​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 6 November 2017

சித்தன் அருள் - 732 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 1


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அந்தநாள்>>இந்த வருடம், கோடகநல்லூரில் 02/11/2017 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது என்பதே உண்மை. இன்னும் அன்று நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து வந்து சேர்ந்த திகைப்பிலிருந்து அடியேன் மீளவில்லை என்பதும் உண்மை. அன்றைய நிகழ்ச்சிகளை பற்றி கூறவேண்டுமென்றால், இரண்டு மாதங்கள் பின்னே சென்று அவ்வப்போது நடந்த சம்பவங்களை விவரித்தாலே நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்துவது எளிதாக இருக்கும்.

ஓதியப்பரின் பிறந்தநாள் விசேஷத்துக்குப்பின் வருகிற அடுத்த, அதுவும் இந்த வருட கடைசி புண்ணிய நாள் என்கிற எண்ணம் என்னுள் வலுத்தது. பெருமாளின், அகத்தியரின் அருள்/ஆசிர்வாதம் இன்றி எதுவும் சாத்தியமில்லை என்கிற எண்ணமும் உதித்தது.

அதற்கேற்றார் போல், புரட்டாசி மாதம் வந்தது. அடியேனும் கோடகநல்லூர் பச்சை வண்ணப் பெருமாளிடம் ஒரு பிரார்த்தனையை வைத்தேன்.

"இந்த வருட நான்கு புரட்டாசி சனிக்கிழமையும், தங்களை வந்து தரிசித்து, தாங்கள் கோவிலில், பிரகாரத்தில் சுற்று விளக்கு போடவேண்டும். உங்களுடன் வீதியுலா போகும் போது கூட வரவேண்டும். அதற்கான வசதியையும், உடலுக்கான சக்தியையும், சூழ்நிலையையும் ஏற்படுத்தி தரவேண்டும். அருள வேண்டும்" என்று வேண்டிக்கொண்டேன்.

முதல் சனிக்கிழமை வந்தது. அடியேனும் மிகுந்த ஆவலுடன் கோடகநல்லூர் சென்றேன், "பெருமாள் ஏதேனும் உத்தரவு தரமாட்டாரா" என்ற எதிர் பார்ப்பில். தாமிரபரணி நதியை பார்த்தால், நீரே இல்லாமல், ஒடுங்கி சென்று கொண்டிருந்தது.

"ஹ்ம்ம். நேரம் வரும் போது உனதருளும் வேண்டும். இருகரை தொட்டு விரிவாக சென்றால் தான் அந்த புனித நாளில் அனைவரும் ஆனந்தமாக உன்னில் ஸ்நானம் பண்ண முடியும்" என்று வேண்டிக்கொண்டு பெருமாள் தரிசனத்துக்கு சென்றேன்.

பெருமாள் முதல் புரட்டாசி சனிக்கிழமையின் கருடசேவை அலங்காரத்தில் அமர்க்களமாக இருந்தார். உள்ளே சென்று அர்ச்சகரிடம் பூசைக்கான சாமான்களை கொடுத்து, நான்கு மஞ்சள் பொடி பொட்டலத்தையும் கொடுத்து,

"பெருமாள் பூசைக்கு வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சளை நீர் விட்டு குழைத்து பெருமாள் வலது கரத்தில், மார்பில், பாதத்தில், தாயார் இருவரின் கரங்களிலும் சார்த்தி பிரசாதமாக தாருங்கள்" என்று விண்ணப்பித்து பெருமாளை நோக்கி "உமக்கு சுற்று விளக்கு போட இது வந்திருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடந்தேற பிரார்த்திக்கிறேன்" என்று வேண்டிக்கொண்டு, விளக்கு போட தேவையான சாமான்களுடன் பிரகாரத்துக்கு வந்தேன்.

முதல் விளக்கு கருடாழ்வாருக்கு. இரண்டாவது அவருக்கு பக்கத்தில் தூணில் மறைந்திருக்கும் ஆஞ்சநேயருக்கு. பின் பிரகாரத்தில் இருக்கும் கல் விளக்குகளை ஒவ்வொன்றாக சுத்தம் பண்ணி, விளக்கு போடத்தொடங்கினேன். இதற்கு முன்னரே, விளக்கு போட்ட அனுபவம் இருந்ததால், எப்படியாயினும் தனி ஒருவனாக இருந்து விளக்கு போட, அடியேனுக்கு ஒரு மணி நேரம் ஆகும்.

