​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 10 January 2013

சித்தன் அருள் - 106


அஹோபில மலைக்கு சென்றவர்களுக்குத் தெரியும், அந்த அற்புதமான மலையும் இயற்கைச் செழிப்பும் ஒருவிதமான பயம் கலந்த பகுதியும் மனதை ஈர்க்க வைக்கும்.  இன்னும் சொல்லப் போனால் வாழ்நாள் முழுவதும் அந்த அஹோபிலத்திலேயே தங்கி பெருமாளையே தினம் நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்று கூட தோன்றும்.

அப்படிப்பட்ட அந்தப் புனிதமான நரசிம்மர் கம்பத்தில் தன்னையும் அறியாமல் பயத்தால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததால் அந்த ஓநாயிடமிருந்து நரசிம்மர் என்னைக் காப்பாற்றி இருக்கிறார் என்று தான் எனக்கு தோன்றிற்று.

முன்பெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு தைரியத்தோடு பலவிடங்களில் தன்னந்தனியே அகஸ்தியரின் ஜீவநாடி துணை கொண்டு நடமாடிய நான், ஒரு சாதாரண "ஓநாய்" சப்தத்திற்காக ஏன் இப்படி நடுங்கிப்போனேன் என்பதை நினைக்கும் பொழுது எனக்கே வெட்கமாக இருந்தது.

அந்தப் பயத்தால் கீழே கிடந்த அகஸ்தியர் ஜீவ நாடியைக் கூட கவனிக்காமல் விட்டு விட்டு எழுந்ததும், அதை அங்கு வந்த ஒரு வயோதிகர் சுட்டிக் காட்டியதும் ஏதோ ஒன்று விசித்திரமாக நடப்பது போல் தோன்றியது.

"நாடியைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னால் பரவாயில்லை.  "அந்த நாடியை இங்கு படித்துவிட்டுதானே செல்ல வேண்டும்" என்று சொன்னதுதான் என்னை யோசிக்க வைத்தது.

வானத்தில் தோன்றிய அந்தத் தூம கேதுவைப் பற்றிச் சொல்கிறேன் நரசிம்மர் சன்னதியில் என்று அகத்தியர் எனக்குமட்டும் சொன்ன அந்தச் செய்தியை இவர் எப்படித் தெரிந்து கொண்டார்.  நான் பயத்தில் மறந்து போனபோது எப்படி எனக்கு எடுத்துக்காட்டினார்? என்ற வியப்பு என்னை வேறு எதுவும் நினைக்கவிடாமல் தடுத்தது.

"அசரிரீ வாக்கு" போல் சொன்ன இவர், நிச்சயம் ஒரு சாதாரண மனிதராக இருக்க முடியாது.  முனிவர்கள் சித்தர்களுக்கு ஒப்பானவர் என்று தான் தோன்றியது.  மனதால் அவருக்கு நமஸ்காரம் செய்தேன்.

இருட்டி விட்டதாலும் ஆட்கள் நடமாட்டம் சற்றுக் குறைந்து விட்டதாலும் கீழ் அஹோபிலம் வரை செல்ல எனக்கு அந்தச் சமயத்தில் ஒரு ஆளாவது துணை தேவைப்பட்டது.  என்னதான் அகத்தியர் ஜீவநாடி என் கையில் இருந்தாலும் நானும் ஓர் சராசரி மனிதன் என்பதால் பயம் இன்னும் என்னை விட்டுப் போகவில்லை.

துணைக்கு நானும் வருகிறேன்.  இடையில் கூட்டம் வந்துவிட்டால் அவர்களோடு சேர்ந்து கொள் எனக்கு மலையில் ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்று விடாமல் சொல்லிக் கொண்டே என்னுடன் வந்த அந்த  ஆஜானுபாகு ஆன அவரை மேலும் கீழும் கடைக் கண்ணால் பார்த்துக்கொண்டே வந்தேன்.

