வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகளை தொடரும் வழியில், ஒரு சித்த வித்யார்த்தியை சந்திக்க நேர்ந்தது. கலந்துரையாடலின் பொழுது, சித்த மார்க்கம் காட்டும், இல்லற தர்மம் என்பதை பற்றி தெளிவுபடுத்தினார் அடியேனுக்கு. யாம் பெற்ற இன்பத்தை, நீங்களும் உணர, அந்த சிறு விரிவுரையை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
இல்லற_தர்மம்
கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை!
இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது
அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மாவே வழி நடத்தும்
96 தத்துவங்கள் முடிவு பெறுவது இருபத்தி ஒரு வயதிலே. அதன் பிறகே
அவனது சொந்த ஆன்ம கர்மா செயலில் இறங்கும்.
சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது! சக்தியோடு துணை சேர வேண்டும். சிரசு ஏற பல வழி
- தியானம் மூலம்
- பக்தி மூலம்
- ஞான மூலம்
- யோக மூலம்
- தீட்சை மூலம்
- சிவசக்தி மூலம்
இன்னும் எத்தனையோ மூலம், வழி உள்ளது சிரசு ஏற. ஆனால் சிறந்த மூலம் இல்லற தர்மம்.
சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது
சக்தி மாறி சிவம் சேர்ந்தாலே பிறவியே சிக்கலே.
மனம் பொருத்தம் பூமியிலே ஜெயிப்பது இல்லை. ஆன்ம பொருத்தமே பிறவியை ஜெயிக்கும்.
அந்த சக்தி யோடு சிவம் சேரும் போதே சர்வமும் சாந்தி ஆகும்
சிவ சக்தி இடையே ஊடலும் கூடலூம் உற்சாகம் தானே......!!!
ஆனால், சக்தியின் கண்ணீருக்கு சிவம் காரணமானால் அதை விட கொடிய கர்மா இவ்வுலகில் இல்லை
ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம் வழி தர்மத்தில் உள்ளது உண்மையே!
ஆனால்,
உறவுகளை கொண்டே உலகை வெல்வதும் பிறவி பிணி அறுக்கவும் ஒரு வழி உள்ளது. அது, உலகம் அறியாதது.
சொந்தம் என்பது, பழைய பாக்கி என அறிந்தவனுக்கு சொந்தம் ஒரு சுமை இல்லை.
நட்பு என்பது, பழைய பகை என்பதை பண்போடு அறிந்தவனுக்கு, பதற்றம் இல்லை
எதிரி என்பவன், தனது கர்மாவின் தார்மீக கணக்கே என தன்மையோடு உணர்ந்தவனுக்கு, எதிரி, எதிரியே இல்லை... உனது எதிரி நீயே!
உனது செயலே கர்மா ஆகி, அந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும் ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கு எதிராக பயன்படுத்துகிறது என நீ உணரும் போது...
உன் எதிரி முகத்தில, உனது கர்மா உனது கண்களுக்கு தெரிய வந்தால்...
எதிரி உனக்கு எதிரே இருந்தாலும், கலக்கம் தேவைப்படுவதில்லை!
உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும் உன்னோடு பிறக்கும் உனது பழைய கணக்கிலே!
பழைய கணக்கு புரிந்தால், பந்த பாசம் சகோதரத்துவம் மீது பற்று அற்ற பற்று வைத்து பிறவி கடமை வெல்லலாம்.
கர்மாவின் கணக்கு புரிந்தால் உனது பக்கத்தில் சரி பாதி அமரும் மனைவி யார் என்றும் புரியும்.
தாய் தந்தையை அன்போடு பூஜிப்பவன் தந்தை வழி, தாய் வழி ஏழு ஜென்ம கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள் பொறுத்து, உபகாரமாக உதவி வந்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உனது ஏழு ஜென்ம சமூதாய கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
கோயில் போனாலோ, மகா குளத்தில் குளித்தாலோ ஒன்றும் மாறாது! சிறு இன்பம் மட்டும் சிறிது காலம் கிடைக்கும், அவ்வளவே.
ஆனால், ஒரே ஒரு உறவை நீ பூஜித்தால், பிறவி பிணி மொத்தமாக தீரும், அது மனைவியே.
மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது உலகிலேயே சிரமம் மட்டும் அல்ல, அது தான் உலகிலேயே சிறந்த தவம்!?
தவம் என்பது சாமான்யன்களுக்கு சிரமமே!!
கட்டிய மனைவியையும், உன் மூலம் அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமாற நேசித்து உன்னதமாக உனது வாழ்வை ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால் அதுவே உலகின் சிறந்த தர்மம், சிறந்த தவம்!
