அகத்தியப் பெருமான் அருளி, எல்லா வருடமும் நடத்தி தருகிற "அந்தநாள்-இந்த வருட பூஜை", இந்த வருடம் 10/11/2019, ஞாயிற்றுக்கிழமை, கோடகநல்லூர் ப்ரஹன்மாதவர் கோவிலில் நடக்கிறது.
அகத்தியர் அடியவர்கள் அனைவரும் ஒன்று கூடி, எல்லா வருடமும், சிறப்பான அபிஷேக ஆராதனைகளை பெருமாளுக்கு செய்து, அவர் அருள் பெற்று செல்வோம் என்பது நினைவிருக்கும். ஆனால், இந்த வருடம் அபிஷேக ஆராதனைகளை செய்வது நடக்கும் என்று தோன்றவில்லை. ஏன் என்றால், கோவில் நிர்வாகம்,பெருமாளுக்கு பாலாலயம் செய்வித்து, கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்திருப்பதால், அன்றைய தினம் அபிஷேக ஆராதனைகள் செய்வது இயலாது என்று கூறிவிட்டனர்.
இருப்பினும், அகத்தியர் கூற்றின் படி, அன்றைய தினம் மிக முக்கியமான நாள் ஆனதால், அடியவர்கள் கோடகநல்லூர் வந்து, தாமிரபரணியில் நீராடி, பெருமாளை தரிசித்து, தாமிரபரணியின், சித்தர்களின், இறையின் அருளை பெற்று செல்லலாம். பெருமாளுக்கு, பூமாலை, பூஜைக்கான பொருட்கள் கொண்டு வந்தால், உற்சவ மூர்த்திக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து, அருளை பெறலாம்.
மறுபடியும் ஞாபகபடுத்துவதற்காக, அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை, சுருக்கமாக கீழே தருகிறேன்.
"எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்."
அகத்தியர் அடியவர்கள் அனைவரும், அன்றைய தினம் கோடகநல்லூர் வந்து இறையருள் பெற்றுச் செல்லுமாறு, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சாணம்!
சித்தன் அருள்................... தொடரும்!
தகவலுக்கு நன்றி அய்யா. 10/11/2019 அன்று காலை எத்தனை மணிக்கு அங்கு இருக்க வேண்டும்? பூஜைகள் நடந்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் போன்ற விவரங்கள் பதிவு செய்தால் புதிதாக செல்பவர்களுக்கும் தூரத்தில் இருந்து வருபவர்களுக்கும் உதவியாக இருக்கும் அய்யா.
ReplyDeleteகாலை 6 மணியிலிருந்த்து மதியம் 12 மணி வரை கோவில் திறந்தியிருக்கும் நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் பூஜைக்கு வரலாம்.
DeleteOhm Annai lobamuthra samedha agatheesaya nama:
DeleteAyyan Arulal madurai thirupparakundram near pasumalai n sakthi mariamman temple AnnaiAnnai lobamudra sameda agathiameruman Sannadhi temple constn is going on.
In this regard according to Muruganadi one crore
and eight mama is going to prhishdai under moolavar.
N this connection I beg and sashtangam of golden feets of aiyavars adiyavar to send nama as
Ohm Agatheesaya mama (as per nadi) to
To.Mr.K.Gurusamy,
54, Thiagaraar colony, pasumalai madurai4.
Cont.no.98424 39261
ஓம் அகத்தீசாய நம:
Deleteஐயனின் நாமம் 10000008தேவை.
அகத்தியபெருமானின் பாதம் பணிந்து எழுதி அனுப்புமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுகெரள்கிறேரம்.
மதுரை அகத்தியர் ஆலய அன்பர்கள
மதுரை
மதுரைக்கு அருகில் உள்ள பசுமலையில் அன்னை லோபமுத்ரா சமேத மகரிஷி அகத்தியர் தனி சன்னதி திருவருளும் குருவருளும் கூடி பணிகள் இனிதே நடந்து கொண்டிருக்கின்றன.
Deleteசில கட்டிட தொழில்நுட்பம் மற்றும் ஆகமவிதிப்படி “ஓம் அகத்தீசாய நம:” என அகத்திய அடியவர்கள் எழுதியது ஐயனின் பாதபீடத்தில் வைக்க இயலாத காரணத்தால் மகரிஷி அகத்திய அடியவர்கள் அகப்பூசையாக மேலே குறிப்பிட்டுள்ள “ஓம் அகத்தீசாய நம:” எனும் மந்திரத்தை தினமும் தங்களால் முடிந்த அளவு பாராயணம் செய்யவும்
தவறுகளுக்கு வருந்துகிறோம்.
Sir, can you please help if we can donate for perumal temple work and how to make online transfer.
ReplyDeleteagathiya mamuni potrri, potrri
ReplyDelete