[ புகைப்பட நன்றி: திரு.சரவணன்]
சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறந்த போது வெளிவந்த வெளிச்சம் தான் இவர்களில் சிலர் அன்று கண்டிருக்கிறார்கள். அரக்கர்களை கூண்டோடு அழித்ததோடல்லாமல், முதன் முதலாக சிவபெருமான் தன் முக்கண்ணை திறந்த நாளடா! அந்த புனிதமான நாளில், உங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கட்டுமே என்று தான் உங்களை எல்லாம் வரவழைத்தேன். யார் யாருக்கு கிடைத்ததோ, கிடைக்கவில்லையோ, எல்லாருக்கும் கிடைக்கவேண்டும். ஆனால், இவர்களுக்கு மட்டும் தனியாக கிடைத்தது, அகத்தியனுக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை என்று நீங்கள் நினைக்கலாம். ஓரவஞ்சனை அல்ல, உரைத்தேன், முன் கூட்டியே அறிவிப்போம். யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறதோ கிடைக்கட்டுமே என்று எண்ணியதை தவிர, யாரையுமே ஒரு பொழுதிலும் அகத்தியன் கட்டாயப் படுத்தியது கிடையாது. தலையெழுத்து என்று நினைத்து வந்தவர்களுக்கும், பார்க்கவேண்டும் என்று ஆர்வத்தோடு துடித்து வந்தவர்களுக்கும் அகத்தியன் மீதும், அகத்தியன் மைந்தன் மீதும் நம்பிக்கை உள்ளர்வகளுக்கும், அது மட்டுமல்ல, சிவபெருமானையும், விஷ்ணுவையும் ஒன்றாக பாவிக்கும் எண்ணத்தை தூண்டி விடவேண்டும் என்பதற்காகவும் யாம் இங்கு வரச் சொன்னோம். ஆக, மனிதர் வாழ்க்கையில்தான் வித்யாசமே தவிர, அங்கே என் பக்கத்தில் விஷ்ணு இருந்தானே, யாருக்குத் தெரியும். வலது பக்கத்தில் பிரம்மா இருந்து ஆசிர்வதித்தது யாருக்குத் தெரியும். அந்த மூன்று தேவர்களையும் ஒளியாக காட்டினேன். முக்கண்ணனையும் கட்டினேன், முக்கண்ணனாக இருக்கின்ற பிரம்மா, விஷ்ணு, சிவனையும் காட்டினேன். சிவதரிசனம் கிடைக்குமா? விஷ்ணு தரிசனம் கிடைக்குமா? பிரம்ம தேவன்தான் கண் திறந்து காட்சி தருவாரா? என்று எங்கானும் கேள்விப்பட்டது உண்டா? அத்தகைய அறிய காட்ச்சியைத் தான் யாம் காட்டினோம். 1547 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடினான். நன்றாக கவனித்துக் கொள் ஆனந்த தாண்டவம். தாண்டவம் என்றால், கோபம், உக்ரோஷம், ரௌத்திரம் இவைகள் சேர்ந்தது. கைலாயத்தில் சிவன் தாண்டவம் ஆடியதெல்லாம் கோபத்தால் தாண்டவம். ஆனால் சதுரகிரியில் ஆடியது ஆனந்ததாண்டவம். அந்த காட்சி ஒருவருக்குமே கிடைக்காது. சித்தர்கள் பலருக்கும் இது கிடைக்கவில்லை. ஆக இங்குள்ள சித்தர்களுக்கே கிடைக்கவில்லை என்ற வருத்தம்தான். "எல்லாரையும் வரச்சொல்லி காட்டிய நீ அகத்தியா, எங்களையும் வரச்சொல்லி காட்டியிருக்க கூடாதா? நாங்களும் மகிழ்ந்திருப்போமே" என்றனர்.
