​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 18 December 2020

சித்தன் அருள் - 970 - அகஸ்தியர் கோவில், பாலராமபுரத்தில் அவரின் திரு நட்சத்திர விழா !



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

02/01/2021, சனிக்கிழமை அன்று நம் குருநாதரின் திருநட்சத்திரம், (மார்கழி மாதம், ஆயில்யம்) வருகிறது. உலகெங்கும் உள்ள அகத்தியர் கோவில்களில்/சன்னதிகளில்  அன்றைய தினம் மிகச்சிறப்பாக அபிஷேக பூஜைகள்/ஆராதனைகள் நடைபெறும். வரும் புது வருடத்தில் முதல் விழாவாக அவரது திரு நட்சத்திரம் வருகிறது.

அடியேன் எல்லா வருடமும் அந்த தினத்தில், பாலராமபுரத்தில் அமைந்துள்ள "ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலில்" நடக்கும்  பூசையில் கலந்து கொள்வேன். அனைத்துமே அவர் அருளால் மிக சிறப்பாக அமையும்.

"சித்தன் அருள்" வலைப்பூவின் அகத்தியர் அடியவர்கள்/வாசகர்கள் அகத்தியர் திரு நட்சத்திர விழா/கோவில் பூசையில் பங்குபெறுகிற கோவில் தொடர்பை கேட்டிருந்தனர். உரிய தகவல்களை கீழே தருகிறேன்.

பாலராமபுரம் அகத்தியர் கோவிலை பொறுத்தவரை, அகத்தியப்பெருமானின் திருவிளையாடல்களை நிறையவே அடியேன் உணர்ந்துள்ளேன். அதற்காக மற்ற கோவில்களில் அவர் திருவிளையாடல்களை நடத்துவதில்லை என்று அர்த்தம் அல்ல. சித்தன் அருளை வாசித்து இன்பமுற்றவர்கள் வாழ்க்கையில் "பாலராமபுரத்தில் உறையும் குருநாத/குருபத்னியே, சற்று ஆசீர்வதியுங்கள்" என வேண்டிக்கொண்ட பொழுது, அவர்களின் சூழ்நிலை நல்லபடியாக மாறியதாக கூறினர்.

சமீப காலமாக, நம் குருநாதர் சேய்களை நினைத்து சற்றே சோர்ந்துள்ளது, ஒரு சில நிகழ்ச்சிகளால் உணர முடிந்தது. ஆகவே அனைத்து அகத்தியர் அடியவர்களும், ஏதோ ஒரு அகத்தியர் சன்னதியில்  அன்றைய தினம், குறைந்தது, பச்சை கற்பூரமாவது பூஜைக்கு/அபிஷேகத்துக்கு வாங்கிக்கொடுத்து, உலகை, நம்மை சூழ்ந்து இருக்கும், விஷ/திருஷ்டி தோஷங்களை அகற்ற அகத்தியப்பெருமானின் கோவிலுக்கு உழவாரப்பணி/பூஜையில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நாம் அனைவரும் பெற்ற இன்பம் அனைவரும் பெறுவதற்காக பாலராமபுரம் அகத்தியர் கோவில் பற்றிய இந்த தகவலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். விருப்பமுள்ளவர், இந்த தகவலை உபயோகித்து பாலராமபுரம் கோவிலில் தொடர்பு கொண்டு, அகத்தியர் திருநட்சத்திர விழாவில் பங்கேற்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ அகஸ்தியர் ஸ்வாமி திருக்கோவில்,
பாலராமபுரம், திருவனந்தபுரம், கேரளா.
தொடர்புக்கு : திரு. ரதீஷ், பாலராமபுரம் 9020202121
திரு. சுமேஷ், பூஜாரி, அகத்தியர் கோவில் 9497866079

அன்றைய தின அபிஷேக பூஜைகள் தொடர்பான விவரங்கள்.

  • காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்படும்.
  • காலை 5.30 மணிக்கு நிர்மாலய தரிசனம் பின்னர் அபிஷேக பூஜைகள்.
  • காலை 6.30 மணிக்கு பூஜை, தீபாராதனைகாலை 7.00 - 8.00 மணிக்குள் அகத்தியர், லோபாமுத்திரை தாய் வழங்கும் அன்னதானம். 
  • காலை 8.45க்கு நிவேதனம், ஆரத்தி.
  • காலை 9 மணிக்கு கோவில் நடை சார்த்தப்படும்.
  • மாலை 5 மணி முதல் 7.30 வரை கோவில் திறந்திருக்கும்.

02/01/2021 அன்று ஏதேனும் ஒரு அகத்தியப்பெருமான் கோவிலில், பூஜையில் அகத்தியர் அடியவர்கள் பங்குபெற்று, உழவாரப்பணி செய்து, அவரின் திருவருளை பெறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

சித்தன் அருள்.............. தொடரும்!

9 comments:

  1. Om Sri Lopamudra samata agastiyar thiruvadi saranam.

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ மாதா லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  3. Om srilobamudra samedha agasthia peruman thiruvadigale potri

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு மூத்தோனே திருவடிகள் போற்றி
    ஓம் சப்தரிஷிகள் திருவடிகள் போற்றி
    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் திருவடிகள் போற்றி 🙏🙏🙏

    ReplyDelete
  5. Om lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete
  6. ஓம் அகத்தியமாரிஷி நமா

    ReplyDelete
  7. ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  8. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ... நன்றி ஐயா... குருநாதர் அகத்தியர் குருபத்தினி லோபமுத்ரா தாயார் ஆசிர்வாதம் ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு கிடைத்து கொண்டே இருக்கிறது ஐயா... தன்னை தேடி நாடி வரும் அடியவர்களுக்கு திருவருள் பொழியும் நமது தோன்றா துணையன் சர்வேஸ்வரரின் தவபுதல்வர் தவபுதல்வி அய்யன் அகத்தியர் தாயார் லோபமுத்ரா அம்மா பொற்பாதங்கள் போற்றி போற்றி குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ. 🙏🙏🙏

    ReplyDelete
  9. *அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!*

    அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

    அகத்தியர்

    அன்பின் ஆழம் மூலம் நமக்கு கருணை மழை பொழிந்து வரும் சித்தர். அகத்தியரை வழிபட நாம்
    எத்தனை பிறவிகள் எடுத்து வந்தோம் என்று நமக்குத் தெரியாது, புல்லாகி பூடாகி புழுவாகி மரமாய்
    இதோ இந்த மனித பிறவியில் நுழைந்திருக்கும் நாம் குரு வழிபாடு, சித்தர்கள் பூஜை என்று செய்து வருகின்றோம். நாம் மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தியர் மகரிஷிக்கு செய்து வருகின்றோம்.

    வருகின்ற சனிக்கிழமை 02.01.2021 அன்று வருகின்ற ஆயில்யம் மகா குருபூஜை. இந்த குரு பூஜையை ஒட்டி, உலகெங்கும் உள்ள அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நடைபெற உள்ளது. நமக்குக் கிடைத்த தகவல்களை இங்கே தொகுத்து ஒருங்கே தர முயற்சிக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகே நடைபெறும் அகத்தியர் பூசையில் கலந்து கொண்டு சித்தர் பெருமக்களின் அருள் பெற வேண்டுகின்றோம்.இந்த ஒரே பதிவில் வருகின்ற மார்கழி ஆயில்ய பூசை தகவல்களை இங்கே தருகின்றோம். இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வசதியான நேரம் கிடைக்கும் போது அப்படியே தரிசனம் செய்து கொள்ள ஏதுவாக இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நாம் நம்புகின்றோம்.

    Read more - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_9.html

    நீங்கள் *தேடல் உள்ள உள்ள தேனீக்களாய் - TUT* குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/Gp3C7XRYhJT54TCY7nDKHI

    ReplyDelete