"தேவருக்குற்ற கோயில்
திருமகள் தேடி நிற்கும் கோயில்
தீராக்குறை தீர்க்கும் கோயில்
தவறிழைப்பாரைக் கொல்லும் கோயில்
யாம் போற்றும் பத்மநாபனவன் கோயில்"
என்பது அனந்தசயனத்தை பற்றிய அகத்தியர் வாக்கு.
அனந்தசயனம் என்ற வார்த்தையை கேட்டால் சித்த மார்கத்தில் செல்பவர்கள் ஒரு நிமிடம் மௌனமாகி, மனதுள் அகத்தியரை நினைத்து நமஸ்காரம் செய்வர். இது சான்றோர் நிலை. மற்றவர்கள், இந்த வார்த்தையை கேட்டால், ஆச்சரியத்துடன், ஏதோ கிடைத்தாற்போல் பூரித்துப்போய், நிறைய கேள்விகளை கேட்பார்கள். இந்த இருவகை மனிதர்களின் எண்ணமும் இரு திசையில் செல்வதே காரணம்.
முன்காலத்தில் அனந்தசயனம், அனந்தபுரி என்றழைக்கப்பட்ட நிலப்பரப்பே இன்று "திருவனந்தபுரம்" என்றழைக்கப் படுகிறது. இங்கு குடிகொண்டுள்ள இறைரூபத்தின் பெயரான "அனந்த பத்மநாபன்" என்கிற பெயரிலிருந்து உருவானதே "திரு அனந்தபுரம்".
இந்த கோவில் உருவாக்கியதில் நம் குருநாதருக்கு நிறையவே பங்குண்டு. இறைவன் அருளால், எத்தனை பெரிய முயற்சி எடுத்து இந்த கோவிலை உருவாக்கினார் அகத்தியர், என்பதை தெரிந்துகொண்டால், மனத்தில் ஒருவித பயமும், பக்தியும் உருவாகும், என்பதை அடியவர்களுக்கு உணத்தவே, இந்த தொகுப்பை சமப்பிக்கிறேன்.
முதலில் நாம் நமக்குள்ளே சில கேள்விகளை கேட்கவேண்டும். அவை,
1. திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாளுக்கு சேவை செய்து, சேரநாட்டை ஆண்டு வந்த மன்னர்களுக்கு, எதற்கு, அதே போல் இன்னொரு கோவில் கட்ட தோன்றியது? காரணம் என்ன? தேவை என்ன?
2. பத்மநாபபுரத்தை தலைநகராக கொண்டு சேரநாட்டை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மகாராஜா, திடீரென ஒரு முடிவெடுத்து, திருவனந்தபுரத்துக்கு தலைநகரை மாற்றியமைத்து, கோவிலைக்கட்டி, அரண்மனை கட்டி, பிரஜைகளை அழைத்துக்கொண்டு வந்து அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது, எதற்காக? அப்படி ஒரு முடிவை எடுக்க, அவரை தூண்டியது யார்?
3. இவர்கள் அனைவரும் இங்கு வரும் முன்னரே, அனந்தன்காடு என்கிற இடத்தை பெருமாள் தெரிவு செய்து அமர்ந்த காரணமென்ன?
4. பிற பெருமாள் கோவில் போல இல்லாமல், இங்கு இறையை மூன்று வாசல் வழியாகத்தான் பார்க்க முடியும். அது ஏன்?
5. பிற கோயில்களை போல் இல்லாது, பெருமாளின் மூலவர் சிலை, 10008 சாலிக்கிராமங்களால் உருவாக்கப்பட்டது ஏன்?
இந்த கேள்விக்கான விடைகளை தெரிந்து கொண்டால், அந்த கோவிலுக்கு செல்லும் பொழுது, இறைவனின் எண்ணம் மட்டும் நம்முள் இருக்கும். அந்த "நிதி" இருக்கும் அறையின் வாசலை தேட தோன்றாது. முன்னர் சொன்னது போல் மனத்தில் ஒருவித பயமும், பக்தியும் உருவாகும்.
அனந்தன்காட்டில் பெருமாள் அமர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது, கைலாயத்த்தில். ஆம்! சிவபெருமான், பார்வதி திருமணத்திற்காக, அனைவரும் ஒன்று கூடிய பொழுது, சிவபெருமான் தன், தீர்மானத்தை பெருமாளிடம் தெரிவித்ததாக, சிவபுராணம் கூறுகிறது.