இந்த சதுரகிரியில் சித்தர்களை பற்றி மிகப் பெரிய வரலாறு இன்றைக்கும் இருக்கிறது. ராம தேவனை பற்றி தெரியுமா உனக்கு? ராமதேவனும் சித்தனாக இருக்கிறான், அவனுக்கும் கிட்டவில்லை. சட்டை முனி இருக்கிறான். அவனுக்கும் கிட்டவில்லை. சட்டை முனி அங்கேயே இருக்கிறான். அடுத்தமுறை கிடைக்கும், கிடைக்கும் என்று சிவபெருமான் தட்டிக் கொடுத்து செல்கிறான், விளையாட்டு காட்டுகிறான். ஆனால், இவர்கள் மனித சித்தர்களுக்கு, இறைமேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு. அகத்தியன் மீது உளமார யார் நம்பிக்கை கொண்டிருக்கிறார், அவர்களுக்கு மட்டும்தான் இந்த அரிய காட்ச்சியை காட்டினேன். யார் அகத்தியன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, யார் அகத்தியன் மைந்தன் சொல்லுகின்ற வாக்கின் மீது நம்பிக்கை வைத்து நடக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வழி காட்டினேன். நிறைய பேர்களுக்கு வழுக்கிவிட்டது, காரணம், அவர்கள் செய்து வருகின்ற பாபங்கள். அந்த பாபத்தை நீக்க வேண்டும். அவர்களுக்கும் கூட தரிசனம் கொடுக்கவேண்டும் என்று தான். இனி விஷயத்துக்கு வருகிறேன். ஏதோ சம்பந்தம் இல்லாமல் பேசுகிறேன் என்று எண்ணாதே. நான் சொல்லுகின்ற ஒவ்வொரு வாக்கிலும் ஒரு சூட்ச்சுமம் இருக்கிறது. ஒவ்வொரு உயிருக்கும் அங்கொரு ருசி ஊட்டியிருக்கிறது. ஆகவே சாம்மட்டியால் அல்ல, எண்ணங்களை பிளந்ததாக உணர்ந்துகொள். இறை சித்தம் அங்கிருக்கிறது அதை கேட்டுக்கொள். அந்த தரிசனம் உனக்கு கிடைத்தால், நீ எடுத்த காரியம், நடந்த காரியம், நடக்கப் போகும் காரியம் எல்லாம், உன் பூர்வீக வினைகள் அத்தனையும், கூண்டோடு அழிந்துவிட்டதடா. கைலாயத்தில் கிடைக்காத காட்சி எல்லாம் உங்களுக்கு கிடைக்க வைக்கிறேன். கைலாயம் செல்லாமல் அந்த காட்ச்சியை காண முடியாது. ஏன் என்றால் சித்தர்கள் எல்லாம் அங்கே தான் இருக்கிறார்கள்.
இன்னொன்று தெரியுமா? அன்றைய தினம் நாங்கள் 18 சித்தர்கள் தான் யாகம் செய்தோம். 63 சித்தர்களும் அங்கு வந்து நின்றார்கள். இதில் பெரும் சித்தர்களும் உண்டடா. அதுதான் இன்றைக்கு சொல்லுகின்ற செய்தி. இதுவரை பெரும் சித்தர்களை பற்றி கேள்விப் பட்டிருக்கிறாயா? பெரும் சித்தர்களுக்கு குபேர சொத்தை கொடுத்து, அவர்களை வரவழைத்து, தன் பக்கத்தில் வரவழைத்து, அவர்கள் கைகளால் பூசை/அர்ச்சனை செய்ய வைத்தான். அவர்கள் பண்ணிய யாகத்தை கண்டிருக்க முடியாது. அத்தகைய பெரும் சித்தர்கள் உண்டு. அவர்கள் அனைவரும் வந்திருந்தனர். அவர்களை பற்றி யாம் பின்னர் உரைப்போம்.
