​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 23 June 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 5

நம்மில் பலருக்கும் த்யானத்தில் அமர்ந்தால் அது எளிதில் கைவல்யமாவதில்லை. மனம் எங்கெங்கோ ஓடும், நிலைத்து நிற்காது. கவனத்தை ஒரு முனையில் பிடித்து நிறுத்த ஒரு எளிய வழி இருக்கிறது. முதலில் இந்த உலகத்தில் எதுவும் எனக்கு தேவை/முக்கியம் இல்லை என்று திடமாக நினைத்துக்கொண்டு, கவனத்தால் சுழி முனையில் (புருவங்களுக்கிடையில்) "ஓம்" என்று எழுதுங்கள்.  இதை தொடர்ந்து செய்யுங்கள்.  த்யானம் நீங்கள் நினைக்கும் விதத்தில் அமையும்.  கவனம் "ஓம்" இல் மட்டும் இருக்கட்டும்.

ஊன் உடம்பு ஆலயம் என்றார்கள் பெரியவர்கள்.  அப்படியானால் நமது சித்தம் அல்லது மார்பு இறை அமர வேண்டிய இடம்.  எந்த ரூபத்தில் இறையை வணங்க விரும்புகிறீர்களோ அந்த ரூபத்தில் அங்கு இருத்தி மானசீக பூசையை பண்ணலாம்.  உதாரணமாக "முருகரை" நீங்கள் விரும்பினால் அவர் வேலுடன் நிற்கும் கோலத்தில் மனதில் த்யானித்து இருத்தி அவருக்கு அபிஷேகம், அலங்காரம், ஜபங்கள், நிவேதனம் போன்றவை செய்யலாம். அவர் நம் உள்ளே இருப்பதை கண்டு அப்படியே த்யானத்தில் இருக்கலாம். மனம் ஒன்று பட்டுவிடும்.  இப்படி தினமும் செய்து வர ஒரு சில நாட்களில் நம் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழ்வதை நீங்கள் உணரமுடியும்.நம் செயல்கள் அனைத்தும் இறை செயல் போல அன்பு நிறைந்ததாக இருக்கும். அனைத்து வித்தியாசங்களும் விலகி விடும்.  இதை தான் பெரியவர்கள் திரை விலகல் என்கிறார்கள். லிங்கம் வைத்து வணங்கி வந்தால் ஒரு சில நாட்களிலேயே நம் மார்பில், நெஞ்சு கூட்டுக்குள் லிங்க ரூபம் உந்தி நிற்பதை நம்மால் உணர முடியும்.

ஜபம் பண்ணும் பொது சாத்வீக மந்திரங்கள் தான் நல்லது. ஏன் என்றால், என்ன ஜபம் ஓடுகிறதோ அதற்கேற்றாற்போல் நம் உடலும் மனமும் மாறிவிடும்.

குறைந்தது அமைதியான வாழ்க்கை வேண்டும் என்றால், எந்தக் காரணம் கொண்டும் "அதர்வண வேதம்" பக்கம் சென்று விடாதீர்கள். அது கலியுகத்தில் மனிதர் விலக்கவேண்டியது என்கிறார்கள் பெரியவர்கள்.

இத்தனை விஷயங்களை படிக்கும் பொது உங்களுக்கு ஒரு சித்தர் பாடல் நினைவுக்கு வரலாம்.  "மனம் செம்மையானால், மந்திரம் ஜெபிக்க வேண்டா", இதெல்லாம் எதற்கு என்று?  பாரபட்சமின்றி உங்களை நீங்களே சோதித்துக்கொள்ளுங்கள்.  உங்கள் மனம் சித்தர்கள் சொல்கிற அளவுக்கு "செம்மையாகிவிட்டதா?" என்று.  இல்லையெனில் மேல் சொன்னவை அத்தனையும் தேவை தான், அந்த "செம்மையான மனநிலை" அடையும் வரை.  அதற்கு  பின் மந்திரம் தேவை இல்லை.

பேசக் கூடாத மூன்று நேரங்களில், இரண்டாவது நேரம் "பூசை, த்யானம்" போன்றவை செய்யும் நேரம்.

பூசை, த்யானம் போன்றவைக்கு நாம் அமரும் நேரம் உடுத்தியிருக்கும் உடை சுத்தமாக அழுக்குகள் இன்றி இருக்க வேண்டும் என்கிறார் அகத்தியர் பெருமான். ஆதலால், அதற்காகவே ஒரு உடையை தனியாக மாற்றி வைக்கலாம்.

