[அகத்திய பெருமான் அருளிய இந்த அனுபவம் கீழே தந்துள்ள வெளியீடுகளின் தொடர்ச்சி]
https://siththanarul.blogspot.com/2017/04/643.html
https://siththanarul.blogspot.com/2017/04/646-2.html
சித்தரை, இறைவனை வேண்டிக்கொண்டு, அவர்கள் காட்டுகிற பாதையில் பயணிக்கையில், நிறையவே ஆச்சரியங்களை சந்திக்க வேண்டிவரும். நடக்கிற விஷயங்கள் கூட நாம் நினைத்தபடி இல்லாவிடினும், எங்கோ ஒரு கர்ம வினையில் கொக்கி போட்டது போல் இருக்கும்.
அடியேனின் இருப்பிடம் விட்டு எங்கு, எதற்கு செல்லினும், சித்தர்களை வேண்டிக் கொண்டு, இறைவனை த்யானித்துவிட்டு, "உங்கள் அருகாமையும் அருளும் வழி நடத்தட்டும், காப்பாற்றட்டும்" என்று செல்வது ஒரு பழக்கம்.
கேட்டுக் கொண்டதற்கிணங்க, பெருமாளும் பரிவாரங்களும், சித்தரும் அருள் புரிந்ததற்கு (மஞ்சள் பொடி பிரசாதம், விபூதி), நன்றி சொல்லும் விதமாக அந்த வார கடைசியில், இரு தினங்கள் விடுமுறை வந்த பொழுது கோடகநல்லூர் சென்று பெருமாளை வணங்கி வரலாம் என்று ஒரு எண்ணம் வந்தது.
எப்போதும் போல் மாலை குளித்துவிட்டு பூசை அறையில் அமர்ந்து த்யானத்தில் என் விண்ணப்பத்தை தெரிவித்தேன்.
சொன்னால் நம்புவது கடினம். மிக வேகமாக பதில் வந்தது.
"எங்கும் செல்ல வேண்டாம். இங்கேயே அமர்ந்திரு!".
நான் ரொம்பவே ஆச்சரியப்பட்டு போனேன்.
"இதென்ன இப்படி ஒரு கட்டளை. ஒரு பொழுதும் இப்படி கூறியது கிடையாதே. சரி அவர்கள் சொன்னது போலவே செய்வோம். எங்கும் செல்ல வேண்டாம்" என தீர்மானித்தேன்.
மறுநாள் ஒரு நண்பர் வந்து "இந்த வார கடைசியில் இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது. பொதிகை சென்று அகத்தியரை தரிசித்து பூசை செய்து விட்டு வரலாம் என்று இருக்கிறேன். நீங்கள் வருகிறீர்களா?" என்றார்.
"மன்னிக்கவும். எனக்கு உத்தரவு வேறு ஒன்று. எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்க சொல்லியிருக்கிறார்கள். பூசைக்கான ஒரு சில சாமான்களை அடியேனும் வாங்கித்தருகிறேன். நீங்கள் சென்று வாருங்கள். வந்து எனக்கு பிரசாதம் கொடுங்கள். அது போதும். அவர்கள் உத்தரவை அடியேன் மீற முடியாது. பின்னர் ஒரு முறை பார்க்கலாம்" என்று பதில் கூறி அனுப்பிவைத்தேன்.
நண்பர்கள் இருவரும் எனக்கு மட்டுமல்ல, என் தகப்பனாருக்கு நல்ல நண்பர்கள்.
இத்தனை வருடங்களாக இறைவனிடம், சித்தர்களிடம் அடியேன் வேண்டி கேட்டு கொண்டது ஒன்று தான்.
"என் தாய், தந்தையின் கடைசி மூச்சு இருக்கும் வரை, அவர்களுடன் அடியேன் இருக்க வேண்டும். அவர்களுக்கான கடமைகளை, உங்கள் அருளுடன் செய்து முடிக்க வேண்டும். பெற்றோருக்கு எந்த கடனும், இந்த வாழ்க்கையில் மிச்சம் வைக்கக்கூடாது." என்பதே.
வியாழக்கிழமை காலை என் நண்பர்கள் கிளம்பி சென்றனர், பொதிகைக்கு.
வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணிக்கு அடியேனின் தகப்பனார் இறைவன் திருவடியை அடைந்தார்.
நான் பொதிகை சென்றிருந்தால், குடும்பமே மிக சிரமத்துக்கு உள்ளாகியிருக்கும். இரண்டு நாட்கள் கழித்துதான் உடல் சம்பந்தமான கடைசி கர்மாக்களை செய்திருக்க முடியும். ஏன் என்றால், பொதிகையில் இருக்கும் பொழுது, எந்த விதத்திலும், யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது.
