​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 15 April 2021

சித்தன் அருள் - 995 - அகத்தியர் ராஜ்ஜியம் !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியர் அருளால், அவரின் உத்தரவின் பேரில், திரு. ஜானகிராமனை, நாடி வாசிப்பவராக  சித்தன் அருள் வலைப்பூ வழி உங்களுக்கு அறிமுகப்படுத்தியது ஞாபகமிருக்கும், என நினைக்கிறேன். எத்தனையோ அடியவர்களின், கேள்விகளுக்கு விடை அளித்து, வழி நடத்தி, மனப்புண்களுக்கு மருந்துதாக, யாம்  உன்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றெல்லாம் அருள்வாக்கு தருவதாக, தெரிய வந்தது.

திரு ஜானகி ராமன், அவருக்கு நேரம் கிடைக்கும் பொழுது, அடியேனை அழைத்து, அவருக்கு அகத்தியப்பெருமான் இடுகின்ற கட்டளைகளை, அதன் வழி நடத்துகிற நல்ல விஷயங்களை, அனுபவங்களை, முடிந்தவரை, அகத்தியர் உத்தரவுடன் பகிர்ந்து கொள்வார்.

அனுபவங்களை கேட்கும் பொழுது, அடடா, இதுவல்லவா, குருநாதர் நடத்தும் நாடகம். இதில் அடியேனுக்கு பங்கு பெற முடியாமல் போனதே! என நினைக்க தோன்றும். இருப்பினும், ஒரு முறை, பேசும்பொழுது, "இந்த மாதிரி அனுபவங்களை/பொது வாக்கை, அகத்தியர் அனுமதியுடன் சித்தன் அருள் வலைப்பூவில் வெளியிடலாம்! அவரிடமே, உத்தரவு கேளுங்களேன், என்றேன்.

கேட்டுப் பார்க்கிறேன், என்ன சொல்வார் எனத் தெரியவில்லை! என்றார்.

"சரி! பார்க்கலாம்! என்றேன், சிரித்தபடி.

வருடங்களாக ஒரே பிரார்த்தனையை திருப்பி திருப்பி அகத்தியப்பெருமானிடம் வைத்து, அவர் மனம் இளக வைத்த அடியவர்கள் வேண்டுதலுக்கு அவர் செவி சாய்த்தார் என்றால், இந்த ஒரு வேண்டுதலையும் அனுமதிப்பார் என்று அடியேன் மனம் கூறியது. பொறுமையாக காத்திருந்தேன்.

இரு வாரங்களுக்குப்பின் அகத்தியப்பெருமான் அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியால் மனம் குளிர்ந்து, மிகுந்த சந்தோஷத்தில் இருந்த நேரம், ஜானகி ராமன், அகத்தியப்பெருமானிடம் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டார்.

"நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் எந்த விதத்திலும் அந்த நிகழ்ச்சியில் தொடர்புடையவர்கள் மனம் நோகாமல், அவர்கள் அடையாளம் வெளியே தெரியாமல். வார்த்தைகளை மிக கவனமாக உபயோகித்து, யோசித்து வெளியிட வேண்டும். அனைவரும் எமது சேய்களே!  ஒருவரின் அனுபவம், பிறருக்கு பாடமாக அமையலாம், வழி நடத்தலாகவும் அமையலாம். ஆகவே, அனுமதி உண்டு!" என ஆசிர்வதித்தார்.

இந்த தகவலை அவர் அடியேனிடம் தெரிவித்த பொழுது, மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். இத்துடன், அவ்வப்பொழுது, அகத்தியப்பெருமான் நாடியில் உரைக்கும், பொது வாக்கினையும் அனைவருக்கும் தெரிவிக்கலாம் எனவும் அனுமதித்துள்ளாராம்.

சரி! இங்கு தெரிவிக்கப்படுகிற விஷயங்களை ஒரே தலைப்பின் கீழ் தொகுத்து வழங்கலாம் என்று ஒரு எண்ணம்.

"அகத்தியர் ராஜ்ஜியம்" என்கிற தலைப்பை யோசித்துள்ளேன். உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் கூறுங்கள். மிக சிறப்பாக இருக்கிறது என அகத்தியப்பெருமான், கூறினால் அதை எடுத்துக்கொள்ளலாம்.

விரைவில் அடியேன் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்!

சித்தன் அருள்............தொடரும்!

31 comments:

 1. அகஸ்தியரின் வழி என்றும் கூறலாம் அய்யா

  ReplyDelete
 2. அகத்தியர் அருள்
  ஐயா

  ReplyDelete
 3. Janaki K
  Agathiaperumanin Arutkodai. OR Arulmazhai
  Reply

  ReplyDelete
 4. அருமையான தலைப்பு ஐயா. தற்போது நமது நாட்டிற்கு சித்தர்கள் ஆட்சி தேவை. இன்று முதல் எல்லாம் நன்மைக்கே ஓம் அம் அகத்தீசாய நமக.