அன்று எடுக்கப்பட்ட தீர்மானம், பின்னர் கோவிலாக உருப்பெற்று நிற்பதைத்தான், இன்று நாம் காண்கிறோம்.
நம் குருநாதர் அகத்தியப் பெருமானும், இதில் பெரும் பங்கு வகித்துள்ளதனால், அடியேனுக்கு, "நடந்தது என்ன?" என்று அறிய ஆவலானது. கிடைத்த தகவல்கள் பிரமிப்பூட்டுவனவாக இருந்ததால், அத்தனையையும் சேர்த்து வைத்து, ஒரு தொகுப்பாக மாற்றினேன்.
இதற்கு குருநாதர் அகத்தியப் பெருமானும் அருளினார்.
சித்தன் அருள்..................... தொடரும்!
மதிப்பிற்குரிய திரு. கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
ReplyDeleteமதிப்பிற்குரிய திரு. அகினிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
மிக மிக அருமையான தொகுப்பு ஆரம்பம். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆரம்பித்த தொடர்...
ஆவலுடன் வரும் வாரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
தங்களின் பணி மென்மேலும் சிறக்க குருநாதரை வேண்டுகிறேன்.
மிக்க நன்றி,
இரா.சாமிராஜன்
நன்றி திரு சுவாமி அவர்களே!
Deleteஐயா தங்களின் வரவு மிகவும் நல்லது... மனம் மகிழ்ச்சி அளிக்கிறது.
ReplyDeleteசித்தன் அருள் எங்களின் உயிர் நாடி ..... என்றென்றும் இயங்கி கொண்டிருக்க இறைவனை வேண்டுகிறேன்...
ஓம் ஆதி கேசவ பெருமாள் நமக
ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகா துணை
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை
எனக்கு எதாவது ஒன்று மாற்றி ஒன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது... இப்போது கூட மருத்துவமனையில் மனம் கவலையுடன் சித்தன் அருள் தொடரை பார்த்தேன்... கண்டு மனம் மகிழ்ச்சி அடைந்தேன்.... அருள்மிகு பத்மநாபன் இறையே துணை எனக்கு....
விரைவில் நலமடைய குருவிடம் விண்ணப்பிக்கிறேன்!
Deleteநன்றிகள் ஐயா....
DeleteGuru devar tiruvadigal pitri
ReplyDeletepotri
Sivaya namaha , by guruvarul aswellas thiruvarul it will be become very friutfull. Ohm agthisaya namaha.
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ஐயா.🙏🙏🙏
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteமிக மிக அருமையான தொகுப்பு. படிக்க படிக்க ஆனந்தமாக உள்ளது. தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பில்
கந்த ஷஷ்டி பதிவுகள் குருவருளால் தந்து கொண்டுள்ளோம். வாய்ப்பு கிடைக்கும் போது தங்களின் கடைக்கண் பார்வை TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவில் வேண்டுகின்றோம்.
கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html
கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற ஸ்ரீ கந்த ஷஷ்டி விழா (3) - https://tut-temples.blogspot.com/2019/10/3.html
முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temples.blogspot.com/2019/10/60-2.html
சஷ்(ட்)டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/10/1.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
குருவின் தாள் பணிந்து,
ரா.ராகேஷ்
கூடுவாஞ்சேரி
திரு.ராகேஷ் அவர்களுக்கு வணக்கம்,
Deleteமிகச் சிறப்பானதொரு தகவல் சேகரிப்பு.
அனைவர்க்கும் பயனுள்ள வகையில் திரு.கார்த்திகேயன் அய்யா அவர்கள் 2012-ஆம் ஆண்டு, நமக்கு முருக பெருமானின் மூல மந்திரத்தை தந்தருளினார். அம்மந்திரத்தை ஜெபித்து வாழ்வில் பெரு வெற்றியடைவோம். கீழே உள்ள தரவு சென்று படிக்கவும்.
https://siththanarul.blogspot.com/2012/11/2.html
முருக பெருமானின் மூல மந்திரம்.
"ஓம் நம குமாராய"
மூல மந்திரத்தை அனுதினமும் சொல்லி முருக பெருமானின் அருள் பெறுவோம்.
மிக்க நன்றி,
இரா.சாமிராஜன்
இரா.சாமிராஜன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
Deleteமுருக பெருமானின் மூல மந்திரம் கொடுத்து ஆதி காண ஆசி கொடுத்து விட்டீர்கள். முருகன் அருள் சூரசம்ஹாரம்
அன்று மேலும் கிடைத்தது.
