​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 December 2020

சித்தன் அருள் - 972 - ஆலயங்களும் விநோதமும் - அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில், திருப்புன்கூர், சீர்காழி!



வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மேற்கே 3 கி.மி. சென்றால் ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது. அதனுள் - அச்சாலையில் 1.5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது. திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்) தம்மை நேராக தரிசனம் செய்து வணங்கும் பொருட்டு இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு செய்தருளிய தலம் திருப்புன்கூர். நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவராதலால் ஆலயத்திற்குள் செல்வதற்கு அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார். அப்போது இறைவன் முன் இருக்கும் நந்தி நன்றாக அவர் இறைவனைப் பார்க்க முடியாமல் மறைக்கும். அதற்காக கவலைப்பட்டு ஆதங்கப்பட்ட அவருக்கு தரிசனம் கொடுக்க நந்தியை விலகச் சொல்லி நந்தனாரின் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டிய தலம். 

  • எல்லா சிவன் கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும். ஆனால் நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை. 
  • இங்குள்ள நந்திகேஸ்வரர் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும். 
  • இத்தலத்தில் ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம் நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் வெட்டிய குளம் என்ற பெருமையுடையதாகும்.
  • சிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை தனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை தான் நடனம் ஆடும்பொது அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள்செய்தார். 
  • இத்தலத்திலுள்ள நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது. 
  • இத்தல சுந்தரர் பதிகத்தில் கூறியபடி நடராஜப் பெருமான் பாதத்தில் ஓர் உருவம் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து மணிமுழா முழக்குவதைக் காணலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................தொடரும்!

12 comments:

  1. Om sri lobha mudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  2. *அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை மார்கழி ஆயில்ய வழிபாடு*

    அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

    அகத்தியமே சத்தியம். சத்தியமே அகத்தியம். ஆம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற ஈசனை விழிக்க செய்வதே ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டின் நோக்கம் ஆகும். இது சொல்வதற்கு மிக எளிதாக தோன்றும். ஆனால் நாம் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல, ஸ்ரீ அகத்தியர் காட்டும் வழி ஞானம் ஒன்றே ஆகும். ஆனால் இந்த ஞானம் எளிதாக வந்து விடுமா என்ன? நாம் என்ன அவ்வளவு புண்ணியவான்களா? எத்தனை பிறவி? எவ்வளவு பாவ வினைகள்? இதனைத்தான் இந்தப் பிறவியில் கடைபிடித்து வருகின்றோம். இங்கே மீண்டும் மீண்டும் பாவம் அல்லவா சேர்த்து வருகின்றோம். இந்த பாவ வினைகளை உடனே அறுந்து விடுமா என்ன? இதற்கு தான் எடுத்த உடன் ஞானம் என்று கூறாமல் பக்தி,கோயில்,வழிபாடு, அன்னதானம் என்றெல்லாம் நம்மை வழிநடத்தி வருகின்றார்கள். இந்த வழியில் நாம் அகத்தியர் வழிபாட்டில் இருந்து வரும் போது சுமார் 1 ஆண்டுக்கு முன்னர் செங்கல்பட்டில் ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெறலாம் என்று நமக்கு கூறினார்கள். ஆனால் அந்த தரிசனம், அனுபவம் இந்த ஆண்டில் நமக்கு கிட்டியது. நம்மை இன்னும் தான தர்மம் நோக்கி செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை வழிநடத்தி வருகின்றார்கள்.

    அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபையில் வருகின்ற மார்கழி மாத ஆயில்ய வழிபாடு கொண்டாட இருக்கின்றார்கள். அழைப்பிதழை கீழே பகிர்ந்துள்ளோம்.

    Read more - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_30.html

    நீங்கள் *தேடல் உள்ள உள்ள தேனீக்களாய் - TUT* குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/Gp3C7XRYhJT54TCY7nDKHI

    ReplyDelete
  3. *அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய ஆருத்ரா & மார்கழி ஆயில்ய வழிபாடு*

    அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

    இன்றைய பதிவில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய ஆருத்ரா & மார்கழி ஆயில்ய வழிபாடு பற்றி காண இருக்கின்றோம்.

    மார்கழி மாதத்தில் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது. திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் நாளை மறுநாள் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

    Read more - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_28.html

    நீங்கள் *தேடல் உள்ள உள்ள தேனீக்களாய் - TUT* குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/Gp3C7XRYhJT54TCY7nDKHI

    ReplyDelete
  4. *பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 02.01.2021*

    அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

    மார்கழி ஆயில்ய வழிபாடு என்றாலே நமக்கு ஆனந்தம் தான்... அன்பின் வெளிப்பாடாக அகத்தியர் வழிபாடு தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று சனிப்பெயர்ச்சியும் நிகழ்ந்து உள்ளது. கிரக பெயர்ச்சி என்றாலும் நமக்கு கொஞ்சம் உள்ளூர பயம் ஏற்படுவது உண்மையே. சனிப்பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் என்ற பெயரில் அனைத்து செய்தித்தாள், நாளிதழ் மட்டுமின்றி தொல்லை தரும் தொல்லைக்காட்சிப்பெட்டியும் நம் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து பயமுறுத்தி வருகின்றன. மக்களும் பொதுவாக சனிப்பெயர்ச்சி பலன்களை மட்டுமே படித்து,கேட்டு பயம் கொள்கின்றனர். அதில் என்ன பரிகாரங்கள் சொல்கின்றார்கள் என்று பார்ப்பதில்லை. அதிலும் தானம் செய்ய சொல்லி பரிகாரம் வந்தால் ஏதோ எடுத்தோம், கவிழ்த்தோம் என்று ஏனோ தானோ என்று செய்து விட்டு , நமக்கு ஏன் எதுவும் நடப்பதில்லை என்று குறை கூறுகின்றனர். அன்னதானம் போன்ற பரிகாரங்கள் செய்யும் போது எண்ணிக்கையையும் கூட்டி செய்ய வேண்டும். அன்னதானத்தின் தரத்தையும் கூட்டி செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு 5 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்றால் சுமார் 10 பேருக்கு செய்யுங்கள்.இது எண்ணிக்கையை கூட்டும் விதம் ஆகும். அன்னதானத்தின் தரம் என்று பார்த்தால் நாம் ஒரு உணவை சாப்பிட்டால் எப்படி இருக்குமோ, அதே போல் தரமான உணவாக , தண்ணீர் பாட்டில் சேர்த்து செய்வது. ஆரம்பத்தில் நமக்கும் இது போன்ற செய்திகள் புரியாது இருந்தோம். மெல்ல மெல்ல நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் இவற்றை உணர்த்தி வருகின்றார்.

    Read more - https://tut-temples.blogspot.com/2020/12/02012021_28.html

    நீங்கள் *தேடல் உள்ள உள்ள தேனீக்களாய் - TUT* குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/Gp3C7XRYhJT54TCY7nDKHI

    ReplyDelete
  5. *ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா*

    அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

    திருஅண்ணாமலை மூன்று நாட்கள் யாத்திரை குருவருளால் மிக சிறப்பாக நடைபெற்றது. TUT திருஅண்ணாமலை யாத்திரை சிறப்பாக குருவருளால் இனிதே நடைபெற்றது. ஒவ்வொரு வழிபாடு,கிரிவலம் என அனைத்திலும் குருவருளால் இறையருள் பெற்றோம் என்பதே சிறப்பு.

    வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி நன்னாளில் நமக்கு மகேஸ்வர பூசை செய்ய வாய்ப்பு கிடைத்தது. இது சாதாரணமாக கிடைக்கும் என்று தோன்றவில்லை. தேதியை மட்டுமே நமக்கு சரவணபவா சாமிகள் கூறினார்கள். தேதியை மேலும் பார்க்கும் போது நமக்கு இது தெரிந்தது. மகேஸ்வர பூசை செய்வதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் அக்னி தலமான திருஅண்ணாமலையில் செய்வதற்கு வைகுண்ட ஏகாதசி அன்று செய்ய குருவருள் வேண்டும். அன்றைய தினம் சுமார் 90க்கும் மேற்பட்ட சாதுக்கள் கலந்து கொண்டு நம் அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள். பட்டாம்பூச்சியாக சித்தர்கள் ஆசி பெற்றோம்.

    Read more - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

    நீங்கள் *தேடல் உள்ள உள்ள தேனீக்களாய் - TUT* குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/Gp3C7XRYhJT54TCY7nDKHI

    ReplyDelete
  6. *தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021*

    அன்பர்களுக்கு வணக்கம்.

    குருவே சரணம். குருவின் தாள் என்றும் பணிகின்றோம். அகத்தியம் என்பது பெருங்கடல். அதில் நாம் தினமும் சிறிது நீர்துளிகளை மட்டும் பருகி வருகின்றோம். அகத்தியர் வழிபாட்டில் வந்த பிறகு, நாம் தூசி கிராமத்தில் உள்ள நம் குருநாதர் பற்றி அறிந்தோம்.நேரில் நம்மை எப்போது அழைப்பாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்தோம்..

    7 ஆம் ஆண்டு தெய்வீக விவாஹ விழா - 11.09.2020 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. சென்ற ஆண்டின் பதிவில் பிரார்த்தனை செய்தோம். பிரார்த்தனை இந்த ஆண்டில் நிறைவேறியது. சரி..பதிவிற்குள் செல்வோமா?

    தூசி கிராமத்தில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அகத்திய பெருமானின் அவதார திருநாளை சிறப்பாக கொண்டாட இறையருள் கூட்டுவித்துள்ளது. அனைவரையும் வருக! வருக!! என்று நம் தளம் சார்பில் அழைக்கின்றோம்.

    Read more - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

    நீங்கள் *தேடல் உள்ள உள்ள தேனீக்களாய் - TUT* குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/Gp3C7XRYhJT54TCY7nDKHI

    ReplyDelete
  7. *பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா!*

    அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

    நமக்கு அகத்தியம் காட்டி, அகத்தியம் ஊட்டி வருவது சித்தனருள். நம்மை வழிநடத்தும் சித்தனருள் இணையத்தளம் மூலம் நாம் பெரும் அருள் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று. அந்த நாள் இந்த வருடம் என்ற தொகுப்பின் மூலம் அகத்தியர், சித்தர்கள், தாமிரபரணி என்று நம் பயணமும் நீண்டு வருகின்றது. 2019 ஆம் ஆண்டு கோடகநல்லூர் தரிசனமும், நம்பிமலை தரிசனமும் சிறப்பாக கிடைத்தது. இந்த ஆண்டில் தொற்றுக்கிருமி கட்டுப்பட்டால் நம்மால் தரிசனம் பெற இயலவில்லை. 2021 ஆண்டில் ஓதிமலை தரிசனம் பெற பிரார்த்தனை செய்கின்றோம். மார்கழி மாதம் என்றாலே நமக்கு கொண்டாட்டம் தான். ஆம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் நட்சத்திர விழாவும் வரும். சென்ற ஆண்டில் வழக்கம் போல் 108 தீபமேற்றி, ஸ்ரீ அகத்தியர் ஆராதனை செய்து அன்றைய தினம் வழிபாடு சிறப்பாக அமைந்தது. தனிப்பதிவில் விரைவில் கொண்டாடுவோம்.

    இனி..சித்தன் அருள் இதயத் தளத்திலிருந்து....

    Read more - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

    நீங்கள் *தேடல் உள்ள உள்ள தேனீக்களாய் - TUT* குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/Gp3C7XRYhJT54TCY7nDKHI

    ReplyDelete
  8. அகத்தீசாய நம

    ReplyDelete
  9. ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  10. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  11. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  12. ஐயா கோடான கோடி நன்றி. இத்திருக்கோயிலுக்கு இருமுறை சென்றிருக்கின்றேன்.சுந்தரர் தேவாரத்தில் வரும் வரிகளுக்கு பொருள் இன்று தெளியப்பெற்றேன். மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
    இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

    காவ லாளர்என் றேவிய பின்னை

    ஒருவன் நீகரி காடரங் காக

    மானை நோக்கியோர் மாநடம் மகிழ

    மணிமு ழாமுழக் கவருள் செய்த

    தேவ தேவநின் திருவடி யடைந்தேன்

    செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.7.55

    ReplyDelete