[புகைப்பட நன்றி:திரு.சரவணன்]
அதற்கு பிறகு 1857 வருஷம் முன்பு இதே யாகத்தை அகத்தியன் யாம் செய்தேன். அப்பொழுது எல்லா முனிவர்களும் உட்பட, முக்கண்ணனும், பிரம்ம தேவனும், விஷ்ணுவும் அமர்ந்து கொண்டு தம் கையால் ஆங்கொரு யாகத்துக்கு பங்கு செய்த காட்சி உண்டு. அதற்கு பிறகு தான் 727 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு யாகம் செய்த பொழுது, பிரம்மதேவனும், முக்கண்ணனும், விஷ்ணுவும் கலந்து கொள்ளவில்லை. யாகத்தை நாங்கள் சித்தர்கள் செய்தோம். அத்தனை தேவர்களும், அசுரர்களும் உட்பட ஆங்காங்கு நின்று கை கூப்பி நின்ற காட்சி எல்லாம்.
எதற்காக சொல்லுகிறேன் என்றால், அதற்குபிறகு தான் அந்த அரியதொரு யாகத்தை செய்யப்போ என்று சொன்னேன், யாராருக்கு, மனிதர்களுக்கும், மனித சித்தர்களுக்கும், அந்த பாக்கியத்தை உண்டாக்கவேண்டும் என்பதற்காகத்தான் சதுரகிரியில் அந்த யாகத்தை நடத்திட அகத்தியன் யாம் கட்டளை இட்டேன். அகத்தியன் இட்ட ஒரு கட்டளைப்படி, அத்தனை பேரும் அங்கு சதுரகிரிக்கு வந்து அகத்தியன் செய்கின்ற கண்கொள்ளா யாகத்தை ஞானத்தால் கண்டுணரவேண்டும் என்பதற்காகத்தா ன், சில ஏற்பாடுகளை அகத்தியன் யாம் செய்தோம். போகன் மட்டுமல்ல, சட்டை முனி இதில் பெரும் பங்கு வகித்தான். சட்டை முனியை பற்றி மிகப் பெரிய வரலாறு உண்டு. அவன் எங்கெங்கு, எப்படி எல்லாம் இருந்து, எப்படி எல்லாம் ஆனான் என்பதை பற்றி எல்லாம் அகத்தியன் மைந்தன் பின் ஒருநாளில் அதை கதையாக எழுதுவான். அப்படிப்பட்ட சட்டை முனி அங்கு வந்து, உங்களை எல்லாம் அணைத்து, அரவணைத்து அழைத்து வந்தான். அப்படி அவன் அரவணைத்தது உங்களுக்கு யாருக்குமே தெரியாது. உங்கள் அனைவரும், சதுரகிரியில் காலடி வைத்த பொழுதிலே, உங்களை முதுகிலே அரவணைத்து, மேலே அழைத்து சென்றான். ஆனால் ஒருவரும் உணர்ந்தாரில்லை. சித்தனே வழி நடத்தி செல்வது என்னே பாக்கியம்! அழைத்து செல்லவேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், நீங்கள் எல்லாம் அகத்தியனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதால், சட்டை முனிக்கு அத்தனை ஆனந்தம். அகத்தியன் அருள் பெற்று வருகின்ற அத்தனை பேர்களுக்கும், யாருக்கும் இத்தனை அருள் கிடைத்ததாக வரலாறே கிடையாது. ஆனால் அன்று சென்ற 50 பேர்களையும், இன்னும் சில பேர்களையும், யாக சாமான்களையும் வரவழைத்து, அவர்களை சட்டை முனி வரவேற்று பத்திரமாய் அழைத்து வந்தது, அகத்தியன் கண்ட கண் கொள்ளா காட்ச்சியடா. இதெல்லாம் திரை மறைவுக்கு பின் நடக்கின்ற காரியங்கள் போல, நடந்த சிறு சிறு காட்ச்சிகள். இதெல்லாம் எதற்கு