​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 9 May 2019

சித்தன் அருள் - 809 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


​​
உணவில் கட்டுப்பாடு தேவை. இந்த தலைமுறை, நாக்கு ருசியாக ஏதேனும் உண்டு வாழ்ந்தால் போதும், என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்காக, உடல் சூட்டை எப்படி தணிப்பது என்று தெரிவிக்கிறேன்.

வாரத்தில் ஒருநாள், ஆண்கள்- புதன் அல்லது சனிக்கிழமை, பெண்கள் - செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை, தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து, ஒரு மணிநேரம் எண்ணையில் ஊறியபின், சீயக்காய் போட்டு குளிக்கலாம். அப்படி குளித்தபின் உறங்குவது ஆறு மணிநேரத்திற்குப்பின்தான் இருக்கவேண்டும். அன்று தாகம் எடுத்தாலும், தண்ணீர் அருந்துவதை குறைந்தது 8 மணிநேரத்திற்கு தவிர்க்க வேண்டும். உடலை வருத்தி, எந்த விஷயத்தையும் அன்று செய்யக்கூடாது.

இரவு உறங்கச்செல்லும்முன், ஒரு பிடி, வெந்தயத்தை வாயில் போட்டு, நீர் அருந்தினால், உடல் சூட்டை நிறைய அளவுக்கு, வெந்தயத்தில் உள்ள எண்ணை குறைக்க உதவும். வெந்தயம், குடல் சூட்டை நேரடியாக குறைக்கும்.

காற்று, ஒரு பலமான கடத்தி. அதை சுவாசமாக உள்வாங்கி, கும்பத்தில் முடிந்தவரை நிறுத்தி வைத்து, குளிக்கும் பொழுது, குளிர்ந்த நீரை, மார்பில், முதுகில் ஓடவிட்டு பார். உடல் உள்ளுறுப்புகள், எளிதில் சூட்டை இழக்கும், மொத்த உடலும் சீக்கிரமாக குளிர்ந்துவிடும். குளிக்கும் நேரத்தில், இந்த கும்பமுறையை நான்கு அல்லது ஐந்து முறை செய்யலாம்.

உறங்கும் முன், ஆமணக்கு எண்ணையை, தலை உச்சியிலும், கண் இமை மீதும், தொப்பிளிலும், ஆசன வாயிலும் தடவி உறங்க சென்றால், காலை உடல் குளிர்ந்திருப்பதை உணரலாம்.

உணவில், உப்பு, புளி, காரம் போன்றவற்றை மிகக் குறைவாக தொடர்ந்து உபயோகிப்பதால், கூடிய விரைவில் உடல் சூடு மட்டுப்படுவதை காணலாம்.

இளநீர், மிக சிறந்த குளிரூட்டி. தினமும் அருந்திவர, சூட்டினால் வரும் பல பிரச்சினைகளை தவிர்த்துவிடும்.

வெட்டிவேரை, மண்கலத்து நீரில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

உடலை குளிர்விக்க, நன்னாரி மிக சிறந்த மூலிகை.

மருதாணி இலையை, விழுதாக அரைத்து, சுண்டக்காய் அளவுக்கு உருட்டி, நிழலில் வைத்து உலர்த்தி, தினம் மூன்று வேளை ஒன்று வீதம் உட்கொண்டு வர, மூன்றே நாட்களில் உஷ்ணத்தால் ஏற்படுகிற அனைத்து அவஸ்தைகளும் விலகி, உடல் குளிர்ந்து போகும்.

வீட்டில், சமயலறையில், அஞ்சரைப்பெட்டி என்று ஒன்றிருக்கும். அதில் உள்ள

கடுகு - உணவில் உள்ள விஷத்தை முறிக்கும். ஒவ்வாமையை விலக்கும்.
வெந்தயம் - குடலை குளிர்விக்கும், ஜீரண சக்தியை ஊக்குவிக்கும்.
மிளகு - நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி, நீர் கட்டுகளை விலக்கும்.
மல்லி - ஜீரண சக்திக்கு அடித்தளமே இது தான்.
ஜீரகம் - அகத்துள் புகுந்து சீர் படுத்தும்.
சிறுபருப்பு - உடலுக்கு உரத்தை அளிக்கும். நரம்புகளின் நண்பன்.
பயறு, உளுந்து  - அனைத்து சக்தியையும் ஊட்டும்.
சமையலில், சுட்ட புளி, கெடுதலை செய்யாது. சுடாத புளி, சுவையை கொடுத்தாலும், சுகத்தை கெடுக்கும்.

