[வணக்கம்! அகத்தியப் பெருமான் அடியவர்களே! வரும் ஞாயிற்று கிழமை அன்று அகத்தியப் பெருமானின், நட்சத்திர நாள். மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றைய தினம் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு தொகுப்பை தரவேண்டும் என்பது அடியேனின் அவா. ஆனால் இன்று வரை அதற்கான வழியை காட்ட மாட்டேன் என்கிறார். எத்தனை முறை கேட்டும், ஒரு அசைவும் இல்லை. ஆகையால், உங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். பெரியவரிடம் நீங்களும் கொஞ்சம் வேண்டிக் கொள்ளுங்களேன். நாம் எல்லோரும் சேர்ந்தே, அன்று அவர் நினைவில் திளைத்து சந்தோஷப் படலாமே! ஹ்ம்ம்.. எல்லாம் அவர் செயல், அவர் விருப்பம் என்று மட்டும் தான் இப்போது (ஏன்! எப்போதுமே) சொல்ல முடியும். அவர்தான் சொல்லியிருக்கிறாரே. "உண்மையான பிரார்த்தனையை மிஞ்ச வேறு எதுவும் இல்லை என்று! உங்கள் அனைவரின் பிரார்த்தனையை எதிர் நோக்கி...... சித்தன் அருளை தொடருவோம்.]
சில நொடிகளுக்குப் பின் ஒரு நண்பர் சந்தேகம் கேட்டார்.
"விசிடிங் கார்டில்" தன்வந்தரி சக்கரத்தை போடலாமா" என்று.
அதற்கு அகத்தியப் பெருமான் "அன்றே உரைத்தோம், தன்வந்தரி மந்திரத்தை, தன்வந்தரி சக்கரத்தை தாராளமாக போடலாம்" என்றார்.
நானும் "தன்வந்தரி சக்ரம் என்பது நோய்களை தீர்க்கும் ஒரு சக்கரம். உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றேன்.
"வேறு என்ன கேடக வேண்டும்?" என்று கேட்ட பொழுது,
அடுத்ததாக ஒரு நண்பர் "வாசி யோகம் செய்து வருகிறேன். அது சரியான முறையில் தான் செய்கிறேனா? அதில் மேலும் முன்னேற வேண்டும். குண்டலினி யோகம் வேண்டும்!" என்றார்.
அகத்தியர் கூறினார்.
"அகத்தியன் கொடுத்த ஒரு வழிமுறை தானடா அது. தொடர்ந்து செய்து கொண்டு வருகிறாய் என்பதை யாம் அறிவேன். கொஞ்சம் பொறுத்து இரு. அதற்கு மாற்று வழியை சீக்கிரம் சொல்லி, உன்னை அந்த நிலையிலிருந்து பதவி உயர்வு செய்வது போல, அந்த நிலையிலிருந்து மாற்றிக் காண்பிக்கிறேன். சில காலம் பொறுத்திரு. அகத்தியன் எல்லாமே அறிந்தவன் என்பதால், உனக்கு எப்போது அந்த உயர்ந்த ஞானத்தை, குண்டலினி சக்தியை தரவேண்டும் என்பது தெரியும். அகத்தியன் என்னிடம் அந்த பொறுப்பை விட்டுவிடு. நான் பார்த்துக்கொள்கிறேன். இப்பொழுதாவது பக்குவப்பட்ட வழிக்கு வந்து கொண்டிருக்கிறாயே. உனக்கு கட்டாயம் குண்டலினி சக்தி கிடைக்கும்."
உடனேயே அவர் "இந்த பயிற்சி பண்ணலாமா? வேண்டாமா?" என்று கேட்டார்.