நம் நெற்றியை "சிவன் விளையாடும் தெரு" என்கிறார் ஒரு சித்தர். இன்னொருவரோ "உள்ளே இறை உறைகிறது என்று உணர்ந்தேன், ஆதலால் திருநீர் பூசி குங்குமம் இடுகிறேன்" என்கிறார். உணர்ந்தவர்கள் சொன்னதை நம்புவோம்.  ஒரு போதும் நெற்றியில் விபூதி குங்குமம் இல்லாமல் இருக்ககூடாது. பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக்கொள்வதை தவிர்க்கவும்.

நீரில் குழைத்து நெற்றிக்கு இட்டுக்கொள்வது சித்தர், முனிவர் முறை.

பஞ்ச பூதங்களும், நவ கிரகங்களும் அடங்கிய இடம் கோவில்.  அதனால் தான் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள். 14 நான்கும் அடங்கிய இடம் சென்றால் நம்முள்ளும் அவர்களின் ஆதிக்கம் அடங்கிவிடும்.  வாரத்தில் ஒருமுறையேனும் ஒரு கோவில் சென்று நம்மை சுத்தப்படுத்திக் கொள்வோம்.

எந்தக் கோவிலுக்கு சென்றாலும், நவ கிரக சன்னதிக்கு செல்லாதீர்கள்.ஒரு ஆடு தானே போய் கசாப்புகடைகாரனிடம் தலையை கொடுப்பது போன்றது. நவக்ரகங்கள் நம்மை ஆட்டி படைக்க இறைவனால் நியமிக்க பட்டவை. இதில் சந்தேகம் இல்லையே.  இறைவனே பூமிக்கு வந்தால் கூட, இவர்கள் பாதிப்புக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்!  அது தான் தர்மம்.  அதை விலக்க இறைவனுக்கு கூட அதிகாரம் கிடையாது.  உதாரணமாக, சிவனை பிடித்து சனி "ஈஸ்வர" பட்டம் பெற்றான். ஒரு பெரியவரிடம் பேசியபோது சில உண்மைகள் எனக்கு புரிந்தது. உண்மைகளை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், உண்மை மாறிவிட போவதில்லை. நாம் தான் இழப்புக்கு ஆளாவோம்.அவரின் ஓர் உண்மை விளக்கம் கீழே தருகிறேன். புரிந்து கொள்ளுங்கள். "நவக்ரகங்கள் நம்மை நம் கர்மாவுக்கு ஏற்ற படி கட்டு படுத்த நியமிக்க பட்டவை. அவர்கள் தான் நம்மை சுற்றவேண்டும்.  நாம் அவர்களை சுற்றகூடாது. மேலும்,ஒன்பதுக்கும், தன்னை தேடி வந்து பூசை பண்ணுவபர்களுக்கு, சலுகை அளிக்க உரிமை கிடையாது.  ஏதேனும் சலுகை அளித்தால், அவர்கள் தலை மீது தொங்கும் கத்தியானது தன் வேலையை பார்க்கும்.  இப்படி பட்ட சூழ்நிலையில், இவர்கள் பாதிப்பை குறைக்க தான் பிற தேவதைகளை, ப்ரத்யாதி தேவதை என்று பெயரிட்டு இறைவன் நியமித்துள்ளார்.  மனம் திருந்தி, பாதிப்பின் தன்மையை குறைத்துக்கொள்ள இவர்களை தான் நாம் அணுகவேண்டும். "   நம் கர்ம வினைப்படி எழுதி வாங்கி வந்ததை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும்.  முழுமையாக எடுத்து மாற்றி விட முடியாது.  வேண்டுமானால் பிரார்த்தனை வழி அதன் பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம். ஆதலால் வீட்டில் நவக்ரகங்கள் படத்தை வைத்து வழிபடுவதை தவிர்க்கவும்.

22 comments:

 1. nalla thagaval.naanu navakkirakkangalai valipaduvathilliai.