சொல்லுகிறேன் என்றால், அகத்தியன் சொன்னேன் என்று வந்தவர்கள் அத்தனை பேர்களுக்கும் புண்ணியம் கிடைக்கவேண்டும். மூன்று ஜென்மமாய் இருக்கின்ற தோஷம் விலகவேண்டும் என்பதற்காகவும், யார் யார் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்யலாம். தெரிந்தும் செய்யலாம், தெரியாமலும் செய்யலாம். ஆக, அறிந்தும் செய்யலாம், அறியாமலும் செய்யலாம். ஆகவே அந்த பாபங்கள் எதுவுமே இவர்களுக்கு ஓட்டக்கூடாது என்பதற்காக, மறுபடியும் சுத்தம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் யாம் உங்களை அங்கு வர வரவழைத்தோம். அக்னிதேவன் யாவரையும் தொட்டு தழுவினான். எவன் ஒருவன் அக்னிதேவனால் ஆசிர்வதிக்கப் பட்டானோ, எவன் ஒருவன் அக்னி தேவனால் புனரமைக்கப்பட்டு ஆசிர்வதிக்கப் பட்டானோ, அவனுக்கு எந்த வித தீட்டுமே இல்லை என்பது உண்மை. ஆண்டு 12 வரை அவர்களுக்கு எந்த பாபமும் ஒட்டாது. அந்த புண்ணியத்தை அக்னிதேவன் வலிய வந்து செய்ததால், அத்தனை பேர்களும் அக்னிதேவனால் ஆசிர்வதிக்கப் பட்டீர்கள். ஆசிர்வதிக்கப் பட்டீர் என்று என்னடா இப்படி சொல்கிறானே, அகத்தியன் ஆசிர்வதிக்கவில்லையா என்ற கேள்வி எழலாம். இந்த யாகத்துக்கு காரண கர்த்தாவே அகத்தியன் தானே. இன்னும் சிலரும் வந்திருக்கலாம். வாய்ப்பு கொடுத்தோம். வாய்ப்பை தவற விட்டுவிட்டார்கள். அவர்கள் மனமும் புண் படக்கூடாது என்பதற்காக, இன்னொரு நாளில், ஒரு இடத்தில் அகத்தியன் யாம் யாகம் செய்வோம். அகத்தியன் யாம் அவர்களோடு அமர்ந்து கொண்டு, பிரம்ம தேவன் வந்து ஆசிர்வதிக்க, ஒரு அருமையான யாகம் நடக்கப் போகிறது. அது எங்கு நடக்கப் போகிறது, எப்பொழுது நடக்கப் போகிறது என்று இப்பொழுது உரைக்க மாட்டேன். சூசகமாக யாம் சொல்வேன், அதிலும் கலந்துகொள்பவர்கள் பாக்கியசாலிகள். ஏன் சொல்கிறேன் என்றால், இதெல்லாம் பாக்கியம் என்று எண்ணியிருந்தவர்களுக்கு ஒரு சிறு துளியைத்தான் தர முடிந்தது. அவர்களுக்கெல்லாம் "தைல கிணற்றை" காட்டுவேன். தைல கிணற்றை பற்றி அறிந்தவனுக்கு தெரியும். அதில் ஒரு சொட்டு தைலம் உடலில் தடவிக் கொண்டால், ஆண்டு 400 உயிர் வாழ்வான். அந்த தைல கிணற்றை தேடி அலைகின்ற காட்ச்சியைத்தான் பார்த்து சிரிக்கிறேன். ஏனடா மனிதர்களுக்கு இத்தனை ஆசைகள்? உயிர் வாழ வேண்டும் என்பதில் ஆசையில், பாபம் பண்ணக் கூடாது என்று தீர்மானிக்காமல் ஓடி விடுகிறானே. அதை நினைத்து சிரிக்கிறேன். ஆனால், அகத்தியன் தன் கையால் தைல கிணற்று வாசனையை, எண்ணையை ஒரு சொட்டு கொடுக்கப் போகும் நாள் வெகு விரைவில் இல்லை. ஆதலின் சற்று பொறுத்திரு, அந்த நல்லதொரு காட்ச்சியையும் அகத்தியன் யாம் தருகிறேன்.