"இப்பொழுது வேண்டாம். குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறது. ஒரு சில பொறுப்புகள் இருக்கிறது. மானிட உலகத்துக்கு சில சேவைகள் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த யோகத்தை செய்துவிட்டால், பின்னர் சிறிதும் வேறு எதிலும் நாட்டம் இருக்கக் கூடாது. வேறு மாதிரி போய் விடும். சில மனிதர்கள் பயனில்லாமல் வீணாகப் போய்விடுவார்கள். இதுவும் கூட ஒருவகையில் குண்டலினி சக்தி என்று எண்ணிக்கொள். தகுந்த காலம் வரும். அகத்தியனே ஒருநாள், பிரம்ம முஹுர்த்தத்தில், செவ்வாய் கிழமை அன்று காலை குண்டலினி சக்திக்கு ஒரு குருவை அமைப்பார். குண்டலினி சக்திக்கு ஒரு குரு வருவார். உனக்கு அமைப்பார். பிறகு சென்று விடுவார். பின்னர் தேடினாலும் கிடைக்கமாட்டார். அது அகத்தியனாகக் கூட இருக்கலாமே" என்று பதில் வந்தது.
"அட! எப்படி சொல்கிறார் என்று பாருங்கள். அவரே வந்து உங்களுக்கு தந்தாலும் தருவார் என்று சொல்கிறார். உங்களுக்கு எவ்வளவு பெரிய பரிசு" என்றேன் நான்.
"வேறு என்ன?" என்றேன்.
"எங்கள் நாலு பேருக்கும் என்ன வாழ்க்கை அமையும்? அது ஏன் நாங்கள் நாலு பேர் மட்டும்?" என்று கேட்டார் ஒருவர்.
அதற்கு அகத்தியர் "இவர்களெல்லாம், சித்தனுக்கு தொண்டு செய்து வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். எதையும் எதிர்பார்க்காமல், மலைகளிலே, காட்டுமிராண்டி போல் திரிந்தவர்கள். ஏன் என்றால், யாருக்குமே இவர்களை கண்டால் பிடிக்காது. இவர்கள், தெய்வத் தன்மையை நோக்கி பயணம் செய்தவர்கள். பார்ப்பதற்கு, நீண்ட தாடியும், மீசையுமாக கொண்டு, உட்கார்ந்துகொண்டு, பரதேசிபோலவே உலா வந்துகொண்டிருந்த காலத்தில் எல்லாம் இவர்களை கண்டாலே மிருங்கள் எல்லாமே அஞ்சும். மிருகங்களின் பாஷையை தெரிந்து கொண்டவர்கள்.மிருகங்களை தட்டிக்கொடுத்து, பழக்கி உட்கார வைத்து காட்டிலே வாழ்ந்தவர்கள். சித்தத்தன்மையின் உச்சகட்டத்தை அடைந்தவர்களுக்கு எல்லாம், துணையாக இருந்து, அவர்கள் ஆசிர்வாதம் பெற்றவர்கள். தெரிந்தோ, தெரியாமலோ செய்துவிட்ட தவறுகளுக்ககத்தான் இப்போது மானிடர்களாக பிறந்தவர்கள். இருந்தாலும், சித்தத் தன்மை ரத்தத்திலே ஊறி போனதால் தான், சித்தத் தன்மை நோக்கி வந்திருக்கிறார்கள். அதற்கும், முன் ஜென்ம புண்ணியமே இதற்கும் காரணம். ஆகவே, மனிதனாக பிறப்பெடுத்தது, மறு பிறவி என்பது அப்பொழுது இல்லை என்றாலும் கூட, செய்த தவறுகளின் காரணமாக, கர்ம வினையை அனுபவிப்பதற்காக மனிதர்களாக பிறவி எடுத்தவர்கள். இன்றோடு அவர்கள் கர்ம வினை முடிந்தது விட்டது என்பதால், குறித்துக் கொள்ளுங்கள், இன்றோடு முடிந்து விட்டதென்பதால், சித்தத் தன்மையின் உச்சகட்டத்தை நோக்கி அவர்கள் ஒவ்வொருவரும், பயணம் செய்வார்கள். சித்தத் தன்மை என்பது துறவறம் பூணுவது அல்ல. நன்றாக ஞாபகம் வைத்துக் கொள், சித்தத் தன்மை என்பது துறவறம் பூணுவது அல்ல. மனதுக்குள் சித்த நிலையை ஏற்றுவதுதான். ஆகவே சித்தத் தன்மை என்பது யாருக்குமே புரியாது. முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும், முனிபுங்கவர்களுக்கும், தெய்வங்களுக்குமே மட்டும் தெரிந்த ரகசியம் இது. யார் யார் சித்தத் தன்மை பெற்றவர்கள் என்பதெல்லாம் அகத்தியன் யான் கணக்கிட்டு வைத்திருக்கிறேன். அந்த வரிசையில், காவிரிக்கரை ஓரத்தில் அமர்ந்து தனித்து தவம் செய்தானே, இவனுக்கும் உண்டு, வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிற அவனுக்கும் உண்டு. இன்னும் அந்த இரண்டு பேர்களுக்கும் உண்டு. நாலு பேருமே சித்த தன்மை அடைந்தவர்கள். இந்த நாலு பேர்களுமே, அகத்தியனுக்கு பல்லக்கு தூக்கியாக இருந்தவர்கள். அவர்களுக்கும், உங்கள் எல்லாருக்குமே, சூசகமாக சொன்னேன், அகத்தியன் உங்கள் எல்லோருக்குமே "பல்லக்கு தூக்கியாக" மாறிக்கொண்டிருக்கிறேன்" என்று முடித்துக் கொண்டார்.