அன்றைய தினம் அடியேனை, பெருமாள்  தனியாக விளக்கு போட விடுவதில்லை என்று தீர்மானித்து விட்டார் போல. எங்கிருந்தோ ஓடி விளையாடிய சிறு குழந்தைகள் பட்டாளம் பிரகாரத்தில் ஓடி வந்து என் அருகில் நின்று " என்ன சாமி, விளக்கு போடுகிறீர்களா? நாங்களும் உதவி பண்ணலாமா" என்று வினவினார்.

அடியேனும் சிரித்துக் கொண்டே "அதெற்கென்ன! உதவி பண்ணுங்கள். ஒவ்வொருவர், ஒவ்வொரு பொருளை எடுத்துக் கொண்டு வாருங்கள். நான் கேட்க கேட்க தந்துகொண்டே இருக்க வேண்டும்" என்றிட, அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு பொருளை சுமந்துவர, 30 நிமிடத்தில் விளக்கு போட்டு முடித்தேன். நிதானமாக பெருமாள் சன்னதிக்கு வந்து, "விளக்கு போட்டாயிற்று! ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி த்யானத்தில் அமர்ந்தேன்.

மனம் ஒன்று பட்டு, மிக மிக லேசானத்தை உணர முடிந்தது. அனைத்து சப்தங்களும் அடங்கியது. எத்தனை நேரம் அப்படிப்பட்ட நிலையில் இருந்தேன் என்று தெரியவில்லை.

அமைதியை கலைத்துக் கொண்டு பெருமாளின் உத்தரவு வந்தது. அடியேனுக்கு மிகத்தெளிவாக கேட்டது.

"இந்த வருடம், அந்தநாளில் தேவையான ஏற்பாடுகளை எனக்காக செய்ய, நீ ஒருவன் தான் தனியாக ஓடப்போகிறாய்" என்று கூறி ஆசிர்வதித்து, புன்னகைத்தபடி நின்றார்.

மிகத்தெளிவாக கேட்ட அந்த உத்தரவை மனதுள் வாங்கி மறைத்து வைத்துக் கொண்டு, ஒரு விண்ணப்பத்தை அவரிடம் சமர்ப்பித்தேன்.

"அடியேனின் மிகுந்த பாக்கியம், தாங்கள் அருளியது. இருப்பினும், ஒரு வேண்டுதல். மனம், உடல் இரண்டுக்கும் தேவையான சக்தியையும், சரியான சூழ்நிலையையும் தாங்கள் அருள வேண்டும். இது மட்டும் உங்கள் அருளால் இருந்தால், அடியேன் ஓடத்தயார்" என்றேன்.

"அப்படியே ஆகட்டும்" என்ற அவரின் ஆசிர்வாதத்துடன், வெளியே வந்து கோவில் திண்ணையில் அமர்ந்து யோசிக்கலானேன்.

"அதெப்படி இத்தனை தெளிவாக "நீ மட்டும்" என்று கூறுகிறார். கூட இருக்கிற நண்பர்களுக்கு தெரிய வந்தால், நம்மை தொலைத்து விடுவார்களே! பெருமாள், "பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி விடுகிறாரோ? எதற்கும் பொறுமையை கடை பிடித்து, விஷயத்தை வெளியே கசிய விடாமல், அமைதியாக வேடிக்கை பார்ப்போம்" என்று தீர்மானித்தேன். நட்புவட்டாரத்தில் யாரிடமும், இதை பற்றி மூச்சு விடவில்லை. அந்த வாரம் கருடசேவைக்கு அவருடன் நடந்து வீதியுலா போய்வந்து, அவர் அருள் பிரசாதமான மஞ்சள் பொடியை இரவு இரண்டு மணிக்கு யாருக்கும் தெரியாமல் பெற்றுக் கொண்டு, யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

வரும் வழியில்தான் ஞாபகம் வர "அடடா! பெருமாள் இந்த ஊருக்கு வந்த பொழுது முதல் முறையாக கால் மடக்கி அமர்ந்த இடத்துக்கு, விளக்கு போட மறந்து போனதே! சே! அடுத்த முறையேனும் அந்த பாக்கியத்தை அருளும் பெருமாளே" என வேண்டிக்கொண்டு, இனி எந்த காரணம் கொண்டும் விளக்கு போடும்பொழுது அந்த இடத்தை மறக்கக்கூடாது" என்று தீர்மானித்தேன்.

சித்தன் அருள்............... தொடரும்!

16 comments:

 1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
 2. Om Lobamutra Sametha Agatheesaya Namaha!