  ReplyDelete
 2. good information thanks for sharing

  ReplyDelete
 3. அருமையான பொக்கிஷ விசியங்கள் இன்றியமையாதது ., அனைத்து கருத்துகளும் உண்மை ., நவகிரகமூர்த்திகளின் கருத்தை தவிர .,

  நவகிரக மூர்த்திகள்.,கர்ம பரிபாலன நியதிப் படி செயல் படிகிறாகள் .,
  நவகிரக மூர்த்திகளை ஒருமையில் (சனி , புதன் ) என்று பேசுவது தவறு .,சனி பகவான் , சந்திர பகவான் ., என்று பேசுவது தான் முறை .


  சர்வேஸ்வரனே சனிஸ்வரராய் அருளினார்., ஆதாவது ., அகஸ்தியர் பெருமான் விச்வரூபம் திரு அண்ணாமலையில் எடுத்ததை ., சர்வேஸ்வரனே "எம்முள் இருந்து எடுத்துதார் " ., என்று தான் குறிப்பிடுகிறார் .,

  பூலோக ஜீவன்களாகிய நமக்கு நவகிரக மூர்த்திகளின் வழிபாடே .,
  நமக்குரிய ,கர்ம பரிபாலன பூஜைகளுள் ஒன்றாகும் . நாம் இதுவரையில் எடுத்து செய்த கர்ம வினையின் அளவீடை ., அவர்களை வழிபட்டு ., அவர்கள் அருளலால் கர்மவினையை கழிப்போம் ..,

  ReplyDelete
 4. மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.

  ReplyDelete
 5. வணக்கம் அண்ணா...

  //எந்தக் கோவிலுக்கு சென்றாலும், நவ கிரக சன்னதிக்கு செல்லாதீர்கள்.

  தாங்கள் கூறியது சரியாகப்படுகின்றது அண்ணா.. அப்படியென்றால் தெரிந்தவர்களை நவ கிரக சன்னதியை சுற்ற வேண்டாமென சொல்ல வேண்டும்... வீ்ட்டில் உள்ள நவகிரக பாடத்தை அனைவரையும் எடுக்க சொல்ல வேண்டும்...

  *** இதை பற்றி மேலும் தெளிவாக விளக்கினால் அனைவருக்கும் நன்றாக இருக்கும் அண்ணா... ***

  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...

  ReplyDelete
 6. Sir, so many times our agasthiyar insisted us to round the nava gragas. Even in my personal reading, he ordered me to round them at least 27 times. Please have his information .Kindly confirm your statement

  ReplyDelete
  Replies
  1. அகத்திய பெருமான் சொல்லி செய்வதென்றால் தவறில்லை. அவருக்கு எல்லாமே தெரியும்.எதை எப்படி எடுத்து விடவேண்டும் என்று. இந்த கால மானிட ஜோதிடர்கள் சொன்னால் செய்யவேண்டாம்.

   Delete
 7. வணக்கம் அண்ணா...

  மக்களிடையே பலவிதமான நவகிரக வழிபாடுகள் உள்ளது...

  சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போன்ற சமயங்களில் பல விதமான பரிகாரங்கள் உள்ளன.... அவைகளை செய்வது பலனளிக்காதா...

  மேலும், நவகிரகங்களுக்கு என்று பல விதமான நவகிரக காயத்திரி மந்திரங்கள், நவகிரக கவசங்கள் மேலும் பல மந்திரங்கள் உள்ளன எனவே அவற்றையும் கூற கூடாதா??

  இராமணயத்தில் இராமசந்திர மூர்த்திக்கு அகத்திய பெருமான் அவர்களால் அருளப்பட்டதே மிக பலம் வாய்ந்த சூரிய பகவானின் ஆதித்யா ஹ்ருத்தயம்... இதை படிப்பது தவறா...

  மேலும் பல பல...

  இதை பற்றி தெரிந்தவர்களிடம் ”நவகிரகங்களை இனி சுற்றதே என்று கூறினேன்” ஆனால் என் தோழி ஒருத்தி இவ்வளவு நாள் கும்பிட்டு வருகிறேன்...
  அப்படி கும்பிடாமல் வந்தால் மனம் ஒரு மாதிரியாக இருக்கிறது.. மேலும் நவகிரகங்கள் கோபித்து கொள்ளதா.. என்று கேட்ட போது வேடிக்கையாக இருந்தாலும்... அந்த கேள்வியை தாங்கள் முன்னே வைக்கின்றேன் அண்ணா...

  *** இதை பற்றி மேலும் தயவுசெய்து தெளிவாக விளக்கினால் அனைவருக்கும் நன்றாக இருக்கும் அண்ணா... ***

  இச்சிறியவன் கேட்ட கேள்விகளில் ஏதாவது பிழை இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் அண்ணா...