தோளைத் தொடும் நீண்ட வலுவான சிகைகள்.  ஜிம்கானா க்ளப்பில் நன்றாக உடற்பயிற்சி செய்தது போல் உடலை இறுக வைத்திருக்கும் சுருக்கமில்லாத வளவளப்பான உடல் அமைப்பு.  முகத்தில் வெண்மையும் கருமையும் கலந்த மீசை தாடி, கண்ணில் அற்புதமான தீர்க்கம், நன்றாக அதே சமயம் பஞ்சக் கச்சம் கட்டிய தும்பைப்பூ போல் வெள்ளை வேஷ்டி.

குடுமியாக இருந்து தலைமுடியை காற்று படட்டும் என்று அவிழ்த்து விடப்பட்டது போல் முதுகின் பின் புறத்தில் தொங்கிக் கொண்டிருந்த தலை முடி, மார்பில் பூணூல், கையில் நகத்தை சுமார் மூன்று அங்குல நீளத்திற்கு வளர்த்துக் கொண்டிருந்தார்.

பேச்சில் ஆண்மை மிடுக்கும் அசாத்திய தைரியமும் கம்பீரமும் கலந்து காணப்பட்டது.  ஆனால் அளவுக்கு மீறி வளவளவென்று பேசவில்லை.  சுமார் ஐம்பது வயதிருக்கலாம் என எண்ணிக் கொண்டேன்.

கொஞ்ச தூரம் என்னிடம் எதுவும் பேசவில்லை.  அப்புறம் மெதுவாக பேசினார்!

"அது ஜீவ நாடிக் கட்டா?"

"ஆமாம்"

"அந்தக் கம்பத்தின் கீழ அமர்ந்து படித்தாயே அதில் என்ன வந்தது?"

எல்லாம் தெரிந்தவர் போல் கேட்டார்.

"நிறைய விஷயம் வந்தது"

"எதைப்பற்றி?"

"வானத்தில் நேற்று இரவு தோன்றிய தூம கேது பற்றி"

"என்னது தூம கேதுவா? நேற்றிக்கு தோன்றியது?"

"ஆமாம்! இன்றைக்கு எல்லா பேப்பரிலும் வந்திருக்கிறது."

"அப்படியா! அகஸ்தியர் என்ன சொன்னார்?"

நான் ஒரு நிமிஷம் அப்படியே நின்றேன்.  வேகமாகச் சென்று கொண்டிருந்த அவரும் சட்டென்று நின்றார்.

"நீங்கள் யார்? எனக்குச் சொல்லுங்கள், முதலில்" என்றேன்.

"கோயில் அர்ச்சகருக்குச் சொந்தக்காரன்,  மடப்பள்ளியில் சமையல் வேலை.  பெயர் மாலோல நரசிம்மாச்சாரி" என்றார்.

"இல்லை.  எதையோ மறைக்கிறீர்கள்.  உண்மையில் நீங்கள் மாலோல நரசிம்மாச்சாரி இல்லை." என்றேன்.

"பின் யாராம்?"

"அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்" கெஞ்சினேன், ஒருவித பயம் கலந்த எதிர்பார்ப்போடு.

"இந்த இடத்துக்கு நீ புதுசு. என்னைப்பற்றி யாரிடம் வேண்டுமானாலும் போய் கேள்.  மாலோல நரசிம்மன் என்றதும் மடப்பள்ளி அய்யங்கார் என்று தான் கூறுவார்கள்" என்றார் அவர்.

"மடப்பள்ளி சமையற்கார அய்யங்காருக்கு என் கையில் இருப்பது அகஸ்தியர் நாடி என்று எப்படித் தெரிந்தது என்பது ஒன்று, இன்னொன்று அந்த உக்கிர ஸ்தம்பத்தின் அடியிலுள்ள நரசிம்மனின் இரண்டு பாதத்திற்கு அடியில் இந்த நாடியைப் படித்துவிட்டு வா என்று சொன்னீர்களே, இது எப்படி?  எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.  இது உங்களுக்கும் தெரிந்திருக்கிறது" என்று கிடுக்கு பிடி போட்டேன்.

