ஆதலினால், பெரியவர்கள், விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுவதுமாக சொல்லத் தெரியாவிட்டாலும் இந்த ஸ்லோகத்தை பத்து முறை கூறினால், முழு சஹஸ்ரநாமமும் கூறிய பலன் கிடைக்கும் என்று "சூக்ஷுமமாக" கூறிச் சென்றனர்.
ஒவ்வொரு மூல மந்திரமும் அத்தனை சக்தி படைத்தவையாக இருக்க காரணம், அவற்றை உச்சரிக்கும் பொழுது ஏற்படும் அதிர்வலைகள் உடலுக்குள் தசவாயுக்களை தட்டி உணர்த்தி, சிறந்த கவசத்தை உருவாக்குவதால்தான். மந்திரமாக ஒலி அலைகளை உருவாக்கி இவ்வுலகுக்கு அளித்த பொழுது பெரியவர்கள் இவர்தான் இவற்றை கூறலாம் என்று தீர்மானிக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட அதிர்வலைகளை (அதர்வணம்) யாருமே உருவாக்காதீர்கள் என்றுதான் உரைத்தனர்.
ஐயா அதர்வண வேதம் ஒரு மனிதனின் வாழ்வை பாதிக்குமா அப்படி பாதிக்கும் என்றாள் அதில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி . நாம் அதர்வண வேதத்தில் பாதிக்க பட்டுள்ளோம் என்பதை எப்புடி அறிந்துகொள்வது .கேள்வி தவறு என்றால் மன்னிக்கவும்
ReplyDeleteOmsri lopamudra samata agastiyar thiruvadi sàranam.Ayya vanakam.evalalav susamngal pranatil ayya.therivithammaiku nandri ayya.
ReplyDeleteDEAR SIR
ReplyDeleteIS THERE ANY 1008 NAMAVALI OR SAHASHARANAMAM FOR GURUJI AGATHIYAR
அடியேன் அனுபவ பதிவு.
ReplyDeletehttp://fireprem.blogspot.com/2020/01/blog-post.html?m=1
ஓம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக
ReplyDeleteOm sri gurunathar thiruvadigal porri ,
ReplyDeleteSiva perumanuku Ethu pol ellimaiyana rendu adigal ulla kural irruthal sollavum megavum magilven sami.
திரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்தனம்
Deleteஉர்வார் ருகமிவ பந்தனாத் ம்ரித்யோர் முக்ஷி யமாமிர்தாத்!