​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 30 May 2019

சித்தன் அருள் - 811 - அகத்தியர், லோபாமுத்திரை தரிசனம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நீண்ட வருடங்களுக்கு பின், சமீபத்தில், ஒரு புண்ணியத்தல யாத்திரையாக, திருவண்ணாமலை சென்றிருந்தேன்.  அகத்தியப்பெருமானின் அருளினால், மிக மிக அருமையான யாத்திரையாக அமைந்தது. அன்றையதினம், முதன் முறையாக அகத்தியர் ஆஸ்ரமம் செல்லும் வாய்ப்பும் கிட்டியது. உள்ளே நுழைந்ததும், திகட்டாத அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை சமேதராக, அன்றைய யாகத்தை ஏற்று வாங்கிக்கொண்டு, பின்னர், தம்பதி சமேதராக அமர்ந்திருந்தார். அருமை, அவ்வளவு அருமையான தரிசனம் என்றுதான் கூறவேண்டும். அதிலும், அகத்தியப் பெருமான், தன் இடது கைவிரல்களால், லோபாமுத்திரை தாயாரை சன்னமாக தட்டி கூப்பிட்டு, "இங்க பார்! யார் வரான்னு! நான் சொன்னேனே, அவன் வருகிறான் பார்" என்று தாயாரின் கவனத்தை நம் பக்கம் திருப்புவது போல், நிறைந்த அன்புடன், அமர்ந்திருந்த கோலம். இதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. அந்த இடத்தை விட்டு விலகவே மனமில்லை. அப்படி அருமையான சூழ்நிலை. நிறைய புகைப்படங்களை எடுத்து சேர்த்துக் கொண்டேன்.

அதில் ஒன்றை, உங்கள் அனைவருக்காகவும், கீழே தருகிறேன். அந்த அன்பு நிறைந்த சூழ்நிலையை உணர விரும்புபவர், படத்தை பெரிதாக்கி, அகத்தியர் விழிகளையும், தாயாரின் கனிவான பார்வையையும், பாருங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!


15 comments:

  1. அம்மனின் அருளும் அன்னையின் அருளும் பெற்றோம்....

    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி

    ReplyDelete
  2. Om Sri lopamudra samathe agastiyar thiruvadi pottri.ayya vanakam ashram engae ullatu ayya.miga arumaiyana darshnam

    ReplyDelete
    Replies
    1. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், வாயுமூலை திரும்பியவுடன், சுக்கிரலிங்கத்துக்கு முன்னர் உள்ளது.

      Delete
  3. மிக அருமையான தரிசனம் நன்றி ஐயா

    ReplyDelete

  4. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!

    ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!

    ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!

    ReplyDelete
  5. Dear Sir, Is this agasthiyar ashram of sathguru venkatraman swamigal. Thanks.

    ReplyDelete
  6. குரு பாதங்கள் சரணம்
    அற்புதமான தரிசனம் ஐயா... நன்றி ஐயா

    ReplyDelete
  7. Mikka Nandri Ayya , Please let me know where is the agastiyar ashramam in thiruvannamalai.

    ReplyDelete
  8. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், வாயுமூலை திரும்பியவுடன், சுக்கிரலிங்கத்துக்கு முன்னர் உள்ளது.

    ReplyDelete
  9. Om Sri lopamudra samathe agastiyar thiruvadi pottri.magaum arumaiyana darshnam.nandri iyya.

    ReplyDelete
  10. Dear Sir, Migavum arumayana Tharisanam. Nam Guruvai nan neeraya murai angae thedi irrukiran. Miguntha Nandri ayya. Om Agathisaya Namaha.

    ReplyDelete
  11. நமஸ்தே....

    அருமை... அருமை... அருமை....

    என்னுள் ஏற்பட்ட உணர்வுகள் , விவரிக்க முடியவில்லை...

    நன்றி ஐயா....

    ஓம் லோபாமுத்திரை சமேத அகத்தியர் பெருமான் பாதங்களுக்கு நன்றி....

    நன்றி...

    ReplyDelete