இதை சொன்னதும் கலகலவென்று சிரித்தார்.

"நான் ஒன்றும் பெரிய ஆளிலையப்பா! பயத்தால் கீழே கிடந்த இந்த ஓலையைப் பிரித்துக் கட்டி எடுத்துக் கொள் என்று சொல்லியிருக்க வேண்டும்.  வேறு ஏதோ சொல்லிவிட்டேன் போலும்" என்று நிறுத்தினார்.  

"சரி! இந்த ஓலைச்சுவடி அகஸ்தியருக்குத் தான் சொந்தம் என்று எதை வைத்துச் சொன்னீர்கள்" என நான் அவரை மடக்கினேன்.

"அட! நீ ஒண்ணு.  சில மாதத்திற்கு முன்பு நான் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தேன்.  வைதீஸ்வரன் கோயிலுக்கும் போயிருந்தேன்.  அங்கே எங்கு திரும்பினாலும் அகஸ்தியர் ஓலைச் சுவடி என்று போர்டு போட்டிருந்தது.  இதுவும் அந்த ஓலைச் சுவடியில் ஒண்ணுதான்னு நெனச்சு சொன்னேன்" என்று சொன்னவர் "அதோ ஆட்கள் எல்லாம் கீழே போறாங்க.  அவங்க கூட நீயும் சேர்ந்து போயிடு" என்று சொல்லிச் சட்டென்று திரும்பி மலைமீது ஏறினார்.  பின்னர் அவரைக் காணவே இல்லை.

எத்தனையோ சிந்தனைகளோடு கீழ் அஹோபிலம் வந்து சேர்ந்தேன்.  நல்ல பசி தாகமும் நாக்கை வாட்டியது.  ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

பிரஹலாத வரத லக்ஷ்மி நரசிம்மர் சன்னதிக்கு வந்த போது ஒரு தட்டில் எதையோ எடுத்துக் கொண்டு மேலே வாழை இலையால் மூடி அது காற்றில் பறக்காவண்ணம் வலது கையால் அமுக்கிப் பிடித்த படி கோயிலில் பணிபுரியும் ஒரு சிப்பந்தி போல் ஒருவர் என்னருகே வந்தார்.

"நீங்கள்" என்று முதலில் தெலுங்கில் கேட்டவர் "தமிழ்காரர்தானே" என்று பின்னர் தமிழில் கேட்டார்

"மெட்ராசிலிருந்து வருகிறீர்களா?"

"ஆமாம்"

"உங்கள் பெயர்"

சொன்னேன்.

அடுத்த நிமிஷம் "உங்களுக்குத் தான் கொடுக்கச் சொல்லி உத்திரவு' என்று மகிழ்ச்சியோடு சொல்லி தன் கையோடு கொண்டுவந்த தட்டை என்னிடம் கொடுத்தார்.

இலையைத் திறந்து பார்த்தேன்.  நிறைய வறுத்த முந்திரி பருப்புகளைப் போட்டு நெய்யோடு சுடச் சுடச் சர்கரைப் பொங்கலும் இன்னொரு பக்கத்தில் கமகமவென்று ஆந்திராவுக்கே உரித்தான காரசாரமாய் புளியோதரையும்.  கிஸ்மிஸ் பழம், திராட்சைப்பழம் சகிதம் கலந்த தயிர் சாதமும் இருந்தது.

கும்பிடப் போன சாமி குறுக்கே வந்தது போல மலையிலிருந்து கீழே இறங்கிய எனக்கு ஏற்பட்ட பசிக்கு இப்படிப் பகவானே கொடுத்தனுப்பிய பிரசாதம் போல் இருந்தது.