பொறுமையாக, அமைதியாக என் தகப்பனாருக்கான ஈம கர்மாக்களை செய்து முடிக்க, ஞாயிறன்று நண்பர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு, என் தகப்பனாரின் முகம் பார்க்கவோ, கடைசி கர்மங்களில் பங்கு கொள்ளவோ முடியவில்லை.
இருவரும் வந்து அடியேனை பார்த்த பொழுது ஒன்று கூறினேன்.
"வந்த உத்தரவின் அர்த்தம் இதுதான். எனக்கு விதி இருக்கிறது. புரிந்து கொண்டேன். உங்களுக்கு இல்லை. அதனால் உங்கள் அருமை நண்பரின் (என் தகப்பனாரின்) முகத்தை பார்க்க கொடுத்துவைக்கவில்லை. சரி! அவர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கிப்போனார். நாம் நம் பயணத்தை தொடரத்தான் வேண்டும். சென்று வாருங்கள்" என்றேன்.
இருவரும் விடை பெற்றனர்.
தகப்பனாரின் தசத்தின கர்மாவின் இடையில் ஒருநாள், அமைதியாக அமர்ந்திருந்த பொழுது ஒரு எண்ணம் அடியேனுள் உதித்தது.
"அகத்தியர் நாடியில் வந்து சொல்லியபடி, முறையாக "மோக்க்ஷ தீபம்" என் தகப்பனாருக்கு போட்டால் என்ன? அந்த ஆத்மாவும், இறைவன் அருளால், கரையேறட்டுமே".
"சரி! அதற்கான வேலைகளில் இறங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடலாம்" என்று தீர்மானித்தேன்.
தகப்பனாரின் 10வது நாள் சடங்கிற்கு வந்த ஒருவரிடம் "கோடகநல்லூர் பெருமாள் கோவிலில், என் தகப்பனாருக்கு "மோக்ஷ தீபம்" போட விரும்புகிறேன். அனுமதி வேண்டும். அதை வாங்கி கொடுங்கள்" என்றேன்.
"இந்த மோக்ஷ தீபம் என்றால் என்ன?" என்றார்.
"அது ஒரு பூசை முறை. கோவிலின் ஈசான மூலையில் ஒரு சனிக்கிழமை அன்று 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும். மறு நாள் காலை பூசை செய்த அனைத்து பொருட்களையும் ஒன்று விடாமல் எடுத்து, நதியில் சேர்த்து விடவேண்டும். இவ்வளவுதான். பூசை சம்பந்தமான விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். அனுமதியை பெற்றுத்தாருங்கள்" என்றேன்.
"சரி! அதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சென்றார்.
வேறு யாரிடமும் இதை பற்றி மூச்சு விடவில்லை.
ஒரே ஒரு நண்பரிடம் "கூடிய விரைவில் நாம் ஒரு இடம் வரை போய் வரவேண்டிவரும். தயாராக இரு" என்று மட்டும் சூசகமாக கூறி வைத்தேன்.
தகப்பனாரின் 13 நாட்கள் சடங்கு முடியும் வரை காத்திருந்தேன்.
அதன் பின் தான் கோவிலுக்கு செல்கிற உரிமை உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்வதால், யார் மனதையும் நோகடித்து நாம் நம் வழியில் செல்ல வேண்டாம் என்று தீர்மானித்தேன்.
13வது நாள் மாலை குளித்து மறுபடியும் ஜெபம் த்யானம் என்று தொடங்கிய பொழுது,
அகத்தியப் பெருமானிடம் "அடியேன் தகப்பனாருக்கு நீங்கள் கூறியபடி முறையாக மோக்ஷ தீபம் போடவேண்டும் என்று எண்ணம். அதற்கு தங்கள் அனுமதி வேண்டும். அருளுக" என ஒரு விண்ணப்பத்தை வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றேன்.
ஒரு நிகழ்ச்சிக்கு வேண்டிய எல்லா திட்டங்களையும், ஏற்பாடுகளையும் பலரை வைத்து நாம் செய்தாலும், அதது எப்படி நடக்க வேண்டும் என்று ஒருவர் தான் தீர்மானிப்பார். அது இறைவன் சித்தம்.
என் திட்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. என் மனதுள் ஒளித்து வைத்திருந்தேன். அனுமதி வரட்டும் பிறகு முழு வீச்சில் பயணிக்கலாம் என்று அமைதியாக இருந்தேன்.