சித்தனருளிற்கு நன்றியும், கோடகநல்லூர் தரிசன யாத்திரைக்கு ஆசி வேண்டுகின்றோம்.
குருவின் தாள் பணிந்து,
ரா.ராகேஷ்
கூடுவாஞ்சேரி
https://tut-temples.blogspot.com/
iya mikka nandri
ReplyDeleteodhiyapper saranam gurudeva......
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி
ReplyDeleteஅன்றைய தினம் 31-10-2009. சனிகிழமை உத்திராடம் நக்ஷத்திரம் த்ரயோதசி திதி அன்று நடைபெற்றது. ஆனால் அதே நாள் திதி நக்ஷத்திரம் 8-11-2019 அன்று மதியம் 2:30 க்கு உத்திரடம் நஷத்திரம் தோன்றி 9-11-2019 சனிகிழமை 4:34 உடன் முடிவடைகிறது. அதேபோல த்ரயோதசி திதி 9-11-2019 அன்று மதியம் 3:32 க்கு ஆரம்பிக்கிறது. 10-11-2019 அன்று அகத்தியர் பூஜை செய்த நாளை திதியோ இல்லை அதுமட்டுமல்லாமல் அங்கு சென்றாலும் ஆலயப்பணி காரணமாக அபிசேகம் செய்வது மிக கடினம். நாம் உத்திராடம் நக்ஷத்திரம் த்ரயோதசி 9-11-2019 அன்று அங்கு சென்றால் சிறப்பாக இடையுறு அல்லாமல் செய்துவிடலாமே
ReplyDeleteiyya vanakkam
ReplyDeleteungaludaya email id ullatha iyya.en ayyanin arul irundal ungalidam pesamudiyum endru ninaikiren.
om agatheesaya namaha
subha
agnilingamarunachalam@gmail.com
Deleteஐயா வணக்கம், தாங்களும், தங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன். தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். தாங்கள் குணம் அடைந்து சித்தன் அருள் பதிவு அதுவும் பத்மநாபன் பற்றி தொடர் குருஅருளால் தொடர்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் திருவனந்தபுரம் அனந்த பத்மனை தரிசித்தோம் ஐயா. வாழ்கையில் ஒரு முறை ஆவது தரிசனம் செய்ய ஆசை கொண்டோம் . குருவின் அருளால் நிறைவேறியது. மேலும் அவருடைய தரிசனம் நினைக்கும் போது எல்லாம் பரவசம் . இந்த தொடர் அவரின் பாதத்தில் சரணாகதி கொடுக்கட்டும் ஐயா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
ReplyDeleteஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)
ReplyDeleteஅனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். ஜீவ நாடி அற்புதங்கள் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். இன்றைய பதிவிலும் ஜீவ நாடி அற்புதங்களை காண உள்ளோம்.
இணைய வெளியில் நாம் பொதுவாக தேடிய போது லிகித ஜெபம் என்ற ஒரு சேவை பற்றி கண்டோம். லிகித ஜெபம் என்பது இறையின் நாம ஜெபத்தை எழுதுவது ஆகும்.
நமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெபம் என்று ஒன்றும் இருக்கிறது. பேப்பரில், பழைய டைரியில் , நோட்டுப் புத்தகங்களில் இறை நாமத்தை எழுதுவார்களே அதைத் தான் லிகித ஜெபம் என்று கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த சில பிராமண குடும்பங்களில் வயதான அனைவரும், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தை இதற்கெனவே ஒதுக்கி இடைவிடாமல் எழுதுகிறார்கள். இதனால் கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. அப்படி எழுதும் குடும்பங்கள் அனைத்திலும், பரிபூரண குடும்ப அமைதி நிலவுகிறது. அந்த குடும்ப வாரிசுகள் அனைவரும், இன்று நல்ல வேலையில், மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். காலம் கெட்டுக் கிடக்கும் சூழலில், ஒரு மனிதன் தவறான பாதைக்கு செல்ல நிமிஷ நேரம் போதும். அவ்வாறு செல்ல விடாமல் , இறையருள் தடுத்தாட்கொள்ள - இந்த லிகித ஜெபம் நிச்சயம் உதவும்.
Read more - https://tut-temples.blogspot.com/2019/11/10.html
குருவின் தாள் பணிந்து,
ரா.ராகேஷ்
கூடுவாஞ்சேரி
https://tut-temples.blogspot.com/