"யார் கொடுக்கச் சொன்னார்" என்று கூட அப்போது இருந்த நிலையில் எனக்குக் கேட்கத் தெரியவில்லை.  மனதிற்குள் ஆயிரமாயிரம் நன்றியைச் சொல்லிவிட்டு அவசர அவசரமாக முழுங்கினேன்.  அந்த நேரத்தில் அந்தப் பிரசாதம் தேவாமிர்தமாக இருந்தது என்பதுதான் உண்மை.

அருகிலுள்ள குழாயில் கையை அலம்பி தட்டையும் அலம்பிவிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

இதுவரையிலும் அந்த இடத்தில் நின்று இருந்த அந்த நபரைக் காணவில்லை.  அவர் யார் எதற்காக என்னைத் தேடி வந்து சிற்றுண்டியைக் கொடுத்தார்.  யார் சொல்லி இந்தப் பிரசாதம் வந்தது என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

ஒரு வேளை யாருக்கோ கொடுக்க வேண்டிய பிரசாதத்தை இடம் மாறி எனக்குக் கொடுத்து விட்டாரா? அப்படிக் கொடுத்திருந்தால் எதற்காக என் பெயரைக் கேட்பானேன் என்று இப்போதுதான் என் சிற்றறிவு சிந்தனை செய்ய ஆரம்பித்தது.

எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும்.  வந்தாச்சு.  ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தாகிவிட்டது.  இன்னும் ஒரு நாள் இருந்தது.  மறுபடியும் அஹோபிலம் மேல் மலையேறி நன்றாகத் தரிசனம் செய்துவிட்டு மத்யானத்திர்க்குள் கண்டிப்பாகக் கீழே இறங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

சாப்பிட்ட அசதியும் மலையிலிருந்து இறங்கி வந்த அசதியும் ஒன்றாகச் சேர அருகிலுள்ள கோயிலுக்குரிய ஒரு அறையில் கண்ணயர்ந்து விட்டேன்.

விடியற்காலை நான்கு மணிகெல்லாம் விழிப்பு ஏற்படவே, சட்டென்று எழுந்தேன்.  வழக்கம் போல மனம் உடல் இதனைச் சுத்தம் செய்து கொண்டு பிரம்ம முகூர்த்தத்தில் அகஸ்தியரின் நாடியைப் புரட்டினேன்.

அப்போது என் மனதில் தூம கேது பற்றிக் கேட்க வேண்டும் என்று எண்ணம் தோன்றவில்லை.  என்னை பயமுறுத்திய அந்த ஓநாய் ஏன் அங்கு வந்தது?  அப்போது எனக்குத் தைரியம் தந்த பெரியவர் யார்?  அது மட்டுமின்றி கீழ அஹோபிலத்தில் என் பசியைத் தீர்த்து வைத்தது எப்படி?  யாரால் கோயில் பிரசாதம் கொண்டு கொடுக்கப் பட்டது என்பதைத் தான் அகஸ்தியரிடம் கேட்க வேண்டும் என்று தோன்றியது.

கேட்டேன்.

"அஹோபில மடத்திற்கு முழுமையான பக்தியோடு வந்திருக்க வேண்டும்.  அப்படி நீ வரவில்லை.  திருப்பதியிலே நடந்ததையும் அங்கு அப்போது இருந்த அஹோபில மேலாளரிடம் சொன்ன வாக்குறுதியை அலட்சியம் செய்தாய்.  உனது தங்கைகளின் திருமணத்தை திருப்பதி அஹோபில மடத்தில் நடத்த ஒப்புவித்துக் கொண்ட நீ,  பின்னர் சூழ்நிலையால் முற்றிலும் மறந்து விட்டாய்.

அன்றைக்கு அவருக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதை நினைவுபடுத்தவே அந்த மலையில் துஷ்ட மிருகக் குரலால் பயமுறுத்தினார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்.  முழுமையான பக்தியைத் தொலைத்து விட்டு மனசுத்தம் இல்லாமல் இந்த அஹோபிலத்திர்க்கு வந்தால் உனக்கு நினைத்த காரியம் நடக்காது.  தெய்வ தரிசனமோ அல்லது அகஸ்திரோட அருளும் கிடைக்காது.  இது உனக்கு மட்டும் அல்ல.  இந்தப் புனிதமான இடத்திற்கு வரக்கூடிய அத்தனை பேர்களுக்கும் கொடுக்கின்ற எச்சரிக்கை தான்.

