​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 2 May 2019

சித்தன் அருள் - 808 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


ஒரு உடலில் உள்ள அக்னியானது, உயிர்/பிராணன் தங்கியிருக்கிறது என்பதற்கு சான்று. இல்லையா? சரி! இந்த அக்னியானது எங்கு கனன்று நின்று, உள் முழுவதும் பரவுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் வயிற்றில்தான் அக்னி குண்டம் உள்ளது. அங்கு கனன்று எரியும் அக்னியானது, உடலில் ஓடும் ரத்தம் வழியாக அனைத்து பாகங்களையும் சென்று அடைகிறது. ரத்தம் கொண்டு கொடுக்கும் அக்னியானது, ஒவ்வொரு அவயவங்களுக்கும் எரிசக்தியாக அமைகிறது. ரத்தம் ஓடாத இடங்கள் குளிர்ந்து போவது இதனால் தான். அந்த இடங்களுக்கு எரிசக்தி கிடைப்பதில்லை. நிற்க!

உடல் முழுவதும் பரவும் இந்த அக்னியானது கட்டுப்படுத்தப்பட  வேண்டும். உதாரணமாக, ஒரு மெழுகு திரியை தீ மூட்டி நேராக பிடித்தால், அதன் அக்னி பிழம்பு எந்த திசை நோக்கி இருக்கும்?" என கேள்வி எழுப்பினார்.

"மேல் நோக்கி எரியும்" என்றேன்.

"தலை கீழாக பிடித்தால்?"

"அப்பொழுதும் மேல் நோக்கியே எரியும் "

"இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், அக்னியின் குணம், மேல் நோக்கி செல்வதே! அதனால் தான் சூட்ச்சுமமாக, பசியை ஒரு வியாதியாகவும், உண்கிற உணவை கர்ம தகனம், அதுவும் வயிற்றில் நடக்கிறது என்று சித்தர்கள் உரைத்தனர்."

"ஒரு சுற்று வட்டத்தில் எந்த திசை நோக்கி, அந்த மெழுகு திரியை பிடித்தாலும், அக்னி மேல் நோக்கிய பயணிக்கும். அதுபோல் நம் உடலுக்குள்ளும், அக்னியானது மேல் நோக்கியே செல்லும். மனித உடலில் மிக உறுதியான பாகம் மண்டையோடு. அதுவரை பயணித்த அக்னியானது, வழிந்து பிற இடங்களுக்கு செல்லும். இப்படி பயணித்துக் கொண்டிருக்கிற அக்னி, ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தியை கொடுத்துக்கொண்டே இருக்கும். அக்னியின் வேகம் கூடக்கூட ஒவ்வொரு உறுப்பின் தன்மை, உழைக்கும் வேகம் இவை மாறுபட்டுக்கொண்டே இருக்கும். அதே போல், நம் உடலில் மிக மிக மென்மையான ஒரு உடல் உறுப்பு என்பது கண்கள்தான். அக்னியின் வேகம் அதிகமாக, கண்கள் சிவக்கும், கண் பார்வை குறையும், மேலும் கவனிக்காமல் இருந்தால், கண்ணுள் இருக்கும் லென்ஸ் (Lens) முதலில் அடி வாங்கும். உடலின் அமைப்பை பொறுத்து, பெற்றுக் கொள்ளப்படும் அக்னியை பொறுத்து, இந்த லென்ஸ் ஆனது உள்வாங்கவோ, வெளியே வளையவோ செய்யும். இந்த குறையை நிவர்த்தி செய்யத்தான், Concave அல்லது Convex கண்ணாடியை போட்டு பார்வையை சரி செய்துகொள்கிறோம். உண்மை தானே?" என்றார்.

"ஆம்" என்றேன்.

"நிற்க! அக்னியை, திடீரென குளிர்வித்தால், அது நீராக மாறும் என்று உனக்கு தெரியுமா?" என்றார்.

"கேள்விப்பட்டிருக்கிறேன்!" என்றேன்.

"தினமும், எந்த தவறு செய்யும் பொழுது, இந்த அக்னி அழுத்தம் பெற்று உடலின் மென்மையான பாகங்களை பாதிப்படைய செய்கிறது, என்று யோசி, பார்க்கலாம்?" என்றார்.

சற்று நேரம் யோசித்துப்பார்த்தேன். பிடிபடவில்லை.