மேற்கண்ட உணவு முறைகளை நம் முன்னோர்கள் தொடர்ந்து வந்ததால் சிறப்பாக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். பாரத தேசத்தின் நடுப்பகுதிக்கு கீழே, தென்புலம் கடைசிவரை, சீதோஷ்ண கால நிலை இதமாக இருப்பதால், எந்த உணவு முறை உடலுக்கு நன்மை செய்யும் என்றறிந்து, நம் முன்னோர்கள் அதையே கடைப்பிடித்து வந்தனர். ஏதேனும் ஒரு விஷயத்தில், சந்தேகம் வரினும், கேள்வி கேட்டால், சித்த வித்யார்த்திகளும், சித்த வைத்தியர்களும், சித்தர்களும், உடனிருந்து, அந்த காலங்களில், தெளிவுபடுத்தினர். ஆனால் இன்றோ, சித்தர்கள் விலகியதை கண்டு, சித்த வித்யார்த்திகளும், வைத்தியர்களும், தங்களை மறைத்து வாழ்கின்றனர்.

"ஏன்?" என்றேன்.

"மனிதனின் பேராசை!" என்றார்.

"சித்தர்கள் அருளினால், இங்கு அனைத்து வியாதிகளுக்கும் சேர்த்து ஒரு மருந்து இருக்கிறது. ஒரே வியாதிக்கு பல மருந்துகளும் உள்ளது. அதுவும், ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளது, எனத்தெரியுமா?" என்று கொக்கி போட்டார்.

"இல்லை தெரியாதுங்க!" என்றேன்.

"சரி! ஒரு மனிதனுக்கு வியாதி வர வேண்டுமானால், அதற்கான காரணம் என்ன?" என்றார்.

"அவன் கர்மா!" என்றேன்.

"உண்மை. ஆனால் அது ஒரு காரணம் மட்டும்தான். இரு கையும் சேர்ந்து தட்டினால்தான் சுத்தம் வரும். இல்லையா?"

"ஆம்!"

"அதுபோல, காரணம், காரியம்  என்ற இரு நிலைகள் வேண்டும், ஒரு வியாதி ஒருவனுக்கு வர!"

"ஹ்ம்ம்!"

"ஒரு வியாதிக்கு, உடல் மேடைபோட்டு கொடுத்து, வந்து நாடகமாடு என வேண்டிக்கொள்ள, அந்த ஒருவனுக்கு சிரமங்கள் வருவது, விதியினால் ஆயினும், அவன் உடல் அந்த வியாதி வர தேவையான அமைப்பை அமைத்துக் கொடுப்பதால் மட்டும்தான்!"

"ஏன்? சற்று நிதானித்து சிந்தித்து, உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, எத்தகு கர்மாவாயினும், வ்யாதியற்ற நிலையை மனிதன் அவனாகவே உருவாக்கி கொள்ள வேண்டும்." என்றார்.

சித்தன் அருள்......................... தொடரும்!

12 comments:

  1. ஓம் ஓதியப்பன் துணை ஓம் அகத்தீசாய நமஹ
    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  2. Ayya mikka nandri 🙏🏻🙏🏻🙏🏻Om Madha Lobha mudra sametha Agatheesaya namah🙏🏻🙏🏻🙏🏻...

    ReplyDelete
  3. ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக!

    ReplyDelete
  4. ஓம் மஹாதேவி ஸ்ரீ லோபாமுத்ரா சமேத மஹாகுரு ஸ்ரீ அகஸ்தியர் அய்யன் மலரடிகள் சரணம்.

    ReplyDelete
  5. Om Sri lopamudra samata agastiyar thiruvadi pottri.udalsuduku takka samayathil marundu sonna em Thai tanthaiku Pala Kodi namaskaram Swamy.enna seivadu endru theiyamal agastiyar appanidam Murai ittan.vali kanpitu ullar.nandri ayya.

    ReplyDelete
  6. Om lopamudra samathe agastiyar thiruvadi pottri.

    ReplyDelete
  7. குரு பாதங்கள் சரணம்
    அன்னேயோடு அறுசுவை போம் அப்பனோடு அறிவு போம் என்பர்... ஆமாம் ஐயா என் தாயும் தந்தையும் குளியலையும் உணவையும் இவ்வாறே தந்தனர்... அப்போதெல்லாம் அது கஷ்டமாக இருந்தது.... காலம் மாற சொகுசு வாழ்க்கை சுகம் உடலில் (ஏ)மாற்றம் கொடுத்து...யூ ட்யூப் பற்பல வேதிமுறைகள் தர... பழைய வழக்கங்கள் மறந்து போய்.... தாய் தந்தை நினைவு வர... மிகச் சரியான நேரத்தில் உங்கள் பதிவு ஐயா... தாயாய் தந்தையாய் வணங்குகிறேன் குருவே... குரு பாதங்கள் சரணம்

    ReplyDelete
  8. ஐயா.... நன்றி ஐயா. சுட்ட புளி என்றால்? வேக வைத்ததா?தெளிவுபடுத்துங்கள்

    ReplyDelete
  9. ஆம், எனக்கும் அதே ஐயமே.

    ReplyDelete