இரண்டாவது அந்த ஸ்தம்பத்தை பிடித்துக் கொண்டு "லக்ஷ்மி நரசிம்மா என்னை காப்பாற்று என்று உயிருக்குப் பயந்து அகத்திய ஜீவ நாடியையும் தூக்கிப் போட்டு முழுமையாகச் சரண் அடைந்து வேண்டினாய்.  இது தான் சரணாகதித் தத்துவம்.  அது உனக்கு இதுவரையில் முழுமையாக ஏற்ப்படவில்லை. நேற்று தான் ஏற்பட்டது.  இதற்கும் அந்த லக்ஷ்மி நரசிம்மரின் லீலைதான் காரணம்.  இதை எல்லாம் புரியாமல் உயிருக்குப் பயந்து துணைக்கு வர அந்த நபரை அழைத்தாயே அந்த உருவத்தை லக்ஷ்மி நரசிம்மரின் அமர்ந்த நிலையில் ஒப்பிட்டுப் பார்.  அது யாருடைய லீலை என்பது தெரியும்" என்று ஒரு நாழிகை நிறுத்தினார்.  என்னை ஆயிரம் சவுக்கடி கொண்டு 'பளார் பளார்" அடிப்பது போல் தோன்றியது.

உண்மையில் நான் அஹோபிலத்திர்க்குப் புறப்படும் பொழுது வீட்டில் பொய் சொல்லி விட்டுக் கிளம்பியது, ரயிலில் உள்ள பயணிகளிடம் என்னை "மேதாவி" என்றெண்ணி மகான்களைப் பற்றி இல்லாதது பொல்லாதது சொல்லி எல்லாம் தெரிந்தவன் போல் காட்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது.

உளமார நான் அஹோபில லக்ஷ்மி நரசிம்மரைப் பற்றி ஒரு நிமிடமாவது சிந்தித்துப் பிரார்த்தனை செய்யவே இல்லை.  அந்தத் தவறுக்கு லக்ஷ்மி நரசிம்மரோடு அகஸ்தியரும் கொடுத்த தண்டனை இதுதானோ என்று எண்ணினேன்.

மறுபடியும் ஏட்டைத் திருப்பினேன்.  ஏனோ அகஸ்தியர் அதில் வரவே இல்லை.

சித்தன் அருள் ................. தொடரும்!  

17 comments:

  1. vanakkam, eru vara thiyanathin pin name maarivittatha? V entra initial eppadi vanthathu?
    enathu munthiya mail ethuvum kidaikkavillaiya.
    tamil chithi anuppuvathu eppadi? varam thravum
    anpudan s.v.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Use google transliteration service from the following link.

      http://google.com/transliterate/tamil

      If you use some other software, your reply will be scrambled as seen above.

      Karthikeyan

      Delete
  2. கூகிள் மொழிபெயர்ப்பை உபயோகித்து தமிழில் தட்டச்சு செய்யலாம்.

    http://google.com/transliterate/tamil

    ReplyDelete
  3. பெயர் மாறவில்லை விரிவடைந்துள்ளது.

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமஹ.
    தங்களின் தொலைபேசி எண்ணும், email id கிடைக்குமா ?
    Regards,
    Saravanakumar.B
    sarvancbe@gmail.com,Spiritualcbe@gmail.com
    http://spiritualcbe.blogspot.in/
    Ph.No : 9894660407

    ReplyDelete
    Replies
    1. sgnkpk@gmail.com - My emali id
      I do not have a cell so sorry!

      Delete
  5. I need your contact no. and mail ID.