  'அகத்தியர் அருள் மழை' -தலைப்பிற்குங்க ஐயா 🙏

  ReplyDelete
  Replies

  1. 'அகத்தியர் அருள் மழை' நல்ல தலைப்பு ஐயா!

   Delete
 5. குரு திருவருள்

  ReplyDelete
 6. " அகத்திய பெருமானின் அருளாட்சி " அல்லது "அகத்தியரின் அருள்வலை " என்றும் அழைக்கலாம்.

  ReplyDelete
 7. " சிவ மைந்தனின் சித்து விளையாடல்கள் " அல்லது " அகத்தியரின் திருவிளையாடல்கள் " என்றோ அழைக்கலாம்.

  ReplyDelete
 8. ayya thank you for introducing janakiraman sir
  i got 2 readings.
  very sply i was blessed.thanks agathiyar appa.bless all of us and we all have to be in saranagathi ,so that he will bless more

  ReplyDelete
 9. Yes Ayya, we are looking forward to "Agathiyar Raajiyam"

  ReplyDelete
 10. குரு திருவருள்

  ReplyDelete
 11. om Agatheesaya namaha, YOU CAN ALSO TRY THSI NAME IF ACCEPTED BY ALL "AGATHIAR PRASANNA SAKTHI"

  ReplyDelete
 12. Ayya Vanakkam,

  Om Agaththeesaaya Namaha,

  "Agaththiyar Anugraham" endra thalaippu eppadi ullathu?

  Ithu poruththam endral, ithai kanivudan pariseelanai seyyavum.

  anbudan,
  Nagarajan Ekambaram
  9962557572

  ReplyDelete
 13. அகத்தியர் அமிர்தம்

  ReplyDelete
 14. அகத்தியர் அமிர்தம்

  ReplyDelete
 15. ஓம் ஸ்ரீ உலோப ம்த்ரா சமேத அகத்திய பெருமானே போற்றி போற்றி!

  நாம் எல்லோரும் LKG ஆனால் அகத்திய பெருமான் விசயத்தில் அய்யா மாஸ்டர். எனவே, அய்யா வாக்கின் படி "அகத்தியர் ராஜ்ஜியம்" என்பதே சரியாகும்.

  ReplyDelete
 16. ஓம் அகத்தீசாய நமக எல்லாம் குருவின் திருவருள் ஐயா உங்கள் மனதில் தோன்றுவது நம் குருநாதர் தோற்றுவித்தது அதனால் நம் குருநாதர் அகத்தியர் ராஜ்ஜியம் என்றே தொடங்கலாம் ஐயா... குருவின் திருவருளை இந்த உலகம் முழுவதும் அறிந்து கொள்ளட்டும் ஐயா ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக

  ReplyDelete
 17. Om Sri lopamudra samata Agastiyar thiruvadi saranam.Agasthiya perumanin arupthathangal.

  ReplyDelete
 18. Om Sri lopamudra samata Agastiyar thiruvadi saranam.Agasthiya perumanin arupthathangal.endru vaikalama Ayya.

  ReplyDelete

 19. ஐயா,

  எனக்குத் தோன்றிய தலைப்பு,
  " அகத்தியரின் அமிர்த துளிகள்."

  மிக்க நன்றி.
  ஓம் லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி.

  கோபிநாத் மருதை.

  ReplyDelete
 20. அருட்தந்தையின் அகத்தியம்

  ReplyDelete
 21. நாடி சொல்லும் கதைகள் அத்தியாயம் 2 !!!

  ReplyDelete
 22. Namaskaram Aiyya, the one which you have chosen itself is a great title, you could also opt "Agasthiya Perumanin Vazhikattal"

  ReplyDelete
 23. 'அகத்தியர் அருள் மழை' நல்ல தலைப்பு ஐயா!எம்பெருமான் இறை அகத்தியரிடம் கேட்டால் அவரும் இதையே ஏற்பார்.

  ReplyDelete
 24. ஓம் அகத்தீசாய நம !
  குருவே சரணம் !
  " குருவின் திருவருள் "

  ReplyDelete
 25. அகத்தியர் கருணை மழை

  ReplyDelete
 26. அகத்தியர் திருவருள் 🙏

  ReplyDelete
 27. அகத்தியர் திருவருள் 🙏

  ReplyDelete
 28. " நாடியின் பாதையில் !!! " அல்லது " நாடி வழிகாட்டும் வாழ்க்கை பாதை !!! " அல்லது "நாடி வழிகாட்டும் வாழ்க்கை முறை !!! " அல்லது "நாடி சொல்லும் கதைகள் அத்தியாயம் 2 !!!"
  - ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி !!!

  ReplyDelete
 29. Agathiyarin Thiruvilayadalgal!

  ReplyDelete