வணக்கம்!
போகர் சித்தர் கூற்றுப்படி முருகப்பெருமான் ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் பிறந்ததாக அறிய முடிகிறது. இந்த வருடம் அவரது பிறந்தநாள் நாள் செப்டம்பர் 02ம் தியதி வருகிறது. நுணுக்கமாக பார்த்தால், அவர் பிறந்ததாக கூறிய திங்கட்க்கிழமை அன்று இந்தவருடம் அவர் நட்சத்திரம் வருகிறது. அகத்தியப் பெருமானுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த மஹா குருவான முருகரின் பிறந்த நாளை அன்றைய தினத்தில் எந்த கோவிலிலும் உணர்ந்து செய்வதாக தகவல் இல்லை. அகத்தியர் அடியவர்கள் ஆன நாம் அன்று அவர் ஆசிர்வாதம் / அருளை பெற ஏதேனும் ஒரு நல்லதை செய்வோம்.
என் நண்பர் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலை உங்களுக்கு தர விரும்புகிறேன். ஒதிமலை முருகர் கோவிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக அன்றைய தினம் முருகருக்கு அபிஷேக ஆராதனை செய்து வருகிறார்களாம். அந்த நேரத்தில் மனிதர்களான நாம் மட்டுமன்றி சித்தர்களும் அரூபமாக வழிபாடு நடத்துகிறார்கள். அன்று முதல் 90 நாட்களுக்கு சித்தர்கள் அனைவரும் அந்த மலையில் இருந்து முருகரை வழிபடுவார்களாம். நம்மிடம் நேர்மை இருந்து, த்யானத்தில் அமர்ந்தால் நமது மனக்கண்ணில் அவர்கள் பூசையை, அவர்களை காணமுடியும் என்று கூறுகிறார். வசதி உள்ளவர்கள் அன்றைய தினம் சென்று வாருங்கள்!
சென்று அவர் அருள் பெற்று நலமுடன் வாழ்க!
கார்த்திகேயன்!
பயனுள்ள,அனைவருக்கும் அருள் கிடைக்ககூடிய அருமையான தகவல். நன்றிகள் பல அய்யா .
ReplyDeleteஅய்யா ஒரு சிறிய விண்ணப்பம்! சரியா? தவறா? என்று தெரியவில்லை ஆனாலும்,..... அப்பன் முருகனை முருகர் என்று, அழைப்பதை விட முருகன் என்று அழைத்தால்தான் அவன் நம்முடன் நெருங்கி வருவது போல் இருக்கிறது .
ReplyDeleteமுருகா சரணம்! அழகா சரணம்! அப்பனே சரணம்!
அருள்வாய் குருவே! அகிலம் யாவும் அருளுடன் வாழ.
ஓம் நமகுமாராய !
ReplyDeleteஓம் நமகுமாராய !
ஓம் நமகுமாராய !
ஓம் நமகுமாராய !
ஓம் நமகுமாராய !
ஓம் நமகுமாராய !
thanks for sharing
ReplyDeleteஅன்புள்ள அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஅய்யா, ஓதிமலைக்கு செல்ல பஸ் ரூட் சொன்னால் மிகவும் நன்றாய் இருக்கும்.
அன்புடன்,
மு.மோகன்ராஜ், மதுரை..
கோயம்பத்தூர் காந்திபுரம் சென்று அங்கிருந்து அண்ணூர் செல்ல வேண்டும், அண்ணுரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் ஒதிமலை. அண்ணூர்-ஒதிமலை பயணத்திற்கு போக்குவரத்து வண்டியை நாம் தான் அமைத்துக்கொள்ளவேண்டும். பஸ் கிடையாது. அடிவாரம் வரை பாதை உள்ளது.
Deletevasathiullavar endru sollamal thannal poga muyandravarkal ena kooralame?
ReplyDelete