    ReplyDelete
    Replies
    1. sgnkpk@gmail.com - My emali id
      I do not have a cell so sorry!

      Delete
  6. dear கார்த்தி , வணக்கம் ,
    நீங்கள் ஒருவருக்கு அளித்த பதில் ," மாமுனியுடன் எனக்கு [கார்த்தி] நேரடியான தொடர்பு
    கிடையாது . தொடர்புடையவர் தரும் தகவல்களை உங்களுக்கு அப்படியே தருகிறேன்
    வேறு எதுவும் எனக்குத் தெரியாது . மேலும் அந்த அன்பர் தற்சமயம் நம்முடன் இல்லை "
    என தெரிவித்துள்ளீர்கள் . ஒரு விவரம் அறிய விரும்புகிறேன் .குறிப்பிட்ட அன்பர் இல்லை
    என்றால் நீங்கள் தரும் தகவல் பழைய செய்திகளா . நான் தினமும் வடகிழக்கு திசையில்
    "தூமகேது" வை பார்க்கிறேன் . தெரியவில்லை . மிக பிரகாசமான நட்சத்திரம் ஒன்று
    தெரிகிறது .விவரம் தரவும் . அன்புடன் வெங்கட் .

    ReplyDelete
  7. இங்கு தொகுத்து அளிக்கப்படும் விஷயங்கள் பல காலங்களில் நடந்தவை. என்று என என்னால் மிகத்தெளிவாக சொல்ல முடியாது. நண்பர் பகிர்ந்து கொண்டதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் பார்ப்பது நட்சத்திரம் ஆக இருக்கலாம். தூம கேது என்பது வால் நட்சத்திரம். வேகமாக வந்து மறையும்.

    ReplyDelete
  8. Vanakkam. Happy pongal to all.

    Dear Karthikeyan,
    Some months before you post about a odhimalai story, but i could not find the story in the books written by the late reader starting all volumes till the last, but couldn't find the story. Just out of curiosity i'm raising this query, so as to find if there are any other books that contain similar information.

    regards,

    Sriram R

    ReplyDelete
    Replies
    1. Vanakkam Sriram.R

      What kind of story you say I wrote about Othimalai? I don't understand. Could you be more clear as to where I wrote about it?

      Karthikeyan

      Delete
  9. Vanakkam Karthikeyan. Pongal vazthukkal. There was a story about a person who did anna dhanam in saturagiri, later his accomplices out of jealousy tries to malign his name and he in the end performed yagam at Odhimalai. That was the story i was referring to. I believe it was during september.

    ReplyDelete
    Replies
    1. Sriram!

      Do you think am writing stories here. No. You are mistaken! These are real things happened by the grace of god and sage Agasthiyar. Anyway, I give below the last part of the compilation below. Just check it.

      http://siththanarul.blogspot.in/2012/09/89.html

      Delete
  10. அன்பு கார்த்தி வணக்கம்
    மாமுனியின் 107 செய்திகள் மிகவும்
    சிறப்பாக உள்ளது .
    . பெண்மணி கூ ந்தல் ----
    முடி ந்த விஷயமா இனி வருகின்ற சம்பவமா ?
    அறிய ஆவலாக உள்ளேன்.வியாழன் வரை
    காத்திருப்பது சற்று கஷ் டமாக உள்ளது .
    வாரம் இரு முறையாக மாற்றமுடியாதா?
    அன்பரிடம் கேட்கவும். எனது தனிப்பட்ட கேள்விகளை
    இதில் அனுப்பலாமா அல்லது வேறு இ மெயில் உண்டா ?
    கேள்விகள் ஞானத்தை பற்றியது . அன்புடன் வெங்கட்

    ReplyDelete
  11. வணக்கம் வெங்கட் அவர்களே!

    உங்கள் தனிப்பட்ட கேள்விகளை கீழே உள்ள ஈமெயில் தொடர்புக்கு அனுப்பவும்


    sgnkpk@gmail.com

    கார்த்திகேயன்

    ReplyDelete