  ஓம் அகத்தீசாய நமக...

  ReplyDelete
  Replies
  1. திரு பிரசன்ன குமார் அவர்களே!

   கிரக பெயர்ச்சியும் அதன் தொடர்பாக வெளியிடப்படுகிற விளம்பரங்களையும் நம்பவேண்டாம். அவை வியாபார நோக்குடன் வருகிற வெளியீடுகள். உண்மையை தெளிவாக புரிந்து கொண்டால் எல்லாம் நலமாக நடக்கும். நவ கிரகங்களுக்கு நம் கர்மா படி செய்யவேண்டியதை தளர்த்துகிற உரிமை கிடையாது. அவை நம்மை தேடி வந்து தான் வருத்தும். அப்படி அவைகளே நம்மை தேடி வரட்டும் என்று விடுவதுதான் சால சிறந்தது. நாம் ஏன் அவைகளை தேடி போய் தலையை கொடுக்கவேண்டும். நம் பிரார்த்தனை என்பது இரிவனிடம் மட்டும் இப்படி இருக்கவேண்டும். "இறைவா, செய்த தவறுகளுக்கு தண்டனையாக நவ கிரகங்கள் வழி ச்ரமங்களை கொடுக்கிறாய். ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதற்க்கான தாங்கும் சக்தியை அடியேனுக்கு கொடு" என்று இருக்கவேண்டும். இறைவனிடம் பிச்சை எடுக்கலாம். அது பவித்ரமானது. தண்டனையை நிறைவேற்ற வரும் கிரகங்களிடம் வேண்டாம்.

   இத்தனை நாள் சுற்றிக் கொண்டிருந்தேன் இப்போது செய்யாமல் இருந்தால் என்னவோ போல் இருக்கிறது என்று சொன்னால் திருப்பி கீழ் கண்டவாறு சொல்லி விடுங்கள். "தீ சுடும் என்று தான் சொல்ல முடியும். உங்கள் மனதுக்கு தொட்டால் என்ன என்று தோன்றினால், நான் என்ன செய்ய முடியும்" என்று.

   உலகமே வியாபார மாயமாகிவிட்ட நிலையில், சோதிடர்களும், பூசாரிகளும் நவ கிரகங்களை வைத்து வாயிற்று பிழைப்பை நடத்துகின்றனர். அகத்தியர் போன்ற மகான்கள் எத்தனை உரைத்தாலும் புரிந்து கொள்ளாத ஜனங்கள். ஆம், சித்தர்கள் நம்முடன் இருப்பதை அனைவரும் உணர்வதில்லையே! ஜோதிடர்களும், நவ கிரகங்கள் கல் ரூபத்திலும், அவர்கள் தரும் ச்ரமங்கள் வாழ்க்கையிலும் இருக்கும் போது அதை தானே நம்பத் தோன்றும்.

   சித்தர்கள் நம்முடன் இருப்பதும், பாது காப்பு கொடுப்பதும், அவர்கள் அருள் நம்மை சுற்றி நின்று வழி நடத்துகிறது என்பதை உணரவும் ஒரு தைரியம் வேண்டும். அது எல்லோருக்கும் அமைவதில்லை. அந்த தைரியம் வேண்டும் மானால் திட நம்பிக்கையும், வைராக்கியமும், எந்த ச்ரமங்கள் வந்தாலும் அவர்கள் அருளால் எதிர் கொள்வேன் என்று நினைக்கவே/ செயல் படவே கர்மாவில் வழி இருக்கவேண்டும். அது எல்லோருக்கும் இருக்குமா என்றால், இல்லை என்பது தான் என் பதில். குறைந்தது, அப்படிப்பட்ட ஒரு வழி கர்மாவில் இல்லாவிட்டாலும் அதை உருவாக்கி கொள்ள வேண்டி ஒரு சந்தர்பத்தை சித்தர்கள் நமக்கு தருகிறார்கள். இந்த வாழ்க்கையில் தந்த வாய்ப்பை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் கையில்.