"அடடா! இன்று இது ஒரு நல்ல நாடி வாசிப்பு, நல்ல செய்திகள்" என்றேன் நான்.
"வடபுலன் யாத்திரை செல்ல வேண்டும் என்று ஒரு அவா. அது நிறைவேறுமா?" என்றார் ஒருவர்.
"எப்படி திருக்குறும்குடி மலை ஏறி வந்தாயோ, அது போல் வடபுலன் யாத்திரை அமையும் என்பது எழுதி வைக்கப்பட்ட விதி. அதை மாற்ற அகத்தியனால் கூட முடியாது. ஆகையினால், மிக விரைவில், ஒரு புனிதமான நேரத்தில், இவர்கள் நான்கு பேருமே, வடபுலன் நோக்கி செல்வார்கள். சித்தர்கள் மட்டுமல்ல, தெய்வங்கள் தரிசனத்துக்கும் கூட ஏற்பாடு செய்கிறேன். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஒரு சாதாரண மனிதன் தெய்வத்தை பார்க்க முடியாது. பார்த்தால், ஒன்று கண்பார்வை இல்லாமல் போய்விடும், அல்லது அவர்களே இல்லாமல் போய் விடுவார்கள். அந்த விதியையும் மீறி, இவர்கள் நான்கு பேர்களும், தெய்வத்தை கண்டு வருவார்கள். இந்த நல்ல நாளில் அந்த வாக்குறுதியை தருகிறேன். இவர்கள் செல்வார்கள். தெய்வத்தை கண்டுவருவார்கள். அந்த சந்தோஷத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. மனதிற்குள்ளே பதிந்து கொள்ளவேண்டிய, அற்புதமான, ஆனந்தமான சந்தோஷம்டா. அதுவே, இவர்களின், பிரார்த்தனையின் உச்சகட்டத்தில், அகத்தியன் யாம் வழி காட்டுகிறேன். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்கிறேன். நீங்கள் எல்லாம் அகத்தியனை நம்புகிறீர்கள். பாக்கியெல்லாம் நம்புவதில்லை. உண்மையிலேயே நீங்கள் அகத்தியனை நம்பினால், அந்த தரிசனம் உங்களுக்கு கிடைக்கும். அது சத்தியமான வாக்கு. இங்கு யாரையுமே குறை சொல்லவில்லை. மனிதர்கள் தவறு செய்யலாம், கோபப்படலாம், ஆத்திரப் படலாம், விட்டுக் கொடுக்காமல் போகலாம். வேறு ஏதேனும் சந்தர்பத்தில், நம்பிக்கை இல்லாமல் போகலாம், தவறு இல்லை. ஆனால்,அதையும் மீறி "சிக்கெனப் பிடித்தேன்" என்று இறைவனை நோக்கி எவன் ஒருவன் "சிக்கெனப் பிடிக்கிறானோ" அவனுக்கு அகத்தியன் வழிகாட்டுவான். இப்பொழுது சித்தர்கள் காலமடா! சித்தர்களிடம் மூவரும் பொறுப்பை ஒப்படைத்தது போல, அகத்தியனிடம் மட்டுமல்ல, இன்னும் நிறைய சித்தர்களிடம், மூவர்களும், பலவித பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிராகள். நாங்கள் சித்தர்கள் எல்லாம், ஒழுங்காக, அந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அதைத்தான் செய்கிறேன், செய்யப் போகிறேன். அந்த பாக்கியம் கிடைக்கும்."