இரண்டு நாட்களாகியும் ஒரு உத்தரவும் வராததால், "என்ன? பெரியவர்களுக்கு "மோக்க்ஷ தீபம்" போடுவதில் விருப்பமில்லையோ? பதில் வரவே இல்லையே?" என்று ஒரு உறுத்தல் தொடங்கி வளரத் தொடங்கியது.
அடியேன் தீர்மானித்து வைத்திருந்த சனிக்கிழமைக்கு இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது. அதற்குள் அத்தனை பொருட்களையும் வாங்க வேண்டுமே? என்கிற விசனம் வந்தது.
"பெரியவர்களே! என்ன அய்யா பண்ணறீங்க? உத்தரவோ, பதிலோ சொல்லக்கூடாதா?" என்று மனதுள் சத்தமாக வேண்டிக் கொண்டேன். சுருக்கமாக சொல்வதென்றால் நாள் நெருங்க நெருங்க ஏற்பாடுகளுக்கான நேரக்குறைவை உணர்ந்த மனது சற்று அழுத்தத்துக்கு உள்ளானது.
அடியேனின் வேண்டுதல் அவர்களுக்கு கேட்டுவிட்டது போலும்.
"பதிலே கொடுக்காமல் இருந்தால், இவன், இவன் இஷ்டப்படி செய்துவிடுவான். உண்மையை உணர்த்துவோம்" என்று தீர்மானித்தார்கள்.
பதிலை, அனுமதியை எதிர்பார்த்திருந்த எனக்கு, அகத்திய பெருமான், மனித உருவில் இருக்கும் தன் அபிமான சிஷ்யனை விளக்கமான பதிலுடன் அனுப்பிவைத்தார்.
சித்தன் அருள் ................... தொடரும்!
மதிப்பிற்குரிய திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteமதிப்பிற்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
மீண்டும் வந்து ஒரு சிறந்த அனுபவத்தை தொடர்த்தமைக்கு மிக்க நன்றி. அவர் அனுமதியின்றி இங்கு ஒரு அணுவும் அசையாது என்று ஆழ்ந்த நம்பிக்கை. இந்த அனுபவம் தொடர அனுமதி தந்த குருவின் பாத கமலங்களுக்கு என் பணிவான வணக்கம். தாங்கள் இந்த அதிகாலை வேளையில் எழுந்து, குரு நன்நாளில் மீண்டும் ஒரு தொடரை/அனுபவத்தை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா.
தினமும் சித்தனருள் பார்த்துவிட்டு வேலை தொடங்குவது கடந்த சிலவருட பழக்கம். பதிவு நிறுத்திய பிறகும் கூட கடைசி பதிவு பார்த்தும், குரு அடியவர்கள் யாரேனும் கருத்து புதிதாக போட்டு இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு தான் தொடங்குவேன். இன்றும் அதே போல் வந்து பார்க்கும் போது தங்களின் பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைத்தேன். மற்ற குரு அடியவர்களும் மகிழ்ச்சி அடைவது நிச்சியம்.
தாங்களும், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எல்லா நலனும் பெற்று இன்புற்று வாழ குரு அருள்புரிய வேண்டுகிறேன். தங்களின் இந்த பணி மென்மேலும் சிறப்பாக தொடர குரு அருள் புரியவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
மிக்க நன்றி அய்யா,
இரா.சாமிராஜன்
திரு சாமிராஜன் அவர்களுக்கு
Deleteஎன்னுடைய மனதில் பட்டதை கருத்தாக வெளியிட்டுள்ளீர்கள். அகினிலிங்கம் அருணாச்சலம் ஐயா அவர்களின் ஒவ்வொரு இறை அனுபவமும் நம்மை அறியாமல் நம்மையும் நம் மனதையும் அவருடைய இறை அனுபவதுடன் இரண்டற கலந்து விடுகிறது என்பதில் ஐயமில்லை. வழக்கம் போல் என்னுடைய அலுவலக பணி துவங்குவதுவதர்கு முன்பு குருவையும்,ஒதியப்பர் மற்றும் 18 சித்தர்களை வனங்கிய பிறகு சித்தன் அருளை பார்த்து விட்டு பணியை தொடங்குவென். இன்று ஒரு சிறந்த அனுபவத்தை தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் ஐயா அவர்களுக்கு. மனம் நிறைவாக உள்ளது. தங்கள் கூறியது போல் மற்ற குரு அடியவர்களும் மகிழ்ச்சி அடைவது நிச்சியம். அனைவருக்கும் குருவின் அருள் உரித்தாகட்டும். ஒம் அகத்திசாய நமக.