தாய் தந்தையை வணங்கினால், ராமேஸ்வரம் போகத் தேவை இல்லை, பித்ரு தோஷம் நீங்க.
உறவுகளை மதித்தால், கிரக தோஷம் நீங்க திருவண்ணாமலை இடைக்காடரைத் தேடத் தேவை இல்லை, நவகிரகமும் சுற்றத் தேவை இல்லை.
மனைவியை, பெற்ற பிள்ளையை நேசித்தால், அவர்களை ஆனந்தமாக வைத்தால், கர்ம விமோஜனம் தேட வேண்டி, அகத்தீசனை தேடி, பாபநாசம் போகத் தேவை இல்லை.
இதற்கு தான் இல்லற வாழ்க்கை அமைத்தான் நமது முப்பாட்டன், ஆதியோக வம்சம்.
மனைவி அழும் வீடே நரகம்.
மனைவி சிரிக்கும் வீடே பிரபஞ்ச சொர்க்கம்.
"சக்தியை" உணர்ந்தால் மட்டுமே, சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்......!!!
திருச்சிற்றம்பலம்
சித்தன் அருள்.................. தொடரும்!
Om Sri lopamudra samathe agastiyar thiruvadi pottri.amaintha valzgagayai ninatu varatapadal valzthal pavam poguma ayyanae. Vali kattupa tantai.
ReplyDeleteOm Sri lopamudra samathe agastiyar thiruvadi pottri.amaintha valzgagayai ninatu varatapadal valzthal pavam poguma ayyanae. Vali kattupa tantai.
ReplyDeleteom agatheesaya namah
ReplyDeleteஇப்பதிவை சரியாக புரிந்துகொள்ளாமல் பின்வரும் சந்தேகங்கள் தவறாக கேட்கப்பெற்றுஇருந்தால் மன்னிக்கவும். 1. கோவலன் தன் மனைவியை சரியாக கவனிக்காமல் இருந்தாலும் இறுதியில் கோவலன் சொர்கத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது . 2. அரிச்சந்திரன் உண்மைக்காக தன் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்தாலும் அவரும் இறுதியில் நல்வாழ்வு பெற்றதாக கூறப்படுகிறது. 3. ராமபிரான் சீதாதேவி வாழ்வில் சீதாதேவி அவர்கள் சந்தோசமாக வாழ்ந்தது சிறு பகுதிதான் . இதுபோன்றைவைகளை எப்படி புரிந்துகொள்வது . 4. தன் மனைவி மற்றும் குடும்பம் மற்றும் உறவுகளுக்காக வெளிநாட்டில் தனியாக வேலை செய்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவது ஏன். 5. தன் குடும்பத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் வாழ்க்கை கஷ்டப்படுவது ஏன் . இப்பதிவை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறுதலாக கேட்கப்பெற்று இருந்தால் மன்னிக்கவும் .
ReplyDeleteவணக்கம். தங்களுடைய கேள்விக்கு எனக்கு மனதில் பட்டதை கூருகிறேன். இந்த பதிவானது சித்த வித்யார்திகள் மூலம் கலியுகத்தில் வாழும் நம்மைப் போன்ற மனிதர்களுக்காக வழங்கப்பட்டது. கோவலன், அரிச்சந்திரன் மற்றும் ராமபிரான் ஆகியோர் கலியுகத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர். பொதுவாக அவர்கள் வாழ்ந்த காலத்தில் தர்ம நெறி தவறாமல் கடைபிடிக்கப்பட்டது.
ReplyDelete4.தன் மனைவி மற்றும் குடும்பம் மற்றும் உறவுகளுக்காக வெளிநாட்டில் தனியாக வேலை செய்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவது ஏன். 5. தன் குடும்பத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் வாழ்க்கை கஷ்டப்படுவது ஏன் என்று கேட்டிருக்கிறீர்கள். நம் பார்வையில் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று தோன்றுவது இயல்பு. ஆனால் அவர்கள் பார்வையில் தன் மனைவி மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சிகாகததான் பாடுபடுகிறார்கள். ஒருபோதும் கஷ்டம் என்று நினைக்க மாட்டார்கள். அதற்குன்டான பதில் தெளிவாக பதிவில் விளக்கப்பட்டுள்ளது.
கட்டிய மனைவியையும், உன் மூலம் அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமாற நேசித்து உன்னதமாக உனது வாழ்வை ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால் அதுவே உலகின் சிறந்த தர்மம், சிறந்த தவம்!
Mikka nandri ayya 🙏🏻
ReplyDeleteலோபாமுத்திரா சமேத அகத்தீசாய!
ReplyDelete