பிறகு அகத்தியன் யாம் யாகத்தை தொடங்கினோம். இன்னவர்கள் அத்தனை பேர்களும் அமர்ந்து கொண்டார்கள். என் மீது அந்த யாக புகை வழியாக நெய் வாசனை வராதா, வாசனை வந்தால் என்ன, வராவிட்டால் என்ன, வந்து விட்டோம் உன் சன்னதிக்கு, வாழ்த்துவீர் என்று சொன்ன உள்ளங்களுக்கு அகத்தியன் தத்ரூபமாக காட்சி அளித்திருக்கிறேன். யாகத்தையும் காட்டியிருக்கிறேன். இதை யாருக்கு கிடைத்தது என்பதை அவர்களே யோசித்துப் பார்க்கட்டும்.
போகனே ஓடி வந்தான். "யாம் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். இங்கே என்னை நாடி வந்திருக்கும் பக்தர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை காட்டு. உன் தரிசனத்தை காட்டு என்று சொல்லிவிட்டேன். அன்னவன் என்ன செய்தானோ யாம் அறியேன். இருப்பினும் அவனும் தன் பங்கிற்கு ஏதேனும் செய்திருப்பான். இதை விட ஆச்சரியம் என்னவெனில், விடியற்காலை நேரத்தில் முக்கண்ணனே எழுந்திருந்து விஸ்வரூப காட்ச்சியை காட்டியது தானடா ஆச்சரியம். ஏற்கனவே, இதை பற்றி அகத்தியன் சொல்லியிருக்கிறேன். சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்த இடமடா. சிவபெருமான் முதன் முதலில் தன் நெற்றிக் கண்ணை திறந்து அரக்கர்களை அடியோடு அழித்த இடமடா. 4000 ஆண்டுகளுக்கு முன் இங்கு நடந்த ஒரு சம்பவத்தை நான் நாசூக்காக சொல்லுகிறேன். முக்கண்ணன் நெற்றியை திறந்து மூன்றாவது கண்ணினால் அரக்கர்களை அழித்திட்டான். அன்று முதல், என்று அரக்கர்களை அழித்தானோ, அன்று முதல் இன்று வரை அரக்கர் தேவர்கள் இந்த சதுரகிரியில் குடியேறவில்லை, கால் வைத்ததில்லை என்பது நிதர்சனமான சத்தியமாடா. எல்லா மலைகளிலும் அரக்கர்கள் இருக்கிறார்கள். ஆன்மீகத்தில் ஈடுபட்டு உயரிய நிலையை அடைய விரும்புபவர்களுக்கெல்லாம், அங்கே குறுக்கே நின்று கொண்டு, ஆன்மீகத்தை அழிப்பதற்காக, எந்தெந்த வழிகளில் மனதை திருப்பி விடவேண்டுமோ, அந்தந்த வழிகளில் திருப்பி விட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது அவர்கள் கடமை செய்துவிட்டு போகட்டும். ஆனால், சதுரகிரியில் மட்டும் அரக்கத் தன்மை அழிந்து,ஆண்டு 3247 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை எதற்காகச் சொல்லுகிறேன் எனில், அப்பொழுது தான் சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணை திறந்து, விஸ்வரூபத்தையும் காட்டிய இடமடா. அதே நாளில் தான் இவர்களும் அந்த சதுரகிரியில் இருந்திருக்கிறார்கள்.
சித்தன் அருள் ................. தொடரும்!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ReplyDeleteNandri Aiya. Eru vaarangalaa, yaagattinai nadattum avasiyatthaiyum serappinaiyum mattrum Sathuragiriyin serappinaiyum unartugiraar Agathiya Perumaan. Bhagavaane Saranam.
ReplyDeleteஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ReplyDeleteஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ReplyDeleteஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
Om Agatheesaya Namaha !!!
ReplyDeleteOm Agatheesaya Namaha !!!
Om Agatheesaya Namaha !!!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ReplyDeleteOm Agatheesaya Namaha
ReplyDeleteOm Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Siddhar books in Tamil-- recently, I had visited Goraka siddha jeeva samadhi temple at Vadaku Poigai Nallur (close to Nagapattinam). They have a book-shop selling various religious and yoga books in Tamil, including books by and about Siddhars.
ReplyDelete