அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
மாயை இத்தன்மையது, இப்படித்தான் என்று ஒரு எல்லை வகுத்துக் கூற இயலாது. ஏன்? சில சமயம் ஒருவனுக்கு மாயையாக இருப்பது இன்னொருவனுக்கு மாயையாகத் தோன்றாது. அந்த தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமும் எந்த அளவிற்கு ஒரு மனிதனுக்கு உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, செல்கிறதோ அந்த உயர்விலே ஒரு மனிதனின் உயர்ந்த சிந்தனையிலே மாயை எனும் விழுதுகள் அறுபட்டு, அறுபட்டு சென்று கொண்டேயிருக்கும். இருந்தாலும் எந்த உயரத்தில் சென்றாலும் அங்கும் சில விழுதுகள் கட்டிப்போட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவேதான் மனிதன் மிகக்கடுமையாகப் போராடி நல்ல உடல் திறத்தோடு, நல்ல உள்ள திறத்தோடு, இறை பக்தியோடு, சாத்வீக எண்ணங்களோடு, சாத்வீக செயல்களோடு, சத்தியத்தோடு தொடர்ந்து போராடுவதோடு, மெய்யான மெய்ஞானம் நோக்கி தடுமாற்றம் இல்லாமல் செல்ல வேண்டும்
Om Agatheesaya Namah
ReplyDeleteOm Shri Lobamudra Sametha Agatheesaya Namaha!
ReplyDelete