​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 14 February 2016

அந்த நாள் >> இந்த வருடம் (2016)


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள், இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2015ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கலாம்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக்கொள்கிறேன்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

12/08/2016 - வெள்ளிக்கிழமை - சுக்லபக்ஷ தசமி திதி மதியம் 02.02 முதல், அனுஷம் நக்ஷத்திரம் அன்று இரவு 08.03 வரை

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவக்ரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

13/08/2016 - சனிக்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி மதியம் 03.31 முதல், கேட்டை நக்ஷத்திரம் இரவு 10.03 வரை.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

14/08/2016 - ஞாயிற்று கிழமை - சுக்லபக்ஷ த்வாதசி திதி மதியம் 04.43 முதல், மூலம் நட்சத்திரம் பகல் 11.38 வரை.

ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

29/08/2016 - திங்கள் கிழமை - த்வாதசி திதி மதியம் 04.02 வரை, பூசம் நட்சத்திரம் பகல் 11.17 முதல் மறுநாள் பகல் 11.06 வரை.

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.)

12/11/2016 - சனிக்கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி அன்று இரவு 12.33 வரை, ரேவதி நட்சத்திரம் அன்று இரவு 08.28 வரை. (உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் நாள் இரவு 9.52க்கு, த்வாதசி திதியில் முடிந்துவிடுவதாலும் "த்ரயோதசி" திதிக்கு முக்கியத்துவம் கொடுத்து ரேவதி நட்சத்திரமாயினும் "சனிக்கிழமை" தெரிவிக்கப்பட்டுள்ளது. தெய்வீக விஷயங்களுக்கு திதிக்குத்தான் முக்கியத்துவம்.) 

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

23 comments:

 1. Mikka nandri ayya.....om agatheesaya namah

  ReplyDelete
 2. மிக்க நன்றி! மிக்க நன்றி!

  ReplyDelete
 3. மிகவும் நன்றி சகோதரரே... தயவு செய்து உங்கள் தொடர்பு எண் தரவும். my email - kavinwins@gmail.com

  ReplyDelete
 4. மிகவும் நன்றி சகோதரரே... தயவு செய்து உங்கள் தொடர்பு எண் தரவும். my email - kavinwins@gmail.com

  ReplyDelete
 5. the informatiom was very interesting and informative kindly send your messages to < rmscbe32@gmail.com

  ReplyDelete
 6. அய்யா அருமையான தகவல். தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். நான் வீட்டில் அகத்தியரை வைத்து பூஜை செய்து வருகிறேன். தங்களுடைய உதவி எனக்கு தேவை.தங்களை தொடர்பு எண்ணை அனுப்பவும். ganeshchellamss@gmail.com

  ReplyDelete
 7. ஐயா அகத்தியப் பெருமான் அருள் வாக்கு பற்றி இன்று தான் தெரிய வந்தது. எனக்கு வயது 60 எனக்கு பல உடல் , மன நல பிரச்சனைகள் எதுவும் சரி செய்ய முடியாமல் மிக கஷ்டத்தில் உள்ளேன். தங்ககளை சந்திக்க விரும்புகிறேன் அகத்தியப் பெருமான் அருளால் இனியாவது நலமாக இருக்க விரும்புகிறேன் . நான் பொள்ளாச்சியில் உள்ளேன். எனக்கு தங்கள் முகவரி தெரிவிக்கவும். என் மொபைல் : 94426 16559 , இ.மெயில் : nmswamy6@yahoo.com . அன்புடன்.நா.முத்துசுவாமி

  ReplyDelete
 8. ellam thiru guruvin sayal anna nalvakku vedum mr. karthikayan why ur not tell any thing senthilr032@gmail.com

  ReplyDelete
 9. நன்றி
  அன்புடன்
  ராஜமுருகன்
  uvasakthi2raja@gmail.com

  ReplyDelete
 10. Dear Organisers and devotees we are coming to Karkodaganalur on 12.11.2016 Saturday by 9am,By what time Pooja. Thanks & Regards

  ReplyDelete
  Replies
  1. By the grace of Sage Agasthiyar, the abishegam/pooja will start by 10 or 10.30. Be there before 10. Even it will continue upto 11.30. You all can have the blessing/darshan even after that.

   Delete
 11. I am new to this area. can i refresh in this place itself or i need to refresh from tirunelveli and should come here.

  ReplyDelete
 12. Refresh and come. If you want you can take bath @ Thamirabarani.

  ReplyDelete
 13. Thank you sir one more information upto what time the temple will be open because i need to come from thiruchendur after dharsan. i will be reaching here somewhere around 12:00 or evening.
  Is it is possible or only i should come here .

  ReplyDelete
 14. As per information the temple will be open up to 12.30 since abishegam has been arranged. Thereafter the temple will open only by 5.00 PM. Abishegam may start by 10. AM

  ReplyDelete
 15. Thank you very much sir we will meet there

  ReplyDelete
 16. Sir, I want to come from Tirunelveli. Pls let me know which via bus I have to take. I heard we have to take a bus going via Cheranmaadevi. Is the temple near to bus stand. Which temple I should come. Pls clarify. Thanks. P. Kalidoss.

  ReplyDelete
 17. Sir, I want to come from Tirunelveli. Pls let me know which via bus I have to take. I heard we have to take a bus going via Cheranmaadevi. Is the temple near to bus stand. Which temple I should come. Pls clarify. Thanks. P. Kalidoss.

  ReplyDelete
 18. Sir, I want to come from Tirunelveli. Pls let me know which via bus I have to take. I heard we have to take a bus going via Cheranmaadevi. Is the temple near to bus stand. Which temple I should come. Pls clarify. Thanks. P. Kalidoss.

  ReplyDelete
 19. Sir, I want to come from Tirunelveli. Pls let me know which via bus I have to take. I heard we have to take a bus going via Cheranmaadevi. Is the temple near to bus stand. Which temple I should come. Pls clarify. Thanks. P. Kalidoss.

  ReplyDelete
  Replies
  1. From Tirunelveli board the bus to Cheranmadhevi and get down at Nadukallur. From Nadukallur point you can have a walk for 1 Km or take an auto and go to Kodaganallur. At Kodaganallur agraharam, at the end of the road the Perumal temple is there.

   Delete
  2. Thanks a lot for your reply Sir.

   Delete
 20. Happy and Thanks for the proper responce and guidance Sri Kathikeyan Jee and Agnilingam Jee. Our group 4 devotees coming from Vellore.

  ReplyDelete