  ReplyDelete
 3. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி

  ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி

  ஓம் பெருமாள் அப்பச்சி அம்மச்சி போற்றி போற்றி

  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

  ஐயா தங்களின் அனுபவம் எங்களுக்கு பிரசாதம்... நன்றி ஐயா

  ReplyDelete
 4. அன்னை லோபாமுத்திரை ஸமேத அகஸ்திய பெருமானின் திருவடி சரணம். அய்யா போஸ்ட் படித்தவுடன் எந்தன் நாசில் மஞ்சள் போடி வாசனை வந்தது. தேவியர் ஸமேத பச்சை வண்ண பெருமாள் திருவடி சரணம். ஓதியப்பர் திருவடி சரணம்.

  ReplyDelete
 5. அய்யா அகத்தியர் எதாவுது ஆன்மீக தகவல் சொல்லிருந்தால் எங்களுக்கு சொல்லவும் , அவர் போதனைக்காக காத்திருக்கிறேன் ...

  ReplyDelete
 6. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 7. அகத்தியரின் ஆசி, ஓதிமலை சென்றோம். உழவாரம் செய்யும் பாக்கியம் பெற்றோம். நிறைவாக அருள் பெற்ற ஓதியப்பர் தரிசனம்.இன்னும் மனதுள் இணைக்கின்றது. கோடகநல்லூர் தரிசனம் பெற முயற்சி செய்தோம். ஆனால் இங்கே தரிசனம் கண்டு மகிழ்கின்றோம்.அடுத்த ஆண்டு 2018 இந்த நாள் தரிசனத்தில் அருள் பெற காத்திருக்கின்றோம்.யாம் பெற்ற அனுபவத்தை கீழே உள்ள வலைப்பதிவில் காணலாம். பிழை இருப்பின் பொறுத்தருள்க.

  ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

  பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

  ஓம் லோபாமுத்ரா சமேத அகத்தியர் மலரடி சரணம்.

  ரா.ராகேஷ்
  கூடுவாஞ்சேரி
  TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு
  https://tut-temple.blogspot.in

  ReplyDelete
  Replies

  1. அனைத்தும் அகத்தியரின் அருளாலே. நன்றி ரா.ராகேஷ்
   கூடுவாஞ்சேரி
   TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு
   https://tut-temple.blogspot.in

   Delete
 8. Thiru Agnilingam ayya avargaluku vanakkam...sundharakandam patri melum ethenum thagavalukaka kathirukirom ..om sri Lobamudrasametha agatheesaya namah

  ReplyDelete
 9. வணக்கம்
  கோடகநல்லூர் பச்சவண்ணப்பெருமாள்
  ஆலயத்தில் நடந்த விழா கண்டு மிக்க
  மகிழ்சசி . என்னால் கலந்து கொள்ளமுடியவில்லை அனைத்திற்கும்
  இறை அருள் வேண்டும்
  என் மனைவியின் உடல் நலம் நீங்கள்
  அறிந்த விஷயம் sugar உடன் கீழே விழுந்து இடுப்பில் அடிபட்டு தற்சமயம்
  மருத்துவமனையில் இருக்கிறார்கள்
  தயவு செய்து பெருமாளின் மஞ்சள்
  பிரசாதம் அனுப்ப வேண்டுகிறேன் உங்கள்
  e mail தெரியாது எனவே சித்தன் அருளில் வேண்டுகிறேன்.
  அன்புடன் sv

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் .... எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் முருகப்பெருமானை வேண்டுகிறேன்...

   ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி

   ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி

   ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

   ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 10. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ. : ஸ்வாமிக்கு எனது பணிவான வணக்கங்கள் சமீப காலமாகத்தான் நான் இந்த வலைதளத்தை பார்த்து மிகவும் எதிர்பார்ப்புகளோடு படித்து வருகிறேன், நான் இந்த வலைதளத்தை படிக்க ஆரம்பித்த பிறகு என் வாழ்வில் பல நல்ல விஷயங்கள் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீ அகஸ்தியரின் மேல் எனக்கு பல வருடங்களை பக்தி அதிகம் இருந்தது உண்மை, அதனால் தான் எனக்கு இந்த வலைதளத்தை படிக்கும் வாய்ப்பு அமைந்தது என்று நான் நினைக்கிறன், நேற்றைய பதிவை படித்த பின் நான் பெருமாளை நேரில் பார்த்த நிறைவை பெற்றேன் என்பது உண்மை. மிகவும் அருமையான பதிவிற்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. ஐய்யா வாழ்க வளமுடன் . தங்கள் அனுபவம் நாங்கள் அந்த வைபவத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தை தருகிறது. ஓம் அன்னை லூபா முத்திரை சமேத அகத்தியர் பெருமான் திருவடிகள் சரணம்.

  ReplyDelete