   ஆதித்ய ஹ்ருதயம் அகத்தியரால், ராமருக்கு உபதேசிக்கப்பட்டது. அந்த மந்திரத்தை அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டால் எல்லாம், தெளிவாகும். எதிரியை வெற்றி கொள்ள பலத்தை கொடு என்று வேண்டுகிற மந்திரம். யுத்தம் என்பதே இரு கிரகங்கள் சேர்ந்தால், பார்த்துக் கொண்டால் உருவாவது. அவைகளின் பலத்தை முறியடிக்க வேண்டுகிற மந்திரம் அது. விஷத்தை முறிக்க விஷத்தை உபயோகிப்பது போல அகத்தியர் ராவணனை தோற்கடிக்க ராமனுக்கு காண்பித்த வழி. ராமனும் வெற்றி பெற்றார்.

   நவ கிரக காயத்ரி மந்திரம் என்பது கோவிலில் பூசாரியால் கோவில் முறையாக நவ கிரகங்களுக்கு பூசை செய்யும் போது கூர் உருவாக்கப் பட்டது.தனிப்பட்ட மனிதரால் அவர்கள் வீட்டிலோ, கோவில்களிலோ கூற உருவானதல்லா.

   சர்! உங்களுக்கு மட்டும் ஒரு வழி சொல்லி தருகிறேன். முயற்சி செய்து பாருங்கள். நிறைய நன்மை நடந்தால் புரிந்து கொள்வீர்கள். "கருப்பு" நிற வஸ்திரம் அணிவதை அறவே நிறுத்திவிடுங்கள். எந்த விதத்திலும் நம் உடையில் கருப்பு என்கிற நிறம் இருக்ககூடாது. தொடர்ந்து ஒரு மண்டலம் (48 days) இருந்து என்ன நல்லது நடக்கிறது என்று பாருங்கள். புரியும். ஆம்! அனுபவமே முதல் குரு.

   கார்த்திகேயன்

   Delete
 8. அகத்தியரின் பாதம் பணிந்து தங்களையும் வணங்குகிறேன்.
  சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கருப்பு உடை அணிகிறார்கள். மேலும் தொழில் நிமித்தமாக வழக்கறிநர்கள் கருப்பு அங்கி அணிய வேண்டிய காட்டாயம் உள்ளது. இவர்களுக்கு தங்கள் அறிவுரை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 9. அன்புள்ள கார்த்திகேயன் அன்பரே .,

  " நவகிரக மூர்த்திகளை வழிபட்டே ஆக வேண்டும் ., மாற்றுகருத்தே இல்லை ., லௌகிகமாயினும் சரி ஞானமார்கமாயினும் சரி "

  மு . பிரசன்ன குமார் ., அவர் கேள்விகளுக்கு தாங்கள் அளித்த பதில்கள் மிக சரி முதல் "para" வில் முதல் 13 வரிகள் .

  ஆனால் இவ்வுள விசியங்கள் சரியாக கூறிவிட்டு ., நவகிரக மூர்த்திகளை வணங்குதல் கூடாது என கூறுவது வியப்பாகவும் ., வேதனையாகவும் உள்ளது .,

  தாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை எனினும் ., தங்கள் வலைபதிவுகளை பல நூறு வாசகர்கள் படிப்பதால் , இதனால் வற்புறுத்தி கூற வேண்டியுள்ளது .,

  பரமசிவனையும் , பரந்தாமனையும் கும்பிடாவிட்டாலும் பரவாயில்லை ., நவகிரக மூர்த்திகளை கட்டாயம் ., வழிபட்டே தீரவேண்டும் ., இ ஃ து இன்றியமையாதது .,

  ஒவ்வொரு ஹோரையிலும் அந்தந்த நவகிரக மூர்த்திகளின் நாமாவளியை உச்சரித்தல் மிக நன்று .,சில விசேஷ வழிபாடுகள் நவகிரக மூர்த்திகளை ஒரு தினத்தில் நவ முறை அதாவது 81 முறை வலம் வரவேண்டும் ., இல்லையேல் மும்முறை [27] வலம் வரவேண்டும் ., என்றவாராய் இருக்க ., தாங்களோ வழிபடவே வேண்டாம் என்கிறீர்கள் ..,

  சிவ பாரபரமே ., எஃது ஆயினும் சரி ஏக பரம்பொருள் ஒன்றே ., எனும் பராபர கோட்பாட்டில் ., இறையும் இறையின் வடிவங்கள் ., ரூபங்கள் ., ஆனைத்தும் காருண்ய முர்த்திகளே ., தானம் ., தர்மம் ., நல் புக்தி , நல் செயல் , நல் எண்ணம் இவையே ., மகான்களும் ., இறைவனும் நம்மிடம் எதிர்பார்ப்பது ., அனைத்தும் நன்மைக்கே

  ReplyDelete
 10. முன்பு யாம் இட்ட பின்னூட்டத்தில்
  மு . பிரசன்ன குமார் ., அவர் கேள்விகளுக்கு தாங்கள் அளித்த பதில்கள் "மிக சரி" முதல் "para" வில் முதல் 13 வரிகள் . என்பதிற்கு பதில் "ஓரளவு சரி " எனக் கொள்ளவும் .