சற்று நேர அமைதிக்குப்பின் அவரே தொடர்ந்தார்.

"தினமும் குளிக்கும் பொழுது மனிதர்கள் செய்கிற தவறுதான் காரணம். என்ன செய்கிறார்கள்? தண்ணீர் தரும் குளிர்ச்சியை ஆனந்தமாக உணர, முதலில் தலையில் ஊற்றிக்கொள்கிறார்கள். பின்னர் மற்ற அவயவங்களை நனைத்து குளிக்கிறார்கள். இல்லையா?" என்றார்.

"ஆம் உண்மை!" என்றேன்.

"தலையில் ஊற்றப்பட்ட தண்ணீரின் குளிர்ச்சி, அக்னியை உடனேயே குளிர வைத்து, நீராக்கி, தலை முழுவதும் நீர் கட்டை உருவாக்கி, ஜலதோஷம், மூக்கடைப்பு, நீர் தாரையாக ஓடுவது, ஒற்றை தலைவலி, அப்புறம் வேறு ஏதோ சொல்வீர்களே, cynus என்கிற வியாதியை எல்லாம் உருவாக்குகிறது. அத்தனை நீர்க்கட்டையும், விலக்க உடல் இன்னும் ஏரி சக்தி வேண்டும், என உத்தரவிட, அக்னி அதன் வீரியத்தை மேலும் கூட்டி அனுப்பும். அக்னிக்கு வீரியம் கூட்டிட, வயிறு, உணவில் கட்டுப்பாட்டை விலக்கி, கண்டதை எல்லாம் தின்ன வைக்கும். இப்பொழுது புரிந்ததா, ஒரு தவறு பல தவறுகளை செய்ய எப்படி தூண்டுகிறது என்று?" என புன்னகைத்தபடி நிறுத்தினார்.

"அடடா! இதை ஒன்றைக்கூட நாங்கள் கவனிப்பதில்லையே!" என்றேன்.

"சரியான முறை என்ன? என்று பார்க்கும் முன், ஒரு சில கேள்விகள்!" என்றார்.

"நம் முன்னோர்கள், நதி, குளம் இவற்றில் தான் போய் குளிப்பார்கள். அங்கு அவர்கள் நடந்து கொள்கிற விதத்தை கவனித்திருக்கிறாயா?" என்றார்.

"குளத்தில், நதியில் முன்னோர்களுடன் நீராடிய ஞாபகம் இருக்கிறது. ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதங்கள் கவனத்தில் இல்லை" என்றேன்.

"அந்தக்காலப் பெரியவர்கள், குளத்தில் குளிக்கச்சென்றால், முதலில், தான் உடுத்திய உடையையும், துவட்டிக்கொள்ள கொண்டு சென்ற துணியையும், நீரில் நன்றாக நனைத்து, பிழிந்து, படியில் வைத்துவிட்டு, சிறிது நீர் எடுத்து, கால்களை கழுவி, தலையில் தெளித்துவிட்டு, பின்னர் இரு கை நிறைய நீர் எடுத்து, வாய்க்குள் வைத்துக்கொண்டு, குளத்து நீரை வேகமாக கலக்காமல், ஒரு இலை நீரில் விழுந்து செல்வதுபோல், நிதானமாக இறங்கி சென்று மார்பளவு ஆழம் வந்தவுடன், அங்கேயே நின்று, முதலில் மூன்று முறை தலை நனைய மூழ்கிய பின், சற்று நேரம் உடலின் பாகங்களை கைகளால் இழுத்துவிட்டு, பின்னர் சீயக்காய் அல்லது சோப்பு போட்டு குளித்து, பின்னர் கரை ஏறி, அந்த நனைந்த துண்டால், முதலில் முதுகு பாகத்தை துவட்டியபின், முகத்தை துவட்டி, பின்னர் மார்பு, வயிறு, கைகள், தொடை, கால்கள் என நீரை ஒற்றி எடுப்பார்கள். பின்னர் குளிக்கும் முன் வாயில் ஊற்றி வைத்துக் கொண்ட நீரை, கரையில், வெளியே துப்பிவிடுவார்கள். இது ஆரோக்கியமான முறை. இது ஒரு சரியான உடற்பயிற்சியும் கூட."

