​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 3 November 2017

சித்தன் அருள் - 731 - அந்தநாள் > இந்த வருடம் (2017) - கோடகநல்லூர் - ஒரு சில புகைப்படங்கள்!

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

02/11/2017 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 சுபமுகூர்த்தத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத பச்சைவண்ணப் பெருமாள், தேசிகர் ஸ்வாமிகள் அவர்களுக்கும், கோடகநல்லூர் கோவிலில், அகத்தியர் அருளால் திருமஞ்சன, அபிஷேக ஆராதனைகள் தொடங்கி, மிக மிக சிறப்பாக, அகத்தியர் அடியவர்களின் ஏற்பாட்டில் நடந்தேறியது. அங்கு எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். எல்லோரும் பெருமாள், தாயார், கருடர், தேசிகர், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ வேண்டும். "இனி நல்லது மட்டும் நடக்கட்டும்" என பிரார்த்தித்துக் கொள்ளப்பட்டது.


கருடாழ்வார் அலங்காரத்தில்


பெருமாளும், தாயாரும் (உற்சவ மூர்த்திகள்) அபிஷேக பூஜைக்கு முன்


கலச பூஜை


அபிஷேகம்/திருமஞ்சனம்


அபிஷேகத்துக்குப் பின் - பெருமாளும் தாயாரும் - அலங்காரத்தில்


அபிஷேகத்துக்குப் பின் - பெருமாளும் தாயாரும் - அலங்காரத்தில்


தேசிகர் - அபிஷேகத்துக்குப் பின் அலங்காரத்தில்


தீபாராதனை 


முகம் மட்டும் வெளியே தெரிகிற அளவுக்கு பூவுக்குள் மறைந்திருக்கும் பெருமாளும் தாயாரும்


அகத்தியப் பெருமானின் அடியவர்கள்

அகத்தியப் பெருமானின் அடியவர்கள்

இந்த நல்ல நாளில் நடந்தேறிய நிகழ்ச்சிகளை, தொகுப்பாக விரைவில் சமர்ப்பிக்கிறேன்.

சித்தன் அருள் .................... தொடரும்!

7 comments:

 1. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி

  ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி
  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

  நன்றி ஐயா....

  அருள் தரிசனம் பெற்றேன்....இப்பதிவை படிக்கும் போது பெருமாள் தாயார் அவர்களை தரிசனம் பெற்றேன்... பெருமாள் பாடல் சகஸ்ரநாம இரண்டு வரிகள் யாரோ வீட்டில் இருந்து கேட்டது... மிகப் பெரிய புண்ணியமாக கருதுகின்றேன்....

  இப் புகைப்படத்தில் இருந்து நம் அனைவரையும் அருளுகிறார்கள் பெருமாள் தாயார் அவர்கள்

  ReplyDelete
 2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
 3. om sriLobamudra samedha agatheesaya namah...

  ReplyDelete
 4. I am also participated in the above event on that special day. I want to thanks this சித்தன் அருள் blog and sage Agastya devotees for their services.
  What made me Surprise is that receiving money with holy no 786 in serial no as Prasad from Agnilingam Sir.First time I have seen this in my life.
  Really felt love for such a big heart people.
  Hope Next Time Sage Agastya Will Bless and Offer me to contribute in the divine service.

  ReplyDelete
 5. !!Om Maata SriDevi BhooDevi Samhet BhruhanMadhavaya Namah!!

  ll Om Lopamudara Mata samhet Agatheesaaya Namah ll

  Guru Padhame Shree Sharanam

  Thank you so much for sharing so beautiful snaps of beloved Lord

  ReplyDelete
 6. ஓம் அகத்தீசாய நமஹ!

  அய்யா வணக்கம்.

  நானும் எனது நண்பர்களும் சேர்த்து 5 பேர் இந்த அரிய புண்ணிய மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டோம். அதற்கு முன் புண்ணிய நதியாம் தாமிரபரணியில் நீராடினோம். எங்கள் மனம் முழுதும் ஆனந்தம்.
  அகத்திய பெருமானின் அருளால் பெருமாளின் மஞ்சள் நீராட்டு காணும் பாக்கியம் பெற்றோம்.
  சித்தன் அகத்திய பெருமானுக்கும், சித்தன் அகத்தியன் அருள் வலைத்தளத்துக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

  ஓம் அகத்தீசாய நமஹ!

  நன்றி.

  இப்படிக்கு,

  மு. மோகன்ராஜ்
  மதுரை

  ReplyDelete
 7. Even though myself and my wife wanted to participate, my mother's annual ceremony (thidhi) fell on 02.11.2017 and could not attend. But my mind always hovered around the function. May we know whether we could get the blessings of Guru Agatheesa. I am longing for the same.

  ReplyDelete