  ReplyDelete
 11. குழப்புகிறிரே புலிப்பாணியாரே... ???? :-(

  ஓம் அகத்தீசாய நமக..

  ReplyDelete
 12. குழப்பவில்லை அய்யா .,

  "நவகிரக மூர்த்திகளை வழிபட்டே ஆக வேண்டும் ., மாற்றுகருத்தே இல்லை" ., லௌகிகமாயினும் சரி ஞானமார்கமாயினும் சரி " நவகிரக மூர்த்திகளை கட்டாயம் ., வழிபட்டே தீரவேண்டும் ., இஃது இன்றியமையாதது .,

  ReplyDelete
 13. ஒரு உதாரணத்தை சொல்கிறேன். புரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை இனிக்கும் என்று சொன்னால், "இனிப்பு" என்கிற நிலை என்ன என்ற அனுபவம் உங்களுக்குள் இருக்கவேண்டும். இல்லையெனில், அதை சாப்பிட்டு பார்த்துதான் உணரவேண்டும். நவக்ரக மூர்த்திகளின் வழிபாடு தேவையா இல்லையா என்று உணர, வீட்டிலே வேண்டுமானால் செய்து பாருங்கள். நடந்தது என்ன என்று பின்னர் பகிர்ந்துகொள்ளுங்கள். இங்கு தொகுத்து அளித்ததெல்லாம் பெரியவர்கள், சித்தர்கள் சொல்லிப்போனது. எதுவும் என்னுடையதல்ல. எத்தனை பேர் இதை தொடருகிறார்கள் என்பது என் எதிர்பார்ப்பல்ல. எத்தனை பேர் நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

  ஒரு விஷயம் கூட இன்றும் அதர்வண வேதத்தை உபயோகிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சித்த பெருமக்கள் அதை நேராகவே எதிர்க்கிறார்கள். ஏன் என்றால், இந்த கலிகாலத்தில் அதர்வண வேதத்தை யாரும் தொடரக்கூடாது, அது நல்லதல்ல என்று அவர்கள் தீர்மானித்ததே காரணம். அது மிகுந்த ஊறு விளைவிக்கும். ஆனால் அதை சார்ந்து நிற்பர்வகள், அவர்கள் செய்வதே சரி என்பர். எது சரி என்று தீர்மானிக்கிற உரிமை தனிப்பட்ட மனிதருக்குத்தான் உண்டு. சரி என்று சொல்பவர் அப்படியே இருக்கட்டும் என்று விட்டு நாம் விலகி நிற்பதே புத்திசாலித்தனம். யார் என்ன சொன்னாலும், என்னையும் சேர்த்துதான், எது சரி என்று தீர்மானிக்கிற உரிமை தனிப்பட்ட வாசகனுக்கு உண்டு. நீங்களே உங்கள் அனுபவத்தினால் உணருங்கள்.

  ReplyDelete
 14. அண்ணா வணக்கம்...

  எப்போதோ படித்த கதை ஞாபகம் வரவில்லை நவகிரகங்கள் சாபத்திற்கு உள்ளனா கதை... இன்று காலையில் கூகுள் புண்ணயத்தில் தேடி சமர்பிக்கிறேன்...

  படித்து விட்டு சொல்லவும் ஐயா புலிப்பாணி அவர்களே...