இதிலிருந்து உணர வேண்டியது என்னவென்றால், காலில் பட்ட நீர், அங்கிருந்து அக்னியை மேல் நோக்கி விரட்டும். அக்னி துரத்தப்பட்டு கழுத்தை அடைந்ததும், வாயிலிருக்கும் நீர் அதை பிடித்துக்கொள்ளும். மேல் ஏற விடாது. பின்னர் தலை மூழ்கும்பொழுது மேலிருந்து கீழே விரட்டப்படுகிற அக்னியையும், வாயிலிருக்கும் நீர் வாங்கிக்கொள்ளும். ஆதலால், உடலில் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படுகிற சூட்டை அந்த நீர் வாங்கிக்கொண்டு விடுவதால், உள் உறுப்புகள், சரியான அளவு அக்னியை பெற்று சரியான விகிதத்தில் வேலை பார்க்கும். ஏன்? பாதிக்கப்பட்ட LENS கூட தன் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். சரி! வீட்டில் குளியலறையில் குளிப்பவர்கள் என்ன செய்ய முடியும்?

இதையே பின்பற்றுங்கள்!

1. துவட்ட எடுக்கும் துண்டை நனைத்து பின் துவட்டுங்கள். (முதுகு, முகம், தலை, மார்பு என)
2. இருகை நீர் எடுத்து வாயில் வைத்திருந்து, குளித்து துவட்டிய பின் துப்பிவிடுங்கள்.
3. காலிலிருந்து நனைத்து தலைக்கு வாருங்கள்.
4. வாரத்தில் ஒருநாள், வாயில் வைக்கிற நீருக்கு பதிலாக, வாய் நிறைய நல்லெண்ணையை வைத்துக்கொள்ளலாம். பின்னர் துப்பி, வாய் கழுவிவிடவும்.

இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால், இழந்த காண்பார்வையை இந்த ஜென்மத்திலேயே மீட்டுவிடலாம். கண்ணாடி, லென்ஸ் போன்றவைகளை சார்ந்திருக்கிற நிலையை விட்டு வெளியே வந்து விடலாம்.

"இது போக இன்னும் ஒரு சில வழி முறைகள் உண்டு. பொதுவாக சொல்வதென்றால், உள்சூட்டை கட்டுப்படுத்த தெரிந்தவனுக்கு, வாழ்க்கை அவன் கையில். இனி வரும் தலைமுறைக்கு இந்த முன்னோர்களின் வழி தெரிந்திருக்க வேண்டும். ஆகையால், கண் பார்வையின் முக்கியத்தை எல்லோருக்கும் தெரிவித்துவிடு" என்றார்.

"மிக்க நன்றிங்க. வேறு சில வழிமுறைகளும் இருக்கிறது என்றீர்கள். அதை பற்றியும் கூற முடியுமா?" என்றேன்.

"உண்ணும் உணவில், அதிக காரமும், புளிப்பும் கண் பார்வை குறைய காரணமாக இருக்கிறது. ஆகையால், ருசி என்பது நாக்கின் பின் முனை வரைதான், அதன் பின் எது வேண்டுமானாலும் உடலுக்கு விஷமாகலாம் என்பதை உணரவேண்டும். உதாரணமாக, தேன் இனிக்கும். உடலுக்கு நல்லது. அதை சாப்பிட்ட ஒருவன், உடனே வாந்தி எடுத்தால், அது அவனுக்கு கசப்பாக இருக்கும் என்று தெரியுமா. தொண்டையை கடந்து சென்ற தேன், வயிற்றை எட்டியதும், நேர் எதிராக மாறிவிடும்.  அதனால்தான்."

உடல் சூட்டை கட்டுப்பாட்டில் வைக்க வேறு சில விஷயங்களையும் கூறினார்.

அடியேன் அமைதியாக குறிப்பெடுத்தேன்.

சித்தன் அருள்.................... தொடரும்!

6 comments:

  1. ஓம் லோபாமுத்ரா சமேத அருள்மிகு அகஸ்தியர் மலரடிகள் போற்றி போற்றி

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம! அருமையான தகவல். நன்றி ஐயா.

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு ஐய்யா, நன்றி...

    ReplyDelete
  4. குரு பாதங்கள் சரணம்
    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா
    தினமும் பழக வேண்டும்...

    ReplyDelete
  5. Ayya mikka nandri 🙏🏻🙏🏻🙏🏻Om Madha Lobha mudra sametha agatheesaya namah🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  6. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா அன்னை சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் துணை

    ReplyDelete