மிக்க நன்றி
ஜெயராமன்
Happy to see the post... 🙏
ReplyDeleteHH.Mr. Agnilingam Guruji , HH. Mr. Velayudham Karthigeyan guruji
ReplyDeleteNamaskaram and bless Us first.
Our dear friend Mr Swame Rajan has reflected the same , word by word , line by line the thoughts what I felt and about to write my view.
Many many Namaskaram and thanks to Our Sri Lobamuthra sametha Sri Agasthiya Muni for not disappointing us thro you.
I have one small clarification Please help me.
Can I lite the Moksha Deepam in the same temple for my father and Mother who died about 40 years back (father 1972 and mother 1987.)
Within what period, can one lite the Moksha Deepam after demice of one.?
Please ask Our Guruji and reply .
Please continue your this service and bless us.
Today is the Happy day in our life.
Many thanks once again.
yours
g. alamelu + venkataramanan.
Mikka nandri Ayya..Nanum Thiru Samirajan Sonnadhu pol dinamum sitthanarul website parthuvittu than andha nalai mudippen. Ungal anubavathai pagirnthamaikku nandrikal..
ReplyDeleteEvery day, i come to this Temple expecting any thing would be there, after the completion of every day Arul Vakku.
ReplyDeleteToday also my soul entered this temple and i was delighted to this wonderful treat. The saying is true, Trust the Siddhars, they will guide us at every moment. Thank you Thank you Thank you
Namaskaram Guruji
ReplyDeleteThanks for continuing our blog.
The same feeling like what Mr. R. Swamy Rajan , line by line, word by word had, I am also . Every day I used to see your blog before entering to what I like to see.
It all happens with the blessing of Our Guruji, H.H. Sri Lobamuthra sametha Sri Agastheeswara only.
I need one help from you . Please help me.
1. I like to do lit the Moksha Deepam to my parents . My father died in 1972 and my mother died in 1987. Can I lit Moksha Deepam now?
2. If yes, can I do in any day, or in that perticular thithi, or star?
Kindly explain it in details, please.
Kindly ask permission to our Guruji, Sri. Agastheeswarar.
Please help me. in this regard.
Many Namaskaram to you and to Mr. Velayudam Karthigeyan sir.
thanks
yours
g. alamelu + venkataramanan
ReplyDeleteகுரு சரணம்
ஐயா வணக்கம்,
ReplyDeleteநான் அகத்தியபெருமானின் பக்தன். அகத்தியபெருமானை தினந்தோறும் வணங்கி வருகிறேன். தங்களுடைய இணையதளத்தில் வெளிவந்த அகத்தியபெருமானின் அருள்வாக்கை தினந்தோறும் படிக்கிறேன். ஆழ்ந்த கருத்துகள், மக்களுக்கு இன்றைய காலத்திற்கு தேவையான கருத்துகள் எளிமை நடையில் இருப்பதால், அதை நூல் வடிவில் வெளியிட ஆசைப்படுகிறேன். தங்களை தொடர்பு கொண்டு இதுசம்பந்தமாக பேச வேண்டும். ஆகையால் இந்த மின்னஞ்சலை கண்டவுடன் என்னுடைய மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும், தங்களின் செல் போன் எண்ணை தெரிவிக்கவும். நன்றி! agathiar@gmail.com
இப்படிக்கு,
Senthil kumar.S
சித்தனருள் முடிந்துவிட்டதே என்ற பெரிய மனக்குறை இருந்தது, இருந்தாலும் தினமும் தவறாமல் ஒருமுறை பார்ப்பதுண்டு, ஒரு சின்ன நட்பாசை. அகஸ்தியபெருமான் திரும்பியும் தொடங்க அருள் புரியமாட்டாரா என்ற வேண்டுகோள் மற்றும் ஆதங்கம் இருந்துகொண்டே இருந்தது. இன்றைக்கு பார்த்தால் தொடர்வது தெரிந்து ஒரு மனநிறைவு. மதிப்பிற்குரிய திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும்,
ReplyDeleteமதிப்பிற்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும் என் தாழ்மையான வணக்கத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.
மிக்க நன்றிகள் பல ஐயா....
ReplyDeleteWhatever I want to say was posted here by other adiyavargal....
மிக்க மகிழ்ச்சி ஐயா....
தாங்கள் தங்கள் குடும்பமும் மற்றும் இங்கு இருக்கும் அனைத்து அடியார்களும் இறைவன் அருள் நிறைந்த வாழ்க்கைக்கு வேண்டுகிறேன்...
மனம் சந்தோஷம் கவளை இந்த சமயத்தில் தங்களின் அருள்வாக்கு துணயாக இருக்கும்
நன்றிகள் பல ஐயா
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDeleteReply