​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 7 November 2019

சித்தன் அருள் - 824 - அகத்தியரின் அனந்தசயனம்!


"அனந்தசயனம்" மனதுள் சுழன்று கொண்டே இருந்தது.  எங்கு தொடங்குவது என்று பிடிபடவில்லை. கோவில் அதிகாரிகளிடம் கேட்கலாம் என்றால், ஏற்கனெவே அவர்கள், உள்ளிருக்கும் விஷயம் வெளியே தெரிந்துவிட்டபடியால், நிறைய கட்டுப்பாடுகளை விதித்து, பிரச்சினைகளை எதிர் கொண்டிருந்த நேரம்.

அடியேன் ஒரு முடிவுக்கு வந்தேன். குருநாதரிடம் வழி கேட்டு தெளிவு பெறலாம் என்று தோன்றியது. ஒரு வியாழக்கிழமை, குருவின் தரிசனத்துக்காக பாலராமபுரம் அகஸ்தியப் பெருமான் கோவிலுக்கு சென்ற பொழுது  மனதார வேண்டிக்கொண்டேன்.

"அய்யனே! அனந்த பத்மநாபா சுவாமி கோவிலின், உங்கள் வரையில் உள்ள தொடக்கத்தை காட்டியருளுங்கள். அங்கிருக்கும் எந்த பொருளிலும், இன்றைய சாதாரண மனிதனுக்கு இருக்கும் ஆசை அல்லது எண்ணம், அடியேனுக்கு இல்லை. திருவட்டாறில் இறை இருக்கும் பொழுது, இங்கு ஏன் குடி கொண்டது? என அறிந்துகொள்ள ஆவல். தயை கூர்ந்து அருளுங்கள்" என கூறிவிட்டு, ப்ரதக்ஷிணம் செய்யத் தொடங்கினேன். ஆறு ப்ரதக்ஷிணம் முடிந்து ஏழாவது சுற்றில், அகத்தியப் பெருமானின் சன்னதிக்கு பின்புறம் நடக்கும் பொழுது, மிகத் தெளிவாக, வலது காதில் கேட்டது.

"யாம் யாகம் வளர்த்த பஞ்சேஷ்டிக்கு வா! தெளிவாக்குகிறேன்" என்று.

அன்றுதான், அந்த ஊரின் பெயரை முதன் முறையாக கேட்கிறேன். எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு வேளை வட இந்தியாவில் இருக்குமோ. அப்படியாயின், மிகுந்த சிரமமாக இருக்குமே என்றெல்லாம் மனம் யோசித்தது. எதற்கும், பூசாரியிடம், இப்படி ஒரு இடம் தெரியுமா" என்று கேட்டுவிடலாம் என்று, விசாரித்தேன்.

அவருக்கு அப்படி ஒரு இடம் எங்கிருக்கிறது என்று தெரியாது என்பது, உடன் புரிந்தது. கூடவே, எதற்க்காக கேட்கிறீர்கள்? என்று வினவினார்.

"அகத்தியப் பெருமானிடம் ஒரு வேண்டுதலை இன்று வைத்தேன். அங்கு வரச்சொல்லி உத்தரவு கொடுத்துள்ளார். ஆதலால், உங்களுக்கு அந்த இடம் எங்கிருக்கிறது என்று தெரியுமோ? என்று வினவினேன்" என்றேன்.

சரி! இனி நாமாகத்தான், தேடித் தெளிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பின்னர் இதை பற்றி மறந்தே போனேன்.

ஒரு வாரம் சென்றிருக்கும். உறவினர் ஒருவர், வீட்டுக்கு வந்த பொழுது, நிறய விஷயங்களை பற்றி பேசும் பொழுது, வந்த உத்தரவை கூறாமல், இப்படி ஒரு இடம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று வினவினேன்.

அந்த இடம் தமிழ்நாட்டிலேயே, சென்னைக்கு 25 கீ.மீ தொலைவில் இருப்பதாகவும், தான் சென்றுள்ளதாகவும் கூறினார். மேலும் அந்த கோவில் பற்றிய சில விஷயங்களை கூறினார். அதில் அகத்தியப் பெருமான், அங்கு ஐந்து யாகங்கள் செய்ததாக கூறினார். இந்த "யாகம்" வார்த்தை உத்தரவில் வந்த வார்த்தையுடன் பொருந்திப் போனதை கவனித்தேன்.

"அடியேன் சென்னைக்கு வருகிறேன். அந்த கோவிலுக்கு அழைத்து செல்லுங்கள்" எனக் கூறினேன். அவரும் சம்மதித்தார்.

இரண்டாவது வாரம் சென்னை சென்று, அங்கிருந்து உறவினருடன் பஞ்சேஷ்டி கோவில் முன் நின்றேன்.


கோவில் முகப்பில் ஒரு நிமிடம் நின்ற பொழுது, உடல் சிலிர்த்தது. மனம் நெகிழ்ந்தது.

"தாங்கள் உத்தரவின்படி இது வந்துவிட்டது அய்யனே! இனி உங்கள் அருள் வேண்டும்!" என மட்டும் வேண்டிக்கொண்டேன். 

மாலை வேளை. பூசைக்கான மணி அடித்தது, சூழ்நிலையை மேலும் மெருகேற்றியது.

உள்சென்று இறைவனை தரிசித்து, பிரசாதம் பெற்றுக்கொண்டு, மெதுவாக வெளியே வந்து ப்ரதக்ஷிணம் செய்தேன்.

அகத்தியப் பெருமான் சந்நதி முன் நின்ற பொழுது, என்னவோ மனதுள் ஒரு எண்ணம் வலுத்தது. தேடிவந்ததின் சில விடைகள் இங்கு கிடைக்கும், நிச்சயம் அவர் அருளுவார், என்று.

அதிக நேரம், அந்த சன்னதியிலேயே, கண் மூடி த்யானத்தில் அமர்ந்தேன்.

"அனந்தசயனத்துக்கு செல்லும் முன் இங்குதான் ஐந்து யாகங்களை யாம் செய்தோம். மிக புண்ணியமான இடம் இது. இங்குதான் முதன் முறையாக சிவபெருமான் அவர் தீர்மானத்தை உத்தரவாக்கினார். யாம் அதை சிரம் மேற்கொண்டு பணிந்தோம். அனைத்து இறை ரகசியங்களையும் இப்பொழுது கூற தகுந்த நேரமல்ல. சூரியன் அஸ்தமித்துவிட்டான். தேடு! வேட்கையுடன், நேர்மையாக தேடு. சரியான நேரத்தில், தெரிந்து கொள்ள வேண்டியதை யாம் தெரிவிப்போம்" என வாக்கு வந்தது.

"சரிதான்! நம்மை விரட்டி விரட்டி ஓடவைத்துத்தான், கேட்டது இவர் கொடுக்கப்போகிறார்" என்று மனதுள் நினைத்தேன். என்னதான் அடியவராக பணிந்து சென்றாலும், சில வேளைகளில் சாதாரண மனித சிந்தனைக்கு நாம் வந்துவிடுவோம்.

ஒரே அமைதி எங்கும் நிலவியது. வேறு எந்த பதிலும் வரவில்லை. சரி, இன்று இவ்வளவுதான் போல, என்று நினைத்து, குருநாதருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, கோபுர வாசலை நோக்கி நடக்கும் பொழுது, பூசாரி எங்களுடன் நடந்து வந்தார்.

"அகஸ்தியருக்கு, எல்லா மாதமும் சதயம் நட்சத்திரத்தன்று, இங்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. பல இடங்களிலிருந்தும் அகத்தியர் அடியவர்கள் இங்கு வந்து சிறப்பாக நடத்துகின்றனர். அந்த பூஜை கூட, நாடியில் வந்த அகத்தியர் உத்தரவின் பேரில்தான் செய்வதாக கூறுகிறார்கள். அகத்தியர் எத்தனையோ காலங்களுக்கு முன் இங்கு இருந்து ஐந்து விதமான யாகங்களை செய்துள்ளார். பின்னார்தான் அவர் மலை கடந்து மலையாள தேசத்துக்கு சென்றதாக கூறுகிறார்கள். இங்கு வந்து பூசையில் கலந்து கொண்டு சமர்ப்பிக்கப்படுகிற வேண்டுதல்கள், உடனடியாக நிறைவேறுவதாக, பக்தர்கள் கூறுகின்றனர்" என பல விஷயங்களை கூறினார், பூசாரி.

அனைத்தையும் உள்வாங்கி, பாதுகாத்த பொழுது மனதுள் ஒரு எண்ணம் உதித்தது.

"குருநாதா! ஏதேனும் ஒரு தடயம் தரக்கூடாதா?" என்றேன் மனதுள்.

எங்களை வழியனுப்ப வந்த பூசாரி, கோபுர வாசல் படி மேல் நின்று பேசத் தொடங்கினா. அவர் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த அடியேனின் பார்வை, கோபுர சுவரில் பதிந்தது.

அங்கு,

பத்மநாபரின் அனந்தசயன உருவம், அவர் வலது கைக்கு கீழே ஒரு சித்தர் த்யானத்தில் அமர்ந்திருப்பது போல் பொறிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, பத்மனாபாரின் வலது கைக்கு கீழே, ஒரு சிவலிங்கம் தான் இருக்கும். ஆனால் இங்கோ, ஒரு சித்தர் அமர்ந்திருந்தார்.


மிகுந்த சந்தோஷம் அடைந்து, பூசாரியை அங்கிருந்து சற்று விலகச்சொல்லி, அந்த ரூபத்தைக் காட்டி, "அடியேன் தேடி வந்தது கிடைத்த்துவிட்டது. இது போதும். அகத்தியரின் அருள் மிகப்பெரியது." என்றேன்.

பின்னர் அந்த சிற்பத்தை, புகைப்படம் எடுத்துக்கொண்டு, விடை பெற்றோம். அன்றிலிருந்து, அடியேனின் கேள்விக்கான பதில்களை, அகத்தியப்பெருமான், எதிர்பார்க்காத சூழ்நிலைகள் வழி, மனிதர்கள் வழி தரத்தொடங்கினார்.

இதற்குள், கோவிலை சுற்றி கட்டுப்பாடுகள் இறுகத்தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், துப்பாக்கி ஏந்திய கருப்பு பூனைப்படை காவலுக்கு இறங்கியது. கோவிலுக்குள் யாரும் அதிக நேரம் இருக்க முடியாது என்ற சூழ்நிலை உருவானது.

கோவிலின் பத்து நாட்கள் உற்சவத்தின் பொழுது,  பத்தாவது நாள் ஆராட்டின் (தீர்த்தவாரி) பொழுது  வேறு ஒரு கோவிலிலிருந்து வந்த யானைக்கு மதம் பிடிக்க, ஆபத்தான கலவர சூழ்நிலை உருவானது. இதனுடன், மஹாராஜா கையில் அணிந்திருந்த நவரத்ன மோதிரம், சில நாட்களில் தொலைந்து போனது.

நிமித்தம் சரியாக இல்லாமல், கெடுதல் நடக்கிறதே, என்று கவனித்த மஹாராஜா, கோவிலுக்குள் பூஜையில் ஏதேனும் தவறு நடந்துவிட்டதோ? என்றறிய, அனைவராலும் மதிக்கப்படுகிற ப்ரச்னம் பார்க்கிற ஒருவரை வரவழைத்தார்.

வந்தவர், முதல் நாள் த்யானத்தில் அமர்ந்து பத்மனாபாரிடம் உத்தரவு வாங்கினார்.

உத்தரவு கிடைத்தது, ஆயின் மறுநாள், வரை காத்திருக்க வேண்டி வந்தது.

"நாளை காலை தெலுங்கு தேசத்திலிருந்து ஒரு சிறுவன் தன் தகப்பனுடன் எம்மை தரிசிக்க வருவான். அவனை கொண்டு ப்ரச்னம் பார்க்கவும். வரும் அருளை சோதித்து பார்த்து, தெரிவி!" என பத்மனாபாரிடமிருந்து அவருக்கு உத்தரவு வந்தது.  

ப்ரச்னம் பார்ப்பவரும், அவரது 22 சிஷ்யர்களும், இந்த நிகழ்ச்சிக்காக, மறுநாளுக்கு காத்திருந்தனர்.

நாமும் அடுத்தவாரம் வரை காத்திருப்போம்!

சித்தன் அருள்...................... தொடரும்!

12 comments:

  1. மதிப்பிற்குரிய திரு. கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
    மதிப்பிற்குரிய திரு. அகினிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

    ஆஹா அற்புதம்..மகா அற்புதம்....
    காத்திருக்கிறோம் அய்யா...

    மிக்க நன்றி,
    இரா.சாமிராஜன்

    ReplyDelete
  2. Ayya vannakam.enna aruptam ayya.om. Sri lopamudra samata agastiyar thiruvadi sàranam .

    ReplyDelete
  3. ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்.
    இன்றைய நாளிற்கான அற்புதம் சித்தன் அருளிலிருந்து தொடங்குகிறது. மிக அருமை. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  4. ஐயா வணக்கம். இந்த பஞ்ஜேட்டி திருக்கோவிலின் பெயர் என்ன. போய் தரிசனம் செய்யலாம் என்று இருக்கிரேன். நன்றி ஐயா.

    ReplyDelete
  5. ஐயா வணக்கம். இந்த பஞ்ஜேட்டி திருக்கோவிலின் பெயர் என்ன. போய் தரிசனம் செய்யலாம் என்று இருக்கிரேன். நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இந்த பக்கத்தை திறக்கவும்...

      https://tamilnadu-favtourism.blogspot.com/2018/05/agastheeswarar-temple-pancheshti-thiruvallur.html?m=1

      Delete
    2. Thank You So Much Sir.🙏🙏🙏

      Delete
    3. முருகன் அருள் முன்னிற்க!


      அடியார் பெருமக்களுக்கு அன்பு வணக்கங்கள். பஞ்சேஷ்டி அகத்தியர் தரிசனம் பெற கீழே உள்ள இடுகை பார்க்கவும்.

      மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

      குருமார்களின் பாதம் பணிந்து - TUT சதய பூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/tut_11.html

      வைகாசி விசாக திருவிழா - திருக்கல்யாண மகோத்ஸவம் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_26.html

      பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

      மேலும் இன்று பஞ்சேஷ்டியில் அன்னாபிசேகம் நடைபெற உள்ளது. அழைப்பிதழ் கீழே உள்ள இணைப்பில்

      சோற்றுக்குள் சொக்கன் - அன்னாபிசேகம் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_7.html


      குருவின் தாள் பணிந்து,

      ரா.ராகேஷ்
      கூடுவாஞ்சேரி

      Delete
  6. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை....

    இறை அருள் நிறைந்த வாழ்க்கை கிடைத்ததற்கு நன்றி அகத்தியர் அய்யனே....

    நன்றிகள் ஐயா தங்களுக்கு....

    ReplyDelete
  7. அகத்தியர் பொது வாக்கு

    2019 டிசம்பர் 25, 26, 27, 28 ஆகிய நாள்களில் மிக மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

    பேரழிவுகள் உருவாகும் நாள்களாகவும் இவை இருக்கும்.

    கடல் நீராடல் கூடாது, கள் மதுவகைகள் குடிப்பது மாமிசம் உண்பதை தவிர்த்து, சஞ்சீவி அனுமனை வேண்டி தயிர் சாதத்தில் மிளகு போட்டு நெய்வேதியம் செய்து பிரசாதமாக கொடுத்து வழிபட வேண்டும்.

    நதிகளில் நீராடுவதை தவிர்க்க வேண்டும்.

    அனைவரும் தங்களது குரு மார்களை வேண்ட வேண்டும். குரு இல்லாதவர்கள் ஆஞ்சநேயரையும் விநாயகரயோ குரு வாக எண்ணி தொழ வேண்டும். அவரவர் சக்திக்கு இயன்ற அளவில், அருகம்பில் அல்லது வடை மாலை போன்றவற்றை அளித்து வழிபட வேண்டும்.

    அனுமன் ஜெயந்தி அன்று நிலை சகஜ நிலைக்கு திரும்பும்.

    குடிக்கும் நீரிலும் குளிக்கும் நீரிலும் தர்ப்பை மற்றும் துளசி இட்டு குடித்து குளித்து வரவும்.

    அனைத்து நட்சத்திரக்காரர்களுக்கு தொய்வு சூழ்நிலை இருக்கும்.

    சிம்ம ராசி மற்றும் தனுசு ராசி உள்ளவர்களுக்கு மிகவும் கவனம் தேவை. இந்த ராசி உள்ளவர்கள் Dec31, 2019 வரை பல பாதிப்புகள் இருக்கும். மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

    அனைவருக்கும், சளி, ஜுரம், சரும நோய் போன்றவை தாக்கும்.

    வனத்தினுள் செல்பவர்கள் தவிர்க்கவும். வன விலங்குகள் இந்த கிரக சூழ்நிலையில் உக்கிரமாக இருக்கும்.

    ReplyDelete
  8. அகத்தியர் அடியவர்களே,

    ஆத்ம விடுதலை பற்றி முருகப்பெருமான் உறைத்த உண்மைகள் தெரிய இந்த பக்கத்தை பாருங்கள்..

    http://enlightenedbeings.org/resources.php

    ReplyDelete