  // காலவ முனிவர் என்பவர் ஞான திருஷ்டியால் தனக்கு தொழுநோய் வரவிருப்பதை அறிந்து அதைத் தடுக்க என்ன பரிகாரம் செய்யலாம் என சிந்தித்தார். இறுதியில் ஐந்து அக்னிகளை (பஞ்சாக்னி) வளர்த்து நவகிரகங்களை பிரார்த்தித்து அதன் நடுவில் அமர்ந்து தவத்தில் ஈடுபட்டார். அதனால் மனம் மகிழ்ந்த நவகிரகங்கள் அவர் முன்பு தோன்றி, முனி சிரேஷ்டரே! என்ன வரம் வேண்டும் தங்களுக்கு? என்று வினவினர். அதற்குக் காலவ முனிவர், என்னைத் தொழுநோய் தாக்காமல் இருக்க வரம் அளிக்க வேண்டும் என்று கேட்டார். நவகிரகங்களும் அப்படியே ஆகட்டும் என்று அருளினர். பிரம்மா இதைக் கேள்விப்பட்டு தாங்கொணாத கோபம் கொண்டார். உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் நான் தலைவிதி நிர்ணயிக்கும் போது அதை மாற்றியமைக்க இந்தக் கிரகங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது? அவர்களை உடனே அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார்.

  அதன்படி அவரின் உதவியாளர்கள் ஒன்பது கிரகாதிபதிகளையும் அழைத்து வந்து அவன் முன் நிறுத்தினர். என் கடமையில் குறுக்கிட நீங்கள் யார்?

  ****``கிரகங்களே, நீங்கள் என் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள். சிவபெருமான் ஆணைப்படியும், காலதேவனின் துணை கொண்டும், அனைத்து ஜீவராசிகளும் தங்களது வினைப்பயனை அடையவே, உங்களை நான் படைத்தேன். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல், காலவ முனிவருக்கு வரம் கொடுத்துள்ளீர்கள்.****

  என்னைக் கலந்தாலோசிக்காமல் வரம் தந்த நீங்கள் தொழுநோயால் அல்லல்படுவீர்களாக ! காலவ முனிவருக்கு வந்திருக்க வேண்டிய தொழுநோய் உங்கள் அனைவரையும் பீடிக்கட்டும் ! என்று பிரம்மா சாபம் கொடுத்தார். நடுநடுங்கிய கிரகதிபதிகள், தங்களைக் கலக்காமல் நாங்களாகவே வரம் கொடுத்தது தவறுதான். எங்களை மன்னியுங்கள். சாப விமோசனத்துக்கு வழிகூறுங்கள் என்று அவரிடம் வேண்டினர். சாந்தமடைந்த பிரம்மா, நீங்கள் அனைவரும் பூலோகத்துக்குச் சென்று சிவபிரானை வணங்கிப் பிரார்த்தித்தால் வழி கிடைக்கும் என்று அருளினார். அதன்படி பூலோகம் வந்த ஒன்பது கிரகங்களும் எங்கு போய் சிவபிரானை பிரார்த்திப்பது என்பது தெரியாமல் திகைத்து நின்றனர். அப்போது அவர்கள் நின்ற வழியே வந்த அகத்திய முனிவர் அவர்கள் செல்ல வேண்டிய இடம் பற்றி வழிகாட்டி உபதேசித்தார்.

  அவ்வாறே வெள்ளெருக்கங் காட்டுக்கு வந்தனர். ஆளுக்கொரு குளத்தில் நீராடி விநாயகரை பிரதிஷ்டை செய்தனர். பிறகு மங்களநாயகி சமேத பிராண நாதரை வழிபட்டு எருக்கம் இலையில் தயிர் அன்னம் நிவேதித்து அதை உண்டு பசியாறினர். பின்பு தங்கள் உடலை உற்று நோக்க பீடித்திருந்த தொழுநோய் பாதியளவில் குணமானதை அறிந்தனர். அடுத்த கணம் சிவபிரான் அவர்கள் முன் காட்சி கொடுத்து அவர்களின் நோயை முற்றிலும் குணமடையச் செய்து அருள் புரிந்தார். ஆடுதுறை அருகே உள்ள சூரியனார் கோயில் என்ற தலத்தில் உள்ள விநாயகரைத்தான் நவகிரகங்கள் பூஜித்தன. அதனாலேயே இந்த விநாயகருக்கு (கிரகம்) கோள் தீர்த்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்திலுள்ள நவகிரகங்களை அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி அமைத்ததாக ஐதீகம். //

  எனவே எப்படி நவகிராகங்களை // "நவகிரக மூர்த்திகளை வழிபட்டே ஆக வேண்டும் // கூறுகிறீர் ஐயா..

  இச்சிறியவன் கேட்டதில் ஏதாவது பிழை இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் புலிப்பாணி ஐயா அவர்களே.