சித்தன் அருள்............ தொடரும்!
Om Agatheesaya Namaha
ReplyDeleteOm Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Miga Miga Arputham! Eraiva Nin Karunaiye Karunai! Aum Agatheesaya Nama
ReplyDeleteசித்த தன்மையை பற்றி அகத்திய பெருமான் விரிவாக கூறி உள்ளாரா? இருந்தால் தயவு செய்து அதை குரு பூஜை அன்று தரலாமே? குரு பூஜை அன்று கட்டுரை வெளி வர எல்லாம் வல்ல அகத்திய பெருமானை தியானிக்கிறேன். நன்றி. வள்ளி
ReplyDelete
ReplyDeleteஐயா தாங்கள் கூறியது போல் அணைவரும் அகஸ்தியர் அருள் பெற்றவர் தாம் இல்லை என்றால் இதை வாசிக்கும் பாக்கியம் கிடைக்காது .அந்த நால்வரில் நீங்களும் ஒருவர் தானே ? நான் ஹனுமத்தாசன் ஐயாவை பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன் அவர் மூலம் அகஸ்தியரிடம் ஆசி வாங்க வேண்டும் என்று விரும்பினேன் .இன்று அவர் நண்பர் உங்கள் மூலம் மறுபடியும் அகஸ்தியர் அருளை தெரிந்து கொள்வதின் முலம் நான் மிகவும் பாக்கியசாலி என்று நம்புகிறேன் .
அகஸ்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அகத்தீசாய நமஹ
Jai Sarguru Sarguru Patham Saranam Patham. OM Agathisaya Namaha. We will pray to bagawan ayya. Dindigalla agasthiyar ayya guru pooja http://sadhanandaswamigal.blogspot.in/2013/12/agasthiyar-guru-pooja.html link
ReplyDeleteWe pray Sri Lobamuthra Matha Sametha Sri Agasthiya Maharishi to accept our prayer and bless all to be happy in their life. and give the best information in Sitthan Arul, on Sunday 22-12-13.
ReplyDeleteWe the all are Happy for ever because of your presence in this world .
Om Agastheesaya Namaha
g. alamelu venkataramanan.
Namaskaram and thank you for your devoted prayers - Karthikeyan
DeleteDear sir,
ReplyDeleteI would like to ask some questions to guru agasthiyar I am in chennai, can u help me pls, sorry for troubling you ..
regards,
balaji
Balaji! Get an appointment @ Kallar. The details are available in Siththan Arul web page. Probably you will get the appointment in Febraury 2014. Wait till such time. Go get the answers from Agathiyar
DeleteKarthikeyan
is there agathiyar temple in kallar ashram?
ReplyDeleteif yes do we need to climb?
Madam!
DeleteThat asramam itself belong to Agathiyar. 6 Ft agathiyar statue is there in the ashram. You need not climb hill. It is situated in a small mount. You can climb.
Karthikeyan
To get an idea of the place, please visit the Kallar Ashram at http://agathiyarvanam.blogspot.com/2013/08/agathiyar-gnana-peedham-kallar.html
DeleteWe seek thy blessings to hear / read specific on having darshan of Guru Agathiar, please bless us through the author and in turn we will all be BLESSED on the GURU POOJA day (22nd Dec 2013)
ReplyDeleteMay the earnest devotes be blessed with Guru's Manaseega Darshan too by his grace, we seek thy special blessings for the author and the blogger through whom we enjoy such a bliss. Om Agatheesaya Namah:
andha bakyasaligalai nangal parkalama, if you wish please furnish photos of these upcoming sidhars - Om agatheesaya nama ha -thank you
ReplyDeleteom
ReplyDeleteom agatheesaya namaha
ReplyDeletecould u please tell us the tanvantri mantra .................