முதலில், அகத்தியன் இட்டதொரு கட்டளைப்படி, முறையாக, குறை இல்லாமல், பய பக்தியோடு, அகத்திய தரிசனம் மட்டுமல்ல, சிவ தரிசனத்தை கண்டுகொண்ட இவர்களுக்கு இன்னொரு விஷயத்தை சொல்லுகிறேன். ஆங்கொரு எழுத்தாணி மண்டபம் என்று உண்டு. போகனின் மண்டபம் ஒன்று உண்டு. அங்கெல்லாம் அற்புதமான சித்தர்கள் எல்லாம் அமர்ந்து தவம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம், யாகம் நடந்த நாளில், அவர்கள், எழுத்தாணியால், ஓலைச்சுவடியில் எழுதி வைத்துவிட்டு போவது வழக்கம். அப்பொழுது சம்பவங்களில், யார் யார் மலைக்கு வந்தனர், யார் யாருக்கு அந்த சிவ தரிசனம் கிடைத்தது என்றெல்லாம் அங்கே ஓலைச் சுவடியில் எழுதியிருக்கிறது. இங்கு வந்த அத்தனை பேர்களும் அந்த ஓலைச் சுவடியில் குறிக்கப்பட்டது. ஆக! இது யாருக்கடா கிடைக்கும்? ஆண்டாண்டு காலம், அகன்று போனாலும், அந்த ஓலைச் சுவடி என்றைக்காவது அகத்தியன் கையில் கிடைக்கும். அப்பொழுது எடுத்து படிப்பான் பார். அகத்தியன் சொன்னேனே அன்றைக்கு, எத்தனை அருள் பெற்றவர் என்று, அந்த ஓலைச்சுவடியின் 16 வது பக்கத்திலிருந்து 32வது பக்கம் வரை, அந்த ஓலைச் சுவடியில், அத்தனை பேர்களும் பொறிக்கப் பட்டிருக்கும். அத்தனை பேர்களும் புண்ணியம் செய்தவர்கள். நாங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் இல்லையா? என்று ஏங்கக்கூடாது. மற்றவர்களுக்கு, அவர் இதை விட பன் மடங்கு அதிகமாக சில விஷயங்களை காட்டலாம். நீங்கள் அகமகிழ்ந்து போவதர்க்காகவோ, அகத்தியனை துதிபாடுவதர்க்காகவோ இதை நான் சொல்லவில்லை. இதைவிட அரியகாட்சி நீங்கள் காண முடியாது. இன்னும் சிலருக்கு சில காட்சி கிடைக்க இருக்கிறது. சித்தர்கள் தோளில் தூக்கி செல்லுகின்ற காட்ச்சியை கண்டிருப்பீர்கள். சித்தர்கள், இங்கு வருகின்ற பலரை, கையேடு பிடித்து, அலக்காக தூக்கி உட்காரவைத்து, அந்தரத்தில் அமரவைத்து, கீழே இறக்கி விடுகிற காட்சி கூட சிலருக்கு கிடைக்க கூடும். அது யாரென்று இப்பொழுது சொல்லமாட்டேன். ஏன் என்றால், சித்தர்கள் இப்பொழுது என் பக்கம். இது சித்தர்கள் காலமடா.
ஆக, யார் யார் கடைத்தேறி, பொறுமையாக இருக்கிறார்களோ, யார் யார் அகத்தியன் மைந்தனை, அவன் சொல்லுகின்ற வாக்கினை தெய்வமாக வைத்து போற்றுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நான் அந்த காட்ச்சியை காட்டுவேன். ஏன் அடிக்கடி அகத்தியன் மைந்தனை கூறுகிறேன் என்று தவறாக எண்ணக் கூடாது. அகத்தியன் அங்கொரு யாகம் வளர்த்திட உத்தரவிட்டேன். அன்னவனுக்கு ஏதேனும் சரமம் ஏற்ப்பட்டால், வியாழ அனுகூலம் இல்லாத நேரத்தில் கூட, அன்னவன் வாக்கில் யான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறேன். அந்த வாக்கில் இருக்கிற் காரணம் என்னவெனில், அகத்தியன் தன்னை மறந்து த்யானத்தில் இருக்கின்ற நேரத்தில், ஏதேனும் வில்லங்கம் வரக்கூடாது என்பதற்காக, அன்னவன் வாக்கிலே அன்றைக்கு, தர்பை புல்லாய் ஏறி இருக்கிறேன். ஆக, அவன் சொன்ன வாக்கு, நிச்சயம் பலிக்கும் என்பதை நாசூக்காக சொல்லுவான். இருந்தாலும் அவனும் அகமகிழ்ந்து சில வேளை இவர்களிடம் கோபப்படுவான். அகத்தியன் சொல்லுவதெல்லாம் வேத வாக்குகள் இல்லை என்று எண்ணட்டும். ஆனால் இவனுக்கு மட்டும் என்ன சலுகை என்று மற்றவர்கள் எண்ணக் கூடாது. அதற்க்கு பின் ஒரு வரலாறே இருக்கிறது. இவன் யார்? ஏன் மனிதனாகப் பிறந்தான். ஏன் வலம் வந்துகொண்டிருக்கிறான் என்பதெல்லாம் எனக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். அதை அவனே வெளியிடமாட்டான். வெளியிட்டால், அவனிடம் நானே இருக்கமாட்டேன். இது அவனுக்கும் தெரியும். ஆகவே செய்திகளில் உள்ள சில சூட்சுமங்களை அவன் சொல்வதும் இல்லை, சொல்லப் போவதும் இல்லை. ஆனால், அவன் தனக்குத்தானே அறிந்து கொள்வான். எதற்கு சொல்கிறேன் என்றால், சம்பந்தம் இல்லாமல் பேசுகிறேனே என்று எண்ண வேண்டாம். ஏன் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
எவன் ஒருவன் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தானோ, அவனுக்கெல்லாம் ஞானம் உண்டு. இன்னவனும் பிறந்ததொரு, மூலத் திருநாளாம். மூலம். ஜென்மா கேதுவின் நட்சத்திரத்தில் அமைந்தால், அவர்களுக்கெல்லாம் அந்த காட்சிகள் உண்டு. அவர்கள் வேறு விதமாக நடந்து கொள்வார்கள். வித்யாசமாக எண்ணுவார்கள். பேச மாட்டார்கள். அதிகமாக பேசமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம், அகத்தியன் உள்ளத்திலே இருந்து கொண்டு, சூட்ச்சும வழியிலே அருள் புரிந்து, அனைத்தையும் காட்டுவான். இதற்கெல்லாம் காரணம் இருக்கிறது. அகத்தியன் சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லுக்கும் காரணம் உண்டு. சித்தன் போக்கு சிவன் போக்கு என்று ஒரு பழமொழி கூட உண்டு. இஷ்டப்படி பேசுபவனெல்லாம் சித்தன் அல்ல. அகத்தியன் சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. அதை புரிந்துகொள்வதற்கு சற்று கால தாமதம் ஆகும். ஒருவேளை புரிந்து கொள்ள முடியாமலே கூட போகலாம்.
சித்தன் அருள் .............. தொடரும்!
Vanakkam ayya ,
ReplyDeleteYethu Kethuvin Natchathiram ???
Aswini, Makam & Moolam - Kethu's star
DeleteVanakam Aiya, I saw today's post. Agathiyar "Ithu Siddhargal Kaalam" yendru kurippitthullaar. Great Aiya.
ReplyDeleteAll arts are very very beautiful. I hope this is also Gurudevar's wish. Its blessing for Mr. Saravanan to draw such spiritual art.
ReplyDeleteBeautiful picture by Shri Saravanan. Feel that we are also climbing.
ReplyDeleteOm Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha !!!
ReplyDeleteOm Agatheesaya Namaha !!!
Om Agatheesaya Namaha !!!
வணக்கம் . உங்கள் வாழ்த்துக்கள் அனைத்தும் மகாகுரு அகத்தியர் திருபாதங்களுக்கே சொந்தம்!
ReplyDelete*ஓம் அகத்தீசாய நாம:*
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ReplyDeleteVery nice art Mr Saravanan...very natural...ayya has choosen you... Great and gifted
ReplyDeleteGood
ReplyDeleteSir, what is the meaning of the Tamil word "sammatial" in the sentence "aagave sammatial alla". Thanks
ReplyDeleteசித்தா் அருள் தொடரட்டும்.... அடியேனுக்கும் அருள் புாிய வாழ்த்துங்கள்...
ReplyDelete"சம்மட்டி" என்பது மண் வெட்ட/உடைக்க உபயோகிக்கப்படும் "மண் வெட்டி" என்றழைக்கப் படும் ஒரு கருவி.
ReplyDeleteAyya vanakkam. I have been following your blog for quite some time. I also had the opportunity of getting my nadi reading done by shri. Hanumathdasan several times. Father Agathiyar has been guiding me for all these years. I read in Nadi sollum kadhaigal that we should light Motcha Deepam for souls who died in accidents or unnaturally. My uncle died in an accident last week so I would like to know how to light the lamp. Is there any specific way in which to do it? Where should it be done? It would be helpful if anybody who knows what to do, replies.
ReplyDeleteI remember reading in "Nadi sollum" books of Shri Hanumatdasan that moksha deepam should be lit, as soon as possible, in a Bhairava or Siva temple. The main thing is not to delay. It seems a simple clay lamp will do.
DeleteThank you so much Sri. Suresh. I am grateful for your reply. I will not be able to go to Thiruvannamalai as suggested by Sri. Shweranga but will go to a Shiva temple nearby and light it today. May God give peace to the departed soul.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteKanchi Periaval had also emphasised moksha deepam. "In the year 1987 MGR had expired after a long illness. He had done a lot of service to the poor and needy during his tenure as the chief minister of Tamilnadu. Paramacharya was also very much pleased with him. He told his devotees to light moksha deepam in the temples for the departed soul."
DeleteDid Motcha Deepam light up in our home?
ReplyDeletePlease reply me anyone
Did we light Motcha Deepam in home ?
ReplyDelete