  ஓம் அகத்தீசாய நமக...

  ReplyDelete
 15. அன்பரே .,

  கர்மாக்களை நிர்ணயிக்கும் பொறுப்பு ., " நவகிரக மூர்த்திகள் " உடையது . கர்மாக்கள் அற்ற நிலையில் தான் பரிபுரன இறை தேடல் ஆரம்பமாகும் .,

  முதலில் இதுவரை செய்த ,கர்மாக்களில் அல்[தீய வினை ] கர்மாக்களை மனப்புர்வமாக ஏற்று அனுபவிக்கும் மனப்பக்குவம் வரவும் ., இனியும் தீய கர்மாக்கள் சேரா வண்ணமும் ., பிறகு நாம் செய்யப்போகும் அனைத்து நல் கர்மா [நல் வினை ]அனைத்தையும் ., இறைக்கு அர்ப்பணம் செய்யவும் " நவகிரக மூர்த்திகள் " வழிபாடு அவசியமாகிறது .

  இதுவே யாம் அறிந்தது வேறேதுவும் அறியேன் . .,நன்றி ஐயா

  ReplyDelete
 16. எந்த கர்மாவுக்கு என்ன பலன் என்று தீர்மானிப்பது இறைவன் என்று தான் நான் கேட்டிருக்கிறேன். அந்த பலனை எந்தவித பாரபட்சமின்றி நிறைவேற்றுவதே நவ கிரகங்களின் வேலை. அவர்களுக்கு அதை தளர்த்தும் உரிமை கிடையாது.

  ReplyDelete
 17. வணக்கம் அண்ணா...

  pulipani24 June 2013 10:28 அன்று தாங்கள் கருத்துரை இட்டது...
  --------------------------

  **** நவகிரக மூர்த்திகள்.,கர்ம பரிபாலன நியதிப் படி செயல் படிகிறாகள் .,****
  ===========================================================

  புலிப்பாணி சித்தர் அடிமை10 July 2013 13:50 அன்று தங்களின் கருத்துரை
  ------------------------------------------
  அன்பரே .,

  கர்மாக்களை நிர்ணயிக்கும் பொறுப்பு ., " நவகிரக மூர்த்திகள் " உடையது .

  புலிப்பாணி நண்பர் அவர்களே தாங்கள் கூறியதிலேயே வேறுபாடு உள்ளதே...

  நன்றி...

  ஓம் அகத்தீசாய நமக...

  ReplyDelete
 18. அன்பு நண்பரே .,

  "கர்ம பரிபாலன நியதிப் படி செயல் படிகிறாகள் " / கர்மாக்களை நிர்ணயிக்கும் பொறுப்பு


  எமக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை ..,

  எந்த ஒரு விஷியமும் ., நல்லதோ ., கேட்டதோ ஓர் , இரு முறைக்கு மேல் அழுத்தி வற்புறுத்தல் கூடாது ., அஃது மீண்டும் கர்மாக்கே வழிவகுக்கும் ., இதுவும் அகத்திய எம் பெருமான் ஜீவ அருள் நாடி வாக்கு தான் ., மேலும்

  " கேது பகவான் நேரடியாகவே ஜீவ அருள் நாடியில் அருளிய வாக்கும் உள்ளது ., நீங்கள் கூறிய "காலமா " முனிவர் பற்றி அகத்திய எம் பெருமான் அருளிய ஜீவ அருள் நாடி வாக்கும் உள்ளது ., அஃதோடு கர்ம பரிபாலனத்தையும் தாண்டி நவகிரக மூர்த்திகளுக்கு எத்தனையோ பணிகளுண்டு 'அண்ட சராசரத்தையும் " இயக்கிகொண்டு கால பருவ நிலை மாறுபாடு களையும் ., இன்னும் விருட்சங்களையும் மற்றவற்றையும் கட்டு படுத்தகூடிய பணிகளையும் இறைவன் கிரகங்களுக்கே தந்திருக்கிறார் .. இதுவும் அகத்திய எம் பெருமான் ஜீவ அருள் நாடி வாக்கு தான் .

  இஃதோடு எமது "நவ கிரக மூர்த்திகள் " பற்றிய எமது பின்னூட்டம் முற்றும் .,நன்றி , வணக்கம்

  ReplyDelete
 19. what is atharvanam veda